வியாழன், 29 மார்ச், 2018

ஒரு புது முயற்சி



                                   ஒரு புது முயற்சி
                                   ---------------------------
ஒரு பாடலை ஆடியோ  ஃபைலில் சேமித்திருந்தேன்   ஆனால் அதைப் பதிவில் கொண்டு வர முடியவில்லை  ப்ளாகர் ஆடியோவை ஏற்கவில்லை  எனக்கானால்  அதை எப்படியும் வலையில் ஏற்றவேண்டும் என்னும் விருப்பம் இந்த ஆடியோவை வீடியோவாக்க என்ன செய்யலாமென்றுயோசித்து ஒரு வழியாக  செய் துவிட்டேன் கணினி பற்றிய அறிவு மிகவும் குறைந்தநான்  இதை வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறேன்   எனக்கு என் மனைவி அனுப்பியிருந்தபாடல் பதிவு(ALL IS WELL  THAT ENDS WELL)
இனி பதிவுக்கு வருவோம்


ஸ்ரீகிருஷ்ண பக்தி கானம்  25 ராகங்களில் பாடல் ஸ்ரீ செவ்வனூர் கிருஷ்ணன் குட்டியுடைய வரிகளுக்கு பிரசித்தி பெற்ற சங்கீத விதவானும்  சாயி பக்தனுமான பாடகன்  ஸ்ரீ ராதாகிருஷ்ணன் அவர்களின் சீடன்  ஸ்ரீ உன்னிகிருஷ்ணன்  அதி அற்புதமாக ஆலாபித்த  ஸ்ரீகிருஷ்ண பக்தி பாடல்  சாரங்கா மோஹனத்தில் ஆரம்பித்து மத்யமாவதியில் முடியும்போது கீழே கூறப்பட்டுள்ள 25 ராகங்களிலும் சஞ்சரிக்கிறது
1)சாரங்கா
2)மோஹனம்
3) பூபாளம்
4) பிலஹரி
5)தன்யாசி
^ தேவகாந்தாரி
7)யதுகுல காம்போதி
8)கல்யாணி
9)ரஞ்சனி
10)சாமா
11)ஆபேரி
12)யமுனா கல்யாணி
13)ஸ்ரீ
14)நீலாம்பரி
15)முகாரி
16)ஷண்முகப்பிரியா
17)சங்கராபரணம்
18)காம்போதி
19)த்வஜாவந்தி
20)இந்தோளம்
21)ஆந்தோலிகா
22)ஸ்ரீ பந்துவராளி
23)நாத நாமக்கிரியா
24)தோடி
25) மத்யமாவதி 





30 கருத்துகள்:

  1. பாட்டு நன்றாக இருந்தது. ராக ஆலாபனை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டையும் ஆலாபனையையும் ரசிக்க முடிந்ததில் மகிழ்ச்சி

      நீக்கு
  2. பாட்டு நன்றாக இருந்தது. ராக ஆலாபனை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ராகமும் தெரியாது ஆலாபனையும் புரியாது சங்கீதவிற்பன்னர்கள் இதை ரசிப்பார்கள் என்று மட்டும் தெரியும்

      நீக்கு
  3. ஆடியோ கேட்டேன் ஐயா கணினியைக் காட்டியே ஒலிக்க வைத்து விட்டீர்கள் ஸூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பளாகர் ஆடியோவை ஏற்கவில்லை அதற்காகத்தான் ப்ளாகரையே ஏமாற்றி விட்டேன்

      நீக்கு
  4. நல்ல ஐடியா தான். ஆடியோவை இணையத்தில் சேர்க்க நிறைய Software உண்டு. அதில் சேர்த்தபிறகு பதிவில் Embed செய்ய முடியும். நேரடியாக youtube-லும் சேர்க்க முடியும்.

    பாடல் நன்றாக இருந்தது. மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன எப்படி என்று கூறி இருந்தால் நலமாய் இருந்திருக்குமே பாடல் வ்ரிகளை பதிவிலேயே சேர்த்து இருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  5. பாடல் அருமை.
    புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ முயற்சி பெருமைப் பட்டுக் கொண்டேன் வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  6. எப்படியோ ஒலிக்கச் செய்து விட்டீர்கள். நடுவில் சில காலம் வாட்ஸாப்பில் உலா வந்து கொண்டிருந்தது. கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. வாட்சப்பில் வந்தது சார்...கேட்டிருக்கிறேன் அருமையான பாடல்....உங்கள் முயற்சியும் அருமை சார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு கர்நாடக இசை ராகம் என்பதில் ரசனை அதிகமென்று கேள்விப் பட்டு இதை ரசிப்பீர்கள் என்றே இப்பதிவு

      நீக்கு
  8. ராக ஆலாபனை அது இது என்று எல்லாம் எனக்கு தெரியாது ஆனால் இப்படிபட்ட பாடல்களை அதுவும் யேசுதாஸ் அவர்கள் பாடினால் மிகவும் பிடிக்கும் ரசித்து கேட்டு மகிழ்வேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் ராக ஆலாபனை ராகம் எல்லாம் தெரியாது ஆனால் வலையில் சில விற்பன்னர்கள் இருப்ப்சதாகக் கேள்வி அவர்கள் ரசிக்கலாமில்லையா

      நீக்கு
  9. நேயர் விருப்பம் :-

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/04/how-to-add-mp3-in-blogger.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுட்டியில் கண்ட பதிவுக்கு மீண்டு சென்றேன் ஆனால் அதை ஃபால்லோ செய்யத்தெரியவில்லையே

      நீக்கு
  10. ராபின்ஸன் க்ரூஸோ நினைவுக்கு வந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கும் அறிவை எப்படியோ உபயோகித்தேன் நன்றி சார்

      நீக்கு
  11. பதில்கள்
    1. ஒரு மலையாள நண்பரிடமிருந்து வந்த வாட்ஸாப்பில் வந்தது எனக்கு ராகம் ஆலாபனை எல்லாம் ரசிக்கத்தெரியாது

      நீக்கு
  12. தங்களின் முயற்சி எங்களுக்கு மகிழ்வினைத் தந்தது ஐயா.

    பதிலளிநீக்கு
  13. அருமையான முயற்சி, நானும் இப்படித்தான் சில பாடல்களை ரெக்கோர்ட் பண்ணியிருக்கிறேன்.

    பாடல் புரியவில்லை ஆனா மனதுக்கு இதமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  14. பாடலில் புரிய என்ன இருக்கு 25 ராகங்களில் கண்ணனின் பெருமை கூறப்படுகிறது ராகங்கள் புரிந்தோ ரசித்தோ பதிவு எழுதவில்லை அதற்காகவே சிலர் இருக்கிறார்கள் ஆடியோவை வலையில் ஏற்ற ஒரு வழி தெரிந்தது அவ்வளவே இனிமையான மனதுக்கு இதம் தரும் இசை என்கிறீர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  15. சிறப்பு. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    #2018/17/SigarambharathiLK
    Nokia 5 திறன்பேசிக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 மேம்படுத்தல்!
    https://newsigaram.blogspot.com/2018/03/nokia-5-8-1-surprise-update.html
    #techsigaram#sigaram #sigaramco
    #சிகரம் #தொழிநுட்பம் #நோக்கியா
    #nokia #Oreo8Point0 #SigarambharathiLK

    பதிலளிநீக்கு
  16. திறக்கட்டும். கேட்டுட்டுச் சொல்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குத் திறக்க வில்லையா சிலர் வாட்ஸ் ஆப்பில் பார்த்ததாகக் கூறி இருக்கிறார்கள்

      நீக்கு