Saturday, May 10, 2014

ஏற்ற தாழ்வுகள் சமன் செய்ய......


                            ஏற்ற தாழ்வுகள் சமன் செய்ய..........
                             ------------------------------------------


அண்மையில் கல்வி பயிற்று மொழி குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்தது. இந்த மாதிரியான தீர்ப்புகளில் கவனிக்கப் படவேண்டியவிஷ்யம் ஒன்றுண்டு. இந்த மாதிரியான தீர்ப்புகள் எது தவறு அல்லது எது சரி  என்று கூறுவது நடைமுறையில் இருக்கும் சட்டங்களின் அடிப்படையில் அமைந்தவையே சில நாட்களுக்கு முன் தாய்மொழி பற்றி என் சந்தேகம் ஒன்று எழுப்பி இருந்தேன் சுற்றுவட்டத்தில் பேசும் மொழியே தாய் மொழி என்று கொள்ள முடியாது. அது பலருக்கும் மாறக் கூடியது. வீட்டிலேயே பலமொழிகள் பேசப் படும் நிலையில் தாய்மொழி என்பதே சர்ச்சைக்குரியதாகி விடுகிறது மாநில மொழியைஒருவர் கற்றுக் கொள்வது அவசியமானாலும் பள்ளிகளில் பயிற்று மொழியைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் சிறார்களின் பெற்றோருக்கே என்னும் முறையில் தீர்ப்பு அமைந்திருந்தது Right to expression  அடிப்படை உரிமை என்றும் தீர்ப்பு தெரிவிக்க்றது
கல்வி குறித்து எத்தனையோ கருத்துக்கள் இருக்கின்றன. கல்வி ஒரு great leveler என்று பலராலும் ஒத்துக் கொள்ளப்படும் கல்வி எதை சமன் செய்கிறது.? நான் அறிந்தவரை கல்வி ஏற்ற தாழ்வுகளைச் சமன் செய்கிறது.  அந்தக் கல்வியிலேயே ஏற்ற தாழ்வுகள் இருந்தால் எப்படி சமன் செய்ய முடியும் ?
ஏற்ற தாழ்வு என்று எதைக் கருதுகிறோம் ? நான் முன்பு எண்ணத் தறியில் எட்டு மணிநேரம்   மற்றும் ஏற்ற தாழ்வு மனிதனின் ஜாதி என்றும் பதிவுகள் எழுதி இருந்தேன் பல நேரங்களில் தோன்றிய எண்ணங்களின் வெளிப்பாட்டை காண பழைய பதிவுகளைக் குறிப்பிடுகிறேன்
நம் நாட்டில் இளைஞர்களின் தொகை அபரிமிதமானது. இவர்களது பயன்பாட்டை ஒருமுகப் படுத்தினால் நாம் எங்கோ இருப்போம் பிற நாட்டினருக்கு உதாரணமாய் இருப்போம் ஆனால் எது நம்மைத் தடுக்கிறது? சந்தேகமில்லாமல் நம்மிடையே இருக்கும் பிரிவினைகள்தான்  பிரிவினை என்றால் ஒன்றா இரண்டா...மாநிலப் பிரிவினை, மொழிப் பிரிவினை  மதப் பிரிவினை சமூக ஏற்றதாழ்வுகள்  இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் இந்தப் பிரிவினைகளுக்கு உரம் ஏற்றுகிறாற்போல இப்போது பணக்காரன் ஏழை என்று எல்லாப் பிரிவுகளிலும் வழிந்து ஓடுகிறது
இந்தப் பிரிவுகளுக்குக் காரணம் என்ன..?சிறிய அரசுகளாகச் சிதறிக் கிடந்த நம் பரத கண்டத்தை ஆங்கிலேயர்கள் ஒன்று படுத்தினார்கள். ஆனால் நம்மிடையே இருந்த பிரிவினைகளை அவன் தன் பலமாக்கிக் கொண்டான் ஏற்கனவே நம்மிடையே குலம் என்றும் கோத்திரம் என்றும் பிரிந்து கிடந்த மக்களை ஒன்றாக அடையாளம் காட்டியது நம் சநாதன தர்மம்தான். அதையும் அவரவர் விருபத்திற்கேற்ப வளைக்கத் தொடங்கியதில் பல புதிய்மதங்கள் உருவாயின, இப்போதுஅதுவல்ல நம் பதிவின் காரணம். விரும்பியோ விரும்பாமலோ மதங்களின் பேரால் உயர்ந்தவன் தாழ்ண்டவன் எனும் பாகுபாடு இருந்தது வளர்ந்தது. செய்யும் தொழிலால் மக்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப் பட்டன. உயர்ந்த குலத்தோர் அவர்களது கல்வித் திறமையால் முன்னுக்கு வந்தனர். மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த நிலையே சீர்திருத்தவாதிகளின் வருகைக்கு வித்திட்டது. பெரியார் என்றும் அம்பேத்கர் என்றும் நாடறிந்த சிலரின் கூக்குரலால் பிரச்சனை இருப்பது கண்டறியப் பட்டது. சுதந்திரத்துக்குப் பின் வாய்த்த அரசு பின் தங்கியவர்களுக்குச் சலுகைகள் என்று கொண்டு வந்தது காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கப் பட்டு வந்தவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் முன்னேற முடியவில்லை. பிற்படுத்தப் பட்டோரின் மக்கட் தொகை 70% சதவீதத்துக்கும் மேல் இருக்கும் போது சலுகைகள் அத்தனை பேருக்கும் வழங்கப் படவில்லை. இந்த வழங்கிய சலுகைகளை எதிர்த்தே போராட்டங்கள் நடந்தது. இதை எல்லாம் மீறி பிற்படுத்தப்பட்ட மக்களில் முன்னுக்கு வந்தோர் சலுகைகளைத் தொடர்ந்து பெறவே விரும்புகின்றனர், இவர்களே ஒரு neo வகுப்பைத் தொடங்கி விட்டனர். பிராம்மணனுக்குப் பின் இந்த சாதி ஹிந்துக்கள்  ஒரு மேல் வகுப்பினராகி தமக்குக் கீழ் இருப்பவர்கள் முன்னேற விடுவதில்லை.
குறைகளை சொல்லிக் கொண்டே போகலாம் இதற்கு நிவர்த்திதான் என்ன. நம்மில் வயது வந்த மக்களிடையே எந்த மாற்றத்தையும் கொண்டு வருவது next to impossible இளைய சமுதாயமே நாட்டை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் அவர்கள் அப்படிச் செய்ய சூழ்நிலைகள் உருவாக்க படவேண்டும் இதையே education is a great leveler  என்று சொன்னேன். ஆனால் கல்வி முறையிலும் ஏழை பணக்காரன் என்னும் சாதி உருவாகி அதுவும் வியாபாரப் பொருளாகி விட்டது சின்னஞ்சிறுவர்கள் இந்த சாதி ஏழை பணக்காரன் என்னும் பேதமில்லாமல் வளர வேண்டுமானால் அவர்கள் பிஞ்சு மனதில் அந்த பேதங்கள் ஏற்பட வாய்ப்பே இருக்கக் கூடாது. இங்குதான் நான் சொலும் தீர்வு புரிந்து கொள்ளப் ப்டவேண்டும் ஏற்ற தாழ்வுகளைக் காட்டுவ்துஎது. உணவு உடை கல்வி . இவை அனைத்தும் எல்லோருக்கும் சமமாக இருந்து விட்டால் அந்த வேறுபாடுகளே பிஞ்சு உள்ளங்களில் எழாது இதைச் செயல் படுத்த அரசே கல்வித் துறையைக் கையில் எடுக்க வேண்டும் கல்வி கற்க வரும் அனைவரும் சமமாக நடத்தப் படவேண்டும் ஏற்ற தாழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ளா உணவு உடை கல்வி அனைத்தும் அனைவருக்கும் வேறுபாடின்றிக் கட்டாயமாக இலவசமாக வழங்கப் படவேண்டும்
நான் கூடியமட்டில் குறைகளுக்கு காரணமானவர்களைச் சுட்டிக்காட்ட விரும்பவில்லை அது ஒரு acrimonious  debate –ல் தான் முடியும் நான் குறிப்பிட்டு இருக்கும் தீர்வை அமல்படுத்த ஒரு benevolent dictator  தேவைப் படலாம் நடத்திக்காட இயலாதது போல் தோன்றலாம் When there is a will , there is a way என்று கூறிக் கொள்கிறேன் .யாரையும் புண்படுத்தாத எந்த மாறு பட்டக் கருத்தானாலும் பிறர் மனம் புண்படாத விதத்தில் பதிவிடக் கோருகிறேன்
(பழைய பதிவுகள் படிக்க “எண்ணத் தறியில்”  “ ஏற்ற தாழ்வு “ தலைப்பில்  மேலே பதிவில் சுட்டவும் )       

27 comments:

 1. ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் கல்வியில் இருக்கிறது ஐயா.எழுத்தறிவு பெற்ற மக்களால்தான் ஒரு நாடு நல்ல நாடாக வல்லரசாக மாற முடியும்.

  ReplyDelete
 2. கல்வி முக்கியம் தான் இல்லைனு சொல்லவில்லை. அதே சமயம் ஏற்றத் தாழ்வுகளைக் களைவது என்பது இயலாத ஒன்று; பிறப்பிலேயே பல ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. நிறம், பிறக்கும் இடம், ஊர், மொழி என பலதையும் சொல்லலாம். எல்லாக் குழந்தைகளும் ஒரே நேரத்தில் பிறந்தாலும் அவரவருக்கு உள்ளது தானே கிடைத்து வருகிறது. ஒரே நேரத்தில் பிறக்கும் பத்துக்குழந்தைகளுள் ஒன்று அதி புத்திசாலிக் குழந்தையாகவும், இன்னொன்று அவ்வளவாக புத்திசாலி இல்லாமலும் இருக்கும். அதே போல் ஒன்று பணக்காரக் குழந்தையாக இருக்கும். இன்னொன்று சேரிக் குழந்தையாக இருக்கலாம். ஒன்று நல்ல சிவப்பாக, அழகாக இருக்கும். இன்னொன்று அப்படி இல்லாமல் போகலாம். இது எல்லாம் இப்படி இருக்கையில் படிப்பின் மூலம் ஏற்றத் தாழ்வுகளைப் போக்குவது எப்படி? எல்லோருக்கும் படிப்பு முக்கியம். படிக்கத் தடை இருக்கக் கூடாது என்பதெல்லாம் சரியே. ஆனால் அந்தப் படிப்பை வைத்து முன்னேறுவது அவரவர் திறமையிலும் அதிர்ஷ்டம் என்னும் சொல்லிலும் இருக்கிறது. :))))))

  ReplyDelete
 3. அரசே கல்வித் துறையைக் கையில் எடுக்க வேண்டும் கல்வி கற்க வரும் அனைவரும் சமமாக நடத்தப் படவேண்டும் ஏற்ற தாழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ளா உணவு உடை கல்வி அனைத்தும் அனைவருக்கும் வேறுபாடின்றிக் கட்டாயமாக இலவசமாக வழங்கப் படவேண்டும்

  இது ஓரளவு சரியான தீர்வாக அமையும்..!

  ReplyDelete
 4. நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிவின் இறுதியில் நல்லதொரு வழியையும் நீங்களே காட்டி விட்டீர்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை மனப்பாடம் செய்ததை கிளிப்பிள்னை மாதிரி ஒப்பித்து / பேப்பரில் கொட்டி மார்க்குகள் வாங்கும் இந்தக் கல்வி முறை சரிதானா என்கிற கேள்வியே மிகுந்திருக்கிறது. படித்த படிப்புக்கும் செய்கிற வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் ஏராளமானோர் உண்டு. நல்லதொரு அறிவிற் சிறந்தவனாக, பொறுப்பு மிக்க குடிமகனாக... முக்கியமாக சமூக ஒழுக்க விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பவனாக நம் மாணவச் செல்வங்களை வார்த்தெடுக்க வேண்டும். பின்புதான் மற்றவையெல்லாம்.

  ReplyDelete

 5. @ கரந்தை ஜெயக்குமார்
  அந்த எழுத்தறிவும் எல்லோருக்கும் ஒரேமதிரி அமைவதில்லையே. பதிவின் நோக்கம் கல்வி முறையால் ஏற்ற தாழ்வுகளைக் அகற்றவோ குறைக்கவோ முடியுமா என்பது பற்றிய சிந்த்னைகளை தூண்டுவதே ஆகும் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 6. அனைவருக்கும் கல்வி முக்கியம் தான். கற்பதற்கு எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது என்பதுவும் சரி தான். பல்வேறு சிரமங்களுக்கு இடையில் கற்றுக் கொண்ட கல்வி பொருளாதார வாழ்க்கைக்கு எவ்விதத்தில் துணை புரிகின்றது?..

  அன்றைய கால கட்டத்தில் லஞ்சம் கொடுக்க வழியில்லை. சிபாரிசு செய்ய ஆளில்லை. எளிதாகக் கிடைத்திருக்க வேண்டியவை கிடைக்காமல் போயின. தற்காலிகமாக செய்த அரசுப் பணியும் பறி போயிற்று.

  இதற்கெல்லாம் காரணம் அன்றைக்கு அரசுப் பணியில் இருந்த ‘’ எழுத்தறிவு பெற்றவர்களே!’’

  ReplyDelete

 7. @ கீதா சாம்பசிவம்
  ஏற்ற தாழ்வுகளை களைவது இயலாத ஒன்று என்று எல்லோரும் எண்ணக் கூடாது. அதிலும் வரும் தலைமுறையினர் எண்ணக் கூடாது. அதைத் தவிர்ப்பதே பதிவின் நோக்கம் பதிவினை மேலோட்டமாகப் படித்தால் சொல்ல வந்தது தெரியாமல் போக வாய்ப்புண்டு. வருகைக்கு நன்றி

  ReplyDelete

 8. @ இராஜராஜேஸ்வரி
  பதிவின் மையக் கருத்து புரிந்து கொண்டதற்கு நன்றி மேடம்

  ReplyDelete

 9. @ பாலகணேஷ்
  /நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிவின் இறுதியில் நல்லதொரு வழியையும் நீங்களே காட்டி விட்டீர்கள்/. நீங்கள் குறிப்பிடுவது புரியவில்லை. நான் தற்போதையக் கல்வி முறை பற்றிப் பேசவில்லை. கல்வி உடை உணவு இவையே சிறார்களின்மனசில் ஏற்ற தாழ்வுகளைஉண்டாக்கும் சமுதாயத்தில் நிலவிவரும் born with qualities மாறும் வாய்ப்பு பற்றியே பதிவு மற்றபடி நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடே. வருகைக்கு நன்றி

  ReplyDelete

 10. @ துரை செல்வராஜு
  பல்வேறு காரணங்களால் கல்வி மறுக்கப்பட்டு வந்ததால் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் குறைய வாய்ப்பிருக்கவில்லை. இருக்கும் கல்வி முறையால் நிலவும் ஆதங்கங்கள் பலருக்கும் உண்டு. தயை கூர்ந்து பதிவின் மையக் கருத்தை அலசவும் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 11. //ஏற்ற தாழ்வுகளை களைவது இயலாத ஒன்று என்று எல்லோரும் எண்ணக் கூடாது. அதிலும் வரும் தலைமுறையினர் எண்ணக் கூடாது. அதைத் தவிர்ப்பதே பதிவின் நோக்கம் பதிவினை மேலோட்டமாகப் படித்தால் சொல்ல வந்தது தெரியாமல் போக வாய்ப்புண்டு.//

  படிப்பை அனைவருக்கும் கொண்டு செல்லவேண்டும் என்பது சரியே. ஆனால் பொருளாதார ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ, திறமை ரீதியாகவோ, இன்னும் மற்ற பல காரணங்களினாலோ ஏற்றத் தாழ்வுகள் இருக்கத் தான் இருக்கும். ஒண்ணு எல்லாரையும் ஒட்டு மொத்தமாய்ப் பணக்காரனாக்கணும். இல்லையா எல்லாரையும் ஏழையாக்கணும். இப்படித் தான் பொருளாதார ரீதியான ஏற்றத் தாழ்வை சமன் செய்ய முடியும். ஆனால் இதுவும் இயலாத ஒன்றே.

  படிப்பு அனைவரையும் சென்றடைந்தால் நாட்டுக்கு நல்லது என்னும் கருத்தில் மாற்றம் இல்லை. அந்தப் படிப்பையும் நன்கு பயன்படுத்தியாகவேண்டும். இல்லையா? இதிலேயே வேறுபாடு வருமே ஐயா!

  ஏற்றத் தாழ்வு என்பது இயற்கையின் நியதி. அதை மாற்ற நம்மால் முயலாது. உழைப்பு, ஒழுக்கம், நேர்மை, சிந்தித்துச் செயலாற்றுதல் ஆகியவற்றை வேண்டுமானல் படிப்பின் மூலம் அறிவுறுத்த முயற்சிக்கலாம். உழைப்பும், நேர்மையும் இருந்தாலே போதும். மற்றவை தானே வரும்.

  அவரவர் திறமைக்கேற்றபடி நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் வாழ்ந்து நல்லதொரு குடிமகனாய் இருப்பதே ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் நிறைந்ததொரு நல்ல நாடாக இருக்கும்.

  ReplyDelete
 12. நீங்கள் சொன்னதெல்லாம் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்... ஆனால், இன்று கல்வி சிறந்த தொழில் ஆகி விட்ட பின்... என்னத்த சொல்ல...?

  ReplyDelete
 13. நமது பன்முகச் சமுதாயத்தின் (pluralistic society)பலத்தையும், பலவீனத்தையும் நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். தாங்கள் கூறுவது போல் நடைமுறைப்படுததுவது சற்று தாமதமாக நிகழலலாம். முழுமனதோடு ஈடுபட்டு அனைவராலும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால் கல்வி மட்டுமன்றி பிற துறையிலும் நாம் முன்னேற வாய்ப்புண்டு.

  ReplyDelete

 14. @ கீதாசாம்பசிவம்
  நான் சொன்ன விதத்தில் கல்வியை அனைவருக்கும் சமமாக வழங்கினால் ( இலவச உணவு, உடை, கல்வி) நம் பிந்தைய சந்ததியினர் மனதிலிருந்து ஏற்ற தாழ்வுகள் நீங்க வாய்ப்புண்டு. பல காரணங்களால் கல்வி கற்க முடியாத சூழ்நிலை மாறும். சம வாய்ப்பு கிடைக்காத குறை நீங்கும் நான் சொல்ல வந்தது வாய்ப்பில்லாமல் நான் குறைந்து போய்விட்டேன் என்றும் என் தவறுக்கல்லாது நான் தண்டிக்கப் படுகிறேன் என்றும் நம் சந்ததியினர் வருந்தக் கூடாது என்பதுதான் மனசளவில்மாற்றம் கொண்டுவர உதவும் என்பதுமாகும்
  வருகைக்கும் மீண்டும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி மேடம்

  ReplyDelete

 15. # திண்டுக்கல் தனபாலன்
  எதுவும் தானாக நடைபெறுவதில்லை ஒரு பொறி பற்ற வைத்திருக்கிறேன். ஒத்த கருத்து உருவாக வேண்டும். வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 16. //தீர்வை அமல்படுத்த ஒரு benevolent dictator தேவைப் படலாம்.//
  தற்போதுள்ள சனநாயக முறையில் இது சாத்தியப் படாதபோது, தீர்வை அமல் படுத்த நீங்கள் சொன்னதுபோல் ஒரு நற்செயலாற்றும் சர்வாதிகாரி தேவை.

  ReplyDelete

 17. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  எதுவும் ஒரு புள்ளியிலிருந்தே துவங்கவேண்டும் இந்த மாதிரி out of the world சிந்தனைகள் பலரும் ஒரு பொருட்டாகவே நினைத்துப் பார்ப்பதில்லை வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete

 18. @ டாக்டர் கந்தசாமி. சிந்தனையைப் பாராட்டியதற்கு நன்றி சார்.

  ReplyDelete

 19. @ வே.நடன சபாபதி.
  ஆண்டாண்டு காலமாய் பார்த்துவரும் நடைமுறை அவலங்களை bits and pieces மூலம் மாற்ற சனநாயக அரசு முயல்கிறது. ( பிற்படுத்தப் பட்டோருக்கான ஒதுக்கீடுகள் குறைகளை சரிகட்டும் முயற்சியில் ஒரு படியே.) நான் ஒட்டு மொத்தமாகப் பிரச்சனை தீர வழி சொல்லி இருக்கிறேன் யார் மூலமாவது நடந்தால் சரி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 20. //இதைச் செயல் படுத்த அரசே கல்வித் துறையைக் கையில் எடுக்க வேண்டும் கல்வி கற்க வரும் அனைவரும் சமமாக நடத்தப் படவேண்டும்//
  உங்கள் இந்தக் கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். இருப்பினும் ஆசிரியர் தொழிலில் இடஒதுக்கீடு இருப்பது ஏற்புடையதாக இல்லை.

  கோபாலன்

  ReplyDelete

 21. @ கே.கோபாலன்
  நான் சொல்வது போல் நடந்தால் அடுத்த தலைமுறையில் பிற்படுத்தப் பட்டோர் என்னும் பிரிவே இருக்காது. (முதல்.?) வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 22. இலவசக் கல்வி என்பதை விட தரமான கல்விதான் மிக, மிக முக்கியம். எல்லாருக்கும் தரமான கல்வியை இலவசமாக தருவதென்பது எந்த நாட்டிலும் இயலாத காரியம். அவரவர் பொருளாதார தகுதிக்கேற்ப கல்வி வாய்ப்பு கிடைக்கும். இதுதான் இன்று உலகெங்கும் நடக்கிறது. இலவசம் என்றாலே அது தரமற்றவையாகத்தான் இருக்கும் என்று நினைப்பதும் மனித இயல்பு. எந்த ஒரு சமுதாயத்திலும் ஏற்ற தாழ்வு ஏதாவது ஒரு வகையில் இருக்கத்தான் செய்கிறது. இங்கு சாதி அடிப்படையிலுள்ள ஏற்ற தாழ்வு இருப்பதைப் போலவே மேலை நாடுகளில் பொருளாதார அடிப்படையில் ஏற்ற தாழ்வு இருக்கிறது. பொருளாதார ஏற்ற தாழ்வு காலப்போக்கில் மறையக் கூடும் ஆனால் சாதி அடிப்படையில் மனிதர்களை பாகுபடுத்தும் நிலை மட்டும் காலத்திற்கும் அழியாது. அது இந்த மனிதகுலத்தின் சாப்க்கேடு.

  ReplyDelete
 23. தரமான இலவசக் கல்வி சாத்தியமானதே. மத்திய அரசின் பாடத்திட்டம் உள்ள "நவோதயா" பள்ளிகளைக் கிராமங்களில் ஏற்படுத்த வேண்டும் என ஒரு திட்டம் முன்னர் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அந்தத் திட்டம் மற்ற மாநிலங்களால் ஏற்கப்பட்டது. தமிழ்நாட்டில் அந்தப் பாடத்திட்டத்தில் ஹிந்தியும் ஒரு கற்றுக்கொள்ள வேண்டிய மொழி என்பதால் நிராகரித்துவிட்டது மாநில அரசு. அதில் சிபிஎஸ்சி குழுவினரால் அங்கீகரிக்கப்பட்ட கேந்திரிய வித்யாலயாவின் பாடத்திட்டம். கேந்திரிய வித்யாலயாவின் படிப்புத் தரத்தைக் குறித்துச் சொல்ல வேண்டியதில்லை. உலக அளவில் போட்டியிடும் தகுதியையும், சுயமாகச் சிந்தித்து எழுதும், கற்கும் அறிவையும் வளர்க்கும் பாடத்திட்டம் அது.

  அந்தப் பாடத்திட்டத்தைக் கொண்டு வந்திருந்தால் பட்டி, தொட்டிகளில் உள்ள குப்பன், சுப்பன் குழந்தைகளெல்லாம் பயனடையும். ஆனால் மாநில அரசு மொழிப்போராட்டம் என்னும் போர்வையில் அருமையான அந்தத் திட்டத்தை நிராகரித்து விட்டது.

  கொஞ்சம் யோசித்திருந்தால் தமிழும் கற்கவேண்டும். தமிழும் ஒரு பாடமாக இருக்கும். எட்டாம் வகுப்பு வரை மட்டும் ஹிந்தி இருக்கலாம் என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்திருக்கலாம். எட்டாம் வகுப்புக்குப் பின்னர் மாணாக்கர்களுக்கே சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் பெருகிவிடுவதால் அவர்கள் படிக்க வேண்டிய மொழிப்பாடத்தை அவர்களே தேர்ந்தெடுக்குமாறு வைக்கலாம்.

  இது மட்டும் நடந்தால்!!!!!

  எல்லாம் கனவு தான். தமிழ், தமிழ் என்று சொல்லிக் கொண்டு ஆங்கில வழிக் கல்விக்கே முன்னுரிமை கொடுப்பார்களே தவிர நம் தேசத்து மொழி ஒன்றை அந்நிய மொழி எனச் சொல்லிக் கற்பவர்களையும் கற்க விடமாட்டார்கள். :((((

  ReplyDelete

 24. @ டி.பி.ஆர். ஜோசப்
  பொருளாதார அடிப்படையில் இருக்கும் ஏற்ற தாழ்வுக்கு சமுதாய அடிப்படையில் நிலவும் ஏற்ற தாழ்வுகளே காரணம் என்பது என் கருத்து. அதனை விவரமாகக் கூறினால் சிலர் உடன்படமாட்டார்கள். எல்லா ஏற்றதாழ்வுகளையும் சரிசெய்யும் சக்தி கல்விக்கு உண்டு. அந்தக் கல்வி எல்லோருக்கும் சமமாகக் கிடைத்தால் மனசளவில் ஏற்றதாழ்வு எண்ணம் வராது என நினைக்கிறேன் பொருளாதாரத்தால் தரமான கல்விக்கு வாய்ப்பு இழப்பவர்களும் அதே காரணத்தால் வாய்ப்பு பெறும் சிலரும் ஒரேவிதமாக நடத்தப் பட்டால் நலமாயிருக்கும் என்பதும் என் கருத்து. இலவசம் என்பது தற்கால அரசியலில் கொடுக்கப் படும் காரட் போலல்லாமல் அனைவருக்கும் என்றால் அதன் மதிப்பு குறையாது. என் இத்தனை ஆண்டு ஜீவிதத்தில் இந்த ஏற்ற தாழ்வின் பல முகங்களை சந்தித்து விட்டேன். ஏதோ மனதில் பட்டதைப் பகிரத் தோன்றுகிறது. அதன் விளைவே இது போன்ற என் பதிவுகள்வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி

  ReplyDelete

 25. @ கீதா சாம்பசிவம்
  நவோதயாக் கல்வித்திட்டம் மொழிப்பிரச்சனையால் சரியாக இயங்குவதில்லை என்று தங்கள் கருத்தின் மூலம் அறிகிறேன் சாதி மதம் மொழி இனம் என்பதெல்லாம் சென்சிடிவான விஷயங்கள் அனைத்து இந்தியாவையும் ஒன்று சேர்த்த மொழி ஆங்கிலம் அதையே தேசிய மொழியாக்க எதிர்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறிருக்கையில் ஹிந்தியைக் கட்டாயப் படுத்திக்கற்பித்தால் எதிர்ப்பு இல்லாமலா போகும். அண்மையில் வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பயிலும் மொழியைத் தீர்மானிக்கும் உரிமை பெற்றோருக்கே என்கிறது There are a lot of ramifications in the subject. மீண்டும் வந்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்ததற்கு நன்றி.

  ReplyDelete
 26. //நவோதயாக் கல்வித்திட்டம் மொழிப்பிரச்சனையால் சரியாக இயங்குவதில்லை என்று தங்கள் கருத்தின் மூலம் அறிகிறேன்//

  நவோதயா பள்ளிகளையே முற்றிலும் நிராகரித்து விட்டது தமிழக அரசுகள். மாறி மாறி வந்த இரு கழக அரசுகளாலும் இவை இங்கே வர முடியாமல் தடுக்கப்பட்டுவிட்டன என்பதே உண்மை.

  தமிழ் படித்தால் மற்றொரு மொழியும் கற்கக் கூடாது என்று சொல்ல முடியாதே! இப்போப் பள்ளிக் குழந்தைகள் தமிழோடு ஆங்கிலமும் கற்கையில் ஹிந்தியை ஏன் கற்க முடியாது. சின்ன வயசில் விரைவாக பல மொழிகளைக் கற்க முடியும்.

  மும்பையில் பார்த்தீர்களானால் பள்ளிக் குழந்தைகள் மராட்டி, ஹிந்தி, ஆங்கிலம் வீட்டில் பேசும்தாய்மொழி எனக் குறைந்தது நான்கு மொழிகளைப் பேசும்; கற்கும்.
  அதே போல் மங்களூரிலும் பார்த்திருக்கிறேன். ஆட்டோ டிரைவரில் இருந்து உள்ளூர் மொழியான கன்னடம், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம்(கொச்சையாக) பேசுகின்றனர். இங்கே?????

  ஹிந்திப் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு ஹிந்தி மொழிக்கு இல்லை என்பது வேதனையான உண்மை.

  ReplyDelete