Monday, April 30, 2018

என்றும் நான்                                                      என்றும் நான்                                                        -----------------------


மனம் ஒன்றுவதில்லை எழுத, என்று எழுதி இருந்தேன் புதிதாக ஏதும் எழுத வராவிட்டாலும் பழைய பதிவுகள் சில மனம்கவர்ந்தன ஆண்பெண் ஈர்ப்பு பற்றி நான் எழுதி இருந்த சில பதிவுகள் இன்று படித்தாலும்  நன்றாகத்தான்  இருப்பது போல் இருக்கிறது இரண்டு மூன்று பதிவுகளை மீள் பதிவாக்குகிறேன் இவற்றின்  ஊடே இழையோடும்சில எண்ணங்கள் ஒரு வேளை என்  மனத்திண்மையைக் காட்டுகிறதோ  நான்  எழுதியதை நானே விமரிசிப்பதுஅழகல்ல  நீங்களும்   படித்துப் பாருங்களேன்  
           ----------------------
காலாற நடை பயிலப் பூங்கா சென்றிருந்தேன்.
ஆங்கே, பொன்காட்டும் நிறம் காட்டிப்
பூ காட்டும் விழி காட்டி, இரு தனங்கனக்க,
இடையொடிய மனங்கிளர்க்க மாதொருத்தி,
கண் காட்டி மொழி பேசி,ஆடவர் மனங்கனக்க
விழியாலேவலைவீசி வழி நோக்கிக் காத்திருந்தாள்


காலன் கயிறு கொண்டு கடத்திச் செல்லக்
காத்திருக்கும் காலம்தான் என்றாலும் உள்மனதில் 
காமம்தான் முற்றும் ஒழியாத மன நிலையில்
நெஞ்சே நீயும் எத்தனை நாள்நெருப்பில் மூழ்கிடுவாய்
தஞ்சமாகத் துணையுடனே தழைக்கும் 
பூஞ்சோலை இங்கிருக்க நீ அதனில்கொஞ்சவே 
எண்ணுகின்றாய்,இது தகுமோ, முறையோ முரணன்றோ?


எண்ணிப் பார்க்கிறேன் எனக்கென்ன வயசு
எண்ணில் அடங்குவதோ மனசின் வயசு
காதலுடன் கழிந்த காலம் உன்னும்போது
உணர்கின்றேன் எனக்கென்றும் இளமைதான் என்று. 


என்னதான் நடக்கும் நோக்கலாமே என்றே எழுச்சியுடன்
ஓரடி ஈரடி நாலடி நான் நடந்தவள் முன் செல்ல
எனைக் கண்டெழுந்தவளிடம் நானறியாதே கூறிவிட்டேன்
உள்ளம் சொன்னதை அநுபவம் கற்றதை..


பொய்க் கனவாய்ப் புகுந்துன் பெண்மை புணர்ந்து
மெய்க்கனவாய் ஆக்கிடுவர் உன் இளமையதை. 
கூத்தாள் எனக் கொள்வர், இரவி மறையுமுன் உன்
ஆத்தாள் உனைத் தேடுமுன் போய்ச் சேர் வீடு நோக்கி
.               ---------------

நாலாறு வயதிலும் நல்ல பையன் நான்
கண்முன்னே கார்குழல் விரித்த கன்னியர்
(இப்போதெல்லாம் பின்னிய கூந்தல் காண்பதரிது)
பத்மினி,சித்தினி,சங்கினி, அத்தினிப் பெண்டிர்
பவிசாக வந்தாலும் பத்திர காளியாய் நின்றாலும்
பயமாய் இருக்கிறது.. தலை தூக்கிக் கண்டாலே
காவலரிடம் புகார் செய்வரோ, என்றே அச்சம்.
அவர்களுக்கென்ன ..பாரதியே கூறிவிட்டான்
நிமிர்ந்து நடக்கவும்  நேர்கொண்டு பார்க்கவும்.

எனக்கேன் இந்த பயம்..?

பேதையோ, பெதும்பையோ
மங்கையோ மடந்தையோ , அரிவையோ தெரிவையோ
இல்லை பேரிளம்பெண்ணோ , பார்வையால்
துகில் உரியப்பட்டு பருவ பேதமின்றி சிதைக்கப்படும்
அச்சத்தின் உச்சத்தில் வளைய வரும் தாய்க்குலம்
யாரைப் பார்த்தாலும் பாம்பா பழுதையா என்றறியாது
தற்காப்புக்காக எதுவும் செய்யலாம்தானே

பாரதிதாசன் கூறியதுபோல்கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கென குதித்ததைப் போல் கிளைதோறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதையெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன் வால் பார்க்கும்.”

பாவிகள் பலரது செயல்கள்
பூவையரிடையே அச்சத்தை விளைவிக்க் நானிருக்கிறேன்
நாலாறு வயதிலும் நல்ல பையனாக.
                       -------------------------

           
ஓரடி  ஈரடி  சீரடி  வைத்தென்முன் நாலடி  நடந்து  வர,
உன் வலை வீசும்  கண்கள்   கண்டு
நாலாறு வயசு நிரம்பப்  பெறாத என் 
மனசும்  அலைபாயும், மெய்  விதிர்க்கும் ,
வாய்  உலரும் , தட்டுத் தடுமாறும்   நெஞ்சும்

ஆடிவரும்  தேரினை  யாரும்  காணாதிருக்க 
செய்தல்  கூடுமோ ..?
அயலவர்  உன்னை    ஆராதிப்பதை 
தடுக்கவும்  இயலுமோ ...?
எங்கும்  நிறைந்தவன் ஈசன்  என்றால் 
என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ ...?
என்னுள் நிறைந்த உனை என் கண்ணுள் நிறுத்தி 
நீ வரும் வழி நோக்கித  தவமிருக்கும்
நானும்  ஒரு   பித்தனன்றோ...?

யாருனைக்  காணினும்   யாதே  நேரினும் ,
நிலம்  நோக்கி  என் முன்னே  மட்டும் 
என்கண்  நோக்கி என்னுள் பட்டாம்பூச்சி 
பறக்கச்செய்யும்  வித்தை   அறிந்தவளே ...!

உன் விழி  பேசும்  மொழியறிந்து
உனைக் கண்ட   நாள்  முதல்  கணக்கிட்டு  விட்டேன்
எனக்கு  நீ , உனக்கு  நான் , எனவே ,
கைத்தலம்  பற்ற காலமும்  நேரமும்  குறித்து  விட்டேன், .
                              -----------------------------------

        எந்தன்    உயிருக்குயிர்     நீயே
                
நாடும்    அன்பு     நானோ
           
என்   கண்ணின்  மணி   நீயே --உந்தன்
                
கருத்தின்  ஒளியும்  நானோ
            
நற்பண்பின்    சுவை    நீயே ---உன்
                
பாவின்   நயமும்   நானோ
            
என்    எண்ணின்   பொருள்   நீயே
                 
உன்    எண்ணம்    சொல்லாதது   ஏனோ !
            

 --------------------------------------------------------------------------
26 comments:

 1. புரியலை! அந்தப் பெண்ணிற்கேற்ற இளைஞன் தானே!

  ReplyDelete
  Replies
  1. எது புரியலை என்று எனக்குப் புரியலை

   Delete
 2. அருமை. பல கவிதைகள் பரிச்சயமாயிருக்கின்றன. மன உணர்வின் வெளிப்பாடுகள் யதார்த்தம். பல கவிதைகள் எதுகையும் சந்தமும் கொண்டு விளங்குகின்றன. படிப்பவருக்கு நீங்கள் பதின்பருவத்தில் இருப்பவர் போல் தோன்றும் :)

  ReplyDelete
  Replies
  1. நானே மீள்பதிவு என்று எழுதி இருக்கிறேன் மேலும் இவை பாலசுப்பிரமணியனின் கவிதைகளென்னும் மின்னூலிலும் வந்திருக்கும் பாராட்டுக்கு நன்றி

   Delete
 3. நன்றாக இருக்கிறது ஐயா...

  ReplyDelete
 4. வசீகரமான வார்த்தைகளால் ரசிக்க வைத்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. இப்போது அம்மாதிரி எழுத முடியுமா தெரியவில்லை வந்து ரசித்ததற்கு நன்றி ஸ்ரீ

   Delete
 5. கவிதை வரிகளா ரசிக்க வைத்தன ஐயா

  ReplyDelete
  Replies
  1. சில நேரங்களில் தட்டச்சு செய்யும் போது பிழைகள்வரும்தானே

   Delete
 6. முன்பு இது போன்ற கவிதைகளை ஏதோவொரு தாளில் எழுதி வைத்து விட்டு மறந்து விடுவோம். அதுவும் காலப் போக்கில் காணாமல் போய்விடுவோம். வயதாகும் போது நான் கவிதையெல்லாம் எழுதியிருக்கேன் தெரியுமா? என்று சொல்ல முடியும். ஆனால் ஆதாரம் காட்ட முடியாது. இப்போது இந்தக் கவிதையை உங்கள் பேரன் மகன் வரைக்கும் ஏதோவொரு சமயத்தில் படிக்க முடியும். அப்போது அவர்களுக்கு தமிழ் வாசிக்கத் தெரிந்து இருந்தால்.

  ReplyDelete
  Replies
  1. இவற்றை நான் மின்னூல் ஆக்கி இருக்கிறேன் என்பது ஒரு ஆறுதலான விஷயம் ஒரு முறை தமிழென்னோடு போகுமோ என்று எழுதி இருந்தேன்

   Delete
 7. மனத் திண்மை எனவும் கொள்ளலாம்
  மனதின் நேர்மை எனவும் சொல்லலாம்
  இரசித்துப் படித்தேன் மீண்டும்

  ReplyDelete
  Replies
  1. கடைசி பதிவு முன்னாலும் முதல் பதிவு கடைசியிலும் வந்திருந்தால் இன்னும் கூடுதலாக உணர்த்தி இருக்கும்

   Delete
 8. வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

  இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

  அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற எம் நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

  நன்றி..
  Tamil US
  www.tamilus.com

  ReplyDelete
  Replies
  1. என் மின் அஞ்சலையும் கடவுச் சொல்லையும் தவறுஎன்று சொல்கிறதே எப்படி உள்ளே நுழைய முடியும்

   Delete
 9. மனதை ஈர்த்த வரிகள் சார். பல இடங்கள் ரைமிங்க்....பல இடங்கள் வர்ணனை ஈர்க்கிறது. கண்டிப்பாக நீங்கள் இளைஞர்தான் நோ டவுட்! சார். ரசித்தோம் வரிகளை

  --இருவரின் கருத்தும்..

  ReplyDelete
  Replies
  1. இவை ஆரம்பகாலப் ப்திவு இப்போது அப்படி எழுத முடியுமா தெரியவில்லை வருகைக்கு ரசிப்புக்கும் நன்றி சார்/மேம்

   Delete
 10. வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி சார்

  ReplyDelete
 11. ஆங்காங்கே பாரதியின் பாதிப்பு தெரிகிறது. அருமை!

  ReplyDelete
  Replies
  1. எங்கேஎன்று தெரிவித்திருக்கலாம்

   Delete
 12. அத்தனை கவிதைகளும் அருமை. முதலும் கடைசியும் படித்த நினைவு இருக்கிறது. ஆத்தாள் உன்னை தேடும் முன் போய்ச் சேர் வீடு நோக்கி என்ற கவிதை மிகவும் பிடித்திருந்தது (அப்போதும்)....

  நாலாறு வயதிலும் நல்ல பையனாக இருப்பவர் மனதை கொள்ளைக் கொண்டுவிட்டார். மிகவும் நன்று.

  ReplyDelete
  Replies
  1. களை வகைப்படுத்தும் பழைய முறைகளையும்
   அவர்களின் பருவப் பெயர்களையும் குறிப்புகளையும் சேர்த்து இருக்கிறேனே பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை கடைசி பதிவு முதலிலும் முதல் பதிவு கடைசியாகவும் வந்திருந்தால் எண்ணங்களின் பரிணாமம் தெரிந்திருக்கும்வருகைக்கு ம் ரசனைக்கும் நன்றி மேம்

   Delete
  2. பெண்களை வகைப் படுத்தும் என்று இருந்திருக்க வேண்டும்

   Delete