Friday, December 29, 2017

மறதியா நோயா


                         மறதியா நோயா
                        ------------------------------

 நண்பனின்  மகன்  திருமணத்துக்குச் சென்றிருந்தோம்  அங்கே ஒருவர் அங்கும்  இங்குமாக நடந்து கொண்டிருந்தார் முகத்தில் ஒரு சிநேக பாவமான புன் சிரிப்பு. என்  நண்பனிடம் என்னை யார் என்று கேட்டார் என்னைத் தன்நண்பன் என்று அறிமுகப்படுத்திய நண்பன்  மெல்ல அவரிடம் பேசி அழைத்துச் சென்று விட்டான்   சிறிது நெரத்தில் மீண்டும்  அந்தப் பெரியவர் என்  நண்பனிடம் என்னைப்பற்றிக் கேட்டார் மீண்டும்  அறிமுகம் செய்து வைத்தான்  அதே சிரிப்புடன் அவரும் சென்று விட்டார்   நண்பனிடம்  கேட்டேன்  அவரது மாமனார் என்று தெரிவித்தான். சற்று நேரத்தில் அந்தமனிதர் மீண்டும் வந்தார் வரும்போது தனது வேட்டி அவிழ்ந்து    இருப்பதும்  தெரியாமல் அதே சிரிப்புடன் வந்தவர் வேட்டி தடுக்கிக் கீழே விழுந்து விட்டார் விழுந்ததில் கொஞ்சம் காயம் ஏற்பட்டது  அதைச்  சட்டை செய்யாமல் சிரித்து வந்தவரை ஆசுவாசப் படுத்தி நான் பேச்சுக் கொடுத்தேன்  அவர் அந்த வீட்டைக் காண்பித்து அது அவர் கட்டியது என்றும்  அதன் பெயர் ----------என்றும் சரியாகக் கூறினார்  என்  நண்பன்  அவருக்கு டெமென்ஷியா நோய் என்றும்  அதன்  அறிகுறிகளே அவர் செயல்களில் என்றும்  கூறினான் 

வட இந்தியப் பயணமாக நான் என்மனைவி அண்ணா   அண்ணியுடன்  காசி ஹரித்வார் எல்லாம் சென்றிருந்தோம் ஹரித்வாரில் மாலை கங்கா ஆரத்தி நடக்கும்  நல்ல கூட்டம்  கங்கா மாதாவின் கோவில் சிறியது தரிசனம் செய்ய நன்  என் மனைவி முதலில் சென்றோம்  மற்ற இருவரும்  செருப்புகளுக்குக் காவலாக ஒருஇடத்தில் இருந்தனர்  நாங்கள் தரிசனம் முடித்து வந்தபின்  அண்ணா அண்ணி சென்றனர்  கூட்டத்தில் அண்ணா தனியே அண்ணி தனியே என்று பிரிந்துவிட்டனர்  முதலில் அண்ணா வந்தார்  சிறிது நேரம் கழிந்தும் அண்ணி வரவில்லை இடம்தெரியாமல் எங்கோ தேடுகிறாரோ என்று நினைத்தோம்   இன்னும் சிறிது நேரம்கழிந்தும்வராததால் அவரைத் தேடி  நானும் அண்ணவும் சென்றோம்  சிறிது தேடலுக்குப்பின்  கொஞ்ச தூரத்தில் அண்ணி தனியே எங்கோ சென்று கொண்டிருப்பதைப் பார்த்து அவரை அழைத்து வந்தோம் 
ஹரித்துவாரில் ஒரு ஹோட்டலில் உணவு அருந்தி அறைக்குத் திரும்பினோம்   அப்போதுதான் அண்ணா அவருடைய பர்ஸ் மற்று அறைச்சாவியை ஒரு டெலெபோன் பூத்தில் அண்ணி வைத்ததை நினைவு கூர்ந்தார்  மறுபடியுமந்த பூத்துக்குச் சென்றால் நல்ல வேளை வைத்த பொருட்கள் கிடைத்தன அண்ணா அண்ணியிடம்கோபித்துக் கொண்டார்  அண்ணி அண்ணாவிடம் கோபித்துக் கொண்டார் பிறகு அவரவர் அறைக்குச் சென்றோம்  சிறி து நேரத்தில் அண்ணி வந்து கால் செருப்பை எங்கள் அறையில்விட்டு விட்டதாக கூறினார்  அங்கிருக்கவில்லை  அவர்களது அறையிலேயே இருந்தது( இந்த நோயினால் பீடிக்கப்பட்டு  மருத்துவம் ஏதும் குணமளிக்காமல்  இரண்டு ஆண்டுகள் படுக்கையில் இருந்து என் அண்ணி உயிர் நீத்தார்)  

 சில நேரங்களில்  நாம்  எதையோ செய்ய நினைத்து அதைச் செய்யாமல் மறந்து போகும்  சந்தர்[ப்ப்பங்களும்  உண்டு அதை நான் ஒரு பதிவாக எழுதி இருந்தேன்
  என் சிறு தோட்டம் நீரின்றி காய்கிறது
பூவாளியில் நீரை ஏற்றி இரைக்கப்
போகும்போது அழுக்கடைந்த கார் காண 
அதை முதலில் கழுவலாம் என்று தோன்ற 
அருகில் செல்லும் போது தென் படுகிறது
வீட்டின் முன் மாட்டியிருக்கும் தபால் பெட்டி.
காரைக் கழுவும் முன் தபாலை எடுத்துப்  
ஹாலில் மேசை மேல் கார் சாவியை வைத்து
ஃப்ரிட்ஜிலிருந்து ஃபான்டா பாட்டிலைத் திறந்து
ஒரு வாய் அருந்தி அதை அருகில் வைத்து
கடிதங்களைப் பிரித்துப் பார்க்க அவை 
குப்பைத் கூடையில் போக வேண்டியது என்று 
அதைப் பார்க்க அதுவும் நிரம்பி இருக்க அதைக் 
காலி செய்து குப்பைத் தொட்டியில் போட 
வெளியே போக வேண்டும் போகிறபோதே 
அருகில் இருக்கும் கியோஸ்கில் மின் கட்டண்ம்
செலுத்தினால் ஒரு வேலை முடியும். அதற்கு முன்
அட்டைப் படத்தில் கவர்ச்சியுடன் சிரிக்கும் அழகியைத் 
தாங்கி வந்திருக்கும் வாராந்திரி கண்ணில் பட அதை 
எடுத்துப் படிக்கக் கண்ணாடி தேவை அதை வைத்த
இடம் மறந்து தேட மேசை அறையில் கார் சாவி கண்டதும் 
காரைக் கழுவ நினைத்ததும் நினைவுக்கு வர 
அங்கே போனால் பூவாளி நீரும் குப்பைக் கூடையும் 
என் முன்னே இளிக்க ஆயாசத்துடன் ஃபாண்டா பருக்
எண்ணி எடுத்தால் அதுவும் குளிர் விட்டுப் போய் ச்சே!
எந்தவேலையும் திட்டமிட்டபடி நடப்பதில்லையே 
என நான் சிந்திக்கும் போது மனசு குரல் கொடுக்கிறது
டேய்.! உனக்கு இருப்பது AAADD யின் அறிகுறிகள்
( AAADD  என்றால் AGE ACTIVATED ATTENTION DEFICIT  DISORDER.)

இந்த AAADDக்கும்  மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கும் வித்தியாசமுண்டு  வயது காரணமாக வரும் பிரச்சனைகளே இவை  முதலில் கூறியவை டெமென்ஷியா அல்லது அல்ஜிமெர்  என்னும்  நோயின்  அறி குறிகள்  பின்னது ஏறத்தாழ வயதானோர் எல்லோருக்கும் நிகழ்வது டெமென்ஷியா அல்லது மறதிஒருநோயாகப் பரிமளிப்பது முதலில் சொன்ன நிகழ்வுகளில் அண்மைய கால நிகழ்வுகள் மறந்து போகும்  நோய் முற்றும் போது தனித்தியங்க இயலாது பிறரது கவனிப்பு மிக அவசியம்  நான்  காரணகாரியங்களைப் பற்றி அலசப்போவதில்லை   ஆனால் நோய் வாய்ப்பட்டவர்கள் மிகவும்  அனுதாபத்தோடு அணுகப் பட வேண்டியவர்கள்
  
 டெமென்ஷியா மூளையின் செயல்பாட்டின் குறைவால் ஏற்படும்
மனநோய். அல்ஜீமர் நோய் அவற்றில் ஒன்று. அது நாள்பட நாள்
பட தீவிரமடையக் கூடியது. நியூரான்ஸ் எனும் நரம்பு செல்கள்
அழியும்போது நரம்பு மண்டலத்துக்குசெய்திகள் அனுப்பும்
ரசாயனக் குறைவால் மூளையும் நரம்பு மண்டலமும் ஒன்றாக
இணைந்து செயல்படுவது குறைகிறது. இதுவே இந்நோய்க்கான
காரணமாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது அல்ஜீமர் நோயால்தானா, இல்லை
இந்தமாதிரி நிகழ்வுகள் மூளையில் ஏற்படும் பழுதால்,அல்லது
கட்டி போன்றவற்றால் ஏற்படுகிறதா என்று முதலில் சோதித்துத்
தெரிந்துகொள்கிறார்கள். அல்ஜீமர் நோய்க்கு இதுவரை மருந்து
கண்டு பிடிக்கப் படவில்லை. நோயின் தீவிரத் தன்மையை தள்ளிப்
போட மருந்து மாத்திரைகள் கொடுக்கிறார்கள். இந்த நோயால்
பாதிக்கப் படுபவரைவிட ,அடுத்துள்ளவர்க்குத்தான் கஷ்டங்கள்
கூடும். வயதான காலத்தில் புரிதலும் அனுசரணையுமே முக்கிய
தேவை.

ஏற்கெனவே இந்த காலத்தில் வயதானவர்களைப் பராமரிப்பது
கஷ்டமான காரியமாகக் கருதப் படுகிறது. இம்மாதிரி நோய்
இருப்பவரின் நடவடிக்கைகள் அவரால் கட்டுப்படுத்த முடியாதது
மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படாவிட்டால் எரிச்சல் ஊட்டக்
கூடியதாய் இருக்கும். சின்னச் சின்ன விஷயங்கள் கூட தொல்லை
கொடுத்து மன உளைச்சலை அதிகரிக்கச் செய்யும்.

எனக்குத் தெரிந்து , இந்த நோயின் தீவிரம் உணர்ந்து, இப்படிப்
பட்டவர்களுக்குக் காப்பகம் போன்ற அமைப்பு தேவை ,என்று
உணர்ந்து, தான் தீவிரமாக ஈடு பட்ட  என் நண்பரை  அவருடைய
மனைவி, நாற்பது ஆண்டுகளுக்கு மேல் குடித்தனம் நடத்தியவர்
விவாகரத்து செய்து கொண்டு ,அவருடைய சொத்தின் பெரும்
பகுதியை சுயார்ஜிதப் படுத்திக் கொண்டுவிட்டார்.
நண்பர் நடத்தும் காருண்யா இல்லத்தில் முதியோர் காலை உணவு 
இந்நோய் குறித்த விவரங்கள் அறியப்பட வேண்டும். இன்னும்
விவரமாக எழுதினால் அனாவசிய பீதி ஏற்படுத்தக்கூடும்.
என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.

முடித்தபின் தோன்றியது மறதி என்பதுஒரு வரம் யோசித்துப் பாருங்கள் நடந்த நிகழ்வுகள் எல்லாமே நினைவில் நின்றால் தலை வெடித்து விடாதா? இன்னொன்று நாம் முக்கியமாய் நினைப்பவைகளை  மறப்பதில்லை உ-ம் மனைவி நாம் ஆஃபீசுக்குப்  போகும்போது  gas புக் செய்யச்சொன்னால் மறக்க முடியுமா ? 
44 comments:

 1. >>> மறதி என்பது ஒரு வரம்..<<<

  எப்போது என்பது தான் தெரியவில்லை..

  ReplyDelete
 2. என் மறதிபோற்றுவோம் பதிவுக்கு உங்கள் பின்னூட்டம் இதோ
  /துன்பங்களையும் துயரங்களையும் காலம் மாற்றும்.
  அந்த வகையில் - மறதி மட்டும் இல்லை என்றால் மனிதனின் கதி என்ன ஆவது!../

  ReplyDelete
 3. மறதி சிலசமநங்களில் வரம், பல சமயங்களில் துயரம். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஸீனியர் இந்த நோயால் அவதிப் படுகிறார் என்று படித்த ஞாபகம். முகமது அலி வேறு ஏதோ நோயால் அவதிப்பட்டார்.

  பயமாகத்தான் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. இணையத்தில் தேடினால் நிறையவே விஷயங்கள் படிக்கப்படிக்கபயமதிகமாகும் அதனாலேயே பதிவைக் குறைத்து விட்டேன் கூகிளில் தேடி நோய் பற்றிஅறியக் கூடாது வருகைக்கு நன்றி ஸ்ரீ

   Delete
 4. மாத சம்பளம் வாங்க மறக்க மாட்டோம் தூங்க மறக்கமாட்டோம் சாப்பிட மறக்கமாட்டோம் அடுத்தவர்கள் நம்மை திட்டியதை மறக்க மாட்டோம்...... இப்படி பல செயல்களை சொல்லிட்டு போகலாம்

  ReplyDelete
  Replies
  1. மறக்க வேண்டியதை மறக்காமல் துன்பப்படுவதை விட்டுவிட்டீர்களே என் மறதி போற்று வோம்பதிவைப் பாருங்கள்சுட்டி தருகிறேன் /http://gmbat1649.blogspot.com/2013/12/blog-post_6.html

   Delete
 5. உங்கள் நண்பருக்கு பாரட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வெறும் பாராட்டுகள் பலனில்லை உதவ மனம் இருந்தால்முகவரி தருகிறேன் நன்றி சார்

   Delete
 6. மறதி மனிதனுக்கு அவசியம் என்பது இறைவன் அறிந்தே வைத்து இருக்கிறான்.

  ReplyDelete
  Replies
  1. மறதிக்கும் இறைவன் பொறுப்பா வருகைக்குநன்றி ஜி .

   Delete
  2. தம வாக்குக்கு நன்றி ஜி/ நீங்கள் ஒருவர் தொடர்ந்து வாக்களிக்கிறீர்கள்

   Delete
 7. காலப்போக்கில் எத்தனை தான் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது?.. முக்கியமாக email passwords, debit card, credit card--Pin Nos. pan no. ஆதார் எண் என்று..சொல்லப்போனால் எண்களின் உலகத்தில் தான் உலவிக் கொண்டிருக்கிறோம்.

  என் அனுபவம் என்னவென்றால் 70 ஆண்டுகளுக்கு முன் சிறுவயதில் நடந்ததெல்லாம் பசுமையாக என் நினைவில் பளிச்சிடுகின்றன. ஆனால் அன்றாட நடவடிக்கைகளில் தான் பல மறந்து விடுகின்றன.

  இந்த மறத்தலில் முக்கியமானது எதை எங்கே வைத்தோம் என்பது தான்.

  இதைத் தவிர்ப்பதற்காக அடுத்த நாள் வெளியே கிளம்பி செய்ய வேண்டிய வேலைகளுக்கு முதல் நாள் இரவு அடுத்த நாளுக்கு வேண்டிய எல்லா விஷயங்களையும் ஒரு பையில் போட்டு எடுத்து வைத்து விடுவேன்.

  அடுத்த நாள் வெளியே கிளம்புகிற நேரத்தில் எந்தக் குழப்பமும் இருக்காது. ஒவ்வொன்றாக முடித்து விட்டு வர செளகரியமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. அல்ஜிமர் நோயின் அறி குறியாகச் சொல்வது அண்மைய நிஜழ்வுகள் நினைவுக்கு வராது ஆனால் பழைய நிகழ்வுகள் நினைவில் இருக்கும் பதிவில் கோடிகாட்டீருக்கிறேன் AAADD நோயும் அல்ஜிமர் பால்தான் ஆனால் மறந்தது மீண்டும் நினைவுக்கு வரும் எனக்கு பெயர்கள் மறந்துபோகிறது தினப்படி மறக்காமல் இருக்க எடுத்த பொருட்களை எடுத்தைடத்திலேயே வைக்கப் பழக வேண்டும் மறதி ஒரு வரம் என்று அதைப் போற்ற் நான் எழுதிய பதிவின் சூடி மறு மொழியில் இணைத்திருக்கிறேன்

   Delete
 8. தனிமனிதனுக்கு மறதி வரம். இதுவே, அடுத்தவங்க சார்ந்ததுன்னா சாபம்தான். எந்த வயதிலும்...

  ReplyDelete
  Replies
  1. அடுத்தவங்க சார்ந்ததுன்னா புரியவில்லை

   Delete
 9. மிகவும் அருமையான பதிவு
  அதுவும் உங்கள் சிவப்பு எழுத்தில் வரும் பதிவு மிகவும் உண்மை ரசித்தேன் நல்ல எழுத்தாற்றல் சார்
  நோயைப்பற்றி அறிந்ததும் பலர் ஞாபகங்கள் ஓ இப்படி இருந்திருக்குமோ என்று நல்ல தெளிவா விளக்கி இருக்கீங்க இந்த குறைபாடு பரம்பரை குறைபாடு இல்லை அல்லவா....
  AAADD இப்பவே தெரியற மாதிரிதான் இருக்கு முழுதாய் வந்தால் என்ன செய்வோம் என்று பயமும் தோன்றுது யாரையும் தொல்லை செய்யாமல் இருந்தால் நல்ல இருக்கும் தான்.

  மறதி என்பது வரம் உண்மைதான் மிகவும் முக்கியமான வரம் கண்டிப்பாய் எல்லோருக்கும் கொஞ்சமாவது இருந்தால் நல்ல இருக்கும் கோபம், சண்டை போன்றவற்றை மறக்க.....

  அருமையான நண்பர் உங்களுக்கு கிடைத்துள்ளார்

  ReplyDelete
  Replies
  1. AAADD யால் காணப்படும் குறைகள் நிவர்த்தி ஆகும்வாய்ப்பு உண்டு இணையத்தில் தேடி பயம் வேண்டாம்

   Delete
 10. மிகப் பயனுள்ள பதிவு . பாராட்டுகிறேன் . முதியவர்களைத் தாக்குகிற பல நோய்களில் மறதிநோய் பரவலாய்க் காணப்படுகிறது . வயதானவர்கள் தனியாய் வெளியே போகும்போது சட்டைப் பையில் தங்கள் முகவரி குறித்த சிறு அட்டையை வைத்திருப்பது நல்லது . முகவரி மறந்துபோனால் யாரிடமாவது அட்டையைக் காட்டி அவர்களின் உதவியால் வீடு திரும்பலாம் .

  ReplyDelete
  Replies
  1. தனியே வெளியில் போகும்போது அடையாள அட்டைகள்வைத்திருப்பது எல்லோருக்கும் நலன் தரும் வருகைக்கு நன்றி சார்

   Delete
 11. நல்லதொரு பதிவு. யாருக்கும் துன்பம் கொடுக்காமல் போகவேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும். மேலே உள்ளவன் கைகளில் தான் இருக்கு! முதியோர் இல்லம் நடத்தும் உங்கள் நண்பருக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் விருப்பப் படிநடக்கிறதா என் நண்பன் நடத்தும் காருண்யா இல்லம் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன் நல்ல மனம் வாழ்க

   Delete
 12. ஸார் மறதி என்பது பல சமயங்களில் நல்லது குறிப்பாக வேண்டாதவைகளை மறப்பது நல்லதே ஆனால் அந்த மறதியே நம்மைச் சுற்றி உள்ளவர்களைச் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தினால் கஷ்டம்தான் என்றாலும், எங்கள் மாமனார் டெமென்ஷியா/அல்ஜிமரினால் தான் சில வருடங்கள்...எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அவரை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டோம்.

  இதை ஓரளவு வராமல் தடுக்கலாம். நம்மை பல ஆக்டிவிட்டீஸ்களில் ஈடுபடுத்திக் கொண்டு, இப்போது மொபைல் நம்பர்களை எல்லாம் நாம் மொபைலில் சேவ் செய்து கொண்டு அதிலிருந்தே அடிப்பதை விட்டு, மனதில் நிறுத்திக் கொள்ள முயற்சி செய்யலாம். க்ராஸ்வேர்ட் போடுதல், சுடோக்கு விளையாடல் என்று இப்படி நிறைய பயிற்சிகளை மருத்துவர் சொல்கிறார்கள். மத ரீதியாகப் பார்த்தால், நாம் கற்கும் ஸ்லோகங்களை மனப்பாடம் செய்து இறைவன் முன்பு சொல்லுவதும் கூட ஒரு பயிற்சிதான். இறைவன் முன் இல்லை அந்த நம்பிக்கை இல்லை என்றால் பாடல்களை நினைவு கொண்டு பாடலாம், நல்ல பாடல்கள், திருக்குறள் வாய்ப்பாடு சொல்லுதல், என்றும் செய்து வரலாம். மனதை ஒரு நிலைப்படுத்தி, வீட்டில் எந்தவித சப்தமும் இல்லாமல், கான்சென்ட்ரேட் செய்தல், தியானம் செய்தல் பயிற்சி, உடற்பயிற்சி என்றும் இப்படி நிறைய சொல்லுகிறார்கள். வருவதைத் தடுக்க முடியவில்லை என்றாலும் அட்லீஸ்ட் தள்ளிப் போடவாவது செய்யலாம்...மற்றொன்று நாம் பலருடனும் பேசுதல், தனிமைப்படுத்திக் கொண்டு பேசாமல் அமைதியாக இருப்பதும் நல்லதில்லை என்றும் சொல்லப்படுகிறது.....என் பாட்டி 92 வயதில் இறுதி 6 மாதங்கள்தான் மறதியால் பாதிக்கப்பட்டார்...நம்முடன் இருக்கும் வயதானவருடன் நாம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். இன்று என்ன சாப்டீர்கள் என்று, டிவியில் என்ன பார்த்தீர்கள் என்று, இப்படி ஏதேனும் பேசிக் கொண்டோ செய்திகள் சொல்லி ஷேர் செய்து கொண்டோ இருக்க வேண்டும்.

  நல்ல பதிவு சார்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வழக்கம் போல உங்கள் நீண்டபின்னூட்டத்துக்கு நன்றி கீதா

   Delete
 13. ஆனால் சந்தித்த பதிவர்கள் சந்தித்த இடம் உரையாடல் அவர்களின் பதிவுகள் பற்றிய விபரங்கள் ஆகியவை நல்ல ஞாபகத்தில் உள்ளன.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் AAADD யின் அறி குறிகள் உண்டு வருகைக்கு நன்றி சார் முக்கியமாகப் பெயர்கள் நினைவுக்கு வருவதில் சிரமம் இருக்கிறது

   Delete
 14. கெட்டது தீயதை மட்டும் மறக்கிற வரம் கிடைச்சா நல்லதுன்னு நினைக்கிறேன் .
  அனால் இந்த டிமென்ஷியாவால் பாதிக்கப்படுவோர் நிலை பாவம் ஸார் .எங்கள் அப்பாவின் நண்பர் ஒருவர் திடீரென காணாமற்போய்ட்டார் இதனால் .ஸ்ட்ரெஸ் இல்லாம மனதை வச்சிக்கிறதும் இந்த பிரச்சினைகள் வருவதை குறைக்கும்

  ReplyDelete
  Replies
  1. சிவப்பு எழுத்தில் பகிர்ந்தும் சூப்பர் சார்

   Delete
  2. குறைருப்பவரைவிடாவர்களை கவனிப்பவருக்கே சிரமம் அதிகம் யாருக்கும் இந்தநோய் கூடாது வருகைகு நன்றி ஏஞ்செல்

   Delete
  3. சிவப்பு எழுத்தில் இருப்பது வயதாவதன் அறிகுறியே

   Delete
 15. அருமையான தலைப்பும் அதற்கான உங்கள் கருத்தும். மனம் இஷ்டப் படுவதை நினைவின் அடுக்குகளில் சேமித்துக் கொள்கிறது. வயதேற நிகழ் நடப்பில் ஆர்வம் குறைவதால் தானோ என்னவோ அண்மை சம்பவங்கள் நினைவில் நிற்பதில்லை. பெண்கள் எந்த வயதிலும்எதையும் மறப்பதில்லை. காரிய மறதி என்று மறப்பவர்களும் உண்டு.
  என் அண்மைக்கால மறதி வலைப்பூ!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அண்மைக்கால மறதி உங்கள் தேர்ந்தெடுப்பு

   Delete
 16. பயனுள்ள பகிர்வு ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சார்

   Delete
 17. நீண்ட ஆயுள் என்பது எப்போதுமே வரமாக அமைவதில்லை. ஆரோக்யம் இருந்தால்தான் வாழ்க்கை வாழ்க்கையாக இருக்கும். ஆரோக்யம் என்பதும் முழுக்க முழுக்க நம் கையில் இல்லையே.

  இத்தகைய நோயால்/ கண்டிஷனால் பாதிக்கப்பட்டவர்களைக் குழந்தைகளைப்போல் பராமரிக்கும், அனுசரிக்கும் பொறுமையும் கருணை மனமும் உறவினர்களுக்கு இருந்தால் நலம். இல்லையெனில், பிரச்னைதான்.

  வாசிக்கப்படவேண்டிய பதிவு.

  ReplyDelete
  Replies
  1. நீண்ட ஆயுள் பலநேரங்களில் வயோதிகத்துக்குத் தண்டனையாக அமைகிறது சமீப காலத்தில் ந்யூக்கிளியர் குடும்பங்களில் வயச்தானோர் பாடு சிரமமே அதை
   ஈடுகட்டும் எண்ணத் தோடுதான்நண்பனின் காருண்யா இல்லம் இயங்குகிறது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

   Delete
 18. ஆனால் வேண்டாதபோது கூடாது வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 19. சோர்வுற்ற வேளையிலும் எவர் பேசினாலும் கேட்க முடியும். ஆனாலும், நினைவில் மீட்க வராது.
  மறதி என்பது நரம்புத் தளர்ச்சி வரத் தொடங்கும். அதற்கு முதுமை என்று பட்டம் சூட்டுவார்கள்.
  எனவே, எடுத்த வீச்சில் மறதி ஒரு உள(மன) நோய் என்று சொல்லிவிட முடியாது.

  இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
  எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
  அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

  ReplyDelete
 20. எனக்கென்னைது பற்றித் தெரியும் இணையத்தேடலில் கிடைத்தவை வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

  ReplyDelete
 21. நல்ல பதிவு ஜி எம் பி ஐயா. இந்த மறதி நோய் க்கு உண்மையில் குணப்படுத்தும் மருந்து இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லைத்தான். இது ஆரம்பித்து விட்டால்ல் மெல்ல மெல்ல ஆளை அரித்து விடும்.. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஆரம்பிக்கும்.

  ஆரம்பத்தில் இடைக்கிடை மறதி வரும் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து அப்படியே எதுவும் தெரியாமல் பண்ணி விடும்.

  இதில் இருக்கும் கொடுமை என்னவெனில் மூளைதான் போய் விடுமே தவிர, உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் அதனால அவர்களை அடக்கி வச்சிருப்பது கஸ்டம்.. இது நம் நாடுகளை விட வெளிநாட்டில் அதிகம்.

  60..65 வயதிலேயே சிலருக்கு வந்து விடுகிறது.

  எங்களுக்கு கணிதம் படிப்பிச்ச ஆசிரியை.. ஒஸ்ரேலியாவில் இருந்தா, அவவுக்கும் இந் நோய் வந்து, வீட்டில் இருப்போர் பட்ட வேதனை முடிவில் சீனிய ஹோமில் விட்டு, அங்கு ஒரு செயாரில் இருத்தி கயிற்றால் கட்டி விட்டிடுவார்களாம்.. இப்படி 4,5 ஆண்டுகள் இருந்தே இறந்தா போன வருடம்:(..

  இப்போ இங்கு நம் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கும் ஒரு பொலீஸ் அதிகாரி அவருக்கு இப்போ 75 வயது.. ஸ்கொட்டிஸ் அவருக்கும் இவ் டிமென்ஷியா நோய் ஆரம்பித்து 5 வருடங்களாகி விட்டது, நம்மைக் கண்டால் கதைக்கிறார் ஆனா எதுவும் புரியவில்லை அவருக்கு... மனைவியும் இவருமே தனிய இருக்கிறார்கள்.. பாவம் மனைவி.. கவலைப்படுகிறா.. அவருக்கு ரொயிலட்கூட தெரியுதில்லையாம்.. ஆனா இங்கு சகல வசதியும் உண்டு, தினமும் வீட்டுக்கு நேர்ஸ் வந்து அவரைக் கவனிப்பா...

  இப்படி நிறையவே சொல்லலாம்.. இது நம் கையில் இல்லாத ஒன்று, கடவுள்தான் எல்லாம்.. இதுக்காகத்தான் கடவுளுக்குப் பயந்து வழோணும் என்பார்களோ...

  ReplyDelete
  Replies
  1. இந்நோய் வருபவர் எல்லாம் கடவுளுக்குபயப்படாதவர்களா
   நான் சொல்லி இருக்கும் நிகழுகள் பார்த்து அனுபவப்பட்டது என் அண்ணி கடசிகாலத்தில் என் அண்ணாவுக்கு நிறையவே சிரமம்கொடுத்தார்கள் வருகைக்கு நன்றி அதிரா

   Delete
  2. அப்படி அர்த்தமில்லை... கடவுளுக்குப் பயந்து அல்லது நம்பி வாழ்ந்தால் வாறது வரும்தான் ஆனால் அதன் தாக்கம் குறைவாக இருக்கும்.. அல்லது நீண்டகாலம் கஸ்டப்படாமல் விரைவா அழைச்சிடுவார் நம்மை மேலே:)..

   Delete
 22. iஇரண்டு சுட்டிகள் தர்கிறேன் என் சிந்தனையின் போக்கு புரியலாம் உரத்த சிந்தனைகள் /http://gmbat1649.blogspot.com/2016/02/blog-post_29.html

  தொடரும் சிந்தனைகள் / http://gmbat1649.blogspot.com/2016/03/blog-post_4.html

  ReplyDelete