மா வும் தென்னையும்
--------------------------------------
தென்னையும்
மா மரமும்
என்
வீட்டில் ஒரு மாமரம் இருப்பது பற்றி முன்பே எழுதி இருக்கிறேன் அது காய்க்கத் தொடங்கி விட்டது என்பதை நினைவு படுத்துதல் போல் பிள்ளைகளின் கல் வீச்சு தொடங்கி விட்டது நான் இப்போதெல்லாம்
கண்டு கொள்வதில்லை இந்த வயதில் தானே அவர்களால்
அதில்மகிழ்ச்சி அடைய முடியும் ஆனால்
என் கவலை எல்லாம் அவர்கள் எறியும் கல் யாருடைய மண்டையையும் பதம் பார்க்கக் கூடாது என்பதுதான் காய்கள் கனிந்துபழுக்கும்
போது மிகச் சிலவே எங்களுக்குக் கிடைக்கும் எனக்கும் என் மனைவிக்கும் அதைப் பறிப்பதே கடினமான வேலை எனக்கு இந்த அறுவைச்
சிகிச்சை முடிந்தபின் டாக்டர் படிகளில் ஏறுவதைத் தவிர்க்கச் சொல்லி இருக்கிறார் இரண்டு மரங்கள் இருக்கின்றன இரண்டு வெவ்வேறு வகைக்
காய்கள் அதில் ஒரு மரம் காய்ப்பதே அரிது இந்த
ஆண்டு அதிலும் சிலகாய்கள் இருப்ப்சதாக மனைவி கூறினார் பார்ப்போம் நமக்கு அதை ருசிக்க
வாய்ப்பு இருக்கிறதா என்று மரங்களில் காய் பறிக்க
யாருடைய உதவியையாவது நாடவேண்டும் மார்ச் 30 ம் தேதி அடித்த பலமான காற்றிலும் மழையிலும் பல காய்கள் விழுந்து விட்டன விழும் போது காயப்படுகின்றன வெம்பிப் போய் விடுகின்றன
வீட்டின்
முன் பக்கம் ஒருதென்னைஇருக்கிறது நன்கு காய்க்கக் கூடியது எங்கள் தேவை என் மக்களின் தேவை மற்றும் உறவுகள் சிலருக்கும் கொடுக்கப்படும் என்ன தொந்தரவு என்றால் மரத்திலிருந்து விழும் மட்டைகள்
சாலையில் விழும் யாராவது எடுத்துப்போய் விடுவார்கள் கவலை எல்லாம்மட்டை
யார்தலையிலாவது விழாமல் இருக்கவேண்டும் என்பதுதான் அதைக் காட்டியே வீட்டின் முன் பக்கம் வண்டிகள்நிற்க வைக்கப்படுவதைத் தடுக்கிறோம் இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் முற்றிய காய்களைப்
பறிக்க ஆட்கள் கிடைப்பதில்லை ஒரு சிலர் நன்கு குடித்து விட்டு மரம் ஏற வருவார்கள் நாங்கள்
அனுமதிப்பதில்லை ஒரு சில மரமேறிகளின் தொலை
பேசி எண்கள் இருக்கிறது ஆனால் அவர்கள்தொலை தூரத்தில் இருந்துவர வேண்டும் சாலையில் போக்குவரத்து காலையிலேயே களை கட்டி விடும்முன்
தினமே அவரைத்தொடர்பு கொண்டு காய்பறிக்க வேண்டும் என்போம் அவர் அதிகாலயில் தொலை பேசியில் அழைத்துஅவரை எழுப்ப
கூறுவார் காய்கள் பறிக்கும் போதும் அவை சாலையில் யார் தலையிலும் விழாமல் இருக்க யாராவதுஒருவர்
நின்று பார்க்கவேண்டும் கீழே இருந்து பார்க்கும்
போது நிறைய காய்கள் இருப்பதுபோல் தெரியும்
ஆனால் அவர்பறித்துகீழே போடும்போது ஐம்பதுக்கு கீழே இருக்கும் இத்தனைக்கும்
மரமேறிக்கு ரூ 250/ம் கீழே
இருந்து கண்காணிப்பவருக்கு ரூ 100/ம் கொடுக்க
வேண்டும் கணக்குப்போட்டுப்பார்த்தால் ஒரு காய்பறிக்க ரூ ஐந்திலிருந்து ஆறுவரை ஆகு ம் அது தவிர மட்டை உரிக்க காய்க்கு ரூ 2 / கொடுக்க
வேண்டும்
உடலில்தெம்பு இருந்தால்
சிலபணிகளை நாமே செய்யலாம் என்று இருக்கும்
மார்க்கெட்டில் தேங்காய் விற்கும் விலையில் எல்லாம்
சரியாகி விடும் என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்| வீட்டின் முன் இருக்கும் தென்னை |