என் எழுத்துகள் நினைத்துப் பார்க்க
---------------------------------------------------------
1970 களின் முன்பகுதியில்
எழுதிய கதை எனக்கு மனசாட்சி என்ற சொல்லே அலர்ஜி/ எந்த ஒரு காரியத்தையும் மனசாட்சிக்கு
விரோதமாகச் செய்கிறார்களா என்ன. காரண காரியங்களைகற்பிதம் செய்து செய்த காரியத்தை நியாயப்படுத்த
உப்யோகிக்கும் வார்த்தையே மனசாட்சி அதையே ஒருகதையின் கருவாக்கினேன் நான் வலை ஆரம்பித்த போது வெளியிட்ட கதைகளில் ஒன்று என்ன செய்ய அப்போதுஎனக்கு வாசகர்கள் இருக்கவில்லை
பின் ஒரு முறை மீள்பதிவாக்கினேன் எப்போதுஎன்று தேடவேண்டும் அதையே நான் திருச்சியில் இருந்தபோது நாடகமாக்கி
மனமகிழ் மன்றத்தில் அரங்கேற்றினேன் .கதையின்
கரு சற்றே புரட்சிகரமானது ஆனால் அதுவும் மனசாட்சிகு விரோதமில்லாமல் இருக்க முயன்றது
நாடகமாக்க விரும்பியபோது அதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க
பலரும் தயங்கினர் சில நாடக உத்திகளைக் கையாண்டேன்
வலைப்பதிவிலும் முயற்சி செய்து இருக்கிறேன் பல genre ல் எழுதி இருக்கிறேன் அதில் இதுவும் ஒன்று பதிவு மிகச் சிறியதாகி இருப்பதால் மகிழ்ச்சி வேண்டாம்சுட்டிகளைப்
படித்தால் நீளமாக இருக்கும் ஆனால் சுட்டிகளைப்
படித்தால்தான்முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் நாடகமாகப் பதிவில் எழுதி இருந்தாலும் சில பல உத்திகளையும் காணலாம் சுட்டிகளுக்க்ப் போனால்தான் தெரியும் பதிவுக்காக சில காணொளிகளை இண்டெக்ரேட் செய்து வித்தியாசமாக்கினேன் மனசாட்சி ( கதை )
நாடகம் சாம்பிளுக்கு 1
சாம்பிள் 2
சுட்டிகளுக்கு சென்று பிறகு வருவேன் ஐயா
பதிலளிநீக்குசுட்டிகள் கொடுப்பதன் நோக்கமே அவற்றைப் பார்வையிட வேண்டும் என்று தானே. நாடகச் சுட்டிகள் சில புதிய உத்திகளைக் கையாண்டதை தெர்யப்படுத்தவே
நீக்குமனசாட்சி கதை படித்தேன்.
பதிலளிநீக்குகதை சமூகத்தில் நடக்காத சம்பவம் என்று தர்க்கம் செய்து கொண்டு பேசினாலும்... உலகறியாமல் இருட்டு வாழ்க்கைக்குள் அங்கிங்கு நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.
புரட்சியான கருத்தை முன் வைத்த தங்கள் தைரியத்துக்கு எமது சல்யூட் ஐயா.
மன சாட்சிக் கதையில் நான்கூறவந்தது எல்லா செய்ல்களுக்கும் மனசாட்சியை துணைக்கழைத்து செயலை நியாயப்படுத்துவதை சுட்டிக் காட்டவே
நீக்குஇருப்பினும் முடிவு சுபமில்லாமல் போயிற்று.
பதிலளிநீக்குஎல்லா நிஅழ்வுகளு சுபமாக இருக்கிறதா அப்படிஒரு எதிர்பார்ப்பு இந்த வலை உலகில் காண்கிறேன்
நீக்குஉங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது./ சுட்டிக்குச் சென்றால் என்பதிவு எங்கே என்று கேட்கத் தோன்றியது
பதிலளிநீக்குஇந்தக் கதையை உங்கள் வாழ்வின் விளிம்பில் புத்தகத்தில் படித்திருக்கிறோம் சார். இங்கும்.
பதிலளிநீக்குவித்தியாசமான முடிவு. ஆனால் யதார்த்த முடிவு. இயக்குநர் பாலச்சந்தர் நினைவுக்கு வருகிறார்..
துளசிதரன், கீதா
நானே சொல்லி விட்டேனேஇதௌ நினைத்துப்பார்க ஒன்று என்று
நீக்குகாணொளிகளைக் கண்டேன். கதையினை முன்பு படித்துள்ளேன். தற்போது படிக்கும்போது புதிதாகப் படிப்பதுபோல இருந்தது. கதாநாயகி பட்ட வேதனை வெளிப்படுத்த முடியாத நிலையில் இருந்தது. அன்பு, காமம், கோபம், விரக்தி என்ற நிலைகளில் உணர்வுகளின் வெளிப்பாடுகளை கதாபாத்திரங்களின் மூலமாக வெளிப்படுத்திய விதம் அருமை.
பதிலளிநீக்குமுன்பு கதையைப் படித்திருக்கலாம் ஆனால் அதன் நாடக வடிவைப் படித்தீர்களா பதிவிலும் நாடகம் பார்ப்பது போல் இருக்க எடுத்த முயற்சிகளே வீடியோ இண்டெக்ரேஷன்
நீக்குஇதைப் போன்றதொரு தொடர் பல்லாண்டுகளுக்கு முன்னர் ஆனந்தவிகடனில் ஸ்டெல்லா புரூஸ் என்னும் எழுத்தாளர் எழுதி வந்தது நினைவில் வருகிறது.
பதிலளிநீக்குஇப்படிக் கூறுவது நான் எழுதியதை ஏற்றுக் கொள்ளும் மன நிலை இல்லை என்று காட்டுகிறதோ ஸ்டெல்லா ப்ரூசின் கதை பற்றி எனக்குத் தெரியாது
நீக்குஜிஎம்பி சார், கணவன் மனைவிக்குப் பல ஆடவரை அறிமுகம் செய்து வைக்கும் முக்கியக் கருவைத் தான் ஸ்டெல்லா புரூஸ் எழுதி இருந்தார். பல்லாண்டுகளுக்கு முன்னர் வந்தது. அதற்காக உங்கள் கதையை ஏற்கும் மனோநிலை இல்லை என நீங்கள் நினைப்பது உங்கள் சொந்தக் கருத்து. நீங்கள் அதிகம் புத்தகங்கள், வாராந்தரிகள் படிக்க மாட்டீர்கள் என்பது என் கருத்து. ஆகவே ஸ்டெல்லா புரூஸின் நாவல் குறித்து உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! :))))))
நீக்குஒரு காலத்தில் நான் வொரேஷியஸ் ரீடர் ஆனால் கதைகளைப் படித்துப் பிறகு அவற்றை ஆராய்ச்சி செய்வதில் அதிக விருப்பமில்லை என்னை அறியாமல் அந்த தாக்கம் வரக் கூடாது என்பதில்கவனமாக இருப்பவன் நன்றி .!:)))))
நீக்குநன்றி ஐயா!
நீக்குநன்றிக்கு நன்றி
நீக்குசாம்பிள் ஒன்றும் நன்றாக இருக்கிறது சார். திரைக்கதை போன்று...ஆமா ஸ்டேஜ் ப்ளே என்றாலும் திரைக்கதை காட்சி அமைப்புகள் வேண்டும்தானே...நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஸாம்பிள் 2 வீடியோ அதற்கு ஏற்ற வகையில் இருக்கிறது ...
துளசிதரன், கீதா
பதிவில் நாடகமாக்கும் போது வீடியோ இண்டெக்ரேஷன் ஒரு புதிய உத்தி என்று நினைத்தேன் பதிவில் நாடகம் படித்தீர்களா கதையை நாடகமாக்கும் போது சில புதிய பாத்திரங்களாஉம் இருக்கிறார்க்கள் கதையை நகர்த்த
நீக்குஇரண்டு காணொளிகளும் அருமை. புதிய முயற்சிப்பா. வாழ்த்துகள்..
பதிலளிநீக்குமுடிவுதான்.. சுபமாய் முடித்திருக்கலாமோ!!
காணொளிகள் நாடக வடிவுக்கு ஏற்றமளிக்க இணைக்கப் பட்டது வாழ்க்கையில் எல்லாமே சுபமாக இருக்கிறதா
நீக்குகதையில் ரவி-மாலதி என்றும்
பதிலளிநீக்குநாடகத்தில் ரவி-ஷீலா என்றும் பெயர் மாற்றப்பட்டதோ... காணொளி கண்டேன் ஐயா.
பெயரில் என்ன இருக்கிறது ஜி நீங்கள் சொன்ன பிறகே கவனித்தேன்
நீக்குநீங்க எழுதத்தொடங்கிய போது நான் பிறந்த குழந்தை.
பதிலளிநீக்குஇருந்தால் என்ன ஜி உங்கள் எழுத்தில் என்னிடம் இல்லாத முதிர்ச்சி தெரிகிறதே
நீக்குபடித்த நினைவு இருக்கிறது. தப்பு செய்தவள் சாகத்தான் வேண்டுமா? தப்புதான் செய்ய வேண்டுமா? விவாக ரத்து பெற்று மறுமணம் செய்திருக்கலாம்.
பதிலளிநீக்குபதிவில் வ்ந்த கதை என் வாழ்வின்விளிம்பில் வந்தகதை நினைவுக்கு வராவிட்டால்தான் ....... இருந்தாலும் கதைகளை ஊன்றிப்படிக்கவில்லை என்றே தோன்று கிறதுதப்பு செய்தவள் சாவதாகக் கூறி இருக்கிறேனா விவாக ரத்து மறு மணம் எல்லாவற்றையும் பேசி இருக்கிறேன் மேலும் கதைகளை கதைகளாகக் கொள்ளவேண்டும் வருகைக்கும் என்னை மறு மொழி கூற வைத்ததற்கும்நன்றி ஸ்ரீ
நீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குதொடருங்கள்
பின்னூட்டங்களில் சற்று விரிவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் நன்றி
நீக்குஅருமைபான பகிர்வு ஐயா
பதிலளிநீக்குமுன்பே தங்களின் நூலில் படித்த நினைவு வருகிறது
நன்றி ஐயா
என் நூலில்படித்ததோடு அல்லாமல் நூல்சையே விமரிசனமும் செய்திருக்கிறீர்கள் ஆனால் அது மேலோட்டமாக இருந்த நினைவு சற்றே விரிவான பின்னூட்டம் எதிர்பார்த்தே இதை வெளியிட்டேன் மேலும்கதை நாடக வடிவம் கொண்ட போது எடுத்தாண்ட உத்திகளையும்பற்றி ஏதும் கூறவில்லையே நன்றி சார்
நீக்கு