சொன்னதும் இவர்தானே...........
-----------------------------------------
சென்ற பதிவில்
சொன்னது யார்
என்று கேள்வி கேட்டுவிட்டேன். முதன் முதலில் சொன்னது யார் என்று கேட்கவில்லையே என்று
சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம் ஏன் என்றால் நான் அந்த வாசகங்களை ஒரு நண்பர், மூத்த
வலைப் பதிவர் சொல்லித்தான் கேட்டேன்.
சுமார் ஒரு
மாதத்துக்கும் முன் அவர் திருச்சிக்குச்
சென்றிருந்தபோது இன்னுமொரு மூத்த பதிவரை சந்தித்தது பற்றி எழுதி இருந்தார். அதைப்
படித்ததும் நான் பெங்களூரில் என்னை சந்திக்க வருவதாகக் கூறிய அவர் இங்கு வந்தும்
நான் காத்திருந்தும் சந்திக்க வரவில்லையே என்று எழுதி இருந்தேன் உடனே அவர் மே மாதத்தில்தேதி
பத்திலிருந்து பதினைந்துக்குள் வந்தால் எனக்கு சௌகரியப்படுமா என்று கேட்டு எழுதி
நான் எங்கும் போகும் உத்தேசம் இல்லை என்று அறிந்ததும் என்னைக்காண்பதற்காகவே ரயிலில் முன் பதிவு
செய்து 14-ம் தேதிகாலை வந்து மாலை திரும்புவதாக எழுதி இருந்தார் ஒருவேளை நான்
எழுதியது தவறோ என்று நான் எண்ணியது உண்மை, அவர் வந்ததும் இதைத் தெரிவித்தேன்
அப்போது அவர் உதிர்த்த பொன் மொழிகள்தான் முந்தைய பதிவில் யார் சொன்னது என்று
கேட்டுப் பதிவிட்டிருந்தேன் நான்காவதாக அவர் சொன்னது சில சில அபிலாக்ஷைகள்
இருந்தால் மிச்சம் வைக்காமல் முடிக்கவேண்டும் என்றார் என் ஆசை அவர் விருப்பம்
இரண்டுமே நிறைவேறியது. சாணக்கியரோ விதுரரோ சொல்லியதை நான்
படித்ததுமில்லை,கேட்டதுமில்லை. மூத்த பதிவர் டாக்டர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
என்னைப் பார்க்க வந்தபோது சொன்ன வாக்கியங்கள் நான் எழுதும் இப்பதிவுக்கு
முன்னோட்டமாக இருந்தது.
ஒரு வாரம்
முன்பே அவர் வரவை நானும் என் மனைவியும் எதிர்பார்க்கத் துவங்கி விட்டோம். நான்
தங்கி இருக்குமிடத்துக்கு வரும் வழிபற்றிக்கேட்டிருந்தார். எனக்கோ என்னிலும்
மூத்தவரை எங்களைப் பார்ப்பதற்காகவே பெங்களூர் வருபவரை ரயிலடிக்கே சென்று வரவேற்பதே
முறை என்று தோன்றியது. என் வீட்டிலிருந்து பெங்களூர் சிடி ஸ்டேஷன் சுமார் 15 கிமீ.
தூரம் உள்ளது. காலை 8-35-க்கு வரவேண்டிய ரயில் வழக்கம் போல தாமதமாக வந்தது.
ஸ்டேஷனிலிருந்து ஒரு ப்ரீபெய்ட் ஆட்டோவில் வீடு வந்து சேரும்போது காலை மணி பத்தாகி
இருந்தது. அவரை வரவேற்க மே மாதம் மட்டுமே செடிக்கு ஒரு பூவாகப் பூக்கும் ஃபுட்பால்
லில்லி தயாராய் இருக்க அதன் வரவேற்பை படம் பிடித்து ஏற்றுக் கொண்டார்
வந்தவர் ரயிலில்
வந்த களைப்பு தீர முதலில் காஃபியும் காலை உணவாகத் தோசையும் பரிமாறப்பட்டது. உண்டு
முடித்துக் குளித்துவிட்டு வந்தவர் ஆயாசம் தீர சற்று ஓய்வெடுக்கட்டும் என்றாள் என்
மனைவி. டாக்டரும் சரியென்று சொல்லி உறங்கச் சென்றார். மதிய உணவு நேரம் வந்ததும் அவரைத்
தூக்கத்தில் இருந்து எழுப்பினோம். என்னால் அவரதுநிலையைப் புரிந்து கொள்ள
முடிந்தது. நானும் ஒரு முதியவன்தானே
மதிய உணவாக பிசி
பேளா ஹுளி அன்னா என் மனைவி செய்திருந்தாள். அவர் சாப்பிடும் அளவு ஒருவேளை சமையல்
பிடிக்கவில்லையோ என்று என் மனைவிக்குத் தோன்றியது. ஆனால் எனக்கென்னவோ ருசித்து
சாப்பிட்டதாகவே தோன்றியது. உட்கொளும் அளவு அவர் வயதை கணக்கிட்டால் சரிஎன்றே
தோன்றியது. சிறிது அவல் பாயசமும் உட்கொண்டார், சர்க்கரையான மனிதர் என்பதால்
எதையும் force செய்ய விரும்பவில்லை.மதிய உணவு முடிந்ததும் மிண்டுமுறங்கப் போனாஅது அவரது வாடிக்கையான வழக்கம் என்று தெரிந்துஅவரை உறங்க விட்டேன்
மாலை நான்கு மணிக்கு ஒருஆட்டோ ஏற்பாடு செய்திருந்தேன். என் வீட்டிலிருந்து சுமார் 15 கிமீ. தூரத்தில் தும்கூர் ரோடில் ஒரு கோவில் cum ஆசிரமம் இருக்கிறது. பல வருஷங்களுக்கு முன் நாங்கள் சென்றிருக்கிறோம் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களும் மூன்று மொழிகளிலும் சுற்றிலும் எழுதப் பட்டு கீதைக்கு ஒரு கோவில் போல் இருக்கிறது
மாலை நான்கு மணிக்கு ஒருஆட்டோ ஏற்பாடு செய்திருந்தேன். என் வீட்டிலிருந்து சுமார் 15 கிமீ. தூரத்தில் தும்கூர் ரோடில் ஒரு கோவில் cum ஆசிரமம் இருக்கிறது. பல வருஷங்களுக்கு முன் நாங்கள் சென்றிருக்கிறோம் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களும் மூன்று மொழிகளிலும் சுற்றிலும் எழுதப் பட்டு கீதைக்கு ஒரு கோவில் போல் இருக்கிறது
அவரை அங்கு அழைத்துப் போய்க் காட்ட விரும்பி முதலிலேயே ஒப்புதல் வாங்கி
இருந்தேன் உண்ட களைப்போ ஏதோ அந்தப் பயணத்தைக் கான்சல் செய்யலாமா என்றார். நான்
அந்த இடம் அவர் பார்த்தால் மகிழ்வார் என்றும் கூறி பெங்களூரில் இருப்பவரில் பலரும்
பார்த்திருக்காத இடம் என்று கட்டாயப் படுத்தி அழைத்துப்போனேன். என் மனைவியும் கூட
வந்தார்
ஒரு பிரம்மாண்டமான ஹால் அதன் நடுவே பகவானின் விஸ்வரூபதரிசனம் சிலையாக
வடிக்கப் பட்டு இருக்கிறது ஹாலைச் சுற்றியும் வெளியிலும் கீதை சுலோகங்கள் மூன்று
மொழிகளில் கீழே காயத்ரி மாதாவின் கோவில் தரிசனம் செய்து வெளியே வந்தால் பார்த்தசாரதியின்
கீதா உபதேசம் சிலை வடிவில் வளாகத்தில் ஏழு நதிகளின் சிலா ரூபங்கள். அருகே நடு
நாயகமாக விட்டலனின் திருச் சிலை.
நேரம் பற்றாக் குறையால் இன்னும் நன்கு கூர்ந்து கவனிக்க முடியவில்லை.
அங்கிருந்து வீடு வந்த போது மாளை ஆறு மணிக்கு மேல் ஆகி இருந்தது. டாக்டர் ஐயா
மஜெஸ்டிக் சென்று அங்கு சுற்றிப் பார்த்து விட்டு ரயில் ஏறிப் போவதாகக் கூறினார்.
என் அன்பின் அடையாளமாக நான் எழுதி வெளியிட்டிருந்த “ வாழ்வின் விளிம்பில்
“ சிறுகதைத் தொகுப்பையும் நான் வரைந்திருந்த பாமா ருக்மிணி சமேதராக கிருஷ்ணனின் தஞ்சாவூர்
ஓவியம் ஒன்றையும் கொடுத்தேன்
நாங்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. பதிவுகளின் மூலம் ஒருவரை ஒருவர்
தெரிந்து கொண்டிருந்தோம் . பதிவின் மூலம் தெரியாதது அவருக்கு கர்நாடக சங்கீதத்தில்
இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் மாலை ஸ்ரீ அய்யப்பன் கோவில் வரை ஆட்டொக் காரரிடம் கூட்டிச்
செல்லப் பணித்திருந்தோம்
மறுநாள் அதாவது 15-ம் தேதி அவர்
பத்திரமாய் வீடு சேர்ந்தார் என்று அறியும் வரை சற்று கவலையாகவே இருந்தாள் என்
மனைவி.
என் சிறுகதைத் தொகுப்பு பரிசாக |
தஞ்சாவூர் ஓவியம் நினைவுப்பரிசாக |
விஸ்வரூப தரிசனம் டாக்டர் ஐயாவுடன் நானும் என் மனைவியும் |
காயத்ரி தேவி ஆலையம் - என் மனைவி |
கீதா உபதேசம் சிற்பம் |
சப்த நதிகள் சிலாவடிவில் |
விட்டலன் |
.
.
இத்தனை முடியாத போதும் உங்களைப் பார்க்கவென்ற வந்த டாக்டர் ஐயாவைப் பாராட்டுவதா, அவரை உபசரித்த உங்களைப் பாராட்டுவதா தெரியலை. இருவருக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள், வணக்கங்கள்.
பதிலளிநீக்குஉங்களைச் சந்திக்கவென்றே பெங்களுரு வந்த டாக்டர் சாரைப் பாராட்டுவதா, அப்படி அவரை இழுத்த உங்கள் அன்பைப் பாராட்டுவதா என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குநீங்கள் சென்று வந்த அந்த கோவில் கம் ஆஸ்ரமம் மிக அழகான இடமாக இருக்கும் போல இருக்கிறது.
விருந்தோம்பலுக்கு பெயர் போனவர்கள் தமிழர்கள். படங்களும், தங்களின் நினைவுகளும் பிரமாதம் ஐயா. தங்களின் அன்பை படித்தவுடன் எங்களுக்கும் பெங்களூரு வரவேண்டும் போல் உள்ளது. வணக்கங்கள் ஐயா.
பதிலளிநீக்குநீங்கள் இருவரும் காட்டிய அன்பிற்கு நன்றி எப்படி சொல்வதென்று தெரியவில்லை. பிசி பேளா ஹூளி அன்னா அருமையாக இருந்தது. என்னால் சாப்பிட முடிந்தது அவ்வளவுதான். அதை கொஞ்சம் இரவு சாப்பிடுவதற்காக கட்டித்தரச் சொல்லலாம் என்று நினைத்தேன். மரியாதை கருதி அப்படிச்சொல்லவில்லை.
பதிலளிநீக்குஇனிய சந்திப்பு.
பதிலளிநீக்குடாக்டர் ஐயாவை தில்லியில் ஒரு முறையும், சென்னையில் பதிவர் சந்திப்பின் போதும் சந்தித்ததுண்டு...
பழனி கந்தசாமி ஐயாவும் உங்களை சந்தித்ததைப் பற்றி எழுத ஆரம்பித்து சஸ்பென்சில் நிறுத்தி இருந்தார். அடுத்த பகுதியை படிக்க வேண்டும்.
பதிலளிநீக்குஒரே ஊரில் இருந்தும் என்னால் உங்களைப் பார்க்க முடியவில்லை. ஆனால் கந்தசாமி அவர்கள் வெளி ஊரிலிருந்து வந்து பார்த்துவிட்டு போயிருக்கிறார். பதிவர்களின் நட்பு தனி வகை தான்.
வாழ்க, வளர்க உங்கள் இருவரின் நட்பும்.
பெரியோர்களுக்கு அன்பின் வணக்கங்கள்..
பதிலளிநீக்குஅன்பினில் இணைந்த உள்ளங்கள் வாழ்க.. வளர்க..
வணக்கங்கள் ஐயா (2)...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநட்பு உள்ளங்களின் சந்திப்பு
பாச்த்தை மிளிரவைக்கிறது..
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
நீங்களும் அவ்வப்போது பெங்களூர் வந்து போவதாய்த் தெரிகிறது. அடுத்தமுறை என் வீட்டுக்கும் விஜயம் செய்யுங்கள். திறந்தகதவுடன் காத்திருக்கிறேன் வந்து பாராட்டியதற்கு நன்றி.
பதிலளிநீக்கு# வெங்கட் நாகராஜ்
ஜூன் மாத இறுதியில் திருச்சி வர வாய்ப்புள்ளது. நீங்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்தால் , முடிந்தால் சந்திப்போம். வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ ரஞ்சனி நாராயணன்.
மனம் இருந்தால் மார்க்கமுண்டு மேடம் எதற்கும் உங்கள் தொலைபேசி எண்ணையும் முகவரியையும் தாருங்கள். என்னால்வர முடிகிறதா பார்ப்போம். வருகைக்கு நன்றி.
# துரை செல்வராஜு
பதிலளிநீக்குஎல்லாப் பதிவர்களும் அன்பில் இணைந்தவர்களே ஐயா. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
வணக்கங்கள் டிடி. அதென்ன அடைப்புக் குறியில் 2 ? புரியலையே.
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி. உங்களை சந்திக்க வேண்டும் என்று என் மனைவி கூறுகிறாள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்கு@ இல. விக்னேஷ்
சந்தர்ப்பம் அமையும்போது வாருங்கள் விக்னேஷ். வருகைக்கும் அன்புக்கும் நன்றி
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
தெரியாமல் போய்விட்டதே ஐயா. ஒரு கோடி காட்டி இருந்தால் போதுமே. எங்களிடம் மரியாதை கருதி கேட்கவில்லை என்று சொல்லி இருப்பது படிக்கக் கஷ்டமாக இருக்கிறது.என் பூவையின் எண்ணங்கள் தளத்தில் பிசி பேளா ஹுளி அன்னா செய்முறை பதிவிடுகிறேன் உங்கள் வருகை பல நாட்கள் மனதில் பசுமையாய் இருக்கும் .
பதிவுலகைக் கடந்து நட்பு பாராட்டுவது வெகு அபூர்வமே. இனிதான பகிர்வுக்கு நன்றி. படங்கள் அத்தனையும் அருமை.
பதிலளிநீக்குபதிவுலகைக் கடந்து நட்பு பாராட்டுவது வெகு அபூர்வமே. இனிதான பகிர்வுக்கு நன்றி. படங்கள் அத்தனையும் அருமை.
பதிலளிநீக்குதங்கள் உபசரிப்பும் அன்பும் சிலிர்க்க வைத்தது. டாக்டர் ஐயா தம் வீட்டில் இருந்ததைப் போலவே நிச்சயம் உணர்ந்திருப்பார் !
பதிலளிநீக்குஇனிய சந்திப்பு. மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅழகான கோவிலுடன் விஸ்வ சாந்தி ஆஸ்ரமம். கேள்விப்பட்டிருக்கிறேன். சென்றதில்லை.
படங்கள் அனைத்தும் அருமை. முனைவர் பழனி.கந்தசாமி அவர்களது பெங்களூரு பயணம் பற்றிய பதிவு ஒரு தொடரின் ஆரம்பம் போலும் உங்கள் பதிவு அதனுடைய முடிவு போலவும் இருந்தது. பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ டி.பி.ஆர் ஜோசப்
பதிவுலகைக் கடந்து நட்பு பாராட்டுபவர்கள் பதிவர்களில் பலர் இருக்கின்றனர். பதிவுலகம் அறிமுகத்துக்கு ஒரு வாய்ப்பே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.சார்.
பதிலளிநீக்கு@ ரிஷபன்
பாராட்டுக்கு நன்றி. அடுத்தமுறை திருச்சி வரும்போது உங்களையும் சந்திக்க வேண்டும்
பதிலளிநீக்கு@ ராமலக்ஷ்மி
ஒரு முறை வீட்டுக்கு வாருங்களேன்
மகிழ்ச்சி அடைவேன் உங்களிடம் நான் கற்க நிறையவே இருக்கிறது வருகைக்கு நன்றி.
@ வே.நடன சபாபதி
இருவரது பதிவுகளையும் படித்துக் கருத்திடுவதற்கு நன்றி ஐயா.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
இருவர் சந்திப்பின் பின்னனி பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் தொடரட்டும் நட்பு.. எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது..ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
இருவர் சந்திப்பின் பின்னனி பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் தொடரட்டும் நட்பு.. எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது..ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//நீங்களும் அவ்வப்போது பெங்களூர் வந்து போவதாய்த் தெரிகிறது.//
பதிலளிநீக்குஇல்லை ஸார். நான் வந்ததில்லை. வந்தால் அவசியம் உங்கள் வீட்டுக்கு வருகிறேன். :))))
அப்படியே என்றில்லாவிட்டாலும்
பதிலளிநீக்குஒரு சம்பவம் இன்னொரு சம்பவத்தை நினைவு கொள்ளச் செய்யுமாம்.
எனக்கு மோசிக்கீரனாரின் நினைவு வந்தது ஜிஎம்பீ சார்..
ஜூன் மாதம் தில்லி திரும்பி விடுவேன்... எனக்கே பெங்களூரு வரும் வேலை இருக்கிறது. வரும்போது நிச்சயம் உங்களுக்கும் தகவல் தருகிறேன்.
பதிலளிநீக்குஎவ்வளவு அன்பான உபசரிப்பு! ஆனால், வீட்டிற்கு வரும் ஒவ்வொரு பதிவருக்கும் இதே போன்ற வரவேற்பு
பதிலளிநீக்குகொடுப்பதென்றால், நேரமும் பர்சும் அதிகம் செலவாகுமே என்று கவலை மேலிடுகிறது.
ஐயா,
பதிலளிநீக்குதங்கள் அன்புக்கு ஓர் எல்லையே இல்லை போல இருக்கே!!!
கீதாமந்திர் கட்டாயம் காண வேண்டியதொன்று. படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி.
வரும் அக்டோபரில் இந்தியப் பயணம் வாய்க்கும்போல் இருக்கிறது.
உங்களையும் திருமதியையும் சந்திக்க ஆவலாக இருக்கின்றேன்.
பதிலளிநீக்கு@ ரூபன்2008
/தொடரட்டும் நட்பு./ வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
வரும்போது திட்டமிட்டு வாருங்கள். வரவேற்கக் காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்கு@ ஜீவி
சம்பவங்களின் நிகழ்வுகள் நினைவினில் கோர்வையாக வருகிறது. மோசிக்கீரனார் . எங்கோ படித்தபெயராகமட்டுமே நினைவுக்கு வருகிறது ஜீவி சார்.
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
அலுவல் காரணமாக வந்தால் காலில் சக்கரம் இருக்குமே. வாருங்கள். தகவலுக்குக் காத்திருக்கிறேன்
பதிலளிநீக்கு@ செல்லப்பா யக்ஞசாமி
அன்புக்குப் பஞ்சமில்லை. பர்சில் இருக்கும்போது செலவுக்கு அஞ்சுவதில்லை. வருகைக்கு நன்றிசார்
பதிலளிநீக்கு@ துளசி கோபால்
நீங்கள் சென்னையில் இல்லையா. சிகாகோவிலிருந்து திரு அப்பாதுரை ஒருமுறை வந்து எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார். நவம்பர் 11-ம்தேதி எங்கள் திருமண நாள். 50 ஆண்டுகள் பூர்த்தியாகும் உங்கள் பயண திட்டத்தை அதற்கு வருகை தருமாறு அமைத்துக் கொள்ளலாமே. முகமறியாப் பதிவுலக நண்பர்களைக்காண்பது நிச்சயம்மகிழ்வூட்டும் வருகைக்கு நன்றி.
ஐயா,
பதிலளிநீக்குஉங்கள் பொன்விழா ஆண்டுக்கு எங்கள் அட்வான்ஸ் வாழ்த்து(க்)கள்.
எனக்கும் கோபாலுக்கும் வரும் ஜூன் 5, 40வது மணநாள்.
தங்கள் ஆசியை வேண்டுகின்றோம்.
நாங்கள் நியூஸிலாந்தில் கடந்த 27 ஆண்டுகளாக வசிக்கின்றோம்.
என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்.
யாருக்கெல்லாம் பெங்களூரு வர வாய்ப்பு இருக்கிறதோ, எனக்கும் சொல்லுங்கள். நானும் உங்களை எல்லாம் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்.
பதிலளிநீக்கு@ஸ்ரீராம், அடிக்கடி பெங்களூர் வருவீர்களா? சொல்லவேயில்லையே!
@வெங்கட்,நீங்களும் சத்தம் போடாமல் வந்துவிட்டு போய்விடுவீர்களா?
அடுத்தமுறை வரும்போது சொல்லுங்கள், எல்லோரும் சந்திக்கலாம்.
தொலைபேசி எண் கொடுக்கிறேன், GMB சார் தனிமடலில். நிச்சயம் வாருங்கள்.
பதிலளிநீக்கு@ துளசி கோபால்
உங்கள் தளம்சென்றேன் அப்ப்ப்பா . எத்தனை தளங்கள் நானும் ஒரு சமையலுக்கான வலைத்தள வைத்திருப்பதால் சாப்பிடலாம்வாங்க சென்றேன். ஆனால் பதிவிட்ட்துஆதிவெங்கட் என்று வருகிறது. சில விஷயங்களைப் பின்னூட்டம் மூலம் கேட்பது உசிதமாகப் படவில்லை. உங்கள் இமெயில்முகவரி கிடைகவில்லை. தரலாமா.?ஒரு முறை சூரி சிவாவின் பதிவு ஒன்றில் அவர் உங்கள் 60-ம்திருமண விருந்தில் சாப்பிட்டதை புகழ்ந்து எழுதியதை படித்த நினைவு. அது தவறோ.?அதனால்தான் சென்னைவாசி என்று நினைத்திருந்தேன். உங்கள் 40-வது திருமண நாளுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு@ ரஞ்சனி நாராயணன்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஷைலஜா மேடம் ஒருங்கிணைத்த பெங்களூர் பதிவர் சங்கமத்தில் உங்களை எதிர்பார்த்தேன். நாம் சந்திப்போம். உங்கள் தனி மடலை எதிர் நோக்கி. நன்றி
பதிலளிநீக்கு@ ரஞ்சனி நாராயணன்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஷைலஜா மேடம் ஒருங்கிணைத்த பெங்களூர் பதிவர் சங்கமத்தில் உங்களை எதிர்பார்த்தேன். நாம் சந்திப்போம். உங்கள் தனி மடலை எதிர் நோக்கி. நன்றி
ஜிஎம்பி ஐயா, துளசி எனக்குத் தெரிந்து துளசிதளம் வலைப்பக்கம் மட்டுமே வைத்திருக்கிறார். "சாப்பிடலாம் வாங்க" என்னும் பெயரில் உள்ளது என்னுடைய வலைத்தளம். அதில் ஆதி வெங்கட் பின்னூட்டம் கொடுத்திருக்கலாம். :)))))
பதிலளிநீக்குhttp://geetha-sambasivam.blogspot.in
பதிலளிநீக்குசாப்பிடலாம் வாங்க பதிவின் சுட்டி மேலே அளித்திருக்கிறேன். ஆதி வெங்கட் அவரின் வலைப்பக்கத்திலேயே சமையல் குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டு பார்த்திருக்கிறேன். தனியாகப் பதிவிட்டதாய்த் தெரியவில்லை.
பதிலளிநீக்கு@ கீதாசாம்பசிவம்
வாருங்கள் மேடம். திருமதி துளசி கோபாலின் இமெயில் முகவரி தேட , என் பதிவில் அவர் இட்ட பின்னூட்டத்தில் அவர் பெயரை சொடுக்கினேன். my blogs என்று போட்டு அதில் துளசி தளம். விக்கிபசங்க, சற்றுமுன். சாப்பிடலாம் வாங்க, ஏழாம்படை வீடு என்று பல தளங்களின் பெயர்கள் அதில் சாப்பிடலாம்வாங்க போனால் புளி இல்லாமல் சாம்பார் எனும் பதிவு பதிவின் கடைசியில் இடுகை இட்டது ஆதி வெங்கட் . நீங்களும்தான் பாருங்களேன். கன்ஃப்யூஷன் தீர்ந்தால் சரி.
பார்த்துட்டேன் ஐயா, சாப்பிட வாங்க னு பதிவு இருக்கு. என்னோடது சாப்பிடலாம் வாங்க! ஏற்கெனவே சமைக்கலாம் வாங்கனு கூப்பிட்டுட்டு யாருமே வராமல் போகவே சாப்பிடலாம் வாங்கனு கூப்பிட்டுப்பெயரை மாத்தினேன். இனியும் மாத்தணுமோனு நினைக்கிறேன். ஆமாம், அதிலே ஆதி வெங்கட் தான் பதிவிட்டிருக்கிறார். துளசி வந்து தான் சந்தேகத்தைத் தீர்க்கணும். :))) நானும் புளியில்லா சாம்பார் போட்டிருந்தேனா, கொஞ்சம் குழப்பமா இருந்தது. :)))))
பதிலளிநீக்குமோசிக்கீரனாரின் வரலாறு அறிந்தால் மகிழ்ந்து போவீர்கள், ஜீம்பீ சார்.
பதிலளிநீக்கு“நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்
அதனால் யான் உயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தர்க்குக் கடனே.“
-- என்கிற புறப்பாடலை அறிந்திருப்பீர்கள். அந்தப் பாடல் அவரது தான்.
விவரமாக மோசிக்கீரனார் பற்றி அறிந்திட கூகுள் விவரங்களில் நீங்கள் தேடிப்பார்க்கலாம். அறிந்தால் மகிழ்வீர்கள்.
அடடா..... துளசிதளம் இப்படிக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டதே:(
பதிலளிநீக்குஓக்கே.தன்னிலை விளக்கம் சொன்னால் ஆச்சு:-) கொஞ்சம் நீளமான பின்னூட்டம். வேறுவழி இல்லை. மன்னிக்கணும்
ப்ளொக்கர் ப்ரொஃபைல் க்ளிக்கினால் அஞ்சு வலைப்பதிவுகள் காண்பிக்கும்.
துளசிதளம் மட்டுமே சொந்த (தனி) குடித்தனம். செப்டம்பர் 2004 ஆரம்பம். இதுவரை 1562 பதிவுகள் வெளிவந்துள்ளன. இது பத்தாம் ஆண்டு.
சாப்பிடவாங்க என்பது கூட்டுப்பதிவு. 2006 லே வலைப்பதிவர் சிந்தாநதி சாப்பாடு சமையலுக்கு கூட்டுப்பதிவு ஒன்னு ஆரம்பிச்சார். அதில் சேர விருப்பமிருந்தவர்கள்
கலந்துக்கலாம்.
புதுகைத் தென்றல், கயல்விழி முத்துலட்சுமி, நம்ம ஆதி வெங்கட் இவர்களோடு நானும் அங்கிருக்கேன்.
என்ன ஒரு வருத்தமான சமாச்சாரம் என்றால் பதிவர் சிந்தாநதி திடீர்னு சாமிகிட்டே போயிட்டார். அப்புறம் இது அதே வருத்ததில் நின்னு போயிருச்சு. அதில் வந்த பதிவுகள் 41தான். ப்ச்.....
அடுத்தது சற்றுமுன்.
இது ஆரம்பிச்சது 2007 ஃபிப்ரவரி. இதுவும் கூட்டுப்பதிவுதான்.
சிறில் அலெக்ஸ் (அப்போ யூ. எஸ் வாசம்)
உலகில் அவ்வப்போது நடக்கும் சிலமுக்கிய நிகழ்வுகளை அங்கங்கே இருக்கும் வலைப்பதிவர்கள் சுடச்சுட எழுதி, உடனுக்குடன் சக வலைஞர்களுக்கும் வாசகர்களுக்கும் தெரிவிக்கும் முயற்சி. இதுவும் வெற்றிகரமா வந்து கடைசியில் ஜூலை 2011 நின்னுபோச்சு.
இதுக்குள்ளே பத்திரிகைகள்,தினசரிகள் எல்லாம் வலையிலேயே... கடைசி செய்தி, தற்போதைய செய்தி என்றெல்லாம் வெளியிட ஆரம்பிச்சதும் ஒரு காரணம்.
ஏழாம்படை வீடு:
சண்டிகர்முருகன் கோவிலுக்காக ஆரம்பிச்சுக் கொடுத்தது. அப்போ நாங்கள் தாற்காலிகமாக சண்டிகரில் ஒன்னேகால் வருசம் இருந்தோம். கோவிலில் கணினி, நெட் பொறுப்பில் இருக்கும் அன்பர் நீட்டிப்பார் என்றதால் ஆரம்பிச்சுக் கொடுத்தேன். கோவில் சமாச்சாரங்களை பக்தர்களுக்குத் தெரிவிக்கும் நோக்கத்துடன் ஆரம்பிச்சுத் தந்தது. முருகன் தொடரவிடவில்லை என்றுதான் நினைச்சுக்கணும்.
விக்கிப்பசங்க:
இதுவும் கூட்டுப்பதிவுதான். நம்ம இலவசக் கொத்தனார், பினாத்தல் சுரேஷ், ராமநாதன், வெளிகண்ட நாதர், வெங்கட் இவர்களுடன் நானும்:-)
எதுக்காவது விளக்கம், பதில் தெரியணுமுன்னா எங்ககிட்டே கேட்டால் நல்லாவே 'விம்' போட்டு பளிச்ன்னு விளக்கிருவோம். 2006, அக்டோபர் ஆரம்பம்.மறைவு அதே அக்டோபர் ஆனால் 2007. வருசம் வரை தாக்குப்பிடிச்ச இதில் 51 பதிவுகள் வந்தன.
ஐயா,
பதிலளிநீக்குசூரி அவர்கள் கலந்துகொண்ட எங்கள் சஷ்டியப்த பூர்த்தி விழா சென்னையில்தான் நடந்தது.
இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லணும். நேரமிருக்கும்போது இந்தச் சுட்டியில் பாருங்கள்.
http://thulasidhalam.blogspot.co.nz/2012/10/blog-post_10.html
மாலை வரவேற்பு பதிவர் சந்திப்பாக வைத்துக் கொண்டோம்.
http://thulasidhalam.blogspot.co.nz/2012/10/blog-post_12.html
பதிலளிநீக்கு@ ஜீவி
முதலில் உங்கள் பின்னூட்டம் படித்தபோது அதில் குறிப்பிட்டிருந்த மோசிக் கீரனார் பற்றி நான் அறிந்திருக்கபில்லை திரு .ஜீவி எழுதி இருப்பதால் ஏதோ செதி இர்க்கவேண்டும் என்று கூகிளில் தேடினேன் உயிர் ஆளும் மன்னரிடம் என்னும் இந்தப் பாடலைப் படித்தேன். இருந்தாலும் /“தம் முரசுக் கட்டிலில் களைத்து உறங்கி கொண்டிருந்தமோசிக் கீரனார் எனும் செந்நாப்புலவருக்கு (அப்படி உறங்குபவருக்கு அந்நாட்டுச் சட்டப்படி மரண தண்டனை)அருகில் இருந்து சாமரம் வீசிய பெருமை இரும்பொறைக்கு உண்டு / என்று படித்தவுடன் எங்கோ ஒரு பொறி தட்டியது எனக்கு. என்னைப் படிக்கத் தூண்டியதற்கு நன்றி ஜீவி சார்.
பதிலளிநீக்கு@ துளசிகோபால்
விளக்கமான பின்னூட்டம் அளித்து குழப்பம் தீர்த்ததற்கு நன்றி மேடம் கீதாமேடமும் தெளிந்திருப்பார் என்று எண்ணுகிறேன்
உங்கள் சஷ்டியப்த்த விருந்து குறித்த என் நினைவு சரிதான்.....!வளமோடு நீண்ட நாட்கள் வாழ வேண்டுகிறேன்
நல்ல பதிவு ஐயா. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஏன் சார்.. நானும் தானே உங்களைப் பார்க்க வந்தேன்.. இந்த ஆசிரமம் பத்திச் சொல்லியிருக்கக் கூடாதோ?.இப்ப பாருங்க.. அடுத்த ட்ரிப்ல உங்களை தொந்தரவு செய்யாம விடப்போறதில்லே..:)
பதிலளிநீக்குwhat a magnificient sculpture!
உங்கள் சந்திப்பு அனுபவம் படிக்கவே நெகிழ்ச்சியாக இருக்கிறது..
ஜீவி சாரின் பின்னூட்டம் வழக்கம் போல் intellectual bonus. மோசிகீரனார் பற்றித் தேட வேண்டும்
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்.. அரசன் எத்தகைய பொற்கிழி வழங்கும் வழக்கமுடையவன் தெரியவில்லையே.. சுவாரசியம்.
பதிலளிநீக்கு@ எக்ஸ்பாட் குரு
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
பதிலளிநீக்கு@ அப்பாதுரை
நீங்கள் வரும்போது காத்துக்கொண்டிருக்கிறேன் , அவசியம் கூட்டிப் போகிறேன் that will be my pleasure. ஜீவியின் பின்னூட்டட்துக்கு என் மறு மொழி வாசித்தீர்களா.?உங்கள் வருகைக்கு நன்றி.
அன்பில் தோய்ந்த தங்களின் நட்பு நெகிழ வைத்தது ஐயா
பதிலளிநீக்குமிக நல்ல பதிவு.
பதிலளிநீக்குநட்பின் வலிமை தெரிகிறது.
நட்பு வளர்க. ஐயா பழனி கந்தசாமியின் இரு பதிவும் வாசித்தேன் இனிமை.
அவர் தந்த இணைப்பின் மூலம் இங்கு வந்தேன்.
பகவத் கீதா மந்திர் படங்கள் சிறப்பு ஐயா.
பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
படிக்க மிகவும் சுவாரசியம். பதிவர்கள் கிட்டத்தட்ட முதல்தடவை பார்க்கும்போதே நெடுநாள் அறிந்த நட்பு துளிர்க்கும். நேரடியாகத்தானே அதுவரை பார்த்ததில்லை. மற்றபடி அடிக்கடி பதிவுகள் வழியாக சம்பாஷிக்கிறோமே.
பதிலளிநீக்குபதிவர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒரு விதம்
நீக்கு