மன சாட்சி ( நாடகம் )
காட்சி.:- 9
இடம்.:-ஷீலா வீடு.
பாத்திரங்கள்.:- ரவி, ஷீலா.
( திரை உயரும்போது, ஷீலா சோஃபாவில் அமர்ந்து
படித்துக் கொண்டிருக்கிறாள். ரவி வருகிறான். ஷீலா அலட்சியமாகப் பார்த்து மறுபடியும்
படிப்பைத் தொடருகிறாள். )
ரவி.:- ( மனக் குரல்.)எவ்வளவு அன்போடு பழகினவள்....!இப்ப
எப்படி மாறிட்டா....குழந்தை இல்லாக் குறை இவ்வளவு மாற்றம் செய்யுமா.? அடச் சீ... பிள்ளையில்லாக்
குறையாவது ஒன்றாவது....எல்லாமே வாழ்க்கையை ஒழுங்கா வாழறோம்னு காண்பிக்கத்தானே...You
need the accidental by products to prove your incidental pleasures…… ஆனால்
ரவி நீதான் வாழ்க்கையை வாழவே இல்லையே. உனக்குத்தான் வாழ்க்கையை வாழ முடியாதே...(
மனக்குரலின் ஓலம் அதிகமாக அதிகமாக, மேசை மேல் தலையை மோதிக் கொள்கிறான். ஷீலா இதைக்
கண்டு ஓடிவந்து அவனைத் தடுக்க முயற்சிக்கிறாள். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவள்போல
மெல்லத் திரும்புகிறாள். )
ரவி.:- ஷீலா....ஷீலா.... உன்னுடைய இரக்கத்துக்கும்
பச்சாதாபத்துக்கும்கூட அருகதையில்லாமப் போயிட்டேன் பார்த்தியா......ஷீலா உண்மையாகச் சொல்லு.. உன்னை ஏமாற்றி உன்
வாழ்க்கையைப் பாழ்படுத்தணும்னு நான் கனவிலும் நெனச்சிருப்பேனா.......ஆரம்பத்தில்
கல்யாணம் செய்துக்கிற எண்ணமே எனக்கிருக்கலியே...... நீயல்லவா இதில் என்னை
வற்புறுத்தினாய்.....ஷீலா வாழ்க்கையில்
எனக்கு வேண்டி இருந்ததெல்லாம் ஒரு துணைதாம்மா.... அந்தத் துணையிலே விளையற
உறவுக்குத் தயாரா அந்த ஆண்டவன் என்னைப் படைக்கலியே.......What I needed was only
a companion; and what you needed was a relationship through that…..! Oh.. what
a pity….. what a pity….!
ஷீலா.:- சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்ல வேண்டிய நேரத்துல
சொல்லாம விட்டதுமல்லாம...... இப்ப ஏன் வந்து எதையெதையோ பேசி என் உயிரை வாங்கறீங்க.....ஆண் ஆணாக இருந்து வாழ்க்கைச்
சுமையைத் தாங்கணுங்க...... இல்லாதப்போ ஒரு பெண்ணை தன் உருவாலும் அழகாலும்
..ஏன்..மனசாலும் ஏமாத்தக் கூடாது. அப்படி
ஏமாத்தத்துக்கு ஆளான பெண் சீறியெழுந்தா.. இந்த உலகம் தாங்காதுங்க.....என்னை நானே
அடக்கிக் கட்டுப்படுத்திக் கிடக்கிறேன். என்னைத் தொந்தரவு செய்யாமப்
போயிடுங்க.....
ரவி.:- ஷீலா...விரும்பியோ விரும்பாமலோநாம கல்யாணம் பண்ணி
இதுவரை சேர்ந்தும் வாழ்ந்தாகிவிட்டது..இப்போ உனக்கு எம்மேலோ, எனக்கு உம்மேலோ கோபமோ
வெறுப்போ ஏற்பட்டுப் பயனில்லை. ஒரு சமயம் வேணும்னா நாம விவாக ரத்து செய்துக்கலாம்.
இந்த சமுதாயத்துலெ ஒரு ஆண் வேணும்னா மறுமணம் செய்துண்டு வாழலாம்....என் சக்தி
தெரிஞ்சு அதுவும் இந்த அனுபவத்துக்குப் பிறகு நான் மணப்பதுன்னு நினைப்பதே
பைத்தியக் காரத்தனம். ஆனால்..நீ......? என்னதான் இந்த சமூகம் முன்னேறி
இருப்பதுபோல் தோன்றினாலும் ஏற்கனவே மணந்த ஒரு பெண்ணை மறுமணம் செய்து வாழத்
தயாராயிருப்பவர் இந்த நாட்டில் இல்லை என்று சொல்லலாம். So
divorce is out of question. ..!விவாக ரத்துக்கான காரணம் நானும் என்
இயலாமையும் என்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.அதனால் ஷீலா.... நான் ஒரு
முடிவுக்கு வந்து விட்டேன்....... நீ வாழ்க்கையை அனுபவிக்க
முடியும்......ஷீலா....உன் வாழ்க்கையை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத்
துளியும் கிடையாது. ...ஆனால்..... ஷீலா..... என்னுடைய இந்த நிலை உலகத்துக்குத்
தெரிய வேண்டாம்மா......அந்த அவமானத்தை என்னால் தாங்க முடியாது.......SO
PLEASE…….நான் என் மனசாட்சிக்கு விரோதமில்லாமச் சொல்றதை நீ
கேட்கணும்....என் மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்து கொண்டே நீ உன் விருப்பப் படி
வாழ்க்கையை அனுபவிக்கிறதில் எனக்கு ஆட்சேபணை இல்லை......ஷீலா.... வெட்கத்தை
விட்டுச் சொல்கிறேன். I don’t have any objection if you want to choose a
life , you like….!
ஷீலா.:-போதும் நிறுத்துங்க....வெந்த புண்ணில வேலைப்
பாய்ச்சறீங்க..... நினச்சுப் பார்க்கவும் முடியாத வாழ்வை நடத்திப் பாருன்னும்
உபதேசம் செய்யறீங்க. அதுவும் மனசாட்சிக்கு விரோதமில்லாத பேச்சாம்......! இவ்வளவு
நாள் இல்லாத மனசாட்சி இப்போ எங்கிருந்து வந்தது....? மனசாட்சின்னு சொல்லுக்கு
அர்த்தம்தான் என்னங்க....?ஒரு கொள்கை அல்லது குணம் இதன் பேரில இருக்கிற அசையாத
நம்பிக்கையின் நிரந்தரத் தன்மையைக் குறிப்பிடறது அல்லவா...... அப்படீன்னா அந்தக்
கொள்கையும் குணமும் ---அது தவறாக இருந்தாலும் மன சாட்சியின் பிரதிபலிப்பல்லவா.....
அதாவது செய்யற எல்லாச் செயல்களுக்கும் காரணங்காட்டி ஏதாவது ஒரு கோணத்திலிருந்து
மனசாட்சிக்கு விரோதமில்லைன்னு ஸ்தாபிக்க முடியும். .. அப்படீன்னுதானே
நினைக்கிறீங்க..? மனசாட்சியாம் மனசாட்சி.....அப்படீன்னு
ஒண்ணு இருக்கவும் இருக்கா உங்களுக்கு....... தெரிஞ்சோ தெரியாமலோ உங்களுக்கு கழுத்தை
நீட்டிட்டேன்... இனிமே விதி விட்டபடி நடக்கட்டும்....என்னைக் கொஞ்சம் நிம்மதியா
இருக்க விட்டுட்டுப் போங்களேன்.
......
ரவி.:- ஆனாலும் ஷீலா.....நான் சொல்றதும் உனக்குப்
புரியும்னு
.........
ஷீலா.:- OH…! PLEASE LEAVE ME ALONE……..!
( திரை ) ( தொடரும் )
ரவி மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் இருக்கிறது தெரிகிறது... ஷீலாவின் முடிவு தான் என்ன...?
பதிலளிநீக்கு.குழந்தை இல்லாக் குறை இவ்வளவு மாற்றம் செய்யுமா.?
பதிலளிநீக்குஎன்னதான் முடிவு ...????!!!!!
கம்பியூட்டர் ரிப்பேர் ஆனதால்
பதிலளிநீக்குஉடன் பதிவைத் தொடர முடியவில்லை
இன்றுதான் ஒன்று முதல் நாடகத்தொடர்
எட்டாம் அத்தியாயம் வரை வந்து சேர்ந்துள்ளேன்
சிறப்பாகச் செல்கிறது நாடகத் தொடர்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் அய்யா
பதிலளிநீக்குஎதிர்பார்ப்பு ஏமாற்றத்தை உருவாக்குகிறது. ஏமாற்றம் சிலருக்கு கோபத்தையும் சிலருக்கு விரக்தி மனப்பான்மையையும் உருவாக்குகிறது. இங்கே ரவி, ஷீலாவின் உரையாடல் அதை நிரூபிக்கிறது. மனசாட்சி பற்றிய விளக்கம் மிகவும் சரி.
பதிலளிநீக்கு