வெள்ளி, 19 ஜனவரி, 2018

ஒரு சுய மதிப்பீடு


                                   ஒரு சுய மதிப்பீடு
                                   ---------------------------

 நான் எழுதியவற்றை பிறர் படித்து அவரவர் ஏதோ அபிப்பிராயம் கொண்டிருக்கலாம்  இருந்தாலும்  என் எழுத்துபற்றிய கணிப்பு இது
  
என் உறவினர் பலருக்குத் தமிழ் எழுதப் படிக்கத்தெரியாது என்ற நிலையில் நான் சென்ற வீட்டில் உறவினர் ஒருவருக்கு தமிழ் எழுதப் படிக்கத்தெரியும் என்று அறிந்தபோது  மகிழ்வுடன் நான் வலையில்தமிழில் பதிவிடுகிறேன் என்றும்  நான் சாதாரணன் ராமாயணம்  என்ற ஒரு பதிவு ஒரே வாக்கியத்தில் எழுதி இருக்கிறேன் என்றும் கூறி  படித்துப்பார்க்கச் சொன்னேன் ”ஒரே வாக்கியத்தில் ராமாயணமா எங்கே சொல்லு பார்க்கலாம்” என்றார் அப்போதுதான்  எனக்கு ஒரு உண்மை  உறைத்தது  நான்  எழுதியது  எனக்கு நினைவிருக்கவில்லை  வீட்டிற்கு வந்து படித்துப்பார்த்தேன்  அது எனக்கேஒரு பெருமித உணர்வைக் கொடுத்தது.ஆர்வத்தால் உந்தப்பட்டு சில நாட்கள்  அதற்காக மெனக்கெட்டு எழுதியதுஇப்போதும் அது மாதிரி எழுத முடியுமா  என்பது சந்தேகமே அப்போதுதான்விளங்கியது .என் நண்பன் ஒருவன்  என் பதிவுகள் சிலவற்றைப் படித்துவிட்டு இதை எல்லாம்  நீ எழுதினாயா இல்லை உன்னுள் இருந்து ஏதாவது குறளி  எழுத வைக்கிறதா  என்றுகேட்டது.   சில பதிவுகளைப் படிக்கும் போது எனக்கே அம்மாதிரி தோன்றுவது உண்டு
 
சாதாரணன் ராமாயணத்தைப் படித்துப் பார்த்த நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் அதை நான்  எழுதியது  என்பதை நம்பவில்லை
தங்களால் எப்பொழுதும் இப்படி எழுதமுடியுமாவென்று எனக்கு ஐயம் இருக்கிறது. சில சமயங்களில் நம்மையறியாமல், நம்பமுடியாத காரியங்களை முடித்திருப்போம். செயல் முடிந்த பிறகே இதனை நாம்தான் முடித்தோமா என்று ஐயம் ஏற்படும். அத்தகைய தருணமொன்றில் எழுதப்பட்ட பாடல் என்று நினைக்கிறேன். அல்லது இயற்கையாக தங்களுக்கு மொழியில் நல்ல புலமை இருக்குமென்று நினைக்கிறேன். ஒரே வரியில் இராமாயணத்தைக் கவிதையாக கூறுவதென்பது சாமானியர்களால் சாத்தியான செயல் கிடையாது. ஏதோ ஒரு காலத்தில் நான் கல்வி மாவட்டம் அளவில் மூன்று முறை தமிழில் முதல் மதிப்பெண் எடுத்த ஞாபகம் இருக்கிறது. இப்பொழுது பெருங்காய டப்பா மட்டுமே உள்ளது. ஒரே ஒரு வார்த்தையில் சிறிது சந்தேகம் உள்ளது.
சுயம்வரப் பந்தலில் சனகனின் சிலையறுத்து” 
இதில்வில்லைமுறித்துஎன்று வரவேண்டுமென்று நினைக்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். எனக்கு தவறு கண்டுபிடிக்கும் எண்ணம் இல்லை  சிலைஎன்றும்சொல்வது தவறில்லைஎன்று மறு மொழி கொடுத்தேன் 
 
.
இதெல்லாம் நான் எழுதியதா,இன்னொரு முறை இதைப் போல் எழுத முடியுமா என்றும்  தோன்றுகிறது
.
 இன்னொரு நண்பர் என் எழுத்துகளைப் படித்து விட்டு முன்பு இருந்த ஃப்லோ இப்போது இல்லை என்றார் அதுவும் சரிஎன்றேநினைக்கிறேன் 

எனக்குச் சில ஆதங்கங்கள் இளவயதிலிருந்தே உண்டு. எதுவும் செய்ய முடியாத கையாலாகாத்தனத்தால்  மனம் வருந்தியதும் உண்டு  அதற்கு சிலவடிகால்கள் வேண்டும்  எழுதுவதன் மூலம்   சிலவற்றை வெளிப்படுத்துகிறேன்  என் பலபதிவுகள் தலைப்புகளில் இருக்கும்  முக்கியமாக மக்களின்  ஏற்ற தாழ்வு பற்றிய சிந்தனைகள் அவற்றுக்கான  காரணங்களைக் காண முயல்வதுமாக இருக்கும்  இது சற்றுக் கூடுதலாக இருக்கும்போது  தேடுதலாக வெளிப்படும்    

என்னைப் போல் வயதானவர்களுக்கு அந்தக் காலத்தையும் இந்தக் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்  வாய்ப்பு இருக்கிறது  எதையும் எதிர் மறையாகச் சிந்திக்கும்  பலரைப்பார்க்கிறேன்  என்னைப் பொறுத்தவரை  நம்வளர்ச்சி நிச்சயமாக இருக்கிறது   ஆனால் எதிர்பார்ப்புகள்  அதிகமாக  இருக்கும் போது அளவீடு எதிர்மறையாக இருக்கிறது

நான் இதுவரை எழுதும்போது என் கருத்துக்களைக் கூறி, மற்றவர் அதிலிருந்து மாறுபட்டுஇருக்கலாம் என்று சொல்லி இருக்கிறேன்  எது எப்படி இருந்தாலும்  கருத்துகளும்   வேறுபாடுகளும் உணர்த்தப்பட்டால்தான்  தேரிய வருகிறது வலையில் அதற்கு நிறையவே  வாய்ப்பு இருக்கிறது நல்ல கலந்தெழுத்தாடல்கள்  வலையில் அருகியே இருக்கின்றன
  
கதை கவிதை கட்டுரை எதிலும் ஏதாவது கருத்திருக்க வேண்டும் என்று நம்புகிறவன் நான்  மேலும் நான் எழுதும்போது அந்தக் கருத்து என்  உள்ளத்தைப் பிரதி பலிப்பதாக இருப்பது  ஆச்சரியம் இல்லை  குறிப்பாக கதைகள் எழுதும்போது நிகழ்வுகளைச்சொல்லிப் போகையில் ஆங்காங்கே என் கருத்துகளும் ஊடுருவி நிற்கும் அதைத் தெரியப்படுத்தவே கதை கட்டுரை என்று நினைப்பவன் நான் ஏதாவது ஒரு கருத்துபற்றி  எழுத  வேண்டும்  என்ற உந்துதல் இருந்தால்தான் எழுதவே வருவேன் நான். பிறகு வந்து விழும்  எழுத்துகளும் கருத்துகளும்  உள்ளத்தில் இருந்து வருவதே  இப்போது நானெழுதுவதும்  ஒரு உந்துதலால்  நிகழ்வதே எல்லோருடைய உள்ளங்களிலும்  சிலகருத்துகள் இருக்கலாம் மற்றவருக்கு இது இப்படி இருந்திருக்கலாம்   இது இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணம்   வரலாம் ஆனால் என் எழுத்தில் வருவது என் எண்ணங்கள் தானே      

எனது வாழ்வின்விளிம்பில் என்னும்சிறு கதைத் தொகுப்பை மணிமேகலைப் பிரசுரம் மூலம் வெளியிட்டேன்  அதற்கு அணிந்துரை அளித்த தஞ்சை கவிராயர்  இவை எந்தப் பத்திரிக்கையிலும்  பிரசுரமானவை அல்ல  ஆகக் கூடியவையும் அல்ல என்று எழுதி இருந்தார் பத்திரிக்கை கதைக்கான  இலக்கணமோ உத்தியோ இன்றி எழுதப்பட்ட கதைகள் இவை தமிழ்ப்பத்திரிகைகளில் பிரசுரமாகும் தற்கால கதைகளைப் பற்றி சொல்வதற்கு வருத்தமாகத்தானிருக்கிறதுஒன்றும் பிரயோசனமில்லை அத்தி பூத்தாற்போல் அருமையான கதைகள் வரத்தான்  செய்கின்றன ஜீஎம்பி இந்த இரண்டுபிரிவிலும் அடங்காதவர் எழுத்தாளர் ஆக வேண்டும்  என்ற உத்தேசமோ அல்லது அவ்வாறு ஆகி இருப்பதை அடையாளப் படுத்தும் நோக்கமோ சிறிது மின்றி தன்  எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார் வாசகர்களின்  சுவாரசியத்துக்காக இக்கதைகள் எழுதப் படவில்லை

இதை உயர்வு நவிற்சியாக  எடுத்துக் கொள்ளவா கூடாதா என்பது இன்னும் எனக்கு விளங்க வில்லை   

இதுவும் நான் எழுதுவதா இல்லை என்னுள் இருந்து ஏதாவதுகுறளி  எழுத வைக்கிறதா   தெரியவில்லை  ஆனால் ஒன்று எனக்கு எழுதுவதற்கு  நிறையவே இருக்கிறது  அதைப் புரிந்து படிப்பதற்கு  வாசகர்களும்  இருப்பார்கள்  என்ற நம்பிக்கையுமிருக்கிறது  பதிவுநீளமானால்  படிக்காமலேயே போவோரும் இருக்கிறார்கள் என்றும்தெரிகிறது  

.


.
  
   
    

33 கருத்துகள்:

  1. //எனக்கு எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது அதைப் புரிந்து படிப்பதற்கு வாசகர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுமிருக்கிறது பதிவுநீளமானால் படிக்காமலேயே போவோரும் இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. //

    நீங்கள் சொல்வது சரியே. எழுதுவதற்கு நிறைய தகவல்கள் உண்டு. அதுவும் நீங்கள் எழுதுவதை படித்து கருத்து தருவோரும் பதிவுலகில் உண்டு. எனவே பதிவு நீளமாக இருப்பது குறித்து கவலைப்படாமல் வழ்ககம்போல் நீங்கள் நினைப்பதை எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுவதற்கு நிறையவே இருந்தாலும் சமயத்தில் ஏதும் நினவுக்கு வருவதில்லையே

      நீக்கு
  2. உங்கள் சிந்தனையில் தோன்றுவதை எழுதுங்கள் ஐயா அதை படித்த கருத்து கூற உங்களுக்கென்று ஒரு வட்டம் இருக்கிறது.

    அந்த வட்டத்துக்குள் நானும் ஒருவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்று நாட்கள் வலைப் பக்கமே வர இயலவில்லை பின்னூட்டங்கள் எழுதுவற்கு ஐடியா கொடுத்திருக்கிறதுஅவசியம் வந்து கருத்திடுங்கள்

      நீக்கு
  3. ///எனக்கு எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது அதைப் புரிந்து படிப்பதற்கு வாசகர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுமிருக்கிறது பதிவுநீளமானால் படிக்காமலேயே போவோரும் இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. /

    பதிவுநீளமானால் படிக்காமலேயே போவோரும் இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது இதில் நானும் அடக்கம் சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக சொல்ல வேண்டும் சில சம்யங்களில் அது தவிர்க்கமுடியாதுதான் பதிவு நீளமாக இருந்தால் அப்புறம் வந்து ஆற அமர படிக்கலாம் என்று கருதி செல்வதுண்டு ஆனால் ஆற அமர நேரம் கிடைப்பதே இல்லை என்பதுதான் உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது நீளம் என்பதே புரிவதில்லை மேலும் பதிவின் எழுத்துகள் எந்த தாக்கமும் ஏற்படுத்துகிறதா தெரிவதில்லை

      நீக்கு
  4. இந்த வயதில் இந்த உழைப்பு என்பது பாராட்டத்தக்கது. உழைப்பு என்பதும் ஆர்வம் என்பதும் உங்கள் உடன் பிறந்தது போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு வயது பற்றிய எண்ணமே வருவதில்லை ஓரோர் சமயம் உடல் ஒத்துழைக்காதபோதுமட்டும் நினைப்பேன்

      நீக்கு
  5. சொல்ல நினைப்பதை மிகச்சரியாக சொல்லிப்போக உங்களைப்போல மிகச்சிலரால்தான் முடிகிறது.எதிர் அல்லது ஆதரவு கருத்துக் குறித்த எவ்வித மனச்சஞ்சம் இல்லாதது கூட அதற்கான காரணமாய் இருக்கலாம் தங்கள் எழுத்துப்பணி தொடர்ந்து தொடர நல்வாழ்த்துக்களுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அவை சரியாகப் போய்ச் சேருகிறதா தெரியவில்லை

      நீக்கு
  6. ஸார் நீங்கள் இந்த வயதில் இவ்வளவு எழுதுவதற்காகவே அதுவும் சிந்தித்து எழுதுவதற்காகவே உங்களைப் பாராட்ட வேண்டும். தேடித் தேடிப் புகைப்படங்களை, காணொளிகளை அதுவும் உங்கள் கலெக்ஷனிலிருந்தும் கூட வெளியிடுகிறீர்கள். அதெல்லாம் சும்மா இல்லை சார். நேரம் எடுத்துக் கொண்டு நீங்கள் செயதைப் பாராட்டியே தீர வேண்டும்.

    மற்றபடி உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தி எழுதுங்கள் சார். முடியும் வரை எழுதிக் கொண்டே இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என்னை வயதான்வனாக நினைப்பதே இல்லை இருந்தாலுமுடல் ஒவ்வொரு சமயம் நினைவூட்டும் எழுத ஐடியா கிடைக்க வேண்டுமே ஒரு நாளில் நான் கணினியில் மொத்தமாக இரண்டுமணியிலிருந்து மூன்றுமணிவரைதான் செலவிடுகிறேன்

      நீக்கு
  7. உங்கள் உழைப்பும் ஆர்வமும் பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  8. >>> எனக்கு எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது அதைப் புரிந்து படிப்பதற்கு வாசகர்களும் இருப்பார்கள்..<<<

    >>> பதிவு நீளமானால் படிக்காமலேயே போவோரும் இருக்கிறார்கள்...<<<

    உண்மை.. உண்மை..

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு ஒரு அறிவுரைகளைத் தருகின்றன.உங்கள் எழுத்துகள் மூலமாக நாங்கள் பல அனுபவங்களைப் பெறுகிறோம். உங்களின் எழுத்தை வாசிக்க, நேசிக்க நாங்ள் இருக்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகர்களை ஈர்க்க நானும் பல உத்திகளைக் கையாளுகிறேன்

      நீக்கு
  10. உங்கள் ஆர்வமும் உழைப்பும் பாராட்டுக்கு உரியது! தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து எழுதுங்கள் விட்டுப் போனது இதுவாக இருக்குமோ மதப் பதிவுகள் வேண்டாமே

      நீக்கு
  11. தங்களின் எண்ணங்களை எழுத்தாக்குங்கள் ஐயா
    தங்களின் அனுபவம் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமையும்

    பதிலளிநீக்கு
  12. // சுயம்வரப் பந்தலில் சனகனின் சிலையறுத்து”
    இதில் “வில்லைமுறித்து” என்று நினைக்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். எனக்கு தவறு கண்டுபிடிக்கும் எண்ணம் இல்லை சிலைஎன்றும்சொல்வது தவறில்லைஎன்று மறு மொழி கொடுத்தேன்.. //

    சிலை என்றாலும் வில் தான் என்பதினால் அதில் தவறில்லை என்பது சரி தான்.

    ஆனால் சனகனின் சிலை என்பதில் தவறு காணலாம்.

    ஜனகனிடம் இருந்தது சிவதனுசு இல்லையா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சனகனிடம் இருந்ததால் அதை சனகனின் சிலை என்றேன் தனுசு என்றாலும் வில்தானே மேலும் சுருங்கச் சொல்வதில் கவம் இருந்திருக்கும்

      நீக்கு
    2. கவனம் என்று இருந்திருக்க வேண்டும்

      நீக்கு
  13. நீங்கள் பதிவை அழகாக எழுதுவது மட்டுமில்லாமல், எல்லோர் புளொக்குக்கும் போய் கொமெண்ட்ஸ் உம் சளைக்காமல் குடுக்கிறீங்கள் அதுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    நானும் என் சில பழைய போஸ்ட் படிச்சு.... இதை நானா எழுதினேன்?:) என நினைப்பதுண்டு:).. ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலை உலகில் மொய்க்கு மொய் என்னும் பழக்கம் இருக்கிறதே அதிரா நான் தொடரும் வலைப் பதிவுகளுக்கு அவசியம் செல்வேன்

      நீக்கு
  14. உங்கள் மனதில்பட்டதை எழுதுங்க ஐயா.
    தங்கள் எழுத்துக்கு என்னைப் போல் பல வாசகர்கள் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  15. எழுதுவது உங்கள் உரிமை. அதைச் செய்து கொண்டே இருங்கள். ஆனால் அனைவரும் உடனே படித்துவிடவேண்டும் என்று எதிர்பார்க்கவேண்டாம்.அவரவர்களுக்கு உள்ள நேரம் மற்றும் இணைய வசதிகளைப் பொறுத்து சற்றே காலம் கடந்தும் படிப்பார்கள். நானும் அப்படியே. காலம் கடந்து படிக்கும்போது பின்னூட்டம் இடுவது அபத்தமாகத்தோன்றலாம் என்பதால் பின்னூட்டம் இடமாட்டேன். அவ்வளவே.ஆகையால் உங்கள் மனதிற்குப் பிடித்த விஷயங்களை எழுதிக்கொண்டே இருங்கள். - இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலரும் படிக்க வேண்டு ம் என்று நினைப்பது உண்மை அதுதானே என் எண்ணங்கள் கடத்தபட வாய்ப்பாயிருக்கும்

      நீக்கு
  16. அவ்வப்போது சுயமதிப்பீடு செய்துகொள்வது நமது வளர்ச்சிக்கு ஏதுவாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளர்ச்சி பற்றி நினைப்பது இல்லை சார் என்னை நானே அறிய முடிகிறது அல்லவா

      நீக்கு