சனி, 14 ஏப்ரல், 2018

இன்னொரு சிறுகதை



                         இன்னொரு சிறு கதை
                        ------------------------------------
 ஒரு சிறு கதை எழுதினால் பின்னூட்டங்களில் இதுமாதிதானிருக்கு மென்று நினைத்தேன்  என்னும் ரீதியில்  எழுதுகிறார்கள் இதன்  முடிவையும்  யூகித்து இருந்தால் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் 


”’வென்னீர் போட்டாச்சா.? எப்பக் குளிச்சு எப்ப நான் ரெடியாகிறது|.
”‘மொதல்ல நீங்க டவல் தேடி எடுத்து, பாத்ரூம் போங்க. எனக்கு ரெண்டு கைதானே இருக்கு. எழுந்ததிலிருந்து ஒரே ஓட்டம்தான். குழந்தைகளுக்கு டிபன் ரெடி செய்யணும். ஸ்கூல் பஸ் வரதுக்குள்ள அவங்களும் ரெடியாக வேண்டாமா. எங்கிட்ட உங்க அவசரத்தைக் காட்டுங்க, ஏதோ கவர்னர் உத்தியோகத்துக்குப் போற மாதிரி”
. ....
‘என்ன, விட்டா பேசிட்டே போறே. கெய்சர் கெட்டுப்போனதால உங்கிட்ட வென்னீருக்கு நிக்க வேண்டி இருக்கு. சரி, சரி, டிபன் ரெடி பண்ணு. ‘

காலையில் பிள்ளைகளுக்கு வேண்டியதைச் செய்து, அவர்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதற்குள்போதும் போதும் என்றாகி விடும் மங்களத்துக்கு. இப்போது கணவனும் காலையில் தொந்தரவு தருகிறார். அவருக்கும் செய்ய வேண்டும். ஒரு வழியாக தேவைகளைப் பூர்த்தி செய்து, ,அப்பாடா’ என்று பெருமூச்சுடன் சோபாவில் சாய்ந்தாள்.

அவள் கணவன் முன் வந்து, ”‘இதப் பார்.இந்த டை சரியா இருக்கா....இந்தப் பேண்டுக்கு இந்த ஷர்ட் மேட்ச் ஆகிறதா”’ என்று கேட்டுக்கொண்டு நின்றான்.

”எல்லாம் சரியாத்தான் இருக்கு. உங்களுக்கு யாரும் பொண்ணு கொடுக்க வேண்டாம்”. ‘
”‘என் கன்சல்டிங் அறையை சுத்தம் செய்து வைத்தாயா.?நாலு பேர் வந்து போற இடம்”.
”‘எல்லாம் சுத்தம் செய்தாச்சு.உங்கள் மேசை மேல் இன்றைய பேப்பர் வைத்திருக்கிறேன். நீங்க சொல்ற நாலு பேர் வந்து போகிற நேரம் போக மீதி நேரம் வரி விடாமல் படியுங்கள். கூடவே ஒரு பொருளும் வைத்திருக்கிறேன், உங்கள் உபயோகத்துக்கு”.

இவ்வளவு களேபரத்துக்கும் பிற்கு டாக்டர் சுந்தரேசன், வீட்டின் முன் இருக்கும் தன் கன்சல்டிங் அறையில் உட்கார்ந்தான். மேசையின் மேல் இருந்த புதிய பொருளைப் பார்த்ததும் தன் மனைவியின் தீர்க்க தரிசனத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. அங்கே இருந்தது ஒரு ஈ ஓட்டும் FLY SWATTER.!.
  


36 கருத்துகள்:

  1. கோபத்திலும் குத்தல் வேலையை மறக்கவில்லையே...

    பதிலளிநீக்கு
  2. எனக்கு யார் மீதும் கோபமில்லை நடைமுறைப் பழக்கங்களைத்தான் கூறி இருக்கிறேன் குத்தல் எங்கு வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி சொல்லியிருப்பது டாக்டரின் மனைவியை!

      நீக்கு
    2. ஐயா நான் டாக்டரின் மனைவியை சொன்னேன்.

      நீக்கு
    3. @ஸ்ரீராம் பரவாயில்லையே கில்லர்ஜியை சரியாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்

      நீக்கு
    4. @கில்லர்ஜி முதலில் எனக்குப் புரிந்ததைக் கூறினேன் தவறானால் மன்னிக்கவும்

      நீக்கு
    5. இதில் மன்னிப்பு எதற்கு ஜயா ?

      நீக்கு
    6. தவறானால் மன்னிப்பு கேட்பது சரிதானே

      நீக்கு
  3. பதில்கள்
    1. பின்னூட்டங்களுக்கு சிரிப்பா பதிவுக்குச் சிரிப்பா எதுவானாலும் எனக்கு ஓக்கே

      நீக்கு
  4. ஹாஹா....

    சரியான பொருளைத்தான் வைத்திருக்கிறார்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிந்த சில டாக்டர்கள் உண்டு இப்படி மற்றபடி ஈ ஓட்டுதல் என்கற்பனை

      நீக்கு
  5. உரையாடல் தத்ரூபம். வீட்டுக்கு வீடு வாசல்படி.

    முதல் பாராவில் முன்னாடியே கோடி காட்டாவிட்டால், FLY SWATTER-ஐ துணைவியார் எதற்காக வைத்திருக்கிறார் என்று
    எனக்குப் புரிந்திருக்காது.

    நாடக ஆசிரியருக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சார் உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்

      நீக்கு
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா, உடலும் மனமும் சுகமா?

    பதிலளிநீக்கு
  7. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் பின்னூட்டங்களை எதிர்பார்த்தால் புத்தாண்டு வாழ்த்துகள்பின்னூட்ட இட்டபின் வாழ்த்தலாமே

      நீக்கு
  8. Puthaandu vaazhthukkal!!
    Mudivai oogikkavillai. Meendum gokila padam ninaivukku vandadhu!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் கோகிலா படம்நான் பார்க்கவில்லை முடிவு என்று இருந்தால்தானே யூகிக்க

      நீக்கு
    2. Antha padaththin nayagan oru vakil.ithu mathiri veetil irukkum officil ee ottuvaar. :-))

      நீக்கு
    3. மீண்டும் கோகிலா கதை கருவைப் பகிர்ந்ததறு நன்றி மேம்

      நீக்கு
  9. ஹாஹாஹா! யூகிக்க முடியாத சூப்பர் ட்விஸ்ட்!

    பதிலளிநீக்கு
  10. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கருத்ட்க்ஹுகள்தான் பதிவில் வருகிறதே வாழ்த்துகளுக்கு நன்றி சார்

      நீக்கு
  11. நல்லா இருந்தது. முடிவை யூகிக்க முடியவில்லை. ஈ ஓட்டுகிற டாக்டர்களும் இருக்கிறார்களா? ஆச்சர்யம்தான். கதாசிரியருக்குப் பாராட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் அந்தக் கால நினைவுகள் முடிவு என்பதே இல்லாதவை கதைகள்

      நீக்கு
  12. ஹா ஹா ஹா நல்ல வித்தியாசமான ஃப்ளை ஸ்வாட்டரை வைத்து ஈ ஓட்டுகிறார் டாக்டர் என்ற முடிவை ரசித்தோம் சார்

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  13. ரசித்தீர்களா இல்லையா ஏமாற்றமா

    பதிலளிநீக்கு