ஒரு சிற்றூரில் தங்குமிடம் தேடி வந்தான் ஒருவன்.
தங்கும் விடுதி ஒன்றில் ஒரு நூறு ரூபாய் தாளெடுத்து
கல்லாக் காரனிடம் அச்சாரமாய்க் கொடுத்து--இடம்
பார்த்துப் பிடித்தால் தங்குகிறேன் என்றான்.
மேசையில் நோட்டைக் கண்டதும் கல்லாக்காரன்
எடுத்து, அதை அடுத்துள்ள கடையில் பலசரக்குப்
பாக்கிக்கு என கொடுத்து விட்டான்.
பலசரக்குக் காரன் கூட்டுறவுக் கடைக்கு
அதைக் கொண்டு அவன் கடனை அடைத்தான்.
கூட்டுறவுக்காரன் அவன் கூத்தாளுக்கு அதைக்
கொடுத்து அவள் பாக்கியை நீக்கினான்
அவளதை விடுதியின் வாடகை பாக்கியெனக் கொடுத்தாள்.
அங்கிங்கு அலைந்த அந்தப் பணம் மீண்டும்
கல்லாக்காரன் மேசைமேல் வந்தது.
அறை தேடிச் சென்றவன் திரும்பி வந்து
இருக்க இடம் திருப்தி தரவில்லை என்று,
கொடுத்த பணத்தை எடுத்துச் சென்றான்.
கதை படித்த காசினியோரே
கவனமாய் கருத்தில் கொள்ளுங்கள்.
பணம் என்ன செய்தது.?
உற்பத்திக்கு உதவியதா...
யாராவது அதை சம்பாதித்து ஈட்டினரா.......
ஆனால் பலரது கடன் அடை பட்டது
சம்பந்தப் பட்டவர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இலவசமாய் வந்தடையும் பணமும்
இதைத்தான் செய்கிறதோ..
இப்படித்தான் இல்லாத ஒனறு
ஊக்குவிக்க உதவுகிறதோ.
--------------------------------------------
கல்லாக் காரனிடம் அச்சாரமாய்க் கொடுத்து--இடம்
பார்த்துப் பிடித்தால் தங்குகிறேன் என்றான்.
மேசையில் நோட்டைக் கண்டதும் கல்லாக்காரன்
எடுத்து, அதை அடுத்துள்ள கடையில் பலசரக்குப்
பாக்கிக்கு என கொடுத்து விட்டான்.
பலசரக்குக் காரன் கூட்டுறவுக் கடைக்கு
அதைக் கொண்டு அவன் கடனை அடைத்தான்.
கூட்டுறவுக்காரன் அவன் கூத்தாளுக்கு அதைக்
கொடுத்து அவள் பாக்கியை நீக்கினான்
அவளதை விடுதியின் வாடகை பாக்கியெனக் கொடுத்தாள்.
அங்கிங்கு அலைந்த அந்தப் பணம் மீண்டும்
கல்லாக்காரன் மேசைமேல் வந்தது.
அறை தேடிச் சென்றவன் திரும்பி வந்து
இருக்க இடம் திருப்தி தரவில்லை என்று,
கொடுத்த பணத்தை எடுத்துச் சென்றான்.
கதை படித்த காசினியோரே
கவனமாய் கருத்தில் கொள்ளுங்கள்.
பணம் என்ன செய்தது.?
உற்பத்திக்கு உதவியதா...
யாராவது அதை சம்பாதித்து ஈட்டினரா.......
ஆனால் பலரது கடன் அடை பட்டது
சம்பந்தப் பட்டவர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இலவசமாய் வந்தடையும் பணமும்
இதைத்தான் செய்கிறதோ..
இப்படித்தான் இல்லாத ஒனறு
ஊக்குவிக்க உதவுகிறதோ.
--------------------------------------------
செல்வம் சென்றுகொண்டே இருக்கும், சிலருக்கு மகிழ்ச்சியும் சிலருக்கு வருத்தத்தையும் தந்துகொண்டு
பதிலளிநீக்குஅதற்கு ஏன் என்று தெரியாமலே
நீக்குமகிழ்வை தரும் - ஈகை இருந்தால்...!
பதிலளிநீக்குஈகை இயற்கையாகஇருக்க வேண்டும்
நீக்குஅது திரும்பி விடுதிக்காரன் கைக்கு வந்திரா விட்டால்?
பதிலளிநீக்குஅதுதான் வந்து விட்டதே
நீக்குபணம் என்பது சுற்றிக் கொண்டேதானே இருக்கும். பணம் சுற்றவில்லை என்றாலும் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமே...பணம் பத்தும் செய்யும்...
பதிலளிநீக்குகீதா
உங்கள் சிந்தனையே வேறு
நீக்குஇனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதீபாவளி வாழ்த்துகள்
நீக்கு