மன சாட்சி (நாடகம்)
காட்சி.:-11
இடம்,:- ஷீலா வீடு.
பாத்திரங்கள்.:-ரவி, ஷீலா, மற்றும் நண்பர்கள் பலர்.
மேலோட்டமாக ஒருமித்து வாழும் ஷீலாவும் ரவியும்
ஊருலகத்துக்காக நடிக்கிறார்கள். ரவி சொன்னது போல் அவன் ஷீலாவுக்குப் பழகுவதற்கு
நண்பர்கள் பலரை அறிமுகப் படுத்துகிறான். இதற்காக அவன் கொடுக்கும் பார்ட்டிகளுக்கு
நண்பர்கள் பலர் வருகின்றனர். திரை உயரும்போது மேற்கத்திய இசையின் பின்னணியில் , வரும்
நண்பர்களை ரவி ஒவ்வொருவராக அறிமுகப் படுத்துகிறான். அவன் விழிகளில் சோகம்.
அவ்வப்போது தன்னை சுதாரித்துக் கொண்டு சந்தோஷமாய் இருப்பதுபோல் பாவனை செய்கிறான்.
அவன் ஷீலாவையும் , அவள் நண்பர்களுடன் பழகும் முறையையும் கூர்ந்து கவனிக்கிறான்.
ஷீலாவோ சற்றே கர்வமாக , ரவியை
அலட்சியப்படுத்தியபடி மற்றவர்களுடன் பழகுகிறாள். பார்ட்டி முடியும் நேரம்
எல்லோரும் செல்லும்போது ஒருவன் மட்டும் பின் தங்குகிறான். அவனுடன் ஷீலா கை
கோர்த்து சந்தோஷமாகச் சிரித்து மகிழ்வதை ரவி ஏக்கத்துடன் பார்த்து அவர்களை தனியே
விட்டுச் செல்கிறான்,.அவர்கள் தனிமையில் மகிழ்கின்றனர்.
( திரை ) (
தொடரும்.) .
தொடர்கிறேன்...
பதிலளிநீக்குதொடர்கிறேன் அய்யா
பதிலளிநீக்குvideo integration நல்லாவே இருக்கு. novel.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
@ கரந்தை ஜெயக்குமார்.
@ அப்பாதுரை.
தொடர் வருகை உற்சாகமூட்டுகிறது. நானும் சில புது உத்திகளைக் கையாள்வது கவனத்துக்கு வந்து கருத்துப் பெறுவது இன்னும் உற்சாகம் தருகிறது. நன்றி.
ரவியை வெறுப்பேற்றவே ஷீலா அவ்வாறு நடந்துகொள்கிறாள் என்று தோன்றுகிறது. தொடரும் நிகழ்வுகள் என்னவென்று தொடர்ந்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குகாணொளி இணைப்பு காட்சிக்கு சுவைகூட்டல். பாராட்டுகள் ஐயா.