Saturday, April 27, 2013

ஏன்....? ஏன்....?



                                                    ஏன்.....? ஏன்.....?
                                                     ---------------



அப்போது இவனுக்கு வயது ஆறிலிருந்து  பத்துக்குள் இருக்கும் அரக்கோண வாசம். வீட்டிற்கு இரவு படுக்க வருவது மட்டும் தவிர்க்க முடியாதது எந்த தடப வெப்ப நிலைக்கும் அஞ்சியதில்லை. சுட்டெரிக்கும் சூரியனும் வீசிக் கொடுக்கும் காற்றும். மாரியின் மழை பொழிவும் எல்லாமே மகிழ்ச்சி தந்தவை.

அதன் பிறகு அங்கும் இங்கும் இருந்து மலையரசியின் மடியில் நான்காண்டுகள் ஜீவிதம். வாட்டி எடுக்கும் குளிரிலும் காலுக்கு அணி ஏதுமிருக்காது. இதமளிக்கும் கம்பளி ஆடைகள் கிடையாது.குளிர்ந்த நீரில் குளித்து அரை நிஜாரில் பவனி வந்த நாட்களின் மகிழ்ச்சி இன்றும் நினைவில்.

அதன் பின் ஓய்வு பெற்றோரின் சொர்க்கம் எனப்படும் பெங்களூர் வாசம் சில வருஷம். அப்போதெல்லாம் உஷ்ணமானி டிகிரி 3435செல்ஷியஸ் தொட்டால் வானம் இருண்டு மழை நிச்சயம்.வியர்வை சிந்த உழைத்தாலும் வியர்க்காது. அதுவும் ஒரு காலம்.


நின்றால் சுடும் , சுவரைத் தொட்டால் சுடும், சீதோஷ்ணம் அதிக வெப்பம் மிக அதிக வெப்பம் என்று வந்தபோது பயமுறுத்திய திருச்சியில் பலவருஷ வாசம். அதன் நடுவில் BLAZEWADA என்று வெள்ளையர்களால் செல்லமாக அழைக்கப் பட்ட விஜயவாடா வாசம் நான்காண்டுகள். கோடையில் வெகு சாதாரணமாக 115 டிகிரி F.  கொளுத்தும். சுற்றிலும் கருங்கல் மலைப் பிரதேசம் .பகலை விட அதிக வெப்பம் இரவில் தாக்கும். வெட்ட வெளியில் அத்தனை வெப்பத்தையும் தலையில் இறக்கி பணி புரிந்ததும். நினைவலைகளில் மோதும்.  அவ்வப்போது நடு நடுவே நாக்பூர், டெல்லி என்றெல்லாம் பயணித்திருந்த அனுபவங்களும் நினைவில் வருகிறது. அணிந்திருந்த உடைகளை துவைத்து காயப் போட்டால், குளித்து வருவதற்குள் காய்ந்திருக்கும். 


இந்த நினைவுகள் எல்லாம் இப்போது ஏன் தாக்க வேண்டும்..? அன்றைக்கிருந்த  உடல்தான் இன்றும். மன நிலையும் ஏறத்தாழ அதேதான். இருந்தாலும் இப்போதெல்லாம் சீதோஷ்ண நிலைகள் சமாளிப்பதே என்பாடு உன் பாடு என்றாகிறது. மனம் என்ன நினைத்தாலும் உடல் ஒத்துழைப்பதில்லையே. மனம் விழைவதைச் செய்ய உடல் மறுக்கிறதே மனதை இளமையாய் வைக்க முடிகிறது.உடலின் மேல் control இல்லையே.. இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே அது ஏன்....? ஏன்...? 
-------------------------------------------------------  

 


 

18 comments:


  1. "ஏன்....? ஏன்....?"

    உடலுக்கு வயது ஏறுவதலும்
    மனதுக்கு வயது குறைவதாலுமோ ..!

    ReplyDelete
  2. அன்புள்ள ஐயா,,

    வணக்கம்.

    மனது என்றைக்கும் முதுமையடையாமல் இளமையோடு இருப்பது அல்லது அப்படிப் பராமரிப்பது நிரம்ப ஆரோக்கியமானது.

    அந்த மனதுக்கு சொந்தக்காரர் நீங்கள். அப்படியே இருங்கள். அருமையானது அது. இது எல்லோருக்கும் வாய்க்காது,

    இன்னொன்றும் சொல்லத் தோணுகிறது, வயதாகிவிட்டால் மனது சொல்வதை உடம்பு கேட்காது. போகட்டும், ஆனாலும் அந்தந்தப் பருவத்தில் அதனதனை அனுபவிப்பதும் ஓர் ஆனந்தமே.

    இது உங்களுக்குத் தெரியாதது அல்ல.

    ஆனாலும் உங்களின் ஒவ்வொரு பதிவிற்கும பின்னே ஒரு நுட்பமான செய்தி வாசிக்கிறவர்களுக்குக் கிடைக்கிறது என்பதுதான் உண்மை.

    இதிலும் உள்ளது.

    படிப்பவர்களில் யாரேனும் கண்டுபிடிக்கட்டும்.

    ReplyDelete

  3. @ இராஜராஜேஸ்வரி
    இரண்டுக்கும் ஒரே வயதுதானே சாத்தியம்.
    @ ஹரணி. அப்ப்பா.. ! உங்கள் பின்னூட்டம் பார்த்து எவ்வளவு நாட்களாகிவிட்டன. விடைதெரியாக் கேள்வி கேட்டுவிட்டேன். நீங்கள் சொல்வதுபோல் யாராவது கண்டு பிடிக்கிறார்களா பார்க்கலாம்.
    வருகைக்கும் கருத்த்ரைக்கும் நன்றி.

    ReplyDelete
  4. அய்யா நாற்பது வயது வரை நாம் சொல்வதை நம் உடம்பு கேட்கும். நாற்பது வயதிற்குப் பின் உடம்பு சொல்வதை நாம் கேட்க வேண்டும் என்று சொல்வார்கள்.
    எல்லா உயிர்களுக்கும் பொதுவான நியதிதானே முதுமை என்பது.
    தமிழ் மருத்துவ முறையில், மருத்துவம் பார்க்கும் ஒரு மருத்துவரின் இல்லத்திற்கு, சில காலத்திற்கு முன் சென்றிருந்தேன், அவரின் வீட்டுச் சுவற்றில் இருந்த திருமூலரின் வாசகம் என்னை வெகுவாகக் கவர்ந்தது அய்யா.
    மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம்-என்பதுதான் அது. செம்மையான மனதிற்குச் சொந்தக்காரர் நீங்கள். அனைவருக்கும் பொதுவான முதுமையைப் பற்றிக் கவலைப்படலாமா அய்யா.
    தாங்கள் வசித்த ஊர்களின் பட்டியலைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கின்றது. நாங்கள் எல்லாம் கிணற்றுத் தவளைகளாக அல்லவா வசித்துக் கொண்டிருக்கிறேர்ம். யாருக்கு கிடைக்கும் இது போன்ற ஒரு வாழ்வு.

    ReplyDelete
  5. என் அப்பா அவர்களுக்கு அடிக்கடி மாற்றல் ஆகும் வேலை, இரண்டு வருடத்திற்கு ஒருமுறை, மூன்று வருடத்திற்கு ஒருமுறை என்று மாற்றல் ஆகி கொண்டே இருக்கும். அந்த ஊர்களின் தட்ப வெட்ப நிலைக்கு உடல் பழக்கம் ஆகும் முன்பே இன்னொரு ஊர் என்று போகவேண்டிய கட்டயாம் அதில் பட்ட கஷ்டங்கள் எவ்வளவு ! ஆனாலும் அந்த அந்த ஊர் மக்களின் நட்பு எங்களை சந்தோஷப்படுத்தின.

    உடல் தளர்வை மறந்து நம்மால என்ன முடியும் என்று அதற்கு ஏற்ற மாதிரி நம் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டால் நாளும் மகிழ்ச்சியாக இருக்கலாம் சார்.

    நீங்கள் அப்படித்தான் வாழ்க்கை மாற்றி அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

    மற்றவ்ர்களுக்காக கேள்வி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

  6. @ கோமதி அரசு. நான் வாழ்வில் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்.எப்படி இருந்த உடல் இப்படி சண்டித்தனம் பண்ணுகிறதே எனும் எண்ணமே பதிவின் காரணகர்த்தா. நான் சற்று வெளிப்படையாகக் கூறுகிறேன். மற்றவர்கள் சொல்வதில்லையோ என்னவோ. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  7. எல்லாருக்குமே மோசமான உடல்நிலையால் பருவங்களின் மாற்றங்கள் படுத்தத் தான் செய்யும் ஐயா. சாதாரண மனிதனுக்கே அப்படி என்றால் வயதாகிவிட்டால் தாங்கும் சக்தி குறைந்து விடுகிறது அல்லவா? நாங்கள் ராஜஸ்தானில் இருந்தபோது அங்கிருந்த வெயிலைத் தாங்கினோம். ஆனால் அப்போதே சென்னை வெயிலைத் தாங்க இயலாது. இப்போது சிறிதும் தாங்க முடியவில்லை. உடல்நிலைக்கும், மனநிலைக்கும் வேறுபாடு உள்ளதே. மனம் எல்லாவற்றையும் தாங்கக்கூடிய உடல்நிலை வேண்டும் என நினைத்தாலும் காலம் அதன் கடமையைத் தானே செய்யும்.

    ReplyDelete
  8. பொதுவாகவே வெயில்காலம் என்றால் யாருக்குமே தாங்க முடியாது. சர்க்கரை நோயாளி என்றால் வயது குறைந்திருந்தாலும் அவர்களாலும் தாங்க இயலாது. சின்ன வயசில் இருந்தே வெயிலின் கொடுமையில் நான் அவதிப் பட்டு வருகிறேன். அப்போதெல்லாம் வேனல் கட்டிகள் பெரிது பெரிதாய் வரும். இப்போ வேறு மாதிரிக் கஷ்டங்கள். மனம் இதை எல்லாம் தாங்கும் சக்தியை அளிக்கிறது.

    ReplyDelete
  9. நீங்கள் சொல்வது சரிதான்.
    டைம் மெஷின் இருந்தால் ரீவைண்ட் செய்து மீண்டும் ஒரு முறை ஆரம்பத்திலிருந்து வாழ ஆசை தான்.
    அந்த நாளும் வந்திடாதோ.......

    ReplyDelete
  10. அடுத்தது என்ன என்று யோசிக்கவேண்டிய காலம் வந்து விட்டது. இதுதான் இயற்கை. இதை யாரும் மாற்ற முடியாது.

    ReplyDelete
  11. ஏன்....? ஏன்...? இந்தக் கேள்விகளே உங்களின் ஆர்வத்தை தூண்டும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது...

    ReplyDelete
  12. அன்றைக்கு இருந்த உடல் தானே இன்றும்? - நிச்சயமாகக் கிடையாது.
    அன்றைக்கிருந்த மனமும் இல்லை, உடலும் இல்லை என்றே நினைக்கிறேன்.
    blazewada- very funny.

    ReplyDelete

  13. @ திண்டுக்கல் தனபாலன். கேள்விகள் கேட்டு பதில் தேட முனையும் போது புதிதாய் சிந்திக்கும் ஆர்வம் நிச்சயம் எழுகிறது. நம்பிக்கையூட்டும் கருத்துக்கு நன்றி.

    @ அப்பாதுரை.அன்றைக்கிருந்த உடல் இன்று இல்லை. தெரிகிறது. It is decaying..!மனம் மட்டும் வளர்ந்து கொண்டே இருக்கிறதோ.? வயது ஏற ஏற பலருக்கு மறதி .ஆனால் எனக்கு மனம் ஒரு நீச்சல் குளம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  14. மனம் என்னும் நீச்சல் குளத்தில் முங்கித் திளைத்த நினைவுகளால் எழுந்த எழுத்தின் சாரலில் நாங்களும் நனைகிறோம். ஏன் என்ற கல்லெறிய...எழும் எண்ண அலைகளையும் இனிதே ரசிக்கிறோம்.

    எத்தனை பயணங்கள்! எத்தனை அனுபவங்கள்! பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  15. @ கீத மஞ்சரி. மனம் நிறைந்த பாராட்டுக்களால் சில நேரங்களில் திக்கு முக்காடிப் போகிறேன் என்பதுதான் நிஜம். நன்றி.

    ReplyDelete
  16. அருமையான பதிவு.என்னுடன் பணி புரியும் அனைவரும் என்னைவிட 10-15 வயது சிறியவர்கள், இருப்பினும் உள்ளம் இளமையாய் இருப்பதால் அவர்களுடன் ஒன்ற முடிகிறது. உடல் தளர்ச்சியைக் குறைக்க தியானம் உதவுமா? தெரியவில்லை. ஆனால்,மனம் இளமையாய் இருக்கும்வரை உடலையும் ஒரு கட்டுக்குள் வைக்க முடியும் என்பது என் தாழ்மையான கருத்து ஐயா.

    ReplyDelete
  17. மனம் ஒரு நீச்சல் குளம் - இத்தனை அழகாக இதுவரை கேட்டதில்லை.. பிரமாதம்.

    ReplyDelete

  18. @ உமேஷ் ஸ்ரீனிவாசன்
    மனம் இளமையாக இருக்கும்வரை உடலையும் ஒரு கட்டுக்குள் வைக்க முடியுமோ, தெரியவில்லை. ஆனால் நான் உட்லை அது என்னை அடக்க விடுவதில்லை. (கூடியவரை)

    @ அப்பாதுரை.
    பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete