கடவுளோடு ஒரு உரையாடல்....
கடவுளோடு ஒரு உரையாடல்..
--------------------------------------------
( கனவொன்று கண்டேன்.அதில் கடவுளைக் கண்டேன்.
அவருடன் உரையாடினேன். விழித்துப் பார்த்தேன். கண்டது
அனைத்தும் தெளிந்தும் தெளியாமலும் உள்ளத்தில் ஓட,
காகிதத்தில் எழுதி வைத்தேன்.உங்களிடம் பகிர்கிறேன். )
கடவுள்:-என்னைக் கூப்பிட்டாயா.?
நான் :- கூப்பிட்டேனா.? இல்லையே...யார் நீங்கள் .?
கடவுள்:-நான் தான் கடவுள். உன் வேண்டுதல்கள் எனக்குக்
கேட்டது.உன்னுடன் கொஞ்சம் உரையாடலாமே
என்று வந்தேன்.
நான்:- நான் அவ்வப்போது வேண்டுவது உண்டு. வேண்டும்
போது மனம் லேசானதுபோல் தோன்றும். இப்போது
நான் மும்முரமாய் ( BUSY )இருக்கிறேன்
கடவுள்:-நீ எதில் மும்முரமாய் இருக்கிறாய்.? எறும்புகளும்தான்
வேலையில் மும்முரமாய் இருக்கின்றன..
நான்:- தெரியவில்லை. ஆனால் எனக்கு நேரம் கிடைப்பது
இல்லை. வாழ்க்கை எப்போதும் ஒரே ஓட்டமாய்
இருக்கிறது
கடவுள்:-உண்மைதான். செயல்பாடுகள் (ACTIVITIES )உன்னை
மும்முரமாக்கும். பயன்பாடுகள் (PRODUCTIVITY )பலனை
தரும்.செயல்பாடுகள் நேரத்தைக் குடிக்கும். பயன்பாடு
அந்தத் தளையிலிருந்து விடுவிக்கும்.
நான்:- புரிகிறார்போல் இருக்கிறது. இருந்தாலும் பூராவும்
விளங்க வில்லை. எப்படியானாலும் நீங்கள் பேசவருவீர்.
கள் என்று நான் எண்ணவில்லை.
கடவுள்:-உன் நேரத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தீர்வு
காணவும்,சில தெளிவுகளைச் சொல்லவும் வந்துள்ளேன்
நான்:- வாழ்க்கை ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது.?
கடவுள்:-முதலில் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்வதை நிறுத்து.
வாழ்க்கையை வாழ். அதை ஆராய்ச்சிசெய்வதே அதை
சிக்கலாக்கும்.
நான்:- ஏன் வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாக இல்லை.?
கடவுள்:-உன்னுடைய இன்று பற்றி, நேற்றின் நாளையாய் இருந்த
போதேஆராயத் தொடங்கி விட்டாய்.ஆராய்ந்து கவலைப்
படுவதே உன் வாடிக்கையாகிவிட்டது அதுவே நீ மகிழ்ச்சி
யாக இல்லாததன் காரணம்.
நான்:- இவ்வளவு நிச்சயமில்லாத்தன்மை இருக்கும்போது
எப்படிக் கவலைப்படாமல் இருக்க முடியும்.?
கடவுள்:-நிச்சயமின்மை தவிர்க்க இயலாதது. கவலை தேவை
இல்லாதது; தேடிக்கொள்வது.
நான்:- நிச்சயமின்மை வலி தருகிறதே.
கடவுள்:-வலி தவிர்க்க முடியாதது; ஆனால் வேதனையாக
எண்ணுவது நாமே தேடுவது. ( PAIN IS INEVITABLE. BUT
SUFFERING IS OPTIONAL )
நான்:-- வேதனையால் வாடுவது நாம் தேடுவதென்றால் ஏன்
எப்போதும் நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.?
கடவுள்:-வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது,மின்னாது.
தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது.
நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள்,ஆனால்
வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள்ஆசான்கள்
நான்:-- வேதனையால் வாடுவது நாம் தேடுவதென்றால் ஏன்--------------------------------------------

வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள்
அவர்களை சிறப்பிக்கும். கசப்பிக்காது.
நான்:- இந்த வெதனைகளும் சோதனைகளும் உதவும் என்று
சொல்கிறீர்களா.?
கடவுள்:-அனுபவம் ஒரு ஆசான். அவன் முதலில் தேர்வு வைத்து
பின் அதன் மூலம் பாடம் கற்பிக்கிறான்.
நான்:- இருந்தாலும் நாம் ஏன் இந்த சோதனைகளுக்கு உட்பட
வேண்டும். ?இவற்றிலிருந்து விடுபட முடியாதா.?
கடவுள்:-சோதனைகள் என்பது, மனோதிடத்தை அதிகரிக்க
உதவும் ,விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும்
பாடங்களே. போராட்டங்களிலும் சகிப்பிலுமே மன
வலிமை வரும். சோதனைகள் இல்லாதபோது அல்ல.
நான்:- உண்மையில், இவ்வளவு வேதனைகளுக்கு உள்ளாகியும்
எங்குதான் போகிறோம் என்பதே புரிவதில்லை.
கடவுள்:-புறமே தேடினால் போகுமிடம் தெரியாது. உன் அகத்தில்
தேடு. வெளியே தேடினால் கனவாய்த் தெரியும். உள்ளே
தேடினால் காட்சிகள் விரியும். கண்களால் காண்பது
பொருட்களின் காட்சி. இதயக் கண் காட்டும்
பொருண்மையின் மாட்சி.
நான்:- நேரான வழியில் செல்வதைவிட, வேகமாக வெற்றி
கிடைக்காதிருப்பதே நோகிறது. இதற்கு என்ன செய்ய.?
கடவுள்:-வெற்றி என்பது மற்றவர் தரும் குறியீடு. கடக்கப்போகும்
பாதையை உணர்ந்து, நீ நிர்ணயிக்கும் திருப்தி எனும்
வெற்றியின் அளவுகோல் கடந்துவந்த பாதையினால்
ஏற்பட்டதைவிட சிறப்பாக இருக்கும்.நீ திசைமானியை
உபயோகி. மற்றவர்கள் கடிகாரத்தை உபயோகிக்கட்டும்.
நான்:- கஷ்ட காலங்களில் எப்படி திசை நோக்கி நிற்பது.?
கடவுள்:-கடக்கப்போகும் பாதையைவிட கடந்து வந்த பாதையை
கணக்கில் கொள்.உனக்குக் கிடைத்த வரங்களை
எண்ணில் கொள்.கிடைக்காததையும் தவறவிட்டதையும்
நினைத்துத் தளராதே.
நான்:- மக்களிடம், உன்னை ஆச்சரியப் படுத்துவது எது.?
கடவுள்:-கஷ்டங்களை அனுபவிக்கும்போது “ ஏன் எனக்கு “
என்பவர்கள் வளர்ச்சி யடைகையில் ”எனக்கு ஏன் “ என்று
கேட்பதேயில்லை. உண்மை அவர்கள் பக்கம் இருப்பதை
விரும்புவோர் அநேகர். உண்மையின் பக்கம் இருப்பதை
விரும்புவோர் சிலரே.
நான்:- சில நேரங்களில்“ நான் யார்.? நான் ஏன் இங்கிருக்கிறேன்?”
என்று கேள்வி எழுகிறது. பதில்தான் கிடைப்பதில்லை.
கடவுள்:- நீ யார் என்று கேள்வி கேட்டு வீணாகாதே. நீ யாராக
வேண்டும் என்று தீர்மானி. ஏன் வந்தேன் என்று
கேட்காதே. காரணத்தை ஏற்படுத்து. வாழ்க்கை என்பது
கண்டுபிடிப்புகளின் ( DISCOVERY ) தொகுப்பல்ல.
தோற்றுவிப்பின் செயல்பாடே. (WORK OF CREATION.)
நான்:- வாழ்வில் ஏற்றமளிக்க ,பலன் கிடைக்க என்ன செய்ய
வேண்டும்.?
கடவுள்:-கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்.
நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகு. வருங்காலத்தை
தைரியமாக எதிர்கொள்.
நான்:- கடைசியாக ஒரு கேள்வி சில நேரங்களில் என் வேண்டு
தல்களுக்கு விடை கிடைப்பதில்லை என்று
உணர்கிறேன்.
கடவுள்:-விடை கிடைக்காத பிரார்த்தனைகள் என்று சொல்வதை
விட, விடை “ இல்லை “ என்பதே பதிலாயிருக்கும்.
நான்:- உங்கள் வரவுக்கும் அறிவுரைக்கும் நன்றி.புதுப்பொலி
வுடன் ஒவ்வொரு புது நாளையும் எதிர் கொள்வேன்.
கடவுள்”-நன்று. பயத்தைக் களை. நம்பிக்கையை தக்கவை.
சந்தேகங்களை நம்பாதே. நம்பிக்கையை
சந்தேகிக்காதே.
-
இந்தப் பதிவு சம்பந்தமான பிரச்னை ஓடியது நினைவுக்கு வருகிறது!
பதிலளிநீக்குபதிவு மீள்பதிவா?? தத்துவத்தில் தர்க்கம். ஏதோ ஜக்கியானந்தா போல் ஒரு ஆனந்தா கூறியது போல் உள்ளது. வாழ்க்கையை வாழ்ந்துகொள். ஆராய்ச்சி செய்யாதே. அப்படிதானே?
பதிலளிநீக்கு//- நீ யார் என்று கேள்வி கேட்டு வீணாகாதே. நீ யாராக
வேண்டும் என்று தீர்மானி. ஏன் வந்தேன் என்று
கேட்காதே. காரணத்தை ஏற்படுத்து. வாழ்க்கை என்பது கண்டுபிடிப்புகளின் ( DISCOVERY ) தொகுப்பல்ல.
தோற்றுவிப்பின் செயல்பாடே. (WORK OF CREATION.)//
பல ஞானிகளும் "நான் யார்" என்பதை உணர்ந்தால் கடவுளை அறிவாய் என்று அருளியிருக்கும் போது கடவுளே அகச்சிந்தனைக்கு மாறாக 'சிந்திக்காதே செயல்படு" ஈன்று சொல்கிறார்!
ஒரு முறைக்கு இருமுறை படிக்க வேண்டி இருக்கிறது இந்த பதிவு. ஆனாலும் மனதில் பதிவது வெகு சில கருத்துக்களே
நன்றி
Jayakumar
இந்த எண்ணங்களும் நன்றே...!
பதிலளிநீக்குஉரையாடல் மூலமாக நேர்மறை எண்ணங்களை அதிகம் பெற முடிந்தது. நன்றி ஐயா.
பதிலளிநீக்குகடவுளுடன் உரையாடல் சிந்திக்க வைக்கிறது.
பதிலளிநீக்கு