Tuesday, April 24, 2018

நோ லன்ச் இஸ் ஃப்ரீ


                                           நோலன்ச் இஸ் ஃப்ரீ
                                            --------------------------------
           
அண்மையில்  எழுதுவதற்குமனம் ஒன்றுவதில்லை ஏன்  என்று ஆராயும் போது பல காரணங்கள் தெரிய வருகிறது நான்பெரும்பாலும் எழுதுவது என்  எண்ணங்களைத்தான்  அவை வெகுஜன எண்ணங்களோடு ஒத்துப் போவதில்லை  நான் எழுதுவது பிறரைக் கவர அல்ல  இருந்தாலும்   அவை எவ்வாறு  வரவேற்கப் படுகின்றன என்பதைஅறியும் ஆவலும் உண்டு ஆனால் துரதிர்ஷ்டவசமாக வலைத்தளங்களில்  எழுதுபவற்றை வாசிப்பவர்கள்நரிவலம் போனால் என்ன இடம்போனாலென்ன  என்றே இருக்கின்றனர்  வித்தியாசமான முயற்சிகள் கண்டு கொள்ளப்படுவதில்லை
இதைப் போக்கும் முயற்சியாகவே  சில பதிவுகளை மீள்பதிவாக்கி  அதன் முக்கியசேதிகளையும்சொல்லி[ப்பார்த்தேன்இருந்தும் நான் நினைத்த படி ஏதும்நடக்கவில்லை  அப்போதுதான் தெரிந்தது வாசகர்கள் எழுதவும் கருத்து பதிக்கவும் சில இன்சென்டிவ்ஸ்இருக்க வேண்டும் ஒரு தீர்க்க தரிசியும்  நினைவுக்கு வந்தார் பதிவுகளை ஊன்றிப்படிக்கவும்  கருத்துகளை அலசல் முறையில் வெளியிடவும்  அவர் செய்த உத்தி இப்போதுநினைத்தால் வியப்பாய் இருக்கிறது நோ லன்ச் இஸ் ஃப்ரீ என்னும் சொல்லுக்கு அர்த்தம்புரிந்தது ஒரு கதையை யோ கட்டுரையையோ மீள் பதிவாக்கும் போதே தெரியும் சிலர் அவற்றைப்படித்திருக்கலாம்  ஆனால் பின்னூட்டக்கருத்தாக அதுவே வெளிவரும்போது நான் நினைத்தது நடக்க வில்லை என்றுநன்கு தெரிகிறது என் ஏமாற்றங்களை  நான்மறைத்துக் கொண்டு மறு மொழி இடுகிறேன்
என்னை நான்  அடையாளப்  படுத்திக் கொள்வதே என் கருத்துகளாலும்   எழுத்துகளாலும் தான்  ஆனால் நான் பதிவில் சொல்லும்   சில விஷயங்களை வைத்துக் கொண்டு சிலர் எனக்கு முத்திரை பதிப்பிக்கிறார்கள்  நான் எதற்கும் எதிரி அல்ல  ஆனால் எதையும்  அப்படியே ஏற்றுக் கொள்ளும்  மனப் பாவம் கொண்டவனும் அல்ல இத்தனையு ம் நான் தெரிவிக்க வேண்டிய அவசியமும்  இல்லை  இதற்குத்தான்  நான் பதிவர்களைசந்திப்பதில் ஆர்வம் காட்டுவதன் காரணம்  தெரியும்       முகம் தெரியா விட்டால் ஏற்படும் சங்கடங்கள் தவறகப்புரிவதாலும்  இருக்கும் இவற்றை நான்  எழுதுவதாலாவது சிலர் சிந்திக்கலாம்  என்பதையே காட்டும்   

42 comments:

 1. வாசகர்கள் எழுதவும் கருத்து பதிக்கவும் சில இன்சென்டிவ்ஸ்இருக்க வேண்டும் - இருக்கலாம். நான் பெரும்பாலும் பின்னூட்டம் எழுதினா, அதுக்கு மறுமொழி இருக்கான்னு பார்ப்பேன் (A sense of acknowledgement) பலர், தங்கள் தளத்தில் இவர் பின்னூட்டம் போட்டிருக்கிறாரா என்றும் பார்க்கலாம்.

  இருந்தாலும் பதிவு இன்'டெரெஸ்டிங் ஆக இருக்கணும்.

  தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு மறு மொழி ஒரு இன்சென்டிவ் எனக்கு என் எழுத்தை எப்ப்சடி பார்க்கிறார்கள் என்பது இன்சென்டிவ்ப்டித்துப் பார்துகுறைகள்சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் உண்டு வருகையைப் பதிக்க அருமை சூப்பர் என்று எழுதுவதை நான் வரவேற்பதில்லை இருந்தாலும் வருகைக்கு நன்றி கூறுகிறேன் இன்செண்டிவ் என்று நான் சொன்னது ஆழ்ந்து படித்து கருத்த்டுவதால் என்ன லாபம் என்போருக்கு லாபம் உண்டு என்று அறிவித்ததையே நான் தீர்க்கதரிசனமென்றேன்

   Delete
 2. இந்தக் குறிப்பிட்ட பதிவுக்கு வரும் பின்னூட்டங்களையும் கணக்கில் கொள்ளுங்கள்.
  உங்களுக்கு ஏதாவது புரிபடுகிறதென்றால் சொல்லுங்கள்.  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டங்களின் கணக்கை நான் கூறவில்லை என்று உங்களுக்கு நன்கு தெரியும்

   Delete
  2. கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் என்றால் எண்ணிக்கை என்று இந்த இடத்தில் அர்த்தமில்லை.
   also include the opinions what people are telling for your assessment.

   Delete
  3. some times i MAKE MY own assessment which i BELIEVE WHAT THEY THINK

   Delete
  4. வழக்காமான சில பின்னூட்டங்கள் அவர்கள் பதிவைப் படித்தார்களா, இல்லையா என்று தெரியாது. உங்கள் அனுபவத்தில் அப்படிப்பட்ட பின்னூட்ட்டங்களை வரிசை படுத்துங்கள், பார்க்கலாம். உங்கள் assessment பற்றிச் சொல்கிறேன்.

   Delete
  5. இருக்கும் ஏதோ சொற்ப நல்ல பேரையும் கெடுத்துக் கொள்ளச் சொல்கிறீர்களே

   Delete
  6. வரும் பின்னூட்டக் கருத்துகளைப் படித்து தெரிந்து கொண்டதாலேயே இப்பதிவு--

   என்று நீங்கள் தானே சொல்லியிருக்கிறீர்கள்?

   Delete
  7. நான் தெரிந்து கொண்டதை பதிவில்வெளிப்படுத்தி இருக்கிறேனே வாசகர்களின் குறிப்பிட்டவரை வரிசைப் படுத்துவதும் அது பற்றி நீங்கள்கணிப்பதும் சரியல்ல என்று தோன்று கிறது

   Delete
 3. ஐந்து விரல்களும் சேர்ந்தால் தான் ஒன்றாக இருக்கும். இல்லையா? அதே போல் தான்! பொதுவான காரணம் இருந்தாலே மற்றவரோடு புரிதல் ஏற்படும் என நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இவ்வளவெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டு மனச்சோர்வில் ஆழ்வதில்லை. தெரிந்ததை, முடிந்ததை எழுதி விடுவேன். எழுத நினைத்ததை எழுதிடுவேன். ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் கட்டாயம் எதற்குப் படிப்பவர்கள் மேல் திணிக்கணும்?

  ReplyDelete
  Replies
  1. என்கருத்துகளை நான் வலியுறுத்திச்சொல்லுவேன் ஆனால் எதையும் திணிப்பதில்லைமனம் விட்டு கருத்துகளைப்பகிர்ந்தால்தானே புரிதல் ஏற்படும் எழுதுபவன்மனம் நோகக் கூடாதுஎன்று எல்லாவற்றுக்கும் ஆஹா பேச் என்று சொல்வதுஹிப்பாக் கிரிடிசம் என்று நினைக்கிறேன்

   Delete
  2. ஜிஎம்பி சார்... பொதுவா நினைப்பதை அப்படியே பின்னூட்டத்துல பெரும்பாலானோர் எழுதமாட்டாங்க. எதுக்கு எழுதணும்? கிரிட்டிகலா எழுதினா, நட்பு போயிடும் என்றுதான் நினைப்பாங்க. சில சமயம் உண்மையைச் சொன்னோம்னா, எழுதினவங்க ஆர்கியூ பண்ணி மறுமொழி போடவும் வாய்ப்பு இருக்கு. சிலர், கிரிடிசிசத்தை வளர்ச்சிக்கான வித்துன்னு நினைக்கலாம். பலருக்கு கிரிடிசிசம் பிடிப்பதில்லை என்பதுதான் என் எண்ணம்.

   Delete
  3. உள்ளதைச்சொனால் நட்பு பாதிக்கப்படுமா அப்போதுஅதுநட்பேஅல்ல வெறும் அறிமுகமே குறைகளை மனம் நோகாதபடியும் சொல்லலாமே

   Delete
 4. உங்களுக்கு வரும் பின்னூட்டக்கருத்துக்கள் மூலமே தெரிந்து கொள்ளலாமே! எனக்குத் தெரிந்து பலரும் உங்கள் எழுத்தை வரவேற்றே எழுதுகின்றனர்.

  ReplyDelete
  Replies
  1. வரும் பின்னூட்டக் கருத்துகளைப் படித்து தெரிந்து கொண்டதாலேயே இப்பதிவு

   Delete
  2. //சிலர் எனக்கு முத்திரை பதிப்பிக்கிறார்கள்// எனக்கும் இந்த முத்திரை இருக்கே! இதுக்கெல்லாம் கவலைப்பட்டால் முடியாது! நாம் பாட்டுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டுப் போக வேண்டியது தான். என் கணவருக்கும், எனக்குமே ஒத்த கருத்துகள் இருக்காது. அவரவருக்கு அவரவர் கருத்து!

   Delete
  3. ஒத்தகருத்துகளையே விரும்புகிறேன் என்று எங்கும் சொல்ல வில்லையே என்மனப் போக்கும் என் மனைவியின்மனப்போக்கும் வெகுவாக மாறியே இருக்கிறது இருந்தும் ஐம்பத்துநான்கு ஆண்டுகள் நிறைவாகவே வாழ்ந்து விட்டோம்

   Delete
  4. கணவன், மனைவி இருவருக்குள்ளும் ஒரே அலைவரிசையில் எண்ணங்கள் இருப்பது அவ்வளவு நல்லதல்ல என்பது என் கருத்து ஐயா! ஆகவே இருவருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் தான் பேசித் தெளிவு பெற முடியும்.

   Delete
  5. @ கீதா சாம்பசிவம் முத்திரை குறித்து . பதிவுகளில் பல விஷயங்கள் எழுதப்படுகின்றன அவை அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி எழுதப் பட்டிருக்கும் அரசர்கள் ஆண்டனர் அந்தணர் ஆண்டனர் இது உழைக்கும் மக்களின் காலம் என்னும் ரீதியில் ஒரு வசனம் என்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று முத்திரை பதிப்பித்திருக்கிறது இன்னொரு இடத்தில் நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கியிருக்கிறீர்கள் என்று எழுதி இருந்தேன் பதிவுகளை பஹிவுகளாகப் பார்க்காமல் முத்திரை குத்தப்படுகிறது என்று நினைக்க வைக்கிறது .

   Delete
  6. கணவன் மனைவிக்குள் ஒரே அலை வரிசையில் எண்ணங்கள் இருப்பது நல்லதல்ல என்பது உங்கள் கருத்து மாற்றுகருத்துகள் இருந்தாலும் அவற்றியும் ஏற்றுக் கொள்ளப் பழகி இருக்கிறோம் என்பதையே நான் குறித்தேன்

   Delete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. i am a silent reader of your blog ,your blog is so interesting

  ReplyDelete
  Replies
  1. I try to keep my blog interesting But many people I feel dont think so because Iam not a conformist Please do comment what you feel

   Delete
  2. ப்ளீஸ் தொடருங்கள் நன்றி

   Delete
 7. கருத்துகள் வரலைன்னா நம்ம எழுத்து படிக்கப்படலைன்னு அர்த்தமில்லைப்பா.

  அதுப்போல, உங்க திருப்திக்கு எழுதுங்க. அதான் முக்கியம்

  ReplyDelete
  Replies
  1. கருத்துகளின் தாக்கம் புரியவில்லை என்றே நினைக்கிறேன் எழுதுவதன்நோக்கமே அதுதானே

   Delete
 8. ஐயா எல்லா பதிவுகளுக்கும் படித்தவர்கள் கருத்துரை இட்டால் ஆயிரக்கணக்கில் வரும் பெரும்பாலும் எல்லா பதிவர்களுக்கும் சைலண்ட் ரீடர்கள் அதிகமே...

  நான் மனதில் பட்டதை எழுதி விடுவேன் எனது பதிவு மட்டுமல்ல, பிறருக்கு கருத்தும்.

  ReplyDelete
  Replies
  1. நான் சைலெண்ட் ரீடர்களைப் பற்றி சொல்ல வில்லை படிப்பவர்கள் அவர்கள்மனதில் எழுத்துபற்றி தோன்றுவதைக் கூறலாமே

   Delete
 9. உங்கள் எண்ணங்கள் என்றில்லை, யாருடைய எண்ணங்களுமே மற்றவர்களுடைய எண்ணங்களுடன் நூறு சதவிகிதம் ஒத்துப் போகாது. அவரவர்க்கு அவரவர் கருத்துகள். பொதுவான நட்பை பேணிக்காத்தலே முக்கியம்.

  ReplyDelete
  Replies
  1. ஒத்துபோகவேண்டும் என்று நான் நினைக்க வில்லை ஆனால் அதை எடுத்துக் கூறும் நேர்மை வேண்டும் என்கிறேன் உள்ளத்தில் ஒன்றுவைத்து எழுத்தில் வேறு கூறுவது எனக்கு உடன்பாடில்லை அப்படிக் கூறுவதுதான் நட்பைப்பேணும் என்பதும் விவாதத்துக்குரியது

   Delete
 10. உங்களின் பதிவுகள் உங்களது எண்ணங்களை சொல்லி செல்கின்றது எனது பதிவுகள் எனது பொழுது போக்கை எடுத்து சொல்லுகிறது. இப்படி பலரின் பதிவுகளும் பல விஷய்ங்களை சொல்லி செல்கிறது... ஆனால் எப்போதும் நாம் ஒரு நல்ல விஷயத்தை ஆழமாக சிந்தித்து எழுதி வெளியிட்டு இருக்கும் போது அது பலராலும் சீந்தப்படாமல் இருக்கும் ஆனால் அதே நேரத்தில் நாம் விளையாட்டாக கேலியாக சொல்லும் விஷ்யம் இதை எல்லாம் ஒருவரும் சீண்ட மாட்டார்கள் என நாம் நினைப்போம் அது பலரால் ஷேர் செய்யப்பட்டும் பெரும் விவாதப் பொருளாக இருக்கும்...


  நான் பதிவுகளாக எழுதி கிறுக்குவதை வைத்து என்னை எடை போட்டுவிட்டு என்னை நேரில் சந்தித்தால் இன்னொரு அந்நியனைத்தான் நீங்கள் நேரில் பார்ப்பது போல இருக்கும்,

  ReplyDelete
  Replies
  1. எழுது வது எனக்குப் பொழுதுபோக்கல்ல என் எழுத்ட்க்ஹுகள் சிலரையாவது சிந்திக்க வைக்க வேண்டும் என்றுநினைப்பவன் நான்

   Delete
 11. Men may come men may go but I go on forever என்பது உங்கள் பாணியில் சென்றுகொண்டிருங்கள் ஐயா. யாருக்காகவும் உங்களை மாற்றிக்கொள்ளவேண்டாம் என்பதே என் கருத்து.

  ReplyDelete
  Replies
  1. யார் சொன்னாலும் சொல்லா விட்டாலும் என் கருத்துகளை வெளியிடுவேன் வருகைக்கு நன்றி சார்

   Delete
 12. /// ஆனால் பின்னூட்டக்கருத்தாக அதுவே வெளிவரும்போது நான் நினைத்தது நடக்க வில்லை என்றுநன்கு தெரிகிறது என் ஏமாற்றங்களை நான்மறைத்துக் கொண்டு மறு மொழி இடுகிறேன்///

  ஒவ்வொரு விசயத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்திருக்கும்.. நாம் நினைப்பது எதிர்பார்ப்பதுதான் அடுத்தவரும் நினைக்கோணும் எதிர்பார்க்கோணும் என எண்ணுவது தவறு..

  அடுத்தவரின் கருத்துக்கும் மதிப்புக் குடுக்கோணும்.

  உங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே நாம் இடும் அத்தனை பின்னூட்டங்களும் .. போஸ்ட் போட்டவரின் கருத்துடன் ஒத்துப் போகும் என்றில்லை... சிலதை ஏற்றுக்கொள்ளோணும் சிலதைக் கடக்க வேண்டும்.. சிலதை ரசிக்க வேண்டும்..

  ReplyDelete
  Replies
  1. /ஒரு கதையை யோ கட்டுரையையோ மீள் பதிவாக்கும் போதே தெரியும் சிலர் அவற்றைப்படித்திருக்கலாம் ஆனால் பின்னூட்டக்கருத்தாக அதுவே வெளிவரும்போது நான் நினைத்தது நடக்க வில்லை என்று நன்கு தெரிகிறது/ என்று எழுதி இருப்பதை முழுதாக மேற்கோள் காட்டமல் எழுதி இருக்கிறீர்கள் ஒருமீள் பதிவுக்கு பின்னூட்டமாக நான் படித்திருக்கிறேன் என்பதுதான் கருத்தாஅதுதான் ஏமாற்றம் தருகிறது என்றேன் கருத்தே இல்லையே இருந்தாலல்லவா ஒத்துப் போகிறதா என்று தெரிய மறு மொழி இடுவதே அவர்கள் கருத்தை மதிக்கிறேன் என்று காட்டத்தானேபதிவி நுட்கருத்தைப் புரிந்து கொள்ளாமல் எழுதுவதையும் ரசித்துக் கடக்கிறேன் வருகைக்கு நன்றி மேம்

   Delete
 13. ஆதங்கம் புரியவில்லையே. உங்கள் கருத்தை வெளிப்படுத்தவே எழுத்து என்றால் படிப்பவர் எப்படி எடுத்துக் கொண்டால் என்ன?

  என்னைப் பாருங்கள். நான் கஷ்டப்பட்டு எழுதும் பொழுது அதைப் படிக்கும் வாசகர்கள் எப்படிக் குழம்பிக் கஷ்டப்படுவார்கள் என்று தோன்றும்.. உடனே இன்னும் அதிகமாகக் கஷ்டப்பட்டு எழுதுவேன்... :-)

  நாளின் சோர்வை எழுதிக் குறைக்கிறேன் என்று போகன் சொன்னது நினைவுக்கு வருகிறது.

  விடாமல் எழுதி வருகிறீர்கள் என்பதே என் போன்றவர்களுக்கு ஒரு ஊக்கம்...

  ReplyDelete
  Replies
  1. துரை சார் நீங்களுமா ? யார் எப்படி எடுத்துக் கொண்டாலும் அவர்களதை நேர்மையாகக் கூற வேண்டும் என்று நினைக்கிறவன் நான் இந்தப் படிவுக்கே வழக்கமாக் வரும் பலரை காண வில்லை

   Delete
 14. நானறிந்த வரை வைகோ (கோபு) அவர்கள் மட்டுமே இந்த incentive உத்தியைப் பயன்படுத்தியவர். படிக்கவும் பின்னூட்டம் குவிக்கவும் வைத்தவர். I think that man is unique and somewhat of a genius at harmless self promotion. never understood his motivation though. வலையில் மேய்பவர்களைக் கட்டுவது சிரமம்.

  ReplyDelete
  Replies
  1. கோபு சாரின் பெயரைக் குறிப்பிடாமலேயே அவரைஒரு தீர்க்கதரிசி என்றேன் ஒரு எழுத்தாளனுக்கு அவனதுபடைப்புகளின் தாக்கம்தெரிய வேண்டும் ஆனால் அதைஅந்தக் காலத்திலேயே உணர்ந்துவாகர்களின்கருதுகளைவெளிக் கொணர்ந்தவர் அவர் .அவரது இன்செண்டிவ்சே அதற்கு காரணம் என்று தெரிகிறடு அதைத்தான் நோ லன்ச் இஸ் ஃப்ரீ என்கிறேன் தற்கு வந்த பின்னூட்டங்களிலேயே நீங்கள் ஒருவர்தான் அதைத் தெரிந்துகுறிப்பிட்டீர்கள் நன்றி சார்

   Delete