செவ்வாய், 19 டிசம்பர், 2017

பல்சுவைப் பகிர்வு


                                              பல்சுவைப் பகிர்வு
                                              ----------------------------
 (  மூன்று  காணொளிகள் இணத்திருக்கிறேன்  ரசிப்பீர்கள்  )

 குப்புசாமி என்னும் பாமரன்  ஒருவன்   
கதைகள் பலவும் படித்தவன் தவமியற்றி
வரங்கள் பெற்றவர் கதைகள் பல கேட்டவன் 
தானும் அவ்வாறு வரம் பெற தவமியற்றினான் 
ஒற்றைக் காலில் நின்று தவம்  ஆகாரம் இன்றி தவம்
எந்நேரமும் தான்பெற வேண்டியதைப் பெற பெரு முயற்சி
கடவுள் பாவம்  இரக்கப் பட்டார்  குப்புசாமி முன் தோன்றி
பக்தா உன் பக்தியை மெச்சினேன்  வேண்டும்  வரம் கேள் என்றார்
ஆண்டொன்று போக அகவை ஒன்று கூடுதல் அன்றி வேறு
எதுவும் மாறாதிருத்தல் கண்ட  குப்புசாமி
கடவுளிடம் மிகவும்  யோசித்து வரம் ஒன்று மட்டுமே கேட்டானாம்
எனக்குச் சாவே வரக் கூடாது என்பதே அந்த வரம் 
கடவுள் இரக்ககுணம் உள்ளவர்  ஆகட்டும் தந்தேன் என்றார்
இவனுக்குத் தலைகால் புரியவில்லை  மகிழ்ச்சியோடு
துள்ளிக் குதித்தோடினான்  வழியில் இவனைக்கண்ட பெரியவர்
மகிழ்ச்சியில் துள்ளுகிறாயே  என்ன நடந்தது முதலில் நீ
யார் உன்  பெயரென்ன என்று கேட்டாராம்  நான் கடவுளிடம் 
தவமிருந்து வரம்பெற்றவன்  என்பெயர் குப்புமி  என்றானாம்
சந்தேகம் எழப்  பெரியவர் மீண்டும் பெயர் கேட்டாராம்
இவனும் என்பெயர் குப்புமி என்றானாம்  திடீரென ஞானோதயம்
எழ வேண்டிய வரம்  பற்றி சிந்தித்தானாம்  தனக்கு சாவே வரக் கூடாது
என்று கேட்டது நினைவுக்கு வர என்ன இருந்தாலும் கடவுள் புத்திசாலி என்று  தெரிந்து கொண்டானாம்   கடவுளும் மென்னகை புரிந்து கவனித்தாராம்
                 ஒரு செய்தி
        
இத்தாலியில் ஒரு கன்னியாஸ்திரி வழக்கு தொடர்ந்தாளாம் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் அங்கு தங்களது தவறான கொள்கைகளைப் பரப்பி வருகின்றனர் 16000 பெண்களை மணந்த கிருஷ்ணனை துதிக்கின்றனர் இதனால் மக்களது morals  பாதிக்கப்படும்  என்பதே வழக்கு வழக்கு நீதி மன்றத்துக்கு வந்தபோது பிரதிவாதியின் வழக்கறிஞர் ஒரு கேள்வி அந்த கன்னியாஸ்திரியிடம்  கேட்டாராம் “நீங்கள் கன்னியாஸ்திரியாகும் போது ஒரு பிரதிக்ஞை எடுப்பீர்களே அதைச் சொல்ல முடியுமா “ அதற்கு இயலாமை தெரிவிக்கப்பட்ட போது வழக்கறிஞர் சொன்னராம் இந்த  பிரதிக்ஞையில் யேசுவைக் கணவனாகக் கொள்கிறேன்  என்று தெரிவிக்க வேண்டுமாம்  அப்போது எத்தனை கன்னியாஸ்திரிகளுக்கு  யேசு கணவனாவார் என்பதே கேள்வி  நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தாராம்
                படித்ததில் ரசித்தது

இது மூன்று நண்பர்களைப் பற்றியது அண்மையில் படித்தது அதில் ஒருவன் எல்லாவற்றிலும்  முதலாக வருபவர்  இஞ்சினீரிங் படித்து முதலாவதாகத் தேறி  க்லாஸ் ஒன் அதிகாரியாகப் பணியில் அமர்ந்தார் இந்திய ரெயில்வேயில் எல்லோராலும் பாராட்டப்பட்ட வரானார்    இரண்டாமவர்  நன்கு படிப்பவன்  இருந்தாலும்  பிறரை விரட்டி தன்காரியம் சாதித்துக் கொள்பவன்  பௌதிகம் படித்து சிவில் செர்விசஸ் பரீட்சை எழுதி  அரசில் ஒரு முக்கிய பதவியில் இருந்தார்  முதலாமவர் இவரது கட்டுப்பாட்டுக்குள்  வந்தார்  மூன்றமவர் படிப்பில் அதிக கவனம்செலுத்தவில்ல சமயம் பார்த்து ஒரு கட்சியில் சேர்ந்து   தேர்தலில் நின்று பாராளுமன்ற உறுப்பினர் ஆகி மத்திய மந்திரி ஆனார் அவரது கீழ் மற்ற நண்பர்கள்  பணி புரிந்த இலாக்காக்கள் வந்தன
இது ஒரு கற்பனை அல்ல முதலாமவர் இ ஸ்ரீதரன்  மெட்ரோ நிபுணன் என்று பெயர் பெற்றவர் இரண்டாமவர்  டி என் சேஷன் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப்பெயர் பெற்றவர்  மூன்றாமவர் கே பி உண்ணிக்கிருஷ்ணன் ஐந்து முறை பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டு வி பி சிங் தலைமையில் இருந்த அரசில் மத்திய மந்திரியாக இருந்தவர்
மூவரும் படித்தது ஒரே பள்ளி அதே ஆசிரியர்கள் நண்பர்கள் ஆனால் வெவ்வேறு பொறுப்புக்கு உயர்ந்தார்கள்
முதலில் ஒரு மராத்திய பத்திரிகையில் வந்த செய்தியாம்

              இனி ஒரு சின்னக் கதை

ஒருவன் தன் மனைவி மக்கள் தன் மீது அத்யந்த அன்பு கொண்டிருப்பதாகவும்,, அது காரணம் தன்னால் துறவு மேற்கொள்ள முடியவில்லை என்றும் ஒரு பெரியவரிடம் கூறினான். அவர் “ நீ இன்னும் விஷயத்தை உள்ளவாறு புரிந்து கொள்ள வில்லை. நான் தரும் இந்த குளிகையை சாப்பிடு.. உனக்கு எல்லாம் புரியும்  என்று கூறி ஒரு மாத்திரஒயை அவன் உட்கொள்ளக் கொடுத்தார். அவன் தன் வீட்டுக்குப் போய் அதனை உட்கொண்ட சிறிது நேரத்தில் கை கால்கள் எல்லாம் நீட்டி விரைத்து சவம் போல் ஆகிவிட்டான். திடீரென அவன் மடிந்து விட்டது கண்டு அவன் மனைவி மக்கள் குய்யோ முறையோ என்று சிறிது நேரம் கதறினர். பிணத்தை சவ அடக்கத்துக்கு வெளியே கொண்டு வர முயற்சித்தனர். கை கால்கள் விரைத்துக்கொண்டு நீட்டி இருந்ததால் வாயிலில் அதைக் கொண்டு வர இயலவில்லை. உடனே ஒருவர் கோடரியைக் கொண்டு கதவைப் பிளக்க முயன்றார். அதைப் பார்த்த மனைவி “ ஐயோ அப்படி செய்யாதீர்கள். என் தலைவிதி நான் கைம்பெண் ஆகிவிட்டேன். குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு எனக்குண்டு. இந்த நிலையில் கதவை உடைத்து விட்டீர்களானால் அதை புதுப்பிக்க என்னிடம் வசதி இல்லை. விதி வசத்தால் அவர் மாண்டு போனார். அவர் சவத்தை துண்டுகளாக வெட்டிக் கொண்டு போகலாம்என்றாள். அந்த நேரத்தில் குளிகையின் வீரியம் குறைந்து இறந்தவன் எழுந்து நின்றான். “ என்னைத் துண்டு துண்டாய் வெட்ட வேண்டுமென்றா சொன்னாய்என்று சொல்லிக் கொண்டே துறவியாக வெளியேறி விட்டான்.

                         ஒரு காணொளி ரசிக்க 





மோடியின் சாதனைகள் பற்றிப் படித்தேன்  ரசித்தேன் 
1) கேஜ்ரிவால் பேச்சை நிறுத்தினது 
2) மன்மோஹன்சிங்கைப் பேச வைத்தது
3) பப்பு என்று செல்லமாக அழைக்கப்படும்  ராஹுலை கோவிலுக்குப் போக வைத்தது



                                  எமகாதகர்கள்.......!  

                   சிலர் இந்தக் காணொளியை மிகவும்  ரசிப்பார்கள்


  




43 கருத்துகள்:

  1. காணொளியை அப்புறம் பார்க்கணும். திறக்கலை. மற்றச் செய்திகள் ஏற்கெனவே முகநூல், வாட்சப்பில் வந்தவை! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிப் பகிர்வதில் ஒரு சோகமென்னவென்றல் சிலவற்றை எப்போதோ யாரோ படித்திருக்கிறார்கள்

      நீக்கு
  2. எல்லா செய்திகளும் இரசிக்க வைத்தன...

    முதல் காணொளி குரங்கு குட்டி என்றே நினைத்தேன்.

    இரண்டாவது காணொளி ஆர்.கே. நகரில் நடப்பதா ?

    மூன்றாவது அருமை நன்றி மறவாதது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா அந்த வாழைப்பழம் 1000 ரூபாய் கொடுப்போம் சீப்போடு கிடைக்குமா ?

      நீக்கு
    2. பலரும் முன்னமேயே பார்த்த படித்த விஷயங்கள்

      நீக்கு
    3. எங்கு கிடைக்கும் தெரியவில்லை ஒரு வேளை ஆர்கே நகரிலோ

      நீக்கு
  3. முதலிரண்டு, ஏற்கனவே படித்திருக்கிறேன்.

    இ.ஸ்ரீதரன், தில்லியில் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தி மெட்'ரோவிற்காக உழைத்தார். அவரை அங்கு இருந்தவர்கள் மிகவும் பாராட்டினர் (ஷீலா தீக்ஷித்தும் அவருக்கு அரசியல் பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொண்டார்). டி.என் சேஷன் அவர்கள் தேர்தல் ஆணையத்தின் முக்கியத்துவத்தை பிராபல்யப்படுத்தினார்.

    'அத்யந்த அன்பு' என்று ஒன்றும் உலகில் கிடையாது. எல்லாவற்றிர்க்கும் ஒரு காரணமும் எதிர்பார்ப்பும் இருக்கும்.

    முதல் காணொளி - பெர்செப்ஷன் என்பது நம் முடிவெடுக்கும் திறமையைக் குறைத்துவிடும் என்று காட்டுகிறது.

    வாழைப்பழ காணொளி ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.

    பெட் அனிமல்களின் அன்பு வியக்கத்தக்கது. முன்னர், தங்களுடைய நலனுக்காகப் பாடுபட்ட ஒரு மேல் நாட்டினர், இறந்தபோது, கூட்டம் கூட்டமாக யானைகள் வந்து அவர் வீட்டருகே நின்று தங்கள் இரங்கலைத் தெரிவித்தன என்பதையும் காணொளியாகப் பார்த்திருக்கிறேன். இன்னொரு முறை, தொலைக்காட்சியில் (அசாம் பக்கம்?) ஒரு காட்டிலாகாவில் வேலை செய்பவர், முரட்டு யானைக்கூட்டத்திலிருந்து ஒரு யானை, தன் ஜீப்பை நோக்கி வருவதைப் பார்த்து (ஜீப்பில் வனவிலங்குகளை படம் பிடிப்பவரும், ஆராய்பவர்களும் இருந்தனர்), அதனுடன் 'போய்விடு' என்று பேசுகிறார், அதைக்கேட்டு யானையும் திரும்பச் சென்றுவிடுகிறது. அவைகள்தன் UNCONDITIONAL LOVEக்கு எடுத்துக்காட்டோ?

    அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த உலகு மிகவும் சிறியது நான் பகிர்வது பழையதாகி விடுகிறது

      நீக்கு
  4. எல்லாவற்றையும் ரசித்தேன். இரண்டாவது பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சார் நீங்கள்தான் முன்பே பார்த்தது என்று சொல்லவில்லை

      நீக்கு
  5. கதைகளையும் வீடியோ காட்சிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை ஏற்கனவே பார்த்தது படித்தது என்று நீங்கள் சொல்லவில்லை வந்துரசித்ததற்கு நன்றி சார்

      நீக்கு
  6. சில தகவல்கள் முன்னரே படித்திருக்கிறேன். கடைசி காணொளி மனதைத் தொட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகம் மிகச் சிறியது செய்திகள் இம் என்பதற்குள் பரவுகின்றன

      நீக்கு
  7. //கடவுள் புத்திசாலி என்று தெரிந்து கொண்டானாம்//

    கடவுள் புத்திலி என்றுதானே நினைத்துக்கொள்ளவேண்டும்?!! 'சா' தான் வராதே! ​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வேளை நினைத்துக் கொள்வதில் தடையேதும் இல்லையோ

      நீக்கு
  8. மூன்று நண்பர்கள் பற்றிய கதை சுவாரஸ்யம், ஆச்சர்யம்.


    மனைவி பற்றிய கதையினை நேரில் வேறுவிதமாக அனுபவித்து அலுவலக அனுபவமாக எங்கள் தளத்தில் எழுதியபோது லேசான எதிர்ப்பு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே இடத்தில் படித்தவர்களைப் பற்றியதுஎன்பதுதான் விசேஷம் எதிர்ப்பு என்று எப்படி தெரிந்தது

      நீக்கு
  9. முதல் காணொளி பார்த்ததில்லை. இரண்டாவது முக நூலில் துளசி கோபால் (டீச்சர்) பகிர்ந்து பார்த்திருக்கிறேன்.

    நாய் வீடியோ முன்னரே பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாய் வீடியோவை நீங்கள் ரசிப்பீர்கள் என்று தெரியும்

      நீக்கு
  10. கடைசி காணொளி கண்களை நனைத்தது சார் .எங்கோ முன்னே பார்த்தது இதேபோல் வேற ஒன்று ஆனா எத்தனை தரம் பார்த்தாலும் எனக்கு விலங்குகளின் அன்பை நினைக்கும்போது மெய்சிலிர்க்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விலங்குகள் ஆச்சரியப்பட வைக்கின்றன சில நேரங்களில்

      நீக்கு
  11. டி என் சேஷன் இப்போ எங்கிருக்கார் சார் .முந்தி முதியோர் இல்லத்தில் இருப்பதாக வாசித்தேன் ..என்னமோ தெரியாது எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டி என் சேஷனைப் பற்றி நீங்கள் கூறுவது எனக்குச் செய்தி

      நீக்கு
  12. கன்யா ஸ்த்ரீகளின் வழக்கையும்
    சின்ன கதையையும் முன்பே அறிந்திருக்கின்றேன்..

    பல்சுவை இனிய தொகுப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு சில நேரங்களில் ஒரு சந்தேகம்வருகிறதுசெய்திகள் எங்கிருந்து ஒரிஜினேட் ஆகின்றன

      நீக்கு
  13. கதைகள் நன்று, நான் முன்பு படித்திருக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  14. மகிழ்ச்சி அதிரா நீங்களாவது முழுதும் ரசிக்க முடிந்ததே நன்றி

    பதிலளிநீக்கு
  15. டி என் சேஷனைப் பற்றி அப்புறம் செய்தியே இல்லையே... ஸ்வாரஸ்யமான கதை, தகவல்கள்...

    காணொளியில் கடைசி காணொளி மனதை நெகிழ்த்திவிட்டது. விலங்குகளின் அன்பிற்கு நிகர் எதுவும் இல்லை...எவ்வளவு பார்த்தாலும் சலிக்காது மாறாக மனது வசப்படும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு ஸ்ரீராமுக்கு அதிரா ஏஞ்செல் போன்றோர் அண்டக் காணொளியை ரசிப்பீர்கள் என்று தெரியும் மதுரைத் தமிழனுக்கும் பிடிக்கும் இன்னும் வரவில்லை

      நீக்கு
  16. அனைத்தும் படித்தேன் ரசித்தேன் காணொளி யையும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி பூவிழிமேம்

      நீக்கு
  17. பகிர்வுகள் அருமை ஐயா....
    படித்தேன்...
    ரசித்தேன்...
    காணொளி திறக்கவில்லை... அதனால் பார்க்கவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகளையும்ரசிப்பீர்கள் வருகைக்கு நன்றி குமார்

      நீக்கு
  18. பல்சுவை விருந்தை ரசித்தேன் ஐயா
    இதோ காணொலிஇணைப்பிற்குச் செல்கிறேன்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  19. அனைத்தையும் ரசித்தேன். வழக்கு தள்ளுபடியினை சற்று அதிகமாகவே ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  20. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று தங்களது தளம் கணினியில் திறந்ததால் ஓட்டு போடுகிறேன் ஐயா
    தமன்னா - 8

    பதிலளிநீக்கு
  21. மீள் வருகை புரிந்து என்னை உற்சாகப்படுத்த தமிழ்மண வாக்களித்ததற்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  22. சுவையான பதிவு
    சற்றுச் சிந்திப்போம்

    பதிலளிநீக்கு
  23. ஏற்கெனவே வேறெங்கோ வாசித்தவைகள். ஆனாலும் ரசித்தேன். :-)

    பதிலளிநீக்கு