வியாழன், 22 மார்ச், 2018

மீண்டும் வலையில்




                                   மீண்டும்   வலையில்
                                  ----------------------------------

நான் அறுவைச் சிகிச்சையில்  இருப்பேன் என்றும் யாரும்  நான் வலையை விட்டு ஓடவில்லை என்றுபுரிந்து கொள்ளவும் கடைசியாகப்பதிவு எழுதி இருந்தேன்   அதற்கு வந்த பின்னூட்டங்களைப்படித்து பார்க்கும்போது  வலையிலென் நலம் குறித்து அக்கறை  கொண்டவர்கள் இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது  நெகிழ்ச்சியாக இருந்தது  மேலும்  தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு விசாரித்தார்கள் கில்லர்ஜியும்   தில்லையகத்து  கீதாவும்  பானுமதியும்.   சிகாகோ நண்பர் திரு அப்பாதுரை ஒரு அஞ்சலும்   அனுப்பி இருந்தார்இன்னும்  என் எண்ண ஓட்டங்களை விரிவாக எழுத வேண்டும்  அதிகம் சிரமம்  கூடாது என்னும்  என்மனைவியின்   எச்சரிக்கை என்னை ஒரேயடியாகஎழுத வைப்பதற்கு ஏதுவாக இல்லை  வலையில் எழுதுபவனின்  கைகளை சிரங்கு பிடித்தவன் கைகளுக்கு ஒப்பிடலாமா  சும்மா இருக்க முடியாது  என் அறுவைகளைத் தாங்க தயார்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே  மீண்டும்  நன்றியுடன்    





15 கருத்துகள்:

  1. Welcome Sir...

    நலமாய் வந்து வளமாய் பதிவுகள் இடுங்கள். காத்திருக்கிறோம். உங்கள் மனைவி சொல்வது போல உடல் நலம் முதலில்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க ஐயா நலமுடன் வந்து பதிவிட்டமைக்கு நன்றி.

    என் அறுவைகளைத் தாங்க தயார்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே... தொடக்கமே நகைச்சுவை பதிவு ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
  3. ஐயா
    தாங்கள் நலம் பெற்றமை அறிந்து மகிழ்கின்றேன் ஐயா

    பதிலளிநீக்கு
  4. >>> என் அறுவைகளைத் தாங்க தயார்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே... <<<

    அருமை.. அருமை... காத்திருக்கின்றேன்...

    வழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  5. முதலிடம் உடல்நலத்திற்கு. மற்றவையெல்லாம் அப்புறம்.

    பதிவுக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  6. நலமாய் வந்து பதிவிட ஆரம்பித்து விட்டது மகிழ்ச்சி.
    மெதுவாய் சின்ன சின்ன பதிவாய் எழுதுங்கள் .சிரமபடுத்திக் கொள்ளாமல்.இப்போது உடல் நலம் தான் மிக முக்கியம்.
    தங்கள் வாழ்க்கைதுணை சொல்வது போல்.
    வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.

    பதிலளிநீக்கு
  7. வாங்க சார்!!! மெதுவாக உங்கள் உடல் நலன் தேறட்டும். அது முக்கியம் அல்லவா. கொஞ்சம் கொஞ்சம் எழுதுங்கள்...அம்மா சொல்வது சரிதானே!!!

    எல்லாம் நல்லபடியாக ஆகிடும்...கலக்குங்கள் சார்...துளசியிடம் சொல்லியிருக்கிறேன் சார்...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துகள். அதிக நேரம் கம்ப்யூட்டரில் நேரத்தை செலவழிக்க வேண்டாம். ஓய்வில் இருங்கள்.

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள். உடல் நலத்தில் கவனம் வைக்கவும்.

    பதிலளிநீக்கு
  10. உடல்நலத்திற்கே முதன்மை கொடுங்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  11. உங்கள் வரவு கண்டு மகிழ்ச்சி....எது உங்களுக்கு சந்தோஷத்தை தருகிறதோ அதை செய்யுங்கள்

    பதிலளிநீக்கு
  12. வாருங்கள் ...காத்திருக்கிறோம்..

    பதிலளிநீக்கு
  13. உடல் நலம் முக்கியம். ஊரில் இல்லாததால் உங்கள் உடல்நலம் குறித்து அறிய முடியவில்லை. தகவல் கொடுத்ததுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு