புதன், 11 ஏப்ரல், 2018

ஒரு சிறுகதை


                                        ஒரு சிறு கதை
                                          ----------------------


பல genre களில் சிறுகதை எழுதி இருக்கிறேன்  படித்து ரசிக்கலாம்  கீதா மதிவாணனின்  மொழி பெயர்ப்பிலும் இம்மாதிரி ஒரு கதை இருந்தது. ஆனால் இச்சிறுகதைஅதற்கு முன்பே பதிவானது
 இங்கு ஒரு நிகழ்வே கதையாய்

அவர் அலுவலகப் பணி நிமித்தமாக வந்திருந்தார்.விருந்தினர் விடுதி என்று ஏதும்  தனியாக இல்லாததால்  ஆபீசில் ஒரு அறையையே  விருந்தினர் விடுதியாகப் பயன்படுத்த்னர்  பணி நடக்கும் இடத்துக்குப்போக வரவும் போக்குவரவு வசதிக்கும் அந்த இடமே சரியாக இருக்கும் என்பதாலவரைஅங்கே தங்க வைத்தனர் 

வந்தவர் வேலை எல்லாம் முடித்து வந்து மாலையில் ஒரு திரைப்படமும்  பார்த்துஇரவு பதினோரு மணி யளவில் அறை வந்தவர் சற்று நேரத்தில்  உறங்கி விட்டார்  அவருக்கு திடீரென ஜல் ஜலங் என்று சப்தம் கேட்டு கண்முழிப்பு வந்தது  உடல் எல்லாம்  வியர்க்க  ஆரம்பித்தது  நாக்கு வரண்டு விட்டதுஎழுந்து சென்று தண்ணீர் எடுத்துக் குடிக்கவும்   முடியாமல் பயத்தால் போய் விட்டது
சிறிதுநேரத்தில்  எல்லாம்  பிரமையாய்  இருக்கும் என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு உறங்க  எத்தனித்தார் சற்று நேரத்தில் மறு படியும்  ஜல் ஜலங்  என்ற சப்தம் கேட்டது. அவருக்கு பயத்தில் நெஞ்சே  வாய்க்குள் வந்துவிட்டதுபோல் இருந்ததுஇருட்டில்பயம் அதிகரிக்கவே  கஷ்டப்பட்டு எழுந்து விளக்கைப் போட்டார் ஃபானின்  வேகத்தைக் கூட்டினார் மனம் ஒருநிலைப்பட மறுத்தது  என்ன என்னவோஎண்ணங்கள்  கந்தர் சஷ்டி கவசம்சப்தமாகச் சொல்லப் பார்த்தார் வாயசைந்ததே தவிர வார்த்தைகள்வெளி வர வில்லை ஒர் பேயோ பிசாசோ வாழும் இடத்தில் தங்க வைத்து விட்டார்களே  என்று அந்த நிர்வாகிகள் மீது கோபம்கோபமாய்  வந்தது  ஆஃபீசுக்கு ஒரு வாட்ச்மேன் கூட கிடையாது இந்தநேரத்தில் யாரிடம் போவதுஎங்கே செல்வது என்றெல்லாம்  எண்ணிக்கொண்டு எல்லோரையும் ஒரு வழியாய்த் திட்டித் தீர்த்தார் காலையில் வெளிச்சம் படர ஆரம்பித்தது முதலில் இந்த இடத்தைவிட்டு  எங்காவது செல்ல வேண்டும் என்று தன்னுடைய பெட்டியைத் தன் உடைமைகளால்நிரப்பி வெளியே கிளம்பினார்
        
வெளியே வந்தவர் எதிரில் ஒரு லம்பாடிப்பெண் மாடிக்குப் போகும் படிக்கட்டுகள் கீழே இருக்கும் இடத்தில் இருந்து  எழுந்து வந்தாள் அவள் நடக்கும் போது அவள் கை அசைவிலும்  கால் அசைவிலும்  ஜல் ஜலங்  என்று சப்தம் கேட்டது  
-------------------------------------------------------------------------




38 கருத்துகள்:

  1. ஆஹா இனி ஆபீஸிலேயே நிரந்தரமாய் தங்கலாம் போலயே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையைவிட கில்லர்ஜியின் ஆசையை நினைத்து வியக்கேன்.

      நீக்கு
    2. சில இடங்களில் ஆஃபீசே கெஸ்ட் ஹவுசாக உபயோகத்தில் இருப்பதும் உண்டு

      நீக்கு
    3. நடந்து முடிந்தபின் எல்லாம் சகஜமாக எண்ணத்தோன்றும்

      நீக்கு
  2. முடிவை கிட்டத்தட்ட இதுபோன்றே கணித்தேன். (அதாவது, வெளியில் நடந்துவிட்டு-அவ்வளவு பயம் உள்ளவர் இரவு நடப்பாரா?, திரும்பி வரும்போது இது மாதிரி பார்த்து, இதுக்குப் போயா பயந்தோம் என்று நினைப்பதாக)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயமிரவால் வந்தது அல்ல அகால நேர ஒலியால் வந்தது

      நீக்கு
  3. லம்பாடி பெண் அங்க இருக்குறதை கவனிக்காம அப்படி என்ன வேலை?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாடிக்குப் போகும் படிக்கட்டின் கீழ் லம்பாடிப்பெண் இருந்ததை யூகிக்கவா முடியு

      நீக்கு
  4. திகிலாய்க் கடந்த இரவின் முடிவில் இப்படி ஒரு திருப்பம்.. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரவில் பயம் வரும்போது விசில் ச்டத்தம் போடுவார்கள் என்று கேட்டிருக்கிறேன் இவர் சஷ்டி கவசம் சொல்ல முயன்றார்

      நீக்கு
  5. ஹாஹாஹா, நினைச்சேன், இப்படித் தான் ஏதானும் இருக்கும்னு!

    பதிலளிநீக்கு
  6. சின்னக் கதையே என்றாலும் சஸ்பென்ஸ் அருமை. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. ஹா ஹா ஹா ஹா...முடிவு லம்பாடிப் பெண் என்று நினைக்காவிட்டாலும் இப்படி ஏதேனும் தான் இருக்கும் என்று நினைத்தோம்....
    இருவரின் கருத்தும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை படித்தபின் இப்படி தோன்றுவதும் பார்க்கிறேன்

      நீக்கு
  8. சிரிப்பு. பெரும்பாலான பயங்கள் அர்த்தமற்றவை. ஆனால் அது அப்புறம்தான் தெரியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான பயங்கள் இருட்டில் வருவது உண்டுதானே அர்த்தமில்லாதது பின் தெரியும்

      நீக்கு
  9. இதற்கு மேல் தொடர்ந்தால் தான் அதற்குப் பேர் கதை இல்லையா, சார்?..

    ஒரு சின்ன லீட்..

    இது பற்றி ஆபிஸில் பிரஸ்தாபிக்க, 'இந்தப் பகுதியில் லம்பாடிப் பெண்களே கிடையாதே சார்' என்று அவர்கள்
    சத்தியம் செய்யாத குறையாய் சொல்ல,

    'இன்றைக்கு இரவு என்ன நடக்கிறது என்று பார்த்தே தீருவது என்ற உறுதியில் அவர் உறங்காமல் விழித்திருக்க--

    அந்தப் பெண்டுல சுவர்க் கடிகாரம் லேசான ரீங்கரிப்பைத் தொடர்ந்து இரவின் அமைதியைக் கிழிக்கிற மாதிரி 12 தடவைகள் அடித்து ஓய, கட்டிலில் படுத்திருக்கப் பிடிக்காமல் அவர் எழுந்தார்.

    விரியத் திறந்திருந்த அறைக் கதவு பக்கம் யாரோ குறுக்காக போகிற மாதிரித் தோன்றியது. ஒருகால் பிரமையோ என்ற நினைப்பைத் துடைத்து எறிகிற மாதிரி--

    ஜல் ஜல் ஜல் என்ற சீரான ஒலி தெளிவாகக் கேட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து போகிற மாதிரி அந்த அரை இருட்டில் அடங்கியது.

    போர்வையைத் தூக்கி எறிந்து எழுந்தார்.

    இதற்கு மேல் கதையைத் தொடர்வது உங்கள் பாடு.

    பாதிக் கதை இங்கே, மீதி கதை எங்கே? -- என்று வேண்டுமானால் தலைப்பு வைத்து கொஞ்சமாகத் தொடர்ந்து எழுதி விட்டு மற்றவர்களையும் தொடர அழையுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார்... நல்ல கதைக்கான அஸ்திவாரம். ரொம்ப திறமை உங்களுக்கு. பாராட்டுகள்.

      நீக்கு
    2. அன்ஃபார்சுனேட்லி எனக்கு இதுமாதிரி தோன்றவில்லையேபாதிக்கதை இங்கே மீதிக்கதைஎங்கே என்று க்லேட்டு மூக்கு அறுபட்ட அனுபவம் உண்டு

      நீக்கு
    3. கதையும் கற்பனையும் எனது நெத சார் எப்படி மாற்றி எழுதினாலும் சுவை குறைந்து விடும் அபாயமுண்டு

      நீக்கு
  10. 'போர்வையைத் தூக்கி எறிந்து எழுந்தார்' என்ற வரியை மட்டும் நீக்கி விடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எதையும் எடுத்துக் கொஅள்ள வில்லையே இந்தவரியை மட்டும் நீக்க

      நீக்கு
    2. தாய் ஒருத்தி தன் குழன்கைக்கு சீவி வாரி பின்னலிட்டாளாம். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரி, "இப்படியா வகிடு எடுக்காமல் பின்னுவார்கள்?.. சீப்பைக் கொடு, நான் பின்னிக் காட்டறேன்.." என்றாளாம்.
      "நீ என்ன என் குழந்தைக்குப் பின்னுவது?.. எனக்குத் தெரியாதா, பின்னலா?" என்று குழந்தையை வலுக்கட்டாயமாய் வீட்டுக்குள்ளே இழுத்துப் போனாளாம்.
      அந்தக் கதையானா, இருக்கு?..

      நீக்கு
    3. ஓ அப்படியா சார் மிக்க நன்றி

      நீக்கு
  11. ஹாஹாஹா சூப்பர் த்ரில்லர் காமெடியாகிவிட்டதே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்டுக்கு மரணாவஸ்தை நரிக்கு கொண்டாட்டம் என்பதுபோலவருக்கு பயம் நமக்கு நகைச் சுவை வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  12. haha.....Its fun to read. Incase a timid person experiences a situation, it sure is hell

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் மேம் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

      நீக்கு
  13. அந்தப் பெண்தான் அந்த சஸ்பென்சா? சிறிய கதை. ஆனால் விறுவிறுப்பு அதிகம்.

    பதிலளிநீக்கு