ஞாயிறு, 28 ஜனவரி, 2018

ஹைதராபாத்


                                                    ஹைதராபாத்
                                                     ---------------------
ஹைதராபாதுக்குப் பல முறை சென்று வந்திருக்கிறேன்  ஆனால் என்பதிவுகளில் அவை பற்றி இதுவரை எழுதவில்லை இப்போது எழுத உட்கார்ந்தால் எப்போதுபோன ட்ரிப் என்று புரிபடவில்லை ஆதலால் மொத்த அனுபவங்களையும்  நினைவுக்கு வந்தபடி எழுது கிறேன் 

ஹைதராபாத் என்றாலும் செகந்திராபாத் என்றாலும்  அதிக வித்தியாசங்கள் இல்லை ட்வின்  சிடிஸ்
இந்த ஹைதராபாதின் பின்னணிச் செய்திகள் பலரும்  நினைப்பதில்லைஇந்தியா சுதந்திரமடைந்தபோது இந்தியா பாகிஸ்தான்  என்று பிரிந்தது பலருக்குத் தெரியும் இந்தியாவில் இருந்தபல சமஸ்தானங்களுக்கு இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணையும் சாய்ஸ் கொடுக்கப்பட்டதுகுட்டி குட்டி சமஸ்தானங்கள் மதவாரியாக இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைந்தன இவற்றில் ஹைதராபாத் ஹிந்துக்கள் அதிகமாக இருந்தும்  முஸ்லிம்  அரசால் ஆளப்பட்டு வந்தது ஜம்மு காஷ்மிர் இஸ்லாமியர் அதிகம் இருந்தும்   ஒருஹிந்து அரசால் ஆளப்பட்டு வந்ததுகாஷ்மீர ஹிந்து அரசர் இந்தியாவுடன் இணைந்தார் ஹைதராபாதரசர் நிஜாம் தனித்தியங்க விரும்பினார். ஆனால் இந்தியாவின்  நடுவே ஒரு முஸ்லிம்  அரசு இருப்பதை அன்றைய இந்திய அரசு விரும்பவில்லை  பேசிப்பார்த்து சரிவராத போது  இந்திய அரசுஒரு நடவடிக்கை எடுத்தது அதை போலிஸ் ஆக்‌ஷன் என்றார்கள் ஆனல் இந்தியப்படையே அதில் இருந்தது  நிஜாமின் படையில்  ரசாக்கியர்கள் என்று அறியப்பட்ட இஸ்லாமிய வீரர்கள் இருந்தனர் ஒரு சிறிய படையெடுப்பில் இந்தியா வென்று ஹைதராபாத் நிஜாம் தோல்வியைத் தழுவினார்  ஆனால் அதற்குக் கொடுக்கப்பட்ட உயிர்கள் பலகாலம் சொல்லப்படாமலேயே இருந்தது கிடைத்த தகவல்களின்படி  இருபது ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்தனர் என்று தெரிகிறது அப்போது இருந்த காஷ்மீர் பிரச்சனை இன்னமும் தீரவில்லை I am digressing  மீண்டும் ஹைதராபாதில் நான் என்னும்  தலைப்புக்கே வருகிறேன்
முதன்முதலில் நான் ஹைதராபாத் சென்றது என்பெரிய அண்ணாவைப் பார்க்க  அது ஆயிற்று ஏறத்தழ நாற்பது ஆண்டுகள் அப்போது அண்ணா லிபர்டிதியேட்டர் அருகே இருந்தார் எங்கள் அண்ணிதான்  எங்களுக்கு ஹைதராபாதைச்சுற்றிக் காட்டினார் அப்போது ஹைதராபாத் முத்துகளுக்கும் கார்நெட் கற்களுக்கும் பெயர் பெற்றிருந்தது முதலில் அங்குதான் முத்துகள் வாங்கினோம் பலருக்கும் முத்துகளாகவும்  மாலைகளாகவும் கொடுத்தோம் எனக்கு கடை கண்ணிகளுக்குப் போவதை விட அங்கிருக்கும்  முக்கிய இடங்களைக் காணவே விருப்பம்  ஆனால் என் மனைவி மற்றும் அண்ணி ஆகியோருக்கு அதில் அவ்வளவுநாட்டம் இல்லை
ஹைதராபாதில் உலகப்புகழ் பெற்ற சாலார் ஜங் ம்யூசியம்  உள்ளது  மூன்று மாடிக் கட்டிடம் என்று நினைவு எல்லாவற்றையும் பார்த்து ரசிக்கநேரம்  ஆகும்  இருந்தும்  என் மனைவி அண்ணி முதலானோர் ஒரு சுற்று சுற்றி பார்த்தோம்  பேர்வழி என்று வந்து விட்டார்கள் நானோ ஒவ்வொரு பொருளாக கண்டு ரசிக்க விரும்பினேன் கூட வந்தவர்களுக்கு விருப்பமில்லாவிட்டல் எதையும் பார்த்துர்சிக்கமுடியாதுஅங்கிருந்த ஒரு பளிங்கு சில என்னை மிகவும் கவர்ந்தது அது சிற்பக்கலையின் உச்சம் என்றே சொல்லலாம்  ஒரு பெண்முகத்தில் திரை அணிந்து இருப்பது போன்ற சிலை பளிங்கு கல்லின் கீழ் பெண்ணின் முகமும்திரைக்குக் கீழ் தெரியும்   மிகவும் ரசித்தேன் இன்னும்  எத்தனையோ பொருட்கள்நினைவில் இல்லை
ஹைதராபாத் என்றாலேயே நினைவுக்கு வருவது சார்மினார்தான்  நான்கு கோபுரங்கள் உள்ளடக்கிய மசூதியுடன் கூடியதுஅதனுள்ளே போய் பார்க்கவில்லை வெளியில் இருந்தே பார்த்ததுநம்மக்களுக்கு சார்மினார் என்றால்  வளைகள் கிடைக்குமிடம் என்பதே தெரிகிறது
ஹைதராபாதையும்  செகந்திராபாதையும் பிரிப்பது ஹுசெய்ன்  சாகர் ஏரியே இப்போ து ஏரி நடுவே ஒருபெரிய புத்தா சிலை வைக்கப்பட்டு இருக்கிறதாம் படகில் சென்று வரும் விதமாக இருக்கிறதாம் நாங்கள் பார்த்தபோது ஏரி நடுவே சிலைஇருக்கவில்லை
ஹைதராபாதிலிருந்து  சுமார் 20கிலோமீட்டர் தூரத்தில் கோல்கொண்டா கோட்டை இருக்கிறதுஅதுவே ஒரு காலத்தில் தலை நகராக இருந்ததாம்  கோட்டைக்கு போனபோது நாஙகள் கட்டுச் சோறுகொண்டுபோய் கோட்டையின் மேல் அமர்ந்து உண்டோம்  பழைய  புகைப்படம் இருக்கிறது அதை தேடிஎடுக்க வேண்டும்    கோல்கொண்டா கோட்டையின் மேல் தளத்தில் இருந்து சுற்றிலும் பார்க்க முடியும்  அந்தக் காலத்தில் எதிரிகள்வருவது தெரிந்தால் மேல் கொத்தளத்தில் இருந்து கை தட்டுவார்களாம்   அது கீழே கோட்டைகதவுகளை மூடுவதற்கான சமிக்ஞையாக இருக்குமாம்   நாங்கள் மேலிருந்து கை தட்டி அது கீழே கேட்பதை உறுதி செய்து கொண்டோம்  இன்னொரு விஷயம் என்னை ஆச்சரியப் படுத்தியது என்னவென்றால் நீரை மேலே கொண்டு செல்ல செய்திருந்த ஏற்பாடுகள் தான்  மெஷினரி ஏதுமில்லாமல் நீரை மேலேற்றும் செயல் தான்  அப்போதுஇது பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமிருந்தாலும்  முடியவில்லை

ஹைதராபாதில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தயாதகிரி குட்ட என்னும் இடத்துக்கு எங்களை  அழைத்துப்  போனார் அண்ணி அங்கு கோவில் கொண்டிருப்பது லக்ஷ்மி நரசிம்மர்  ஒரு சிறிய மலை மேல் இருக்கிறது கோவில் அந்த பயணம்  மறக்க முடியாதது  ஏன் என்றால்  நாங்கள் மலையிலிருந்துஇறங்கும்போது எங்களது இருபக்கமும் வானரங்கள்கூடவெ வந்தன அவை எப்போது நம்மீது பாய்ந்து பிடுங்கும் என்னும் பயம் இருந்தது கூடவே வந்தபிச்சைக்கரரின் கோலை கையில் வாங்கி ஓரளவு  தைரியம் அடைந்து கீழே இறங்கினோம்
மற்றபடி ஹைதராபாதில் என்  மகன்களுக்கு ஜீன்ஸ் வாங்கினோம்  உடலில் தெம்பு இருந்த போது போய் வந்தது இப்போது நினைத்தாலும் முடியுமா தெரிய வில்லை  என் அண்ணாவின்  இரு மகள்களின்  திருமணத்துக்கும் சென்றிருக்கிறோம்   அவர்களது திரு மணங்களில்  அண்ணியின்  சகோதரர்கள் கூடி செய்தபல உதவிகள் எங்களை ஆச்சரியப்படுத்தும்
 இந்தப்பதிவைஎன் நினவுகளில்  இருந்தே எழுதுகிறேன்  மொத்தத்தில் ஹைதராபாத் அவசியம் பார்க்க வேண்டிய இடம்  போகிறவர்களுக்கு ஒரு சில டிப்ஸ் நேரம் பற்றி கவலைபடாமல் பார்க்க வேண்டிய  இடங்கள் நிறையவே உண்டு 

சார்மினார் 
         
சலார் ஜங் ம்யூசியத்தில்பளிங்கு சிலை 

( படங்கள் இணையத்தில் இருந்து )


         

42 கருத்துகள்:

  1. அருமை. நாங்க இரண்டு வருடம் சிகந்திராபாதில் மாற்றலில் சென்று குடி இருந்தோம். ஹைதராபாதுக்குப் பல முறை சென்றிருக்கிறோம். சுற்றிப் பார்க்கவும், ஹைதராபாதில் மிகவும் பிரபலமான அரக்கினால் செய்யப்பட்ட குங்குமச் சிமிழ் வாங்கவும் போனோம். குங்குமச் சிமிழ் நவராத்திரியில் வருபவர்களுக்குக் கொடுக்கவென வாங்கியது! அதைச் செய்வது எல்லாம் முஸ்லீம்களே! கடைகளும் முஸ்லீம்களின் கடைகள் தான்! நாங்க போயிருந்தப்போ திடீர்னு கர்ஃப்யூ வந்து கடைகள் படீர், படீர் எனச் சாத்தப்பட்டன. எங்களைக் கடைக்குள்ளேயே இருக்கச் சொல்லிட்டுக் கொஞ்ச நேரம் கழிச்சுத் திறந்து பார்த்து வெளியே செல்லலாம் என்று சொன்னார்கள். அதே போல் காசியிலும்/வாரணாசி நடந்தது. சைகிள் ரிக்‌ஷாவில் போய்க் கொண்டிருந்தோம். திடீர் கர்ஃப்யூ! ரிக்‌ஷாக்காரர் பக்கத்துச் சந்துக்குப் போய் அங்குள்ள ஒரு வீட்டில் இருக்கச் சொல்லிட்டுப் பின்னர் சந்தடி அடங்கியதும் கூட்டிச் சென்றார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவு உங்கள் நினைவலைகள் சிலவற்றை மீட்டி இருக்கிறதே

      நீக்கு
  2. தங்களது நினைவோட்டங்கள் இன்னும் வரட்டும் ஜயா.

    பதிலளிநீக்கு
  3. ஹைதிராபாத் நினைவுகள் அருமை. கோல்கொண்டா கோட்டை, சார்மினார் பார்த்த நினைவை மீண்டும் கொண்டுவந்துவிட்டது.

    பளிங்குப் பெண் ரொம்ப நல்லா இருக்கு. இதுபோன்ற பல சிலைகளை நான் பார்த்திருக்கேன். சிற்பிகளின் திறமைதான் என்னே. இது எப்படி சாத்தியம் என்றே புரிந்துகொள்ள முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
  4. அந்தக் கால திரைப்படங்களில் சென்னை என்று தெரிவதற்கு செண்டரல் ஸ்டேஷன் படத்தைக் காட்டுவார்கள். அதே போல சார்மினார் காட்டினால் ஹைதிராபாத்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார்மினார் ஹைதராபாதின் அடையாளச் சின்னம் ?

      நீக்கு
  5. நானும் பல தடவை ஹைதராபாத் போய் இருக்கிறேன். ஆனால் கோல்கொண்டா கோட்டைக்கு மட்டும் போக நேரம் கிடைக்கவில்லை. தங்கள் பதிவை படித்ததும் அடுத்தமுறை அதைப் பார்க்கவேண்டும்,ராமோஜி ராவ் திரைப்பட நகரத்தையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் சென்றபோது ராமோஜி ராவ் திரைப்பட நகரமிருக்கவில்லை என்று நினைக்கிறேன்

      நீக்கு
  6. ஹைதை!!! மிக மிக அழகான இடம். எனக்கு ஹைதையைச் சுற்றிப் பார்க்க ஆசை இருந்தது. ஆனால் வாய்ப்பு கிடைத்தும் அங்கு செல்லாமல் வேறு இடம் சென்றோம். ஹைதையில் நீங்கள் சொன்ன இடங்கள் பார்க்க ஆசை...இனி வாய்ப்பு கிடைக்குமா தெரியலை கிடைத்தால் பார்க்க வேண்டும்.

    உங்கள் நினைவுகள் சூப்பர் சார். சிலை ரொம்ப அழகு!!! ஹைதை என்றாலே சார்மினாரும், அந்த ஏரியும் தான் நினைவுக்கு வரும் ஹைதராபாத்தையும் செகந்திராபாத்தையும் பிரிக்கும் ஏரியும். ஹைதராபாத் ஏர்போர்ட்டில் வைத்திருக்கும் சில சிலைவடிவங்கள் அழகாக இருக்கும் ஸார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹைதராபாதில் அபிட்ஸ் என்னும் இடம் துணிமணிகள் வாங்க ஏற்ற இடம் என்பார்கள்

      நீக்கு
  7. என்ன திடீரென ஹைதராபாத் பற்றி?

    நினைவுகள் சுவாரஸ்யம். பளிங்குச்சிலை மிக அழகாக இருக்கிறது.

    நீங்கள் அந்த மியூசியம் பற்றிச் சொல்லி இருப்பது சரி. உடன் வருபவர்கள் ஒத்த ரசனை இல்லாதவர்களாயிருந்தால் நம்மாலும் ரசிக்க இயலாமல் போகும். ஏழெட்டு வருடங்களுக்கு முன் புத்தகக் கண்காட்சிக்கு என் அலுவலக நண்பர்களுடன் சென்று, எந்த கடையிலும் ஏறாமல் தாண்டிச் சென்று வெளியில் வந்த அனுபவம் நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹைதராபாத் சும்மா நினைவுக்கு வந்தது ஒருமுறை சென்னைக்கு வரும்போது நடந்த புத்தககண்காட்சிக்குப்போகலாமா என்று கேட்டிருந்தேன் நினைவிருக்கிறதா உங்கள் அலுவலகப் பணி காரணம் வ்சர இயலாது என்றீர்கள்

      நீக்கு
  8. சார்மினார் என்றால் நான் 200 என்பேன்!!! சார்மினார் சிகரெட் அட்டை என் சிறு வயது கோழி குண்டு விளையாட்டில் 200 ரூபாய் நோட்டு! வில்ஸ் அட்டை 500 ரூபாய். பாசிங் ஷோ 300 ரூபாய்!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோழி குண்டு விளையாட்டில் //

      *கோலி குண்டு!

      நீக்கு
    2. //ஹைதராபாத் என்றாலேயே நினைவுக்கு வருவது சார்மினார்தான்//

      எனக்கு சார்மினார் என்றாலே நினைவுக்கு வருவது சிகரெட் பாக்கெட்தான்...

      நீக்கு
    3. ஸ்ரீராம் இப்படி சார்மினார் சிகெரெட்டை பற்றி பேசினால் நம்மை வயதானவர்கள் என்று நினைத்துவிடுவார்கள் அதனால் சார்மினார் சிக்ரெட் பற்றி பெரியவர்கள் பேசியதை வைத்து இங்கு பதில் சொல்லீருக்கிறேன் என்று சொல்லி சமாளிக்க வேண்டியதுதான் காரணம் நான் இன்னும் ஸ்வீட் 16ந்தான் அதாவது என்றும் மார்கன்டேயந்தான்

      நீக்கு
    4. //ஸ்ரீராம்.January 28, 2018 at 8:37 PM
      //கோழி குண்டு விளையாட்டில் ////

      ஹா ஹா ஹா...

      நீக்கு
    5. ஸ்ரீராம் எனக்கு சார்மினார் என்றால் சிகரெட் தான் நினைவுக்கு வரும் ஒருகாலத்தில் அதைத்தான் புகைத்துக் கொண்டிருந்தேன் ஒரே விஷயம் பலருக்கும் நினைவுகள்

      நீக்கு
    6. ஸ்ரீராம் கோலி குண்டுகோழி குண்டாக மாறினாலும் அதைக் குறித்துபின்னூட்டமிட அதிராவுக்கு ஒரு சான்ஸ்

      நீக்கு
    7. @ அவர்கள் உண்மைகள் -- சார்மினார் சிகரெட் அதிக காரம் உள்ளது ஒரு காலத்தில் அதைப் புகைத்துக் கொண்டிருந்தேன்

      நீக்கு
    8. @ அவர்கள் உண்மைகள் நான் (பெரியவன் ) சார்மினார் சிகரெட் பற்றி பதிவில் ஏதும் எழுத வில்லையே

      நீக்கு
    9. @ அதிரா உங்களுக்கு ஸ்ரீராமின் பிழை பெரிதாகத் தெரிந்ததா

      நீக்கு
  9. //ஒருஹிந்து அரசால் ஆளப்பட்டு வந்ததுகாஷ்மீர ஹிந்து அரசர் இந்தியாவுடன் இணைந்தார் //

    "காஷ்மீரைக் கைப்பற்ற பாகிஸ்தான் நிகழ்த்திய முதல் போர் ஜீலம் நதிக்கரையில் இருக்கும் பாராமுல்லாவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் உதவியுடன் பதான் படையினர் நுழைந்து ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டு குவிக்க ஆரம்பித்தார்கள். கொல்லப் பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்துக்களும், சீக்கியர்களும். சொற்ப முஸ்லீம்களும். இந்து சீக்கிய இளம் பெண்களைக் கார்ந்து சென்ற அவர்களின் நோக்கம் ஸ்ரீநகரைக் கைப்பற்றுவதுதான்" என்று 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி ஷேக் அப்துல்லா ஐ நா சபையில் பாதுகாப்புக் கவுன்சில் முன் பேசி உள்ளார். சில செய்திகள் இந்திய ராணுவத்துக்கு உதவிவி கேட்டு வந்தபோதுதான் வேறு சில உண்மைகளும் புரிபட ஆரம்பித்தனவாம். பாகிஸ்தானிலோ இந்தியாவிலோ அதுவரை சேராமல் தனித்து இயங்கும் ஜம்மு காஷ்மீர் மாநில வரைபடம் ஆகஸ்டிலேயே பாகிஸ்தானியர்களால் எடுத்துச் செல்லப் பட்டிருந்தது. எந்த இடம் என்றே கணு பிடிக்க முடியாத நிலையில் பூன்ச் என்கிற இடத்தின் பெயர் வந்ததும்தான் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

    இந்நிலையில்தான் காஷ்மீர் அரசர் இந்தியாவுடன் இணைய முன்வந்தார் என்று படித்திருக்கிறேன். ஹைதராபாத் இணைப்பில் என்ன ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது அதே ஒப்பந்தங்களை நானும் உடன்படுகிறேன் என்று மன்னர் ஹரிசிங் 1947 ஆக்டொபரில் கடிதம் ஒன்றை நேருவுக்கும் படேலுக்கு அனுப்புகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஹைதராபாத் இந்தியாவுடன் போலிஸ் ஆக்‌ஷனுக்குப் பின் தான் இணைந்தது அது 1948ல் என்று நினைக்கிறேன்

      நீக்கு
  10. ஹைதராபாத்தில்தான் எனது (கார்ப்பரேஷன் வங்கி) வாழ்க்கை தொடங்கியது. மூன்றாண்டுகள் குடியிருந்த நகரம். ஒரு தனிப்புத்தகம் எழுதவேண்டும் என்று இருக்கிறேன். இந்த ஆண்டு முடியலாம். அழகும் அற்புதங்களும் சீரழிவுகளும் ஒருங்கே காணக்கிடைக்கும் ஓர் அழுக்கு நகரம் அது. நகரின் பெரும்பாலான பகுதிகளை நடந்தே கண்டிருக்கிறேன். மறக்க முடியாத பதிவுகளை என் நெஞ்சில் வடித்த நகரம். நினைவூட்டியதற்கு நன்றி.

    -இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு இடம் ஒரு பதிவு போதும் நினைவுகளை மீட்டெடுக்க

      நீக்கு
  11. அருமையான சுற்றுலா, இவ்வளவு நினைவு வச்சு எழுதியிருக்கிறீங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுவதெல்லாமநேகமாக நினைவுகளில் இருந்துதானே

      நீக்கு
  12. @ஶ்ரீராம், சித்தப்பாவின் (அசோகமித்திரன்) "பதினெட்டாவது அட்சக்கோடு" நாவலில் ஹைதராபாதில்/சிகந்திராபாதில் அப்போது நடந்தவற்றை எல்லாம் பதிவு செய்திருக்கிறார். அவர் கல்லூரிக் காலத்தில் நேரில் கலந்து கொண்ட போராட்டம் இது! அதன் பிறகே ஐம்பதுகளின் ஆரம்பத்தில் சென்னைக்கு வந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹைதராபாதில் நடந்த போராட்டம் எதைச் சொல்லுகிறீர்கள்ராணுவ நடவடிக்கையையா

      நீக்கு
    2. கல்லூரி மாணவர்கள் இந்தியாவுடன் இணைய வேண்டும் என நடத்திய போராட்டம். சித்தப்பாவின் நாவலில் இடம் பெற்றுள்ளது! நேரில் கண்ட பல விபரங்களையும் பதிவு செய்திருக்கிறார்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. அநேகமாகநினைவுகளில்தானே இப்போதைய வாழ்க்கை

      நீக்கு
  14. எனக்கு ஹைதராபாத் என்றால் அசோகமித்திரன்தான் நினைவுக்கு வருவார்.

    என் சகோதரி செகந்திராபாத்தில் இருந்தார். அதனால் இரண்டு மூன்று முறை சென்றிருக்கிறேன்.
    உங்களைப் போலவே எனக்கும் சாலர்ஜங் மியூசியத்தில் அந்த சிலை மிகவும் பிடித்தது. அதே மாதிரி சிறு சிலைகளும் கிடைக்கின்றன.
    கோல்கொண்டா கோட்டைக்கு என் கணவரின் அண்ணா பெண்கள் அழைத்துச் சென்றார்கள்.
    எஸ.ஏ.பி. குமுதத்தில் மலர்கின்ற பருவத்தில் என்று ஒரு தொடர்கதை எழதினார். அதில் கதாநாயகனும், கதா நாயகியும் கோல்கொண்டா கோட்டையில்தான் சந்தித்துக் கொள்வார்கள். நான் அதை என் மைத்துனர் பெண்களிடம் பகிர்ந்து கொண்டேன், அவர்களும் ரசித்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹைதையில் என் அண்ணாவின் பெணிருக்கிறாள் வாவென்று கூப்பிட்டுக் கொண்டும் இருக்கிறாள் முடியுமா தெரியவில்லை

      நீக்கு
  15. //எஸ.ஏ.பி. குமுதத்தில் மலர்கின்ற பருவத்தில் என்று ஒரு தொடர்கதை எழதினார். //

    நல்ல நினைவாற்றல் உங்களுக்கு, பானுமதி மேடம்.

    ஹைதராபாத் என்றவுடன் எனக்கும் எஸ்.ஏ.பி.யின் நினைவு தான் வந்தது. நீங்கள் குறிப்பிட்டு விட்டீர்கள்.

    எஸ்.ஏ.பி. என் மனம் கவர்ந்த எழுத்தாளர். சொல்லப் போனால் எழுதுவதின் அரிச்சுவடி கற்றுக் கொடுத்த குரு மாதிரி.

    பதிலளிநீக்கு
  16. சிலருக்கு சில விஷயங்கள் தொடர்பேற்று கின்றன பானுமதிக்கு கோல்கொண்டா எஸ் ஏ பி யின் தொடரில் வந்தநாயகன் நாயகி சந்திப்பு கோல்கொண்டாவில் நிகழ்ந்தது நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
  17. நான் ஹைதராபாத்தில் ஒரு வருடம் இருந்தேன். இருப்பினும் பிர்லா மந்திர் மற்றும் உயிரியல் பூங்கா தவிர வேறு எங்கும் செல்ல நேரம் அமையவில்லை.

    மற்றொரு முறை ஊர் சுற்றுவதர்க்ககவே அங்கு சென்று வரவேண்டும் என்று ஆசை.

    பளிங்குச் சிலை அற்புதம்.

    நீங்கள் சொன்னதுபோல் ஒரே மாதிரி ரசனை உடையவர்கள் உடன் இருந்தால் சுற்றுலா மகிச்ச்சி தரும். "Been there. Seen that" மனநிலை மனிதர்களுடன் சென்றால் எதையும் ரசிக்க முடியாது.

    வரலாற்று ரீதியான விஷயங்களில் பெண்களுக்கு ஈர்ப்பு குறைவே என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. நானுமின்னொரு முறை செல்ல வேண்டும் ராமோஜி பார்க் சென்றதில்லை ஹுசேன் ஏரியில் படகில் செல்ல வேண்டும்

    பதிலளிநீக்கு