பெண்களைப்பற்றி
நிறையவே எழுதி இருக்கிறேன் படிப்பவர் பலருக்கும்
பெண்கள் மீதுஎனக்கு ஏதோ bias இருப்பதுபோல்
தோனறலாம் ஆனல் எங்கோ உண்மை சாயல் இருப்பதும் தெரியும் நம்பக்கம் உங்கள்வீடு சிதம்பரமா மதுரையா
என்று கேடபது வழக்கம் ஆனால் பெண்களொப்புக் கொள்ளமாட்டார்கள் எதோ அவர்கள் வீட்டில் எப்பொழுதும் கணவன் பேச்சுப்படிதான்
நடப்பது போல் காட்டுவார்கள்என் வீட்டில் நான்
நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தபோது என்பேச்சுப்படிதான் நடக்கும்எப்போது என்னால் தனிதியஙமுடிய வில்லையோ அப்போதிலிருந்து என் வீட்டில் மதுரைஆட்சிதான் மதுரை ஆட்சி தவறு என்று சொல்லவில்லைகணவனும் மனைவியும்
இரு மாடுகள் வண்டியை இழுக்க
இதை படித்து பாருங்கள் புரியலாம்
நீ ங்கள்
சொன்னபடி
செய்தால்
போச்சு
-------------------------------------------------------------
இன்றைக்கு
நண்பர்கள்
இருவரை
டின்னருக்கு
அழைத்திருக்கிறேன் .என்ன சமையல் செய்கிறாய் ?
நீங்கள் சொன்னபடி செய்தால் போச்சு .
அடை
அவியல் செய்துவிடு .
அவியலுக்கான
காய் கறிகள்
இல்லையே.
அப்போது
வெஜிடபிள் புலாவ்
செய்கிறாயா?
அவியலுக்கே
காய்கறிகள்
இல்லை
என்கிறேன்,வெஜிடபுள்
புலாவ்
எப்படி?
வெங்காய
சாம்பாரும்
உருளைக் கிழங்கு
பொடிமாசும்
செய்கிறாயா?
இரவு உணவில்
உருளைக் கிழங்கு
வாயு
உபத்திரவம்
தரும்.
சோளே
பட்டுரா செய்தால் நன்றாக
இருக்கும் இல்லையா?
சோளே
பட்டுரா ரொம்ப ஹெவியாகி விடும்.
அப்படியானால்
மாகி
நூடுல்ஸ் செய்கிறாயா?
சேச்சே !
டின்னருக்கு
கூப்பிடுகிறீர்கள் . வயிறு நிறைய வேண்டாமா.?
சரி.
இட்லி
சாம்பார்
செய்து விடு
அதற்கு
முன்பே ப்ளான்
செய்திருக்க வேண்டும்.இட்லிக்கு மாவு அரைக்க
வேண்டாமா?
அப்போ ஓட்டலிலிருந்து ஏதாவது தருவிக்கலாமா.?
வீட்டுக்கு வரச்சொல்லிக்
கூப்பிட்டு
ஓட்டலில் இருந்து தருவிப்பதா?
\
பின்
என்னதான்
செய்யப்
போகிறாய்?
நீங்கள்
சொன்னபடி
செய்தால்
போச்சு.!
----------------------------------------------------------------
.
ஹா.. ஹா.. ஹா... மீண்டும் ஒருமுறை ரசித்தேன்!
பதிலளிநீக்குபெண்களை நம்பாதே என்ற தலைப்பை பார்த்தவுடன் தூக்குத் தூக்கியில் உள்ள பாடல் "பெண்களை நம்பாதே" நினைவில்வந்தது.
பதிலளிநீக்குJayakumar
திரைப்படங்களை நினைவு படுட்த எழுதியது அல்ல
நீக்குஏற்கனவே படித்திருக்கிறேன். நல்ல திறமையான மனைவி, தன் எண்ணத்தை, கணவனின் வாயால் வரவழைத்து, அவர் சொல்வதையே செய்வதுபோலச் செய்வாள்.
பதிலளிநீக்குஆனாலும் பெண்கள் ஆண்களைவிட எவ்வளவோ குடும்பத்திற்கு உழைப்பவர்கள்.
நான் எழுதியது இபடியும்பெண்கள் இருக்கிறார்கள் என்பதைக்காட்டவே கணவனும் மனைவியும் இரு மாடுகள்குடும்ப வண்டியை இழுக்க
பதிலளிநீக்குவிளையாட்டை ரசித்தேன்...
பதிலளிநீக்குஇது விளையாட்டா
நீக்குரசித்தேன் ஐயா
பதிலளிநீக்குவந்து ரசித்ததற்கு நன்றி
நீக்குஆஹா...நம்மை பேச்சுத்தான் செல்லுபடி ஆகிறது என சந்தோசப்படுத்தச் செய்யும் இறுதி வாக்கியம் அருமை..
பதிலளிநீக்குஅப்படியும் மகிழலாம்
நீக்குமதுரையில் சித்திரையில் இருந்து ஆவணி மாதம் வரை தான் மீனாக்ஷியின் ஆட்சி. அதன் பின்னர் சுந்தரேசர் ஆட்சி தான். ஆனால் சொல்லுவது என்னமோ மதுரையா/சிதம்பரமா என்று.
பதிலளிநீக்குபொதுவாக யாரையேனும் சாப்பிடக் கூப்பிடும்போதே அவங்களுக்குக் காலை உணவா? மதிய உணவா அல்லது இரவு உணவா என்பதைத் தீர்மானித்து விடுவோம். அதற்கேற்றாற்போல் தயார் செய்வோம். ஆகையால் இந்த சம்பாஷணையை நகைச்சுவைக்காகப் போடப்பட்டது என்றாலும் இரவுக்கு எது எளிதில் செரிமானம் ஆகும் என்பதைப் பொறுத்தே தீர்மானிப்போம். இல்லையா?
பதிலளிநீக்குபெண்களை நம்பாதே என்னும் ஆணால் பெண் துணை/உதவி இல்லாமல் வாழ முடியுமா? ஆணே பெண்ணைச் சார்ந்து தானே வாழ்கிறான்.
பதிலளிநீக்கு