ஞாயிறு, 14 மார்ச், 2021

தேர்தல் நேரம் மக்களே உஷார்

 

 

அரசியல் பற்றி  எழுதுவதை தவிர்க்க விருப்பம் ஏன் எனறால் நாம்   எழுதுவதில் உண்மை இல்லாமல் இருக்கலாம் அபிப்ராயங்கள்நிஜமாக இருக்காது போகலாம்  எனக்கு என்னவோ தற்போதய  மத்திய் அரசு குழம்பிய குட்டையில் மீன்  பிடிக்கிறார்கள் என்று தோன்றுகிறது ஆட்சியில் இருப்பவர்கள்  சிலரது  அபிப்பிராய  பேதங்களை அவர்களூக்கு சாதகமாக்கி கட்சி மாறச்செய்து  பலன் எதிர்பார்க்கிறார்கள்  தேர்தல் சமயமே சில ருக்கு வேறு கட்சிகள் ஆட்சி புரியும் இடங்கள்  நினைவுக்கு வரும்  அங்கெல்லாம்நலதிட்டங்கள்  செயல் படுத்தப்படும்  விலாசமே இல்லாதவர்களுக்கு பதவி  ஆசை தூண்டி  கட்சி மாற்ச்செய்வார்கள்  இம்மாதிரி கட்சி மாறு பவர்களை மக்கள் அடியோடுதூக்கி எறிய வேண்டும்இப்போதெல்லாம்தேசிய தொலைக்காட்சிகள்  newa க்குபதில் views அதிகம்  ஒளி பரப்புகின்ற்ன மக்களும் நம்புகின்றனர் மதிய ஆட்சியின்  கட்டுக்குள் இருக்கும் தேர்தல் ஆணையம்  போன்றவை அரசு சொல்படிதான்  நடக்கின்ற ன எல்லோரையும்எப்போதும்   ஏமாற்ற முடியாதுமக்களே உஷார்     

     

     


20 கருத்துகள்:

  1. அரசியல் ஒரு மிகவும் அபாயமான சப்ஜெக்ட். விலாவாரியாக எழுதினால் பலரது வெறுப்புகளையும் நேர்கொள்ள வேண்டி வரும். பரவாயில்லை நீங்கள் சும்மா தொட்டு விட்டு சென்று விட்டீர்கள். நல்லது.

    `நடந்தவை, நடப்பவை, நடக்கப்போவது என்று எல்லாவற்றையும் நம்மால் மாற்ற முடியாது. அதுவே விதி. நல்லவையே நடந்தன நல்லவையே நடக்கின்றன நல்லவையே நடக்கும் என்று நம்புவோமாக.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  2. ஆக நம்பிக்கொண்டு அனுபவிப்போம் இன்ன்ல்களை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவிக்கவில்லை எனில் அவை இன்னல்கள் இல்லை. இன்னல்கள் என்றால் அனுபவித்தே தீரவேண்டும்.
       Jayakumar

      நீக்கு
  3. ஊடகங்களில் நீங்கள் சொல்வதுபோல Newsக்குப் பதிலாக Viewsதான் அதிகம் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viewpபகிரப்பட்டுஅதுவே நிஜமென்று பாவிக்கப்படுகிற்து

      நீக்கு
  4. //மத்திய ஆட்சியின் கட்டுக்குள் இருக்கும் தேர்தல் ஆணையம் போன்றவை அரசு சொல்படிதான் நடக்கின்றன//

    இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை ஐயா.

    பதிலளிநீக்கு
  5. நமது கருத்துகளை நம்முடன் வைத்துக் கொள்வதே நல்லது.  நம் மகன் மகள்கள் பொது விஷயங்களில் நம்முடன் ஒத்துப்போக மாட்டார்கள்.  எதற்கு இதை எல்லாம் பொதுவெளியில் திணிக்க வேண்டும்?   அவர்கள் கருத்துடன் ஒத்துப் போகாதவர்களை வசைபாட ஒரு குழு காத்துக்கொண்டிருக்கும். தேவையா இது?  JC ஸார் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லப்படாத கருத்துகள் உலர்ந்த சருகுகள் போல்நல்லது கெட்டது எல்லாம் பகிரப்பட வேண்டும்

      நீக்கு
    2. @ஸ்ரீராம்


      //நமது கருத்துகளை நம்முடன் வைத்துக் கொள்வதே நல்லது. //

      இது என்னை பொருத்தவரையில் தவறாக கருதுகின்றேன்


      /நம் மகன் மகள்கள் பொது விஷயங்களில் நம்முடன் ஒத்துப்போக மாட்டார்கள். /

      அவர்கள் ஒத்து போகமாட்டார்கள் என்பதற்காக நாம் அவர்களுக்கும் நம் கருத்தை சொல்லாமலா இருக்கிறோம்


      /எதற்கு இதை எல்லாம் பொதுவெளியில் திணிக்க வேண்டும்? //

      கருத்தை சொல்வது என்பது திணிப்புது என்பது ஆகாது

      அவர்கள் கருத்துடன் ஒத்துப் போகாதவர்களை வசைபாட ஒரு குழு காத்துக்கொண்டிருக்கும். தேவையா இது?
      // நம் கருத்து சரியாக இருந்தால் அவர்கள் வசைபாடுவதை ஒரு பொருட்டாக கருதக் கூடாது

      நாம் நம் கருத்தை மனம் திறந்து சொல்லாம் காரணம் சில சமயங்களில் மாறுப்பட்ட கருத்தை கொண்டவர்கள் நம் கருத்தில் உள்ள உண்மைதன்னையை அறிந்து தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளலாம்

      நாம் ஒரு கருத்தை சொல்வதால் நட்பு/உறவு பாதிக்கும் என்றால் அது உண்மையான நட்பு/உறவாக இருக்க முடியாது.. அப்படிப்பட்ட போலியான நட்பு/உறவு நமக்கு இருப்பது எதற்கு?


      கருத்து சொல்வது என்பது நம்மை பற்றி வெளிப்படையாக அறிவித்து கொள்வதுமாதிரி அப்படி நாம் சொல்லி நம்முடன் உறவு/நட்பு கொள்பவர்களுடன் இனைந்து இருப்பதுதான் பெருமை... அதைவிட்டு விட்டு போலித்தனமாக வாழ்வது சரியல்ல

      அரசியல் கருத்துக்களில் நம் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் அதை வைத்து மட்டும் நம் நட்பை தீர்மானிப்பது தவறு அரசியல் தவிர்த்து பல விஷயங்களில் நம் கருத்துகள் ஒத்துப் போகலாம் அதனால் அரசியல் கருத்தைக்களை வைத்து மட்டும் எதையும் தீர்மானிக்க கூடாது

      ஸ்ரீராம் நான் சரியாகத்தான் சொல்லி இருக்கிறேனா என்பதை தெரிந்து கொள்ள ஆசை ஒருவேளை இதை படித்தால் உங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கின்றேன் நேரம் இருந்தால் பதில் அளிக்கவும்

      நீக்கு
    3. அரசியல், மதம் போன்றவற்றில் தனிப்பட்ட தீர்மானங்கள்தாம் சரியாக வரும். இது இரண்டும் (தமிழகத்தில் கூடுதலாக சினிமா) விவாதிக்க ஆரம்பித்தால் நட்புதான் கெடும் (நான் கருத்து, நட்பு இரண்டையும் ஒன்றாகக் குழப்பிக்கொள்ளாத சிலரைப்பற்றிக் குறிப்பிடவில்லை). ஒரு தடவை லண்டலின் பாரிஸ்டர் ஒருவருடன் ஸ்மால் டாக் ஆரம்பித்தபோது, அரசியல் மதம் தவிர பிறவற்றைப் பேசுவோம் என்று சொல்லி காரணம் சொன்னார். அது எனக்கு ஏற்புடையதாக இருந்தது.

      பெரும்பாலும் பலர், இதோ பாஜக இப்படிச் செய்கிறதே, இதோ மத வாதம் பேசும் அரசு என்றெல்லாம் தங்கள் கருத்துக்கு ஏற்றபடி எழுதுகிறார்கள். இவங்கள்லாம், இதையே தங்களுக்கு ஏற்புடைய கட்சி செய்தபோது, இப்போதும் செய்யும்போது, அதைக் கண்டும் காணாமலும் இருந்துவிடுகிறார்கள். இதுபோலத்தான் தெய்வ நம்பிக்கை, சாதி ஒழிப்பு, நல்லநேரம் கெட்ட நேரம் போன்றவை. வெளியில் நியாயம் பேசுபவர்கள், தங்களுக்கு என்று வரும்போது சாக்குப் போக்குச் சொல்வார்கள் (என் கருத்து அப்படி, என் மனைவி என் கருத்தோடு ஒத்துப்போவதில்லை, அவள், குழந்தைகள் கருத்து வேறு என்றெல்லாம் வியாக்கியானம் கொடுப்பார்கள். உள்ளூரிலேயே பப்பு வேகாதவர்கள் உலகத்தைத் திருத்தக் கிளம்பியதுபோலத்தான் அது) அப்படி போலித்தனமாக, ஏதோ நியாயம் பேசுகிறார்போல் சிலர் எழுதும்போது, அவர்களின் போலித்தனத்தைப் பார்த்து எரிச்சல் வருவதால் சில சமயங்களில் பின்னூட்டங்கள் எழுதவேண்டியிருக்கு. இல்லையென்றால் பொதுவாக அத்தகைய பதிவுகளை நான் கடந்துவந்துவிடுவேன்.

      ஸ்ரீராம் என்ன நினைக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் இதுதான் நான் நினைப்பது.

      நீக்கு
    4. நான் எழுதநினைத்ததை அவர்கள் உண்மைகள் எழுதி இருக்கிறார் நன்றி

      நீக்கு
    5. அரசியல் மதம் பற்ற் கருத்ட்க்ஹு சொன்னால் அது தவறு என்று நினப்பவர் அன்று அவர்கள் செய்ததுசரியா என்கிறார்கள் அவ்ர்களின் தவறை இபபடி நியாயப் படுத்த நினைக்கிறார்கள்

      நீக்கு
    6. ஜிஎம்பி சார்... நீங்க வேற கட்சிகளெல்லாம் மதச் சார்புள்ள, மதக் கட்சிகளோடு கூட்டணி வைத்து, அந்தக் கட்சி சார்பா தலைவர்கள் பேசும்போது எதையும் எழுதினதுபோலத் தெரியவில்லையே. அவர்களையெல்லாம் ஆதரித்துக்கொண்டு, பாஜக செய்யும்போது மட்டும், வரிந்துகட்டிக்கொண்டு மதவாதம் என்று நீங்கள் எழுதும்போது அதில் எங்கு நியாயம் இருக்கும்? அவங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகுகிறதே என்ற வயிற்றெரிச்சல்தான் இருக்கும். இப்போதுகூட காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லீம் கட்சிகள் இருக்கின்றன, (தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திலும்). காங்கிரஸ்தான் சிவசேனா கட்சியோடு கூட்டணி ஆட்சி செய்கிறது. இவைகளின் மதவாதம் பற்றி நீங்கள் எழுதி, ஒருவேளை நான் கவனிக்கவில்லையோ? கொஞ்சம் சுட்டி தர முடியுமா?

      'இது தவறு' என்று நியாயத் தராசை எடுத்துக்கொண்டு இணையத்துக்கு வந்தால், எல்லாப் பக்கமும் பார்த்துக்கொண்டு எழுதணும். இல்லையென்றால், கசாப்புக் கடை நடத்திக்கொண்டே, 'புலால் உண்ணுவது தவறு..பாருங்கள் எதுத்த வீட்டுக்காரன் புலால் உண்கிறான். அதைக் கண்டியுங்கள்' என்று எழுதுவது போல ஆகிவிடும். (அதைத்தான் நீங்க செய்யறீங்க)

      நீக்கு
    7. எனக்கு இருக்கும் ஆதங்கமே எழுதியதை உள்வாங்காமல் சிலர் கருத்திடுவதை பார்ப்[பதால் எழுவதே நனெங்குமெ தவறு செய்பவரை கண்டிக்காமல்விட்டதில்லைவங்காளத்தில் களம் இறங்கி கட்சி மாற்ச் செய்வதை பார்க்கும்போதும் அதை நிறைவேற்றும் வாய்ப்புகாணும்போதும் மனசு வலிக்கிறது நேற்றுவரைக் ஒரே தட்டில் உண்டவர்கள் இன்று அதுநல்லது அல்ல என்று புலம்புவதைக் காணும் போதுஎற்பட்ட எரிச்சலே பதிவுக்கு காரணம் அன்றைக்கு இந்திரா காந்தி செய்ததெல்லாம் தவறு என்று சொல்வது வெறும் காழ்ப்புணர்ச்சியேஎல்லோரும்சுயநலத்தில் இயங்குவதால் தவறு என்று தோன்றுவதை தவறு என்று சொல்வதை தவறு என்று சொல்லலாமா

      நீக்கு
    8. நான் எழுதியது தவறு என்று தோன்றவில்லைஅரசியல் பற்றி எழுதுவதை தவிர்க்கிறேன் காரணமும் எழுதி இருக்கிறேன்

      நீக்கு
  6. உங்க கருத்து எப்போதும் கான்ஸ்டண்ட். இந்திரா காலத்தில் இல்லாத ஆட்டுவிப்புகளா? எல்லா அரசுகளுமே சுயநலத்தில் இயங்குகின்றன. நமக்குப் பிடிக்கவில்லை என்றால் தேர்ந்தெடுத்து வசை பாட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  7. இருப்பததைத்தானேஎழுதி இருக்கிறேன் வசை பாட வில்லை எடுத்துரைக்கிறேன்

    பதிலளிநீக்கு