உபாதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் --4
-----------------------------------------------------------------------------------
என் பதிவுகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டு வருபவர்களுக்கு
ஒன்று தெரிந்திருக்கலாம் என் பல பதிவுகள் அனுபவத்தின் அடிப்படையில் எழுந்தவையே . உடல் என்று ஒன்று இருக்கும்போது
உபாதை என்ற ஒன்றும் கூடவே இருக்கும் என்வாழ்வில்
பல உடல் உபாதைகளை சந்தித்து விட்டேன் அவற்றினை
ஒரு தொடராகவும் எழுதி வந்தேன்
முந்தைய பதிவுகளைப் படிக்க சொடுக்கவும்
அனுபவ
உபாதைகளை விளக்குவதன் காரணமே பலருக்கும் ஒரு
விழிப்புண்ர்வு ஊட்டவும் மனம் தைரியத்துடன்
இருக்கவும்தான் 2010 ம் ஆண்டு எனக்கு ஒரு மைல்ட்
ஹார்ட் அட்டாக் வந்து இதயத்தில் ஒரு குழாய் நோய் வாய்ப்பட்டு இருந்ததால் எனக்கு ஆஞ்சியோப்லாஸ்டி செய்தார்கள் என்று எழுதி இருக்கிறேன் நான் நலமுடன் தொடர பல மாத்திரைகளை
எழுதிக் கொடுத்தார்கள்
அதில்
ஒன்று asa என்று சொல்லப்படும் ஒரு மாத்திரையும்
அடக்கம் ஆனால் கடந்தஒருமாதமாக அந்த மாத்திரை எங்கும் கிடைக்க வில்லை நான் அதில்லாமலேயே
இருந்தாலும் பாதகமில்லை என்று கூறிவந்தேன் ஆனால் மருத்துவர் சொன்ன ,மாத்திரையை சாப்பிடாமல்
இருக்கக் கூடாது என்பதில் என்மனைவியும் மகன்களும் குறியாய் இருந்தனர் எனக்கு சிகிச்சை
செய்த கார்டியாலஜிஸ்டிடம் அப்பாயின்ட் மென்ட் கிடைப்பதுகஷ்டமாக இருந்ததால் அதே மருத்துவ மனையில் இருந்த வேறு கார்டியாலஜிஸ்டிடம் விஷயத்தை கூறினேன் அவர் கொடுத்த மாற்று மருந்து டோசேஜ் அதிகமாய் இருக்கவே அதை தெரிவித்துஅதன் பக்க விளைவுகள் பற்றியும் அவரிடம் கூறினேன் அவர் கொடுத்த மருந்தை உட்கொள்ளவும் தொந்தரவு ஏற்பட்டால் அவரை மீண்டும் பார்க்கவும்
கூறினார் அந்தபதில் எனக்கு உடன் பாடில்லாமல் இருந்தது என் மக்களுக்கு நான் மருந்து உட்கொள்ளவேண்டும் என்னும் கட்டாயவிருப்பம் இருந்தது எப்படியோ எனக்கு
முதலில் சிகிச்சை கொடுத்த அதே மருத்துவரிடம் எப்படியோ அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினார்கள் நானும் சென்று பார்த்து விளக்கினேன் அவருக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும் சுமார் பத்து வித மாத்திரைகளை குறைத்து மூன்றே மாத்திரைகள்
போதும் என்றார் அவரிடம் சொல்லலாமா வேண்டாமா
என்று நினைத்து பின் கூறி விட்டேன் என் தொப்புழ் பக்கம் சிறிய வலி என்றும் சற்று வித்தியாசமாக
தெரிகிறதென்றும் கூறிக் காண்பித்தேன் அதைப் பார்த்ததும் அவர் என்னை அங்கிருந்த ஒரு சர்ஜனை பார்க்கக் கூறி அவருடன் தொடர்பு கொண்டு பார்க்கவும் ஏற்பாடு செய்தார் அப்போதே அவரிடம்சொன்னேன் சர்ஜன் என்றால் உடனே அறுவைதானே என்று
அந்த
அறுவைச் சிகிச்சை நிபுணர் நான் எதிர்பார்த்தபடி
உடனேயே ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்றார்
IRREDUCIBLE obstructive UMBLICAL HERNIA என்றும் உடனே
ஆப்பரேஷன் செய்யாவிட்டால் அது சிறு குடலை
strangulate செய்யும் வாய்ப்பு இருக்கிறது
என்றும் கூறினார்
இத்தனை விளக்கமாக எழுதக் கூடாதோ என்ன செய்ய என் வழக்கம் கூடவே சிலபுகைப்படங்கள்
பிறகென்ன ஒரு சுப முஹூர்த்தம் எல்லாம்பார்த்து அட்மிட் ஆகவில்லை என் ஒரே கவலை
செலவு பற்றியது என்மகனிடம் ஆப்பரேஷன் மைனரா
மேஜரா என்று கேட்கச் சொன்னேன் என் வயதில் எல்லா ஆப்பரேஷனுமே மேஜர்தான் என்னும் விடை
கிடைத்தது பி எச் இ எல் மருத்துவ மனையில் பெர்மிஷன்வாங்கி அட்மிட் ஆனேன் செலவில் நான்
முதலில் 20 சதம் கட்ட வேண்டும் மீதியை பி எச்
இ எல் நிறுவனம் கட்டும் அதுவே ஒரு பெரிய ரிலீஃப்
அறுவை சிகிச்சைக்கு முன்பாக பல டெஸ்டுகள் எடுத்தார்கள் ஒரு வழியாய் என்னை ஆப்பரேஷன் தியேட்டருக்கு
கொண்டு சென்றார்கள் மனதில் இன்னும் எல்லோரையும் பார்ப்போமா என்று இருந்தது நிஜம். அப்படியே ஏதாவது ஆனாலும் கவலைப்பட்டு பிரயோசனம் இல்லை என்று தோன்றியதுசிகிச்சை முடிய சுமார் ஒன்றரை
மணிநேரம் ஆயிற்று பிறகு போஸ்ட் ஆப்பரேடிவ் வார்டில்
எனக்கு நினைவு வரும்வரை கிடத்தி இருக்கிறார்கள்
மெள்ள எனக்கு தெளிவு ஏற்பட்ட போது கண்களை சுழல விட்டு இருக்கும் இடம் இதுதான்
என்று உறுதிப் படுத்திக் கொண்டேன் முதலில் நினைவு வந்து தோன்றிய எண்ணமெ நான் பிழைத்து விட்டேன்
இறக்க வில்லை என்பதுதான் தெளிவு வந்ததும் என் மக்களையும் மனைவியையும் பார்க்க வேண்டும் என்றேன் அவர்களும் வந்தார்கள் சிறிது நேரத்தில் வார்டுக்கு கொண்டு வந்தார்கள் ஆப்பரேஷன் முடிந்த
நாள் எனக்கு பச்சைத் தண்ணீர்கூட கொடுக்க வில்லை நாக்கு வறண்டு தாகம் தாகமாய் இருந்தது
சிறிது பஞ்சில் நீர் தெளித்து வாயில் ஒப்பினார்கள் அன்று இரவு கொஞ்சம் இளநீர் பருகக் கொடுத்தார்கள்
பிறகு இர்ண்டு நாட்களுக்கு உப்பு சப்பில்லாத நீர்த்த உணவு என்று ஏதோ கொடுத்தார்கள்வயிற்றில்
பெல்டுடன் தான் இருக்க வேண்டுமாம் மூன்றாம் நாளே டிஸ்சார்ஜ்
செய்தார்கள் அறுவை செய்த இடத்தில் staple செய்திருந்தார்கள் 24ம் தேதி அதைக் கட் செய்து பிரித்தார்கள் அதன் மேல் ஏதோ ப்ளாஸ்டர் போல போட்டிருந்தார்கள் வாட்டர் ப்ரூஃபாம் அதன் விலை
ரூ 280/ - இன்னும் மூன்று மாதங்கள் நான்பெல்டுடந்தான்
இருக்க வேண்டுமாம் ஒரு வழியாய் அறுவைச் சிகிச்சை
முடிந்தது அந்தப்ளாஸ்டர் மேல் சிறிது ரத்தக் கசிவு இருந்தது உடனே டாக்டரிடம் கூட்டிப்
போனார்கள் அது ஒன்று பாதக மில்லை என்று டாக்டர்
கூறினார் ஒரு வழியாய் நலமாகவீட்டுக்கு வந்து
விட்டேன் கணினியில் என் வேலை தொடரும் எத்தனையோ
உபாதைகளிலிதுவும் ஒன்று கடந்து போயாகிவிட்டது என் மேல் அக்கறை கொண்டு விசாரித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி இத்தனை விளக்கமாக எழுதக் கூடாதோ என்ன செய்ய என் வழக்கம் கூடவே சிலபுகைப்படங்கள்
அறுவைக்குப் பின் வார்டில் |
அறுத்த இடம் stapled |
தையல் பிரித்தபின் |
கவலை வேண்டாம் ஐயா இனி எல்லாம் நலமாகும்.
பதிலளிநீக்குஇவ்வளவு விளக்கம்கூட ஒரு வகையில்
நல்லதே... யாருக்காவது பலனான விசயங்களை தரலாம்.
கவலை என்றெல்லாம் இல்லை ஜி என் அனுபவங்கச்ளைப் பகிர்ந்தேன் இதூடல் உபாதைகளை பற்றியது வருகைக்கு நன்றி ஜி
நீக்குவிரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஇந்த வயதில்பூரண குணம் என்பது சாத்தியமா இது போனால் இன்னொன்று முதுமை தரும் பரிசு ?
நீக்குஉண்மை சொல்ல வேண்டுமென்றால் - பதிவு சிறிது பயத்தை தந்தது...
பதிலளிநீக்குபயப்படும் படி நான் எழுதி இருக்கிறேனா உண்மையில் பலரது பயத்தைப் போக்கவே எழுதியது அவ்வப்போது வருவதும் மகிழ்ச்சியே டிடி சார்
நீக்குநல்ல வேளையாக நல்லபடி எல்லாம் முடிந்தது. கவலை வேண்டாம். உங்கள் வயதுக்கு இவ்வளவு தாங்கினதே பெரிய விஷயம். விளக்கம் கொடுத்தது ஒண்ணும் தப்பாய்த் தெரியலை! யாருக்கானும் பயன்படலாம்.
பதிலளிநீக்குஅப்படி என்ன வயதாகி விட்டது என்று நினைக்கிறீர்கள் எண்பதாவது வயதுமொரு வயதா
நீக்குHahahahahaaha
நீக்குரசிப்புக்கு நன்றி மேம்
நீக்குஐயாவின் மனதுக்கு வயது 25 தான்.
நீக்குமனம்வேறு உடல் வேறு எண்ணங்களுக்கேற்ப உடல் வளைவதில்லை இருந்தாலும் எண்ணங்கள் இளமையாகவே இருக்கிறதுநன்று ஜி
நீக்குஇந்த பதிவோடு, மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள தொடர்புடைய மூன்று (மீள்வாசிப்பு) பதிவுகளையும் படித்தேன். உங்கள் மனவலிமை எல்லோருக்கும் வர வேண்டும். இந்த பதிவுகள் எனக்கும் சில நம்பிக்கைகளை தந்தது. தாங்கள் முழு குணம் அடைந்து மீண்டும் முன்புபோல் வர எனது பிரார்த்தனை.
பதிலளிநீக்குநானே குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன் வாழும் வயதில் பல உபாதைகளை சந்தித்து விட்டேன் அதனால் எதையுமே லைட்டாகவே எடுத்துக் கொள்கிறேன்நான் நலமாகவே உணர்கிறேன்
நீக்குபூரண குணம் பெற்று மீண்டும் எழுதுங்கள் சார். நீங்கள் ஒரு வீரர் என்பதை இப்பதிவுகள் நினைவு படுத்தும்.
பதிலளிநீக்குஅதுதான் எழுதத் தொடங்கி விட்டேனே
நீக்குசார் ஸ்டில் யு ஆர் யங்க்! வயது உடலிற்குத்தான் மனதிற்கல்ல.... என்னைப் பொருத்தவரை!
பதிலளிநீக்குஇதுவும் கடந்து போகும்...எதுவும் பயமுறுத்தலாகத் தெரியவில்லை சார். விரைவில் நலமடைவீர்கள். வாழ்த்துகள் சார்..
கீதா
யாரையும் பயமுறுத்தும் எண்ணம் இல்லை வருகைக்கு நன்றி மேம்
நீக்குஇந்த மாதிரி அனுபவ பதிவுகளை படிப்பது சுவராஸ்யமாக இருக்கிறது என்றாலும் சில சமயங்களில் மனம் கனத்துவிடுகிறது. காரணம் ஒவ்வொருவரின் உண்மையான மனநிலை நன்றாக வெளிப்படும். உங்களுக்கு நல்ல மனைவியும் குழந்தைகளும் மருமக்களும் பேரன் பேத்திகளும் இருப்பது மிகவும் பலம். நீங்கள் குணமாகி வந்து பதிவு போட்டுது மனதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நேற்று பேஸ்புக்கில் ஒரு பதிவு பார்த்தேன் அதில் 40 அல்லது 50 வயதை ஒத்த ஒருவர் தான் அறுவை சிகிச்சை பண்ணப் போவதாக முதலில் எழுதி இருந்தார் எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள் தான் யார் மனதையாவது நோக அடித்து இருந்தால் மன்னிக்கவும் என்று எழுதி இருந்தார். அடுத்த செய்தி இன்று ஹாஸ்பிடலில் ஒரு ஸ்பூன் தண்ணிதான் குடிக்க தந்தார்கல் என்று மற்றொமொரு சிறிய பதிவு அதன் பின் தகவல் இல்லை ஆனால் நேற்றைய அவரின் நண்பரின் பதிவில் அவர் சிகிச்சை ப்லனலிக்காமல் மறைந்துவிட்டார் எனற் செய்தி அறிந்ததும் மனம் கனத்ததுமட்டுமல்ல கண்ணில் இருந்தும் கண்ணீர் கொட்டியது
பதிலளிநீக்குசார் நான் உங்களை வந்து பார்க்கும் வரை உங்களை உடலை நல்லபடியாக கவனித்து கொள்ளுங்கள் அதௌ வரை உயிரை கையில் பிடித்து கொள்ளுங்கள்.. சரி சரி எப்ப வந்து பார்க்க போகிறீர்கள் என்றா கேட்கிறீர்கள் அதுதான் தெரியவில்லை... இப்போதைக்கு இந்தியா வருவதாக ஐடியா இல்லை அதைனால்தான் சொல்லுகிறேன் நான் வரும் வரை உயிரை கையில் பிடித்து கொண்டு இருங்கள் என்று
வாழ்க வளமுடன்
நீங்கள் எப்போது இந்தியா அருகிறீர்கள் எனக்கும் சந்திக்க ஆவலுயிரைக் கையில் பிடித்துக் கொண்டு.....கையில் பிடிக்க முடியுமா என்ன. பெரும்பாலோருக்கு பயமே யமன்
நீக்குபதிவு ஓகே. படங்கள் 'பயமுறுத்தும்' ரகம்.
பதிலளிநீக்குஇதுவும் கடந்துபோகும். நலமாக இருங்கள். எல்லோரும் சந்திப்போம்.
இதற்கெல்லாம் பயமா கூடாது சார் சந்திக்க ஆவல் விரைவிலிங்கேயே செட்டில் ஆவீர்கள் என அறிகிறேன்
நீக்குபடிக்க படிக்க கவலையாய் இருந்தது. பூரண குணமானது மகிழ்ச்சி
பதிலளிநீக்குfacts of life கவலை தவறு நான் நலமாகி விட்டேன்
நீக்குபடத்தைப் பார்க்கும்போது முதுகுத்தண்டில் சில்லென்று இருந்தது. வயிற்றில் பெல்ட் போட்டுக்கொண்டு உட்காரலாமா? கவனமாக இருங்கள்.
பதிலளிநீக்குகுனிந்து நிமிருவதை தவிர்க்கச்சொன்னார்கள் இன்னுமொரு உபாதை ப்ச்திவு எழுதுவேன் இன்னும் சில தகவல்களோடு வருகைக்கு நன்றி ஸ்ரீ
நீக்குஉங்களுடைய ஒவ்வொரு பதிவும் எங்களுக்குப் பாடமாக அமைகிறது என்று நான் அடிக்கடிக் கூறுவேன். அவ்வகையில் இதுவும்கூட. உடல் நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள் ஐயா. உங்களின் மனத்துணிவு எங்களுக்கும் வேண்டும் என்று நாங்கள் வேண்டுகிறோம்.
பதிலளிநீக்குயாரும் உடல் நலக் குறைவு கண்டு பயப்படக் கூடாது என்பதாலேயே எல்லா உபாதைகளைப் பற்றியுமெழுதீருக்கிறேன்சுட்டிகளுக்குச் சென்றீர்களா
நீக்குதாங்கள் மனவலிமை மிக்கவர்
பதிலளிநீக்குஉடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா
நன்றி சார்
நீக்குபொதுவாகவே டாக்டர்களின், குறிப்பாக இன்றைய ஸ்பெஷலிஸ்ட்டுகளின் பிடியிலிருந்து மீண்டுவருவதே ஒரு சாதனைதான். விரைவில் பூரணமாகத் தேறிவாருங்கள்.
பதிலளிநீக்குஎனக்குப் பிடிக்காத டாக்டர்களிடம் சிகிச்சை எடுப்பதில்லை இன்னொரு அனுபவம் அடுத்து தொடரும் பதிவில் நலமாகி விட்டேன்
நீக்குசிறந்த அனுபவ பதிவு ஐயா ...
பதிலளிநீக்குபடிக்க சிறிது கனமாக இருந்தாலும்...உங்களின் புத்துணர்ச்சி எங்களையும் பற்றுகிறது...
வாழ்க நலம்..
உபாதைகள் பற்றி எழுதி சுட்டியும் கொடுத்திருக்கிறேனே பார்த்தீர்கள் பயம் கூடாது என்பதற்காகவே பகிர்ந்தேன் வருகைக்கு நன்றி மேம்
நீக்குநலம் பெற்று பதிவுகள் தொடர்வது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குசிரம படுத்திக் கொள்ளாமல் எழுதுங்கள் சின்ன சின்னதாக.
படங்கள் பார்த்து பயந்தாலும் அனுபவ்ம் பிறருக்கு உதவும்.
என் பேரனுக்கு 45 நாள் குழந்தைக்கு இரண்டு பக்கமும் HERNIA ஆப்ரேஷன் செய்யபட்டது.
டாகடர் பயபடாமல் குழந்தையை தியேட்டரில் கொண்டு படுக்க வையுங்கள் என்றார். நான் தான் மனதை திடபடுத்திக் கொண்டு படுக்க வைத்தேன்.
ஆப்ரேஷன் முடிந்து கண்விழிக்கும் வரை இறைவனிடம் வேண்டிக் கொண்டு இருந்தேன்.
இரண்டு பக்கமும் சிறு பிளாஸ்டர்தான். பிரிக்க வேண்டாம் தையல்.
சிறு குழந்தைக்கு எதுவு தெரியாது அனாவசியமாக நாம் பயப்படுவோம் எனக்கும் இடப்பாகம் ஒரு ஹெர்னியா ஆப்பரேஷன் நடந்திருக்கிறது இது வேறு சுட்டிகள் பழைய உபாதைகளின் தொகுப்பாக இருக்கும் வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்குநேற்று போன் செய்ய நினைத்தேன். இயலவில்லை.இன்று உங்கள் பதிவைப் படித்தபிறகு சற்றே நிம்மதி. மருத்துவச் செலவில் 80 சதம் உங்கள் முன்னாள் நிறுவனம் தருவதை அறிந்து மகிழ்கிறேன். வங்கி ஊழியர்களான நாங்கள் பாவிகள்.அம்மாதிரி அதிர்ஷ்டம் எங்களுக்கு இல்லை. போகட்டும், இந்த நிலையிலும் இவ்வளவு விரிவான பதிவை எழுதிடும் மனவலிமை வியக்கவைக்கிறது.
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா
நாங்கள் கட்டும் 20 சதமும் பிறகு க்லெய்ம் செய்யலாம் மன வலிமை இருக்கிறது ஆனால் அதற்கேற்ற உடல் வலிமை குறைகிறதே அதைத்தான் நான் அடிக்கடி கூறுவேன் முதுமை என்பது செய்யாத குற்றத்துக்கு கிடைக்கும் தண்டனை என்று
நீக்குநேற்று போன் செய்ய நினைத்தேன். இயலவில்லை.இன்று உங்கள் பதிவைப் படித்தபிறகு சற்றே நிம்மதி. மருத்துவச் செலவில் 80 சதம் உங்கள் முன்னாள் நிறுவனம் தருவதை அறிந்து மகிழ்கிறேன். வங்கி ஊழியர்களான நாங்கள் பாவிகள்.அம்மாதிரி அதிர்ஷ்டம் எங்களுக்கு இல்லை. போகட்டும், இந்த நிலையிலும் இவ்வளவு விரிவான பதிவை எழுதிடும் மனவலிமை வியக்கவைக்கிறது.
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா
ஃபோன் செய்யாவிட்டாலும் பாதகமில்லை அடிக்கடி வலைப் பக்கம் வாருங்கள் நன்றிசார்
நீக்குநல்ல விழிப்புணர்வு பதிவு. ஒரு காலத்துலே ஆபரேஷன் என்றாலே பயம்தான். இப்போது.... மெடிக்கல் சயன்ஸும் சிகிச்சை முறைகளும் வெகுவாக முன்னேறி இருப்பது கண்கூடு!
பதிலளிநீக்குநலமடைந்து வருவது மகிழ்ச்சி! டேக் கேர்!
இருந்தாலும் என் வயது என் உற்றாரிடையே ஒரு கிலேசத்தை ஏற்படுத்தியது உண்மை மருத்துவம்மிகவும்முன்னேறி இருக்கிறதென்னவோ நிஜம் ஆனால் அதன் செலவுகளுக்கு ஈடுகொடுப்பது சிரமம் எனக்குப் பரவாயில்லை நான்பணி செய்த நிறுவனமே அதை ஏற்றுக் கொள்ளும் வருகைக்கும் பரிவுக்கும் நன்றி மேம்
பதிலளிநீக்கு