Thursday, May 8, 2014

மனசில் நிற்கும் சில பாடல்கள்


                                      மனசில் நிற்கும்    சில பாடல்கள்
                                          -------------------------------------------


நேற்றுக் காலையில் எழுந்ததிலிருந்து ஒரு பாட்டின் ராகம் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. பாட்டின் வரிகள் நினைவுக்கு வராமல் மனதை என்னவோ செய்து கொண்டிருந்தது. பாட்டின் ட்யூன் மனதில் ஓட திடீரென்று முதல் வரி நினைவுக்கு வந்தது. “சின்னஞ்சிறு “ எனத் துடங்கும் பாடல் என் மனைவியிடம் இந்த் வரிகளைச் சொல்லி நினைவுக்கு வருகிறதா என்று கேட்டேன் சின்னஜ் சிறு கிளியே கண்ணம்மாவா என்றாள். இல்லை என்றேன் . ட்யூனைக் கேட்டாள். மனசுக்குள் சுருதி பிசகாமல் ஓடிய ட்யூனை நான் பாடிக் காட்ட முயன்றபோது எனக்கே எருமைக் குரலாக ஒலித்தது. அவளால் சொல்ல முடியவில்லை. நேற்று மாலை அவள் சகோதரி வீட்டில் ஒரு பூஜை. சென்றிருந்தோம். என் மனைவியின் சகோதரி லைட் ம்யூசிக்கில் சினி,ஆப் பாட்டுகள் நன்றாகப் பாடுவாள். எதையாவது பாடி கோடி காட்டலாம் என்றால் என் குரல் என்னையே பயமுறுத்தியது. , இன்றுகாலை திடீரென்று ஒரு க்ளூ  சிக்கியது. சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாட்டு அது என்று மனசு சொல்ல. இணையத்தில் மேய்ந்தேன். ஒரு சில தேடலுக்குப் பின் அந்தப் பாட்டு கிடைத்தது.
“சின்னஞ் சிறு பெண்போலெ
சிற்றாடை இடையுடுத்தி
சிவகங்கைக் குளத்தருகே..... என்று போகும் பாட்டு.
நீங்களும் கேட்டுப்பாருங்களேன்  
இதேபோல சில பாடல்கள் மனசுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் இனிய நினைவுகளைக் கூடவே கொண்டு சேர்க்கும் எனக்கு எட்டு ஒன்பது வயதிருக்கும் என்று நினைக்கிறேன் என் தந்தை ஒரு நாள் அவரது நண்பர் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். அன்று அந்த நண்பர் பாடிய பாடல் “தாயே யசோதா உந்தன் .....இன்றைக்கும் அந்தப் பாட்டைக் கேட்கும் போது அந்த அரக்கோண நாட்கள் நினைவுக்கு வருகின்றன
 திருச்சியில் குடியிருப்பில் ஒரு நாள் கோவிலில் ஒரு விசேஷம் . யாரோ ஒருவர் பாடிக் கொண்டிருந்தார். எத்தனையோ முறை யார் யார் பாடியோ கேட்டிருந்தாலும் அவர் அன்று பாடியபோது கேட்ட  அனுபவித்த பரவசம் இன்று வரை கிடைக்கவில்லை. “அலை பாயுதே கண்ணா “ என்னும் அந்தப்பாடலில் கண்ணனை அவர் உருகி உருகிக் கூப்பிடும்போது ஏற்பட்ட மயிர்க் கூச்சம்  ஓ. சொல்ல முடியாத அனுபவம்
இன்னொரு பாட்டு . இளைஞர்கள் கேட்டிருக்க வாய்ப்பு வெகு குறைவு. அசோக் குமார் என்னும் படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடிய பாட்டு , பாபனாசம் சிவன் எழுதியது என்று நினைக்கிறேன் என் தந்தையார் அடிக்கடி பாடும் பாட்டு :மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய்அதில் வரும் ஒரு fast beat அந்தக் காலத்தில் நான் மிகவும் ரசித்தது. அந்தப் பாடல் உங்களுக்காக இணையத்தில் இருந்துு எடுத்தது  


மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய்

தினம் வாழ்த்துவாய்

கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே   (மனமே..)

காம மோஹ மத வைரிகள் வசமாய்
கர்ம வினை சூழ் உலக வாதனையில்
தடுமாறும்  மனமோடு துயர் உறாமல்
நிரந்தரமும் மகிழ்ந்து பர சுகம்  பெறவே ( மனமே)

விளங்கும் தூய சத்ஜன சங்கம்
விடுக்கக் கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்
விளக்கில் வீழும் பழம் என்று மயங்கும்
விட்டில் ஆகாதே சஞ்சலமே எங்கும் ( மனமே)

சிறு வயதில் காம மோஹ மத வைரிகள் வசமாய் என்று வரிகள் மிகவும் கேட்கப் பிடிக்கும் 
இன்னும் ஒரு பாட்டு. இரண்டு மூன்று ஆண்டுகள் என் மனைவி கர்நாடக சங்கீதம் பயின்று வந்தாள் பாட்டு சொல்லிக் கொடுத்த ஆசிரியர் குடியிருப்பின் கோவிலில் பக்க வாத்தியங்களுடன் என் மனைவி பாட ஏற்பாடு செய்திருந்தார். அப்போது கற்றுக் குட்டியாகிய அவள் மிகவும் தைரியத்துடன் பாடியராகமாலிகைப் பாடல். அது எம்மெஸ்ஸின் குரலில் இங்கு உங்களுக்காக 


. 

31 comments:

 1. எப்பொழுது கேட்பினும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாடல்கள் ஐயா
  நன்றி

  ReplyDelete
 2. சீர்காழி குரலில் இந்தப் பாடல் மட்டுமல்ல, இன்னும் பல பாடல்களும் நன்றாக இருக்கும்! காவிரி சூழ்பொழில் பாடல் கேட்டிருக்கிறீர்களோ...!

  எம் கே டி பாடல்களில் நிறையப் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். 'உன்னையே அன்புடன்', உனையலால் ஒரு துரும்பசையுமோ', 'மனம் கனிந்தே', சிவபெருமான் கிருபை வேண்டும்', ..........

  எம் எஸ் பாடிய ராக மாலிகை என்று சொல்லியிருக்கிறீர்கள். குறையொன்றுமில்லை? ஆனால் நகுமோமு ஆபேரி ராகப் பாடலுக்கு லிங்க் தந்திருக்கிறீர்களே... :))))))

  ReplyDelete

 3. இனிய பாடல்கள் பலவுண்டு. இருப்பினும் அடிக்கடி நினைவுகளில் வருபவை இவை. வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 4. @ ஸ்ரீராம்
  சீர்காழியின் பாடல்கள் பலதும் கேட்டிருக்கிறேன். அது என்னவோ தெரியவில்லை. இபாடல் வந்து என்னைப் படுத்திவிட்டது. அதேபோல் நான் குறிப்பிட்ட பாடல்களும் அதை ஒட்டிய சம்பவங்களுமே எழுத வைத்தது. ஒரு உண்மை சொல்லட்டுமா. நகுமோ ராகமாலிகை என்று என் மனைவி என்றோ சொன்னாளெனக்கு இந்த ராகங்கள் எதுவும் தெரியாது. காதுக்கும் மனதுக்கும் இனிமையான சங்கீதம் பிடிக்கும் . நகுமோவை ஆபேரி ராகத்திலும் பாடமுடியுமா. என் சிற்றறிவை மன்னிக்கணும் வந்து ஆபேரி என்று எடுத்துக் காட்டியதற்கு நன்றி.

  ReplyDelete
 5. பாகவதர் அவர்கள் பாடிய ‘ராதே உனக்கு கோபம் ஆகாதடி’ என்ற பாடலும் உங்கள் பதிவைப் படித்ததும் நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
 6. அன்புடையீர்..
  தாங்கள் இங்கே குறிப்பிட்டிருக்கும் பாடல்கள் அனைத்தும் என் தந்தையின் மனம் கவர்ந்தவை. அவர் ஒரு இசைக் கலைஞர். மாலை நேரத்தில் என் தந்தையின் இசை கேட்காத நாள் என்று எதுவும் இல்லை. சிறந்த ஹார்மோனிய வித்தகர். தனது நண்பர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சிகள் பலவும் நிகழ்த்துவார்.

  தங்களின் பதிவைக் கண்டதும் அவர் நினைவு நிழலாடுகின்றது.

  ReplyDelete
 7. ரசித்தேன்... ரசனைக்கு வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
 8. அருமையான பாடல்கள்.

  ReplyDelete
 9. அற்புதமான பாடல்
  பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. நல்ல ரசனை. சில பாடல்கள் என்றுமே மறக்க முடியாதவை.

  ReplyDelete
 11. ஐயா. நீங்கள் கொடுத்து வைத்த தலைமுறையைச் சேர்தவர். கர்வமாய் இருக்கிறது. உங்கள் சிறு வயதில் நீங்கள் கேட்க கிடைத்த பாடல்கள் அனைத்தும் முத்துக்கள். ஆனால், இன்றைய தலைமுறையினர் பலருக்கு அதை கேட்க்கும் ரசனை இல்லை. இன்று வெளிவரும் திரைப்பட பாடல்களில் 10ல் 9-பாடல் காம ரசம் நிறைந்ததாகவே இருக்கிறது. இது ஆரோக்கியமானதல்ல. சுறுக்கமாக ஆங்கிலத்தில் ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால்: "I Pity on Them". வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete

 12. @ ஸ்ரீ ராம்
  என் மனைவி எப்பொழுதும் அதை ராக மாலிகை என்று கூறவில்லையாம் என் நினைவுதான் எங்கோ பிசகாயிருக்கிறது. தெரியாத விஷயம்பற்றி ஏதும் கூறௌ கூடாது என்று தெரிந்து கொண்டேன். தவறுக்கு வருந்துகிறேன்

  ReplyDelete

 13. @ வே.நடனசபாபதி. இப்பதிவு பலரது நினைவலைகளைக் கிளறி இருக்கும். வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete

 14. @ துரைசெல்வராஜு
  இப்பதிவு உங்கள் தந்தையாரின் இனிய நினைவுகளைக் கொண்டு சேட் ர்த்தது நகிழ்ச்சி அளிக்கிறது. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

  ReplyDelete

 15. #திண்டுக்கல் தனபாலன்
  ரசனைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ,டிடி

  ReplyDelete

 16. @ டாக்டர் கந்தசாமி
  வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 17. @ ரமணி. அன்றைய பாடல்கள் கேட்பதற்கும் பகிர்வதற்கும் இனியவை, வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 18. @ வெங்கட் நாகராஜ்
  உண்மை. சில பாடல்கள் என்றென்றும் ரசனைக்கு உரியவை. வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 19. @ இல,விக்னேஷ்
  இந்த தலைமுறையிலும் இனிய பாடல்கள் வருகின்றன, எல்லோரும் ரசிக்கிறோம். ஆனால் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் குறைந்து பல பாடல்கள் இரைச்சலாய் இருக்கின்றன. ( முதல் வருகை.?) நன்றி

  ReplyDelete
 20. எனக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். இதோடு சிரிப்புதான் வருகுதைய்யா பாடலும் சீர்காழிக்கென்றே ஏற்பட்ட பாடல். நல்ல நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 21. நான் சீர்காழியின் ரசிகை. இந்தப்பாட்டு எப்போது ரேடியோவிலோ அல்லது வேறெங்குமோ ஒலித்தாலும் உடனே நின்று கேட்பேன். அருமையான வாசகங்களுடன் கூடிய பாடல். மதுரையில் பாடுகையில் சீர்காழி சிவகங்கைக் குளம் என்பதற்கு பதிலாகப் பொற்றாமரைக் குளத்தருகே என்று பாடுவார். மதுரையில் நவராத்திரி உற்சவக் கச்சேரிகள் ஆடி வீதியில் நடக்கையில் பலருடைய கச்சேரியைக் கேட்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.

  ReplyDelete
 22. என் அப்பாவுக்குப் பெண்கள் பாடினால் பிடிக்காது என்பதாலேயே எனக்குப் பாட்டுக் கற்றுக் கொள்ள ஆசை இருந்தும் முடியவில்லை. திருப்பாவைப் பாடலைக் கூட சத்தமாகச் சொல்ல முடியாத சூழ்நிலை! :)))) எல்லாம் மனதுக்குள் என்று இருந்ததில் இப்போவும் வாய்விட்டு எந்த ஸ்லோகமோ, பாட்டோ சொல்ல வருவதில்லை. :))))))

  ReplyDelete
 23. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
 24. காலங்கள் மாறலாம். ஆனால் இப்பாடல்கள் எக்காலத்திற்கும் பொருந்தி நிற்பவனவாகும். தாங்கள் நினைவுகூர்ந்து பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete

 25. @ வல்லி சிம்ஹன்
  தங்களின் வருகைக்கும் மேலான கருத்துப் பதிவுக்கும் நன்றி மேடம்

  ReplyDelete

 26. @ கீதா சாம்பசிவம்
  வாருங்கள் கீதாம்மா. இந்தப் பதிவு உங்கள் நினைவலைகளையும் கிளறி விட்டதுபோல் இருக்கிறது
  பாடல் பாட விருப்பம் இருந்தும் இயலாது போனது துரதிர்ஷ்டமே. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

  ReplyDelete

 27. @ நிகண்டு தமிழ் பதிவர் சமூக வலைத்தளம்
  வருகைக்கு நன்றி

  ReplyDelete

 28. @ சோழ நாட்டில் பௌத்தம்
  எத்தனையோ பாடல்கள் காலத்தை மிஞ்சி நின்றாலும் நான் குறிப்பிட்ட பாடல்கள் அந்த சம்பவங்களால் நினைவில் நிற்கிறது. வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 29. நீங்கள் சொல்வதுபோல் என் மனதுள்ளும் பாடல்கள் வந்து ஒட்டிக்கொள்ளும். சில நாட்களில் இரவு முழுவதும் கூட தூங்கவிடாமல் தொல்லைக் கொடுக்கும். அதுவும் சர்வீசில் இருந்து ஓய்வு பெற்றதற்குப் பிறகு உடலுழைப்பு அதிகம் இல்லாமல் சாதாரணமாகவே உறக்கம் வருவதில்லை என்பதால் இப்போதெல்லாம் பாடல்களை கேட்பதையே நிறுத்திவிட்டேன்.

  ReplyDelete

 30. @ டி.பி.ஆர்.ஜோசப்
  இனிமையான பாட்டுக்கள் எப்போதும் பிடிக்கும் ஆனால் தற்காலத்திய பாடல்களில் இசை நயத்தைவிட ஓசை நாராசமே மிகுதி. வருகைக்கும் கருத்த்ப் பகிர்வுக்கும் நன்றிசார்

  ReplyDelete
 31. பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள்! அதுவும் சிந்துபைரவி ராகத்தில் அமைந்த... சின்னன்சிறு பெண் போலே சிற்றாடை.......ஆஹா அதுவும் சீர்காழியின் குரல்......அட்சர சுத்தமான உச்சரிப்பு.....

  பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

  துளசிதரன், கீதா

  ReplyDelete