Monday, January 1, 2018

புத்தாண்டு வாழ்த்தும் பிரமாணங்களும்                  புத்தாண்டு வாழ்த்தும்  பிரமாணங்களும்
                -----------------------------------------------------------------
ஆண்டு பிறப்பதும் பிரமாணங்கள் எடுப்பதும் 
தொன்று தொட்டு வரும் வழக்கங்களாகி விட்டன
ஏதும்  செய்ய இயலாது என்று அறிந்தும் வாழ்த்துவது
தொடர்கிறது . எல்லாமே ஒரு நம்பிக்கைதான்  எதிர்பார்ப்புதான்
என் வயதொத்தவர்க்கு வேண்டல் எல்லாமே
பிறர் நன்மை கருதுவதும்  அவர்களுக்கு
இன்னல்கள் ஏதும்  தராமல் போவதும்தானே   

      ஆண்டொன்று   போக  அகவை ஒன்று  கூட
         
நடந்ததை  எண்ணி  அசை போட
         
நன்கே  வாய்த்த  புத்தாண்டே
         
உன்  வரவு  நல்வரவாகுக..

வேண்டத்தான்  முடியும்,  எண்ணியபடி
மாற்றத்தான்  முடியுமா.?
நடைபயிலும்  அருணோதயத்தில்
வந்துதித்த   ஞானோதயமா .?

          
வேடிக்கை மனிதர்போல் வீழ்வேனென்று
          
நினைத்தாயோ   என்றவனே
          
வாடிக்கை மனிதர்போல்தானே மாண்டுபட்டான்.
          
அவன் பாட்டின் தாக்கம் அது இது
          
என்றே கூறி பலன் பல பெறுவதே
          
பலரது நோக்கம் என்றானபின்
         
இருந்தபோது இல்லாத பெயரும்  புகழும்
          
இறந்தபின்  வந்தார்க்கென்ன  லாபம்.?

எனக்கொரு  நூறு  இளைஞர்கள்  தாரீர்
மாற்றிக்காட்டுகிறேன்   இவ்வுலகை, -உள்ளப்
பிணியிலிருந்து அதை மீட்டுத்தருகிரேன்
என்றே சூளுரைத்த விவேகானந்தன்
கேட்டதனைப்   பெற்றானாஇல்லை
சொன்னததனை செய்தானா.?

          
அக்கினிக் குஞ்சான  அவர்தம் வார்த்தைகள்
          
வையத்து   மாந்தரின்  உள்ளத்தே
          
ஆங்காங்கே  கணப்பேற்றி இருக்கலாம்
           
சில  கணங்கள்  உள்ளத்து  உணர்வுகளை
           
உசுப்பேற்றி  இருக்கலாம் - என்றாவது
          
அவனிதன்னை  சுட்டுத்தான்  எரித்ததா.?

நன்மையையும்  தீமையும்இரவும் பகலும்,
நாளும்  நடக்கும் நிகழ்வுகள்  எல்லாம்
இயற்கையின்  நியதி.
கூடிப் புலம்பலாம்,  ஒப்பாரி  வைக்கலாம்,
நடப்பதென்னவோ  நடந்தே  தீரும்.
நீயும்  நானும்  மாற்றவா  முடியும்.?
எண்ணி மருகினும் இயலாத  ஒன்று.

    புத்தாண்டுப்   பிரமாணம் ஏற்க
          
எண்ணித் துணிந்து விட்டேன்.
          
நாமென்ன  செய்ய  என்றே
          
துவண்டாலும்- நலந்தரும்
          
சிந்தனைகள்  நம்மில்  வளர்க்க
          
செய்யும் செயல்கள் நலமாய்  இருக்கும்
.
          
ஊரைத்  திருத்த  உன்னால் முடியாது,
          
முடியும்  உன்னை  நீயே  மாற்ற
          (நீ  ஏமாற்ற  அல்ல.)
          
எண்ணில்  சொல்லில் செயலில்
         
நான்வேண்டுவதெல்லாம்-என் பேச்சைஅடக்
 
எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இ

மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
நீக்க முயலும் என் முனைப்புகளை உடைக்க.

எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிட.

வட்டமாய் சிறகடித்து மேலிருந்து கீழே நேராய்
இரையை நாடும் பறவையைப் போல் சொல்ல
நினைக்கும் புள்ளியை நானடையக் கற்றுக்கொள்ள.

நான் படும் வேதனைகளைவலிகளை
அடுத்தவன் முன் கொட்டித் தீர்க்க நான் வாய்
திறந்தால், அதனை அக்கணமே மூடிவிட
அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வைக்க - கூடவே
 
நானும் தவறிழைக்கலாம் என என்னையும் எண்ண வைக்க
புத்தாண்டுப் பிரமாணம் எடுக்கிறேன்.

நான்  பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.
அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்.

இவ்வையகம் விட்டு நாம் அகலும்போது நம்மை
நண்பனாய்நல்லவனாய் நினைக்க நால்வர் வேண்டும்.அல்லவா?

(வருகை தருவோர் அனைவருக்கும் என்  மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்)


52 comments:

 1. ரசித்தேன்.

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வந்து ரசித்ததற்கு நன்றி ஸ்ரீ

   Delete
 2. சற்றே நீளம் கூடி விட்டது. சொல்ல வந்ததை எளிமையாக கவிதை வடிவில் தந்தது சிறப்பு. நம்மை நாமே மாற்றவும் முடியும், நாம் ஏமாற்றவும் முடியும். (உ-ம். எனக்கு எல்லாம் தெரியும்).

  புத்தாண்டு சபதங்கள் புதுமையான ஒன்றாகிலும் எல்லாப் புத்தாண்டு சபதங்களைப் போல் இதுவும் இல்லாத ஒன்றாகி விடும். பதிவுகள் எழுதுவதை நிறுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. என்னை நானே ஏமாற்றிக் கொள்ளாமல் இருந்தால் சரி ஒரு முறை நான்பதிவுகள் எழுதுவதை நிறுத்தினால் என்ன ஆகும் என்று கற்பனையை ஓடவிட்டும் ஒருபதிவு எழுதி இருந்தேன் வருகைக்குநன்றி ஐயா

   Delete
 3. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. என்னால் எனக்குமட்டும் சாத்தியமாகும் பிரமாணங்களைத்தானே எடுக்க முடியும் வருகைக்கு நன்றி மேம்

   Delete
 4. உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் மீண்டும்

   Delete
 5. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 6. நலம் பெருகட்டும்..
  நன்மைகள் சூழட்டும்..

  அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சார்

   Delete
 7. // ஆண்டு பிறப்பதும் பிரமாணங்கள் எடுப்பதும்
  தொன்று தொட்டு வரும் வழக்கங்களாகி விட்டன
  ஏதும் செய்ய இயலாது என்று அறிந்தும் வாழ்த்துவது
  தொடர்கிறது . எல்லாமே ஒரு நம்பிக்கைதான்
  எதிர்பார்ப்புதான் //

  அருமையான வாழ்வியல் சிந்தனை. அப்புறம் எதுவும் இல்லாவிடின் எதுவுமே ருசிக்காது. நன்றி அய்யா.
  எனது உளங்கனிந்த 2018 - ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நான் சொல்ல வந்ததை எழுதி இருக்கிறேன் என்றே நினைக்கிறேன் சார்

   Delete
 8. புத்தாண்டு பிரமாணங்கள் பெரும்பாலும் நிறைவேறுவதில்லை. எனவே, வருவது வரட்டும் என்று வாழ்க்கையை நடத்திவிட்டுப் போவதுதான் நல்லதென்று தோன்றுகிறது. அது சரி, இந்தப் புத்தாண்டில் தங்கள் புதிய சிறுகதைதொகுதி ஒன்று வெளிவரலாம் அல்லவா?

  -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

  ReplyDelete
  Replies
  1. பிரமாணங்கள் எடுத்தாலும் நடப்பது நடக்கத்தானே செய்கிறதுஎனிரண்டாவது சிறு கதைத் தொகுப்பை மின்னூலாக்கி இருக்கிறேன் உங்கள் பார்வைக்கும் அனுப்பி உள்ளேன் சார்

   Delete
 9. புத்தாண்டு வாழ்த்துகள். நான் எந்தவிதப் பிரமாணங்களும் எடுத்துக்கறதில்லை! பொதுவா நினைச்சுக்கறது தான்! புது வருஷப் பிரமாணம்னு எல்லாம் இல்லை! :) நம்மை ஆட்டுவிப்பவன் எங்கேயோ இருந்து ஆட்டுவிக்கிறான். அவன் கை ஆட்டத்தை நிறுத்தும்வரை ஆடுவோம்!

  ReplyDelete
  Replies
  1. பிரமாணங்கள் எல்லாம் செயல் படுவது சிரமம் ஆனால் என்னை நானே உண்ர வைக்க இது உதவுகிறது என்பதே நிஜம்

   Delete
 10. கவிதையை இரசித்தேன் ஐயா இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. தவறாமல் தம வாக்களிக்கும் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் மீண்டும் ஜி

   Delete
  2. நான்வேண்டுவதெல்லாம்-என் பேச்சைஅடக்க
   எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
   என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இட

   மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
   நீக்க முயலும் என் முனைப்புகளை உடைக்க.

   எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
   நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிட.

   வட்டமாய் சிறகடித்து மேலிருந்து கீழே நேராய்
   இரையை நாடும் பறவையைப் போல் சொல்ல
   நினைக்கும் புள்ளியை நானடையக் கற்றுக்கொள்ள.

   நான் படும் வேதனைகளை, வலிகளை
   அடுத்தவன் முன் கொட்டித் தீர்க்க நான் வாய்
   திறந்தால், அதனை அக்கணமே மூடிவிட
   அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வைக்க - கூடவே
   நானும் தவறிழைக்கலாம் என என்னையும் எண்ண வைக்க
   புத்தாண்டுப் பிரமாணம் எடுக்கிறேன்.

   நான் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
   படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.
   அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்.

   இவ்வையகம் விட்டு நாம் அகலும்போது நம்மை
   நண்பனாய், நல்லவனாய் நினைக்க நால்வர் வேண்டும்.அல்லவா?
   எல்லோருக்கும் பொருந்தும் வாழவின் வரிகள். சில வலிகளும் கூட.. உங்களைப்போன்றோரின் அனுபவம் என்றைக்கும் இவ்வுலகிற்குத் தேவையானது. வழிகாட்டல்போல. நன்றிகள் பல.

   Delete
  3. நான்வேண்டுவதெல்லாம்-என் பேச்சைஅடக்க
   எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
   என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இட

   மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
   நீக்க முயலும் என் முனைப்புகளை உடைக்க.

   எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
   நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிட.

   வட்டமாய் சிறகடித்து மேலிருந்து கீழே நேராய்
   இரையை நாடும் பறவையைப் போல் சொல்ல
   நினைக்கும் புள்ளியை நானடையக் கற்றுக்கொள்ள.

   நான் படும் வேதனைகளை, வலிகளை
   அடுத்தவன் முன் கொட்டித் தீர்க்க நான் வாய்
   திறந்தால், அதனை அக்கணமே மூடிவிட
   அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வைக்க - கூடவே
   நானும் தவறிழைக்கலாம் என என்னையும் எண்ண வைக்க
   புத்தாண்டுப் பிரமாணம் எடுக்கிறேன்.

   நான் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
   படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.
   அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்.

   இவ்வையகம் விட்டு நாம் அகலும்போது நம்மை
   நண்பனாய், நல்லவனாய் நினைக்க நால்வர் வேண்டும்.அல்லவா?

   எல்லோருக்கும் பொருந்தும் வாழவின் வரிகள். சில வலிகளும் கூட.. உங்களைப்போன்றோரின் அனுபவம் என்றைக்கும் இவ்வுலகிற்குத் தேவையானது. வழிகாட்டல்போல. நன்றிகள் பல.

   Delete
  4. எழுதுவதுஎனக்கு ஒரு வடிகால் எனக்கே கூறியதுபோல் இருந்தாலும் பொதுவாக பலருக்கும் பொருந்தும் வருகைக்கும் மேலான டானிக் போன்ற பின்னூட்டத்துக்கும் நன்றி சார்

   Delete
 11. ரசித்தோம் சார்...ஆனால் நாங்கள் எந்தவிதப் பிரமாணங்களும் எடுப்பதில்லை. ஏனென்றால் எடுத்தால் நிறைவேறுவதில்லை/நிறைவேற்றப்படுவதுமில்லை. மனதில் கொள்வதோடு சரி...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள் சார்..

  ReplyDelete
  Replies
  1. இதில் கூறப்பட்டிருக்கும் பிரமாணங்கள் பலருக்கும்பொருந்தக் கூடியதே. ஆண்டு முதலில் ஒரு பின்னோக்கிய பார்வை என்றும் கொள்ளலாம் வருகைக்கு நன்றி துளசி/. கீதா

   Delete
 12. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  //ஆண்டொன்று போக அகவை ஒன்று கூட///

  இதுதான் எனக்குப் பிடிக்காத வரிகள்:)

  ReplyDelete
  Replies
  1. அகவை என்றால் வயது. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அது கூடுகிறது என்பதுதானே உண்மை வருகைக்கு நன்றி அதிரா

   Delete
 13. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ..
  நியூ இயர் resolution லாம் எடுக்கறதை விட்டு பல வருஷமாச்சு நான் :) எதுக்குன்னா அதை கடைபிடிக்க ரொம்ப கஷ்டமாயிரும் ..

  அப்புறம் சார் கவிதையாய் உங்கள் resolution பற்றி சொன்னது அருமை

  ReplyDelete
  Replies
  1. ஏஞ்செல் இந்தப் புத்தாண்டு பிரமாணம் எனதுபோல் தோனினாலும் பொதுவான பல விஷயங்களைச் சொல்லிப் பொவதைப் பார்க்க வில்லையா தனிப்பட்ட முறையில் பலருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் அனுப்பினாலும்சிலர் விலாசம்தெரியாததால் முடியவில்லை பதிவிலேயே வாழ்த்தி விட்டேனே நன்றி

   Delete
 14. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 15. சரியான சிந்தனைகள் . அடுத்தவர்க்குத் தீங்கிழைக்காமல் வாழ்ந்தாலே போதும் . சாதனை தேவையில்லை . புத்தாண்டு வாழ்த்து !

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள் ஐயா வருகைக்கு நன்றி

   Delete
 16. வணக்கம் ஐயா!

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  புத்தாண்டுப் பிரமாணங்கள் கவிதையாய்த் தந்தீர்கள். நன்றாக இருக்கிறது.
  ஆமாம் ஐயா பிரமாணங்களை எடுத்தாலும் நடைமுறையில் சிலது எம்மை அதனை மீறவைத்துப் போய்விடுகிறது. முடிந்தவரை கடைப்பிடிப்போம்!

  மற்றவர்கள் எங்களைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. திட்டாமல் சினக்காமல் இருக்க அதற்கேற்ப எங்கள் எண்னம், சொல், செயலைச் செம்மையாக வைத்திருந்தாலே சிறப்பு! பெரிய நிம்மதி!

  நல்ல சிந்தனைப் பகிர்வு ஐயா! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நம் குறைகளை நம்மை விடயாருக்கும்தெரியாது ஆண்டுமுடிவில் பின்னோக்கிச்செல்லவும் சரியான பாதை தேர்ந்தெடுக்கவும்செய்யும்முனைப்பே பிரமாணங்களெடுக்கும் எல்லாச் செயல்களும் வெற்றிஅடைவதில்லை அதைநோக்கி நகர நம்மை நினைவு படுத்த இவை உதவலாம் வருகைக்கு நன்றிம்மா

   Delete
 17. கவிதையைப் படித்து ரசித்தேன்.

  உங்களிருவருக்கும் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. சற்றே தாமதமான வருகை வந்து வாழ்த்தியதற்கு நன்றி சார்

   Delete
 18. நான் புத்தாண்டு பிரமாணங்கள் எடுத்துக் கொள்வதில்லை. எப்படியும் தொடர முடியாது என்பதில் நம்பிக்கை உண்டென்பதால்...

  தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்து குறைகளை நீக்கச் செய்யும் முயற்சியே இந்தப் பிரமாணங்கள்முயற்சி செய்வோம் வெற்றியோ தோல்வியோ அதை மனதாற ஏற்போம் வருகைக்கு நன்றி சார்

   Delete
 19. வாழும் காலம் முழுவதும் நாம் கற்றுக்கொள்ளப் பாடங்கள் அநேகம். ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு பாடம். கற்றுக்கொள்வது ஒரு பக்கம் என்றால் அதன் வழி நிற்றலும் நடத்தலும் பெருஞ்சாதனை. அவரவர் குணநலன்களில் குறைநிறைகளை அறிதல், கூடாதவற்றைக் களைதல் போன்ற சுய அலசல்கள் செய்யும் துணிவு அனைவருக்கும் கைவரப்பெறுவதில்லை. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. சரியான கருத்து மேம் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி மேம்

   Delete
 20. இந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்...ஐயா

  ReplyDelete
 21. பதிவிலேயே வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 22. //நடைபயிலும் அருணோதயத்தில்
  வந்துதித்த ஞானோதயமா .?//

  ஜோர். ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வந்து ரசித்ததற்கு நன்றி சார்

   Delete
 23. //இருந்தபோது இல்லாத பெயரும் புகழும்
  இறந்தபின் வந்தார்க்கென்ன லாபம்.?//

  இருக்கின்ற பொழுது வரும் பெயரும், புகழும் சாபம் சார்! இன்னும், இன்னும் என்று வாழ்க்கை பூராவுக்குமான தண்டனையாக அமையும்!

  ReplyDelete
  Replies
  1. நான்சொல்ல நினைத்ததுபெயர் பெற்றவர்கள் எல்லோரும் இறந்தபின்னேயே புகழ் கிடைக்கப் பெறுகிறார்கள் அதனால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்பதே

   Delete
  2. //அதனால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்பதே..//

   இதற்கு மறுதலையாகத் தான் இருக்கும் போது கிடைக்கும் புகழ் நம்மை என்னவாக்கும் என்று சொல்லியிருக்கிறேன்.

   அதனால் எதையோ லாபம் என்று நீங்கள் நினைக்கிறீர்களே அது இல்லை என்று ஆகிறது.

   Delete
  3. புரிந்தும் புரியாததுபோல் இருக்கிறது ஆக லாபம் என்பதுதான் பிரச்சனையே

   Delete
 24. // நால்வர் வேண்டும்.அல்லவா? //

  நாலு பேருக்கு நன்றி!
  அந்த நாலு பேருக்கு நன்றி!

  எதை எழுத நினைத்தாலும், இந்த கண்ணதாசன் எப்படி கூடத் துணையாக வந்து சேருகிறான் என்பது தான் ஆச்சரியம், ஜிஎம்பீ ஐயா!

  ReplyDelete
  Replies
  1. என்ன எனக்கும் முன்னே கண்ணதாசன் முந்தி இருக்கிறான் .....!

   Delete
 25. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete