Saturday, March 31, 2018

மாறும் வாழ்வின்மதிப்பீடுகள்


                              மாறும் வாழ்வின் மதிப்பீடுகள்
                             -------------------------------------------------


ஒரு சிறு கதை எழுதலாம் என்று நினைத்தேன்  கருவும்  கதாமாந்தர்களும்  உருவகப்படுத்தப்பட்டாய் விட்டது  ஆனால் எழுத உட்காரும்போதுஎண்ணங்கள் எழுத்தில்  கொண்டுவருவது சிரமமாய் இருந்தது ஒரு ஆரம்பம் கொடுத்து இப்படி எழுதலாமே என்று சொல்லியவருக்காக  எழுதிய கதையும்  நினைவுக்கு வந்தது ஆனால் கதை என்றால் அதற்கு ஒரு தொடக்கம் நிகழ்வு முடிவு எனும்  வரிசையில் வர வேண்டும்  சிறு கதைக்கான  இலக்கணத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும்  எறு யார் யாரோ சொன்னதெல்லாம்  என்னை எழுத விடவில்லை இருந்தாலும் நான் எழுதிய கதைகளுள் எனக்கே சற்று வித்தியாசமாய்ப் பட்ட ஒரு சிறு கதையை இப்போது மீள் பதிவாக்கி  என்சிறுகதை பதிவிடும் தாகத்தை தற்காலத்துக்கு தணித்துக் கொள்ளலாம் என்று தோன்றியதால் ஒரு பழைய கதையை மீள் பதிவாக்குகிறேன்   மேலும்  இன்றைய  என் வாசகர்களுக்கு அது புதிதாய்த்தான் இருக்கும் 


என்னுடைய மகளுக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. இந்த சம்பந்தம் கைகூடிவர எத்தனை எத்தனைத் தெய்வங்களைப் பிரார்தித்திருப்பேன். .ஆயிரம் கேள்விகள். ஆயிரம் சமாளிப்புகள். பெண் படித்திருக்கிறாளா, லட்சணமாய் , அழகாய் இருக்கிறாளா என்பதைப் பார்ப்பதை விட்டு குலம் என்ன கோத்திரமென்ன , அப்பா யார் அம்மா யார் என்பதோடு நிறுத்திக் கொண்டால் போதாதா. ? தாத்தா யார், பாட்டி யார் ஊர் என்ன வீடு என்ன அப்பப்பா  போதுமடா சாமி.... இவ்வளவு சலிப்பு ஏன். ? உள்ளதை உள்ளபடி சொல்லிப் போனால் என்ன.? முடியவில்லையே... எனக்கே நான் யார் வந்த வழி என்ன என்று யோசித்துப் பார்த்தால் எங்கோ இடிக்கிறமாதிரி இருக்கிறதே..

சின்ன வயதில் உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு போவதே அபூர்வம்., சொந்தங்கள் பந்தங்கள் என்று குழுமும்போது எல்லோரிடமும் ப்ழக வேண்டும் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று மனசு கிடந்து தவிக்கும். ஆனால் அப்பா ஏதாவது காரணங்கள் சொல்லி தவிர்த்து விடுவார். என்னுடைய தாத்தா பாட்டி என்று எல்லோரும் உயிருடன் இருக்கும்போது அவர்களைப் பார்த்த நேரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி பார்த்த நேரங்களிலும் அவர்களிடம் இருந்து பாசம் என்றால் என்னவென்றே தெரிந்து கொள்ள முடியாது. இரண்டு வழி தாத்தா பாட்டிகளுமே ஒருவித காழ்ப்பினைக் காட்டி வந்தார்கள். அந்த வயதில்  பட்டும் படாமலும் யாராவது பேசுவதைக் கேட்டு ஒன்று மட்டும் தெளிவாகி இருந்தது. அப்பாவும் அம்மாவும் ஏதோ தவறு செய்திருக்கிறார்கள், அதனால் உறவுகளால் தூற்றப்பட்டு வந்திருக்கின்றனர் என்று தெரிய வந்தது. ஆனால் அது என் மகள் திருமணத்திலும் பாதிப்பு உண்டாக்கும் என்பது எதிர்பாராதது.

படித்து முடித்து உத்தியோகத்துக்குப் போக ஆரம்பித்த பிறகு ஜாடை மாடையாக அப்பாவிடம் அவர் வாழ்க்கையைப் பற்றி விசாரிப்பேன்.
“ YOU DON’T WORRY ABOUT ANYTHING.  VALUES IN LIFE CHANGE WITH EVERY GENERATION” என்று கூறி என் வாயை அடைத்துவிடுவார். ஆக அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் வாழ்வின் மதிபீடுகளில் எங்கோ அடிபட்டிருக்க வேண்டும் என்று எண்ண வைத்தது.

எனக்கும் நம் உறவுகள் யார் , என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பமிருந்தது. நான் அவர்களிடம் தொடர்பு கொள்ளலாமா  என்று அப்பாவைக் கேட்ட போது. “ நீ வளர்ந்து விட்டாய் . உன்னைத் தடுத்து நிறுத்துவதில் அர்த்தம் இல்லை. ஆனால் யார் என்ன பேசினாலும் பிடிக்காவிட்டால் அங்கிருந்து விலகி வந்துவிடு. எதையும் நியாயப் படுத்தும் செயல்களில் ஈடுபடாதே “ என்று மட்டும் கூறினார்.

அப்பாவின் அம்மாவுக்கு ஒரு நிக் நேம் இருந்தது. அவர்களை GOD MOTHER என்று அழைத்தார்கள். அந்தப் பெயர்க் காரணம் புரியவில்லை. ஒருவேளை எல்லோரும் தன் பேச்சுக்குக் கட்டுப் பட்டு நடக்க வேண்டும் என்று விரும்பினார்களோ என்னவோ.... பட்டும் படாமலும் பலர் பேசக் கேட்டதிலிருந்து  எனக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்து விட்டது. ‘ இவர் என் அப்பாதானா.?’ இந்தக் கேள்வியே அபத்தமாக இருப்பதுபோல் தோன்றியது. எப்பவுமே அம்மா அம்மாதான்... அப்பா என்று வரும்போது அம்மா அறிமுகப் படுத்தியே தந்தை அறியப் படுகிறார். எல்லாமே நம்பிக்கைதான். மேல் நாட்டில் திருமணம் ஆவதும் மணமுறிவு ஏற்படுவதும்  மறு மணம் புரிவதும் வெகு சகஜமாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்ளும்போது .” என் குழந்தையும் உன் குழந்தையும் நம் குழந்தையோடு ஆடுகிறார்கள் “ என்று சொன்னால் அது நிதர்சனத்தை உணர்த்துவதாக இருக்கும், ஆனால் நம் நாட்டில் அப்படிப் பேசுவது அநேகரது புருவங்களை உயர்த்தும்.

அங்கும் இங்கும் கேள்விப்பட்டதைப் பொருத்திப் பார்க்கும்போது, என் அப்பா அம்மா வாழ்க்கையில் சமகால புரிதல்களை மீறி ஏதோ நடந்திருக்க வேண்டும். அம்மாவிடம் கேட்க மனசு ஒப்பவில்லை. என்னதான் இருந்தாலும் அப்பாவிடமும் அவரது அந்தரங்க வாழ்க்கையைக் கேள்வி கேட்க முடியுமா. ? இருந்தாலும்  உறவுகளில் இருக்கும் ஒரு stigma  தாங்க முடியாமல் இருக்கவே கேட்டு விட்டேன்.

“ அப்பா. உங்கள் வாழ்க்கையில் என்னவோ நடந்திருக்கிறது. சொந்தங்கள் எல்லாம் நம்மை ஒரு மாதிரி பார்க்கிறார்கள். நீங்களும் எதையோ மறைக்க்றாப்போலத் தோன்றுகிறது. என்னவென்று சொல்லலாமில்லையா. நானும் வளர்ந்து விட்டேன் இல்லையா

“ நிச்சயம் நீ இந்தக் கேள்வியோடு வருவாய் என்று எனக்குத் தெரியும். உன்னுடைய திருமணத்தின்போதே இந்தக் கேள்வியை எதிர்பார்த்தேன். நல்ல காலம் காதல் திருமணம் ஆனதால் பல கேள்விகள் கேட்கப் படாமலேயே போயிற்று.. நீ காதலித்துத் திருமணம் செய்து கொண்டாயே. காதலிக்கப் போகும் முன்னால் உன் காதலியின் பின் புலம் பற்றி எல்லாம் கேட்டுத்தான் காதலித்தாயா.?

“ கண்டோம் காதலினால் கட்டுண்டோம். கல்யாணமும் உங்கள் சம்மததோடுதானே நடந்தது. “

“ சமதித்திருக்காவிட்டால் கல்யாணம் செய்து கொண்டிருக்க மாட்டீர்களா.?

 IT IS A HYPOTHETICAL QUESTION.”

“ எப்படி எதையும் கேட்காமல் காதலித்தீர்களோ . அது போலத்தான் நானும் உங்கம்மாவும் காதலித்தோம்.

“ அதற்காக எதிர்ப்பு இருந்ததா?


“ ஆனால் அதில் ஒரு வித்தியாசம் இருந்தது. நான் உங்கம்மாவைக் காதலிக்கத் துவங்கும்போது . உங்கம்மாவுக்கு ஏற்கனவே மணமாகி கணவனும் இருந்தார்.

கதை முற்றிலும் எதிர்பார்க்காத திசையில் செல்வது கண்டு  காதுகளை நன்றாகத் தீட்டிக்கொண்டு கேட்டேன்.

“ VERY INTERESTING !. PLEASE BEGIN FROM THE BEGINNING. “

“ ஊர் பேர் எதுவும் வேண்டாம். நான் படித்து முடித்து வேலைக்குப் போன ஊரில் என்னுடைய அத்தை மகனும் இருந்தான். புதிதாக போகும் ஊரில் எல்லாம் சரிபட்டு வரும் வரை அவன் வீட்டிலேயே தங்கலாம் என்றான்
நானோ மிகவும் சங்கோஜி. யாருடனும் பழக மாட்டேன். திருமணமாகிக் குழந்தையோடு இருக்கும் அத்தை மகன் வீட்டில் தங்குவது முதலில் மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் உள்ளத்தின் ஒரு ஓரத்தில் சைத்தான் குடி இருந்திருக்க வேண்டும். அத்தை மகனின் மனைவி அங்கும் இங்கும் போகும் போது மனசில் பளீரென ஏதோ வெடிக்கும். தப்புடா தப்பு என்று மனசு சொன்னாலும் அதையும் மீறி ஒரு வேட்கை எழுந்தது நிஜம். அத்தைமகனுக்கு சம்பாத்தியம் குறைவு. நான் அங்கு ஒரு பேயிங் கெஸ்ட் ஆக இருந்ததால் அவனுக்கு  ஓரளவு வசதியாய் இருந்தது. அவன் ஆரோக்கியமும் அவ்வளவு சரியாய் இருக்க வில்லை. அடிக்கடி மருத்துவம் பார்க்கவும் அவனுக்கு சிசுருக்ஷை செய்வதுமாக உன் அம்மா இருந்தாள் 

“ என்னது...? என் அம்மாவா....? அப்போ......

“ ஆம் உன் அம்மாதான். என் அத்தானின் மனைவிதான்.

என் உள்ளத்தின் உள்ளே ஏதேதோ உணர்ச்சிகள் எழுந்தன. எதுவுமே புரியாதது போலும் எல்லாமே புரிந்தது போலும் தோன்றியது.

“ அப்படியானால் என் அப்பா...?

“ இருக்கிறார். ..நல்ல மனுஷன். ஒரு வாலிப வயது மாமா பிள்ளை. இவனே வாவென்று வரவழைத்துத் தங்கச் செய்தது. மனைவிக்கும் மாமா மகனுக்கும் இருந்த ஈர்ப்பைப் புரிந்து கொண்டு  விலகி சென்று விட்டார் குடும்பத்தில் ஒரு பூகம்பமே வெடித்தது. GOD MOTHER  நொறுங்கியே போய்விட்டார். உன் அம்மாவுக்கும் எனக்கும் ஏற்பட்டத் தொடர்பின் விளைவாக.ஒரு குழந்தையும் பிறந்தது. இனி  உறவை மூடிவைத்தால் பலரது பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஈடு கொடுக்க வேண்டி இருந்திருக்கும். உன் அப்பா.... நல்ல மனுஷன் ஒதுங்கிப் போய்விட்டார். இப்போது சொல் என்றைக்காவது எங்கள் உறவு குறித்து நீ சந்தேகப் பட்டிருக்கிறாயா. எங்கெல்லாம் யார் யாருடைய நாக்கு நீண்டு பேசுவதைத் தவிர்க்கவே உறவுகளைப் புறக்கணித்து வந்தோம். எனக்கும் இப்போது மனப் பாரம்குறைந்தது போல் இருக்கிறது.
 என்று கலங்கிய கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டார்.

இனிமேல் எனக்கே எங்கோ இடிக்கிறமாதிரி தோன்றாது. எல்லாம் தெரிந்து விட்டதே.   நம்மை நமக்காகவே விரும்பி திருமண உறவு வைத்துக் கொள்ள விரும்பினால் ஓக்கே.. என் மகளுக்கு என்று இனிமேல் ஒருவன் பிறக்கப் போவதில்லை. .இந்தத் திருமணம் நடக்கும் என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது.          

  


38 comments:

 1. //அப்படியானால் என் அப்பா?//

  இந்த இடத்தில் சற்றே குழப்பம். இன்னும் தெளிவாக எழுதியிருக்கலாம். ஏன் கதையை முடிக்கிற தருவாயில் அவ்வளவு அவசரப்படுகிறீர்கள்?.. குற்ற உணர்வுகளைக் கூட மனதிற்கு கிடைக்கும் நியாயம் தான் சமனப்படுத்துகிறது. அதனால் நின்று நிதானித்து அன்று எடுத்த முடிவுகளுக்காக காரணங்களை நிறுவி கதையை முடித்திருக்கலாம். அப்படிச் செய்திருந்திருந்தீர்கள் என்றால் கதை நிச்சயம் முத்திரை பதித்திருக்கும். அந்த மகனும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டிருந்திருப்பான்.

  ReplyDelete
  Replies
  1. கதைகள் என்பதே எழுதுபவனின் மனதில் உருவாகும் சிந்தனைகளின் வெளிப்பாடே அதேபோல் பின்னூட்டங்களுமிருப்பதுதான் நியாயம் முத்திரை பதித்திருக்கும் என்னும் எண்ணத்தை ம்க எளிதாக சொல்ல முடியாமல் ifs களும் buts களும் அல்லாட வைக்கின்றன எழுதும் போது எனக்கு எந்த குழப்பமும் இல்லை முடிவு எடுத்ததற்கான காரணங்கள் புரிய முடியாததுசில விவரங்கள் வாசிப்போர் புரிந்து கொள்ள வேண்டியது எப்போதுமே நக்கீரராக இருப்பதும் சாத்தியம் இல்லை

   Delete
 2. சிறுகதைகள் படிப்போருக்கு ஒவ்வொரு ரசனை வித்தியாசமான கதையை பதிவிட உனக்குத் துணிச்சல் ஜாஸ்தி என்று பலரும் நினைப்பது தெரிகிறது.......!

  ReplyDelete
  Replies
  1. கதைகளைப் படிப்போரை விட எழுதுவோருக்குத் தான் ஒவ்வொரு ரசனை. எப்படி ஆரம்பிக்க வேண்டும், எங்கே நீட்ட வேண்டும், எங்கே குறுக்க வேண்டும், எப்படி முடிக்க வேண்டும் என்றெல்லாம்.

   உதாரணத்திற்கு:

   'அப்பா என்று வரும்போது அம்மா அறிமுகப் படுத்தியே தந்தை அறியப் படுகிறார். எல்லாமே நம்பிக்கைதான். மேல் நாட்டில் திருமணம் ஆவதும் மணமுறிவு ஏற்படுவதும் மறு மணம் புரிவதும் வெகு சகஜமாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்ளும்போது .” என் குழந்தையும் உன் குழந்தையும் நம் குழந்தையோடு ஆடுகிறார்கள் “ என்று சொன்னால் அது நிதர்சனத்தை உணர்த்துவதாக இருக்கும், ஆனால் நம் நாட்டில் அப்படிப் பேசுவது அநேகரது புருவங்களை உயர்த்தும்...'

   -- இந்த வரிகளை எடிட் செய்து விடலாம்.
   உங்கள் கருத்தான இது, கதையோடு ஒட்டாமல்
   துண்டாகத் தெரிகிறது. எந்த நமது தனிப்பட்ட கருத்தும் கதையோடு கதையாக இழைந்து வர வேண்டும். கருத்தோ, உபதேசமோ தனியாகத் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

   கதை எழுதும் கலை லேசுப்பட்டதல்ல. வாசிப்பவர்களை எழுத்தை மோகிக்க வைப்பதும் சுலபமான வேலை அல்ல.

   எழுதுகிறவருக்கு என்ன துணிச்சல் வேண்டிக் கிடக்கிறது?.. எந்த புரட்சிகர நடவடிக்கையையும் நடைமுறைப் படுத்துகிறவனுக்குத் தான் துணிச்சல் வேண்டும்.

   Delete
  2. பின்னூட்டங்களைப் பார்க்கும் போதே வாசிப்போர்களின் ரசனை களில் வேறு பாடு

   Delete
  3. எழுதுபவன் எழுத்தில் அவன் கருத்துகளைக் கொண்டுவருகிறான் அந்த கருத்துகளில்
   எல்லோரையும் எழுத்தை மோகிக்க வைக்க முடியாது அதைத்தான் எழுத துணிச்சல் வேண்டும் என்றேன் வாசிப்பவனுக்கு எல்லாவற்றையும் ஸ்பூன் ஃபீட் செய்ய முடியாது கூடவும் கூடாது அதுவும் வித்தியாசமான கருத்து என்றால் எல்லோரையும் திருப்தி படுத்த இயலாது ஆனால் சொன்ன கருத்துகளில் எந்த சந்தேகமும் இல்லை பதிவில் ”அப்படியானால் என் அப்பா “ என்னும் கேள்வியே தாய் தந்தையை சரியாக அறிமுகம் செய்யவில்லை என்பதைக் காட்டுகிறது அப்படி அறி முகம் செய்ய இயலாத நிலையும் புரிந்து கொள்ள வேண்டியது எழுதுபவ எழுத்துகளை நியாயப் படுத்துவது எனக்கு சரியாகப் படவில்லை வாசிப்போரின் குணாதிசயங்களும் அடங்கி இருப்பதால்தான் இந்தநிலை

   Delete
 3. வாழ்க்கையின் மதிப்பீடுகள் இப்போ மாறிவிட்டதா என்ன? பரவாயில்லை... மனைவியின் மகனை வளர்த்து ஆளாக்கியிருக்கிறாரே.

  ReplyDelete
  Replies
  1. இந்தக் கதை முன்பு பதிவிட்டிருந்தபோது வந்த ஒரு பின்னூட்டம் நினைவுக்கு வருகிறது ஒரு வாசகர் சொந்த்ச சகோதரனின் மனைவியோடு முப்பதுஆண்டுகள் கழித்தவரின் நினைவும் அவருக்கு வந்ததாம் வாழ்க்கையின் மதிப்பீடுகள் மாறுகின்றன அது தெள்ளத் தெளிவு மனைவியை நேசித்தவர் மனைவியின் மகனையும் நேசித்திருக்கிறார்

   Delete
 4. படித்து முடித்தவுடன் ஞாபகம் வந்த பாடல் வரிகள்...

  நான் கேட்டு தாய்தந்தை படைத்தானா...?
  இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா...?
  தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி...
  கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி...!
  ஆதி வீடு அந்தம் காடு...
  இதில் நான் என்ன...? அடியே நீ என்ன...? ஞானப் பெண்ணே...
  வாழ்வின் பொருள் என்ன...? நீ வந்த கதை என்ன...?

  தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்...
  அது தெரியாமல் போனாலே வேதாந்தம்...

  மன்னைத் தோண்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி...
  என்னை தோண்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி...
  உண்மை என்ன...? பொய்மை என்ன...?
  இதில் தேன் என்ன...? கடிக்கும் தேள் என்ன...? ஞானப் பெண்ணே...
  வாழ்வின் பொருள் என்ன...? நீ வந்த கதை என்ன...?

  ReplyDelete
  Replies
  1. எதற்கும் தெய்வத்தை துணைக்கழைப்பது எனக்கு ஒவ்வாத ஒன்று

   Delete
  2. பின்ன நான் சொல்வது சரிதானே

   Delete
 5. மீள் பதிவு கதையாகவே படித்தேன். ஏனெனில் இந்த கதையின் சில கருத்துக்களை உங்கள் சிறுகதை ஒன்றில் முன்பே படித்ததாக எனக்கு நினைவு.

  ReplyDelete
  Replies
  1. எப்போது கதையைப் படித்தால்தான் என்ன கருத்துகளை கூறி இருக்கலாம் அதுவும் ஒருவித்தியாசமான கதைக்கு எனி வே வருகைக்கும் வாசித்ததற்கும் நன்றி

   Delete
 6. தமிழ் இளங்கோ ஐயா அவர்களின் கருத்தினை வழி மொழிகின்றேன் ஐயா

  ReplyDelete
  Replies
  1. இளங்கோ ஐயா எந்தக் கருத்தையும் கூறவில்லையே

   Delete
 7. நான் இப்போதுதான் படிக்கிறேன். பாவம் அந்த மகன். அந்தப் பிள்ளையை தன்னை வெறுக்கவும் முடியாமல், நேர்சிக்கவும் முடியாமல் திண்டாட வைத்து விட்டார். இன்னொரு பிள்ளை என்னவானாரோ என்கிற கவலை எனக்கு!

  ReplyDelete
  Replies
  1. என் வாழ்வின் விளிம்பில் சிறுகதைத் தொகுப்பில் வெளியான கதை இப்போதுதான் படிக்கிறீர்களா எல்லாக் கதைகளும் வித்தியாசமாயிருக்கும்

   Delete
  2. ///இன்னொரு பிள்ளை என்னவானாரோ என்கிற கவலை எனக்கு!///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது ரொம்ப முக்கியமான கவலைதான்:)).
   ஸ்ரீராம் ஹார்ட் ரொம்ப முகியம் மறந்திடாதீங்க:))

   Delete
  3. கவலைப் படுவது ஹார்டுக்கு கேடா

   Delete
 8. மிகவும் க்ரிட்டிக்கலான சூழ்நிலைதான் மனம் பதறுகிறது.

  ReplyDelete
  Replies
  1. சிலரது நிஜ வாழ்வின் பிரதிபலிப்புதானே கதை கதையைக் கதையாகவே அணுகினால் பதற்றமிருக்காது நன்றி ஜி

   Delete
 9. சில நிகழ்வுகள், சந்திப்புகள், மனிதர்கள் என அனைத்திற்கும் எங்கோ ஒரு அர்த்தமுள்ள முடிச்சு இருக்கும். நம்மால் புரிந்து கொள்ள முடிந்தாலும், முடியாது போனாலும், அதை சுவீகரிப்பது அதீத மன முதிர்ச்சியின் அடையாளம்.

  ReplyDelete
  Replies
  1. சில சம்பவங்கள் சுவீகரிக்காவிட்டாலும் நிகழ்ந்தவையே வருகைக்கு நன்றி மேம்

   Delete
 10. வாழ்வின் விளிம்பில்...நினைவூட்டலோ ஐயா?

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு அப்படித் தோன்றியதா கதை பற்றிய கருத்து அறியவே பதிவிட்டேன் நன்றி சார்

   Delete
 11. சார் இந்தக் கதை வாழ்வின் விளிம்பில் தொகுப்பில் உள்ள கதை. வாசித்துவிட்டேன்..அத்தொகுப்பில்..ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கதை.

  இதில் அக்கணவன் அவன் மனதிலும் தான் நோய்வாய்ப்பட்டு இருக்கிறோம் என்ற உணர்வு இருந்திருக்கும் அதனால்தான் சத்தம் போடாமல் விலகியிருக்கிறான் அல்லது இவனும் கஸின் தானே அதனாலும் இருக்கலாம்...உண்ட வீட்டுக்கே ரெண்டகம் என்பதுதான் நினைவுக்கு வருது...நார்மலாக பொதுவாக கணவன் பிரச்சனை பண்ணுவதுதான் வழக்கம் இதில் அவன் விலகிவிடுவதாக வைத்திருப்பது ...சரி இவனுக்கும் அவளுக்கும் பிறக்கும் குழந்தை என்னா ஆச்சு?

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கதை இவனுக்குப் பிறக்காத மகன் பற்றியது வருகைக்கு நன்றிமேம்

   Delete
 12. இந்தப் பதிவில் உங்கள் பின்னூட்டங்கள் பிரமாதம்.

  இது புது விருந்து. ப்ளீஸ் கீப் இட் அப்.

  ReplyDelete
  Replies
  1. வசிஷ்டர் வாயால் ...........

   Delete
 13. சற்று வித்தியாசமான கோணத்தில் ஒரு அழகிய சிறுகதை... ஆனால் முறைப்படி பார்த்தால் சகோதரியை அல்லவோ திருமணம் முடித்திருக்கிறார் ...

  ReplyDelete
  Replies
  1. அப்பாவின் சகோதரி அத்தை / அத்தையின் மகனின் மனைவி எப்ப்டி சகோதரிஆவாள் உறவு முறைகளில் வெவ்வேறு புரிதல்கள்?

   Delete
 14. முன்பே வாசித்த கதைதான்... வாழ்வின் விளிம்பில் சிறுகதைத் தொகுப்புக்கு நான் விமர்சனம் என ஒன்று எழுதி பதிவிட்டிருந்தேன்... கதைகள் பெரும்பாலும் வாழ்வியல் நிஜங்களையும் உள்ளிழுத்துக் கொள்ளும்.

  நல்ல கதை ஐயா....

  ReplyDelete
  Replies
  1. மொத்தமாக சிறு கதை தொகுப்புக்கு விமரிசனமெழுதுவது வேறு ஒரு கதையை அலசி எழுதுவது வேறு அல்லவா குமார்

   Delete
 15. கதைகள்
  வாழ்க்கையைப் பார்க்க உதவும்
  வாழ்வில் சிந்திக்க வேண்டியதையும் சொல்லும்
  பயனுள்ள பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
 16. இந்தக்கதை சற்றே வித்தியாசமான கோணலில் அணுகியது

  ReplyDelete
 17. படிச்சிருக்கேன். எனக்கும் அவங்க ரெண்டு பேருக்கும் பிறந்த குழந்தை பற்றித் தான் கவலை! :)

  ReplyDelete
  Replies
  1. அந்த கதா பாத்திரம்பற்றியதல்லவே கதை

   Delete