கதையும் நிகழ்வும்
---------------------------------
பலநேரங்கள் என்ன
எழுதி பகிர்வது என்று தோன்றும் நிஜ வாழ்க்கை சம்பவத்தோடு இணைக்கும் ஒரு பதிவு இது
அந்தக்காலத்தில் திரு மதுரையை கூன் பாண்டியன்
என்னும் அரசன் ஆண்டு வந்தானாம் அவன் சமண சமயத்தைச் சேர்ந்தவன் திரு ஞான சம்பந்தரும் சில சைவக் குரவர்களும் தங்கி இருந்த மடாலயத்தை
சமணர்கள் தீ வைத்துக் கொளுத்தி விட்டனராம்
அதன்பின் ,( அதன் விளைவால் என்கிறார்கள் ) மன்னனுக்கு வெப்பநோய் தாக்கி வேதனைக்
குள்ளானான் சமண்ர்கள் செய்த
மருத்துவம்பலிக்க வில்லை மன்னன் தொடர்ந்து வேதனை அனுபவித்தான் மன்னனின் சகோதரி சைவ சமயம் சார்ந்தவள் மங்கையர்க்கரசி ஞான சம்பந்தரிடம் கூறி பரிதவித்தாளாம் மன்னன்
நலமடைய ஆலவாய் அண்ணலின் ஆலயத்திலிருந்து திருநீறு கொண்டு வரச் செய்து மன்னனின் உடலில் பூசி
திருநீற்றுப் பதிகத்தைப் பாடினாராம்
பாண்டிய மன்னனின் வெப்ப நோய் நீங்கிற்றாம் அதற்கு மேலும் அவனது கூன் நீங்கி நெடுமாற பாண்டியன் ஆனானாம் மன்னன் சைவ சமயத்தில் சேர்ந்தான் பல
சமணர்களும் வாதில் வெல்லப்பட்டு கழு வேற்றப்பட்டனராம்
மேலே கூறியது
படித்து கேட்ட கதை திரு ஞானசம்பந்தர்
திருநீற்றுப் பதிகம் பாடிய கதை
இனி கூறப்போகும் சம்பவம் நிஜத்தில் நடந்தது
திருச்சியில்
கொதிகலன் தொழிற்சாலையில் இருந்தபோது ஒரு ஆத்ம நண்பனுக்கு இதய நோய் வந்து
மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார்
அவருக்கு நோய் முற்றி டெலிரியம் வந்து சப்தம் போட்டுக் கொண்டிருந்தார் அவரது
முடிவு நெருங்கியது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும் போகும்போது பயம் கூடாது
என்பதால் நான் அங்கிருந்த கோவிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டு சிறிது விபூதி கொண்டு வந்து அவரை ஆசுவாசப் படுத்தி திருநீறைப் பூசினேன் அவரது உபாதை குறைய வில்லை
சிறிது நேரம் கழிந்து நான் அவரைப்
பார்க்கப் போனபோது கோபத்துடன் “நீயும்
உன் விபூதியும் நீயே பூசிக் கொள் “ என்று
இரைச்சலிட்டார் வெகு விரைவில் அவரது உயிர்
பிரிந்தது
கங்காளன் பூசுங்
கவசத் திரு நீற்றை
மங்காமல் பூசி
மகிழ்வீரே யாமாகில்
தங்கா வினைகளும்
சாரும் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வீரே
(திருமந்திரம்)
நண்பர் சிங்காரமான
திருவடி சேர்ந்தாரா தெரியவில்லை
//மன்னனின் சகோதரி சைவ சமயம் சார்ந்தவள் மங்கையர்க்கரசி //
பதிலளிநீக்குமங்கையர்க்கரசி சோழ குல இளவரசி, நெடுமாறனை மணந்தவள். இவளும் அறுபத்து மூவரில் ஒருத்தியாவாள். பாண்டிமாதேவி எனச் சிறப்பிக்கப்பட்டவள்! ஞானசம்பந்தரைத் தங்கள் அமைச்சர் குலச்சிறையார் மூலம் இவள் தான் மதுரைக்கு வரவழைத்தாள். குலச்சிறையார் அமைச்சர் மட்டுமின்றி நெடுமாற பாண்டியனின் நெருங்கிய நண்பரும் கூட! ஆனால் சைவ சமயத்தைச் சார்ந்தவர்.
சில நேரங்களில் நினைவுகளிலிருந்து எழுதுவது பிழையாகிறதுவருந்துகிறேன் எடுத்துச் சொன்னமைக்கு நன்றி மேம்
நீக்குவிபூதி பூசிவிட்டு அவரைத் தேற்ற முனைந்த உங்கள் நம்பிக்கை வியக்க வைக்கிறது!
பதிலளிநீக்குஎன் நம்பிக்கையை விட அவர்பயப்படக் கூடாது என்பதே என் நோக்கம் கதைகளில் சொல்வதற்கும் நிஜ வாழ்வு நிகழ்ச்சிகளுக்கும் வேறு பாடுகள் உண்டு என்பதைக் காட்டவே பதிவு
நீக்குபாவம், அவர் வேதனையில் இரைந்ததிருக்கிறார். விதியை வெல்ல முடியுமா என்ன..
பதிலளிநீக்குநினைப்பது நடக்க வில்லை யென்றால் இருக்கவே இருக்கிறது புரிபடாத விதி
நீக்குஹா ஹா ஹா ஸ்ரீராம்ம் இது போதுமோ? இன்னும் வேணுமோ?:)..
நீக்குஹா..... ஹா.... ஹா... சரி, நினைப்பது எல்லாம் நடந்தால்... அப்போது அதை என்ன சொல்ல?!!
நீக்கு:)))
அதிராஇன்னுமென்ன எதிர்பார்த்தீர்கள்
நீக்குஸ்ரீ ராம் தெய்வம் ஏதுமில்லை என்று முடிக்கப் போகிறீர்களா எதுவுமே சரியில்லையோ என்றே தெரிகிறது
நீக்குநண்பருக்காக விபூதி பூசியது க்ரேட் ஸார் .அநேகமா அவர் ரொம்ப வேதனையில் இருந்திருப்பார்னு நினைக்கிறேன் .அவரை சொல்லி குற்றமில்லை சார் பாவம் சில மருந்துகளின் பக்கவிளைவுகளும் இப்படி செய்ய வைக்கும் .
பதிலளிநீக்குஇந்தப் பதிவின் நோக்கமே கதைகளில் சொலப்படுபவை நிஜத்தில் நடப்பதில்லை என்பதைக் காட்டத்தான்
நீக்குதங்கள் செயல் நன்று!விளைவு பற்றி கவலை இல்லை!
பதிலளிநீக்குஇத்தனை நாட்களுக்குப் பின் நான் இதை எழுதுவதே “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே “ என்று தோன்றியதால்தான்
நீக்கு>>> நினைப்பது நடக்க வில்லையென்றால் இருக்கவே இருக்கிறது புரிபடாத விதி<<<
பதிலளிநீக்குஅவ்வளவு தான்....
அப்போ விதி என்பது இல்லையா துரை அண்ணன்?:) நான் நம்புகிறேன் இருக்கு!:))..
நீக்குதுரை செல்வராஜு ஸ்ரீராம் இதை அபுரி என்பார்
நீக்குஅதிரா நீங்கள் நம்புவதை யார்தடுக்க முடியும் சொல்லித்தெரியாதவை அனுபவித்து தெரிந்து கொள்ள வேண்டும்
நீக்குஒரு அனுபவத்தையே பதிவாக்கி இருக்கிறேன்
நீக்குமாறவர்மன் சுந்தர பாண்டியனைப் பற்றி யாராவது நினைவு கொண்டு ஏதாவது அவனைப் பற்றி எழுதி விட்டால் அவன் மிகவும் மகிழ்ச்சி கொண்டு மறுபடியும் தன்னைப் பற்றி அவரை நினைக்க வைப்பான் அல்லது தன்னைப் பற்றி எழுதியவற்றை வாசிக்க வைப்பான் என்பது கன்னப்பரம்பரை கதை.
பதிலளிநீக்குஇது உண்மையா என்று சோதித்துப் பார்த்து அப்படி அனுபவம் ஏற்பட்டால் தெரிவிக்க வேண்டுகிறேன்.
எனக்குப் புரிகிறது ஜீவி சார் நான் பதிவு எழுதுகிறேன் நீங்களும் இது ஒரு தொடர்கதையில் பகிர்ந்திருக்கிறீர்கள்
நீக்குகரெக்ட் சார்! 'இது ஒரு தொடர்கதை'யில் அடுத்து வரப் போகிறவர் மாறவர்மன் சுந்தர பாண்டியன் தான்!
நீக்குநான் ஊகித்தது சரிதானே நன்றி சார்
நீக்குஸார் எப்படியோ நீங்கள் அவர் பயம் தெளிய வேண்டும் என்று செய்தது நல்ல செயல்....நாம் என்ன வேண்டி வந்தாலும், நாம் இப்படிச் செய்வது நம் மனதைச் சற்று ஆற்றிக் கொள்ளவே...மனம் கொஞ்சம் தைரியத்துடன், ஏதோ ஒருவித நம்பிக்கையுடன்...இருக்கும். ஆனால் இப்படித்தான் நடக்க வேண்டும் என்றிருந்தால் அப்படித்தான் நடக்கும்...
பதிலளிநீக்குதுளசி, கீதா
சில நிகழ்வுகள் நம்பிக்கைகளை தகர்த்தெறிகின்றன
நீக்குகற்பனைக் கதைகளைக் காட்டிலும் அனுபவப் பகிர்வுகளால் விளையும் பயன்கள் அதிகம்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு மிக்க நன்றி.
எதாவது பயன் இருக்கிறதா தெரியவில்லையே
நீக்குஹா ஹா ஹா அறிவுப்பசி ஜி க்கு பிடிச்ச போஸ்ட்போல இது:) அதுதான் லாண்ட் ஆகியிருக்கிறார்ர்ர்ர்ர்ர்:)..
நீக்குஅவர் கருத்து அதுவிஷயமிருப்பதைப்புரிந்து கொண்டிருக்கிறார்
நீக்குவிபூதி பூசி மறக்கடித்து அலகு குத்துற மாதிரிதான்.
பதிலளிநீக்குமந்திரமாவது நீறு என்ற திருநீற்றுப்பதிகம்படிக்கவில்லையா உங்களுக்குத்தான் நிறைய கதைகள் தெரியுமே
நீக்குவித்தியாசமான அனுபவம்தான். அவரோ வாழ்வின் விளிம்பில். மரணபயம் அவரை படுத்தி விட்டது போலிருக்கிறது.
பதிலளிநீக்குஅதைச் சிறிதாவது குறைக்கலாம் என்பதே நோக்கம்
நீக்குமரணத்தின் எல்லையில் இருக்கும் எவரும் இப்படித்தான் ஆத்திரப்படுவார்கள். அத்துடன் உங்கள்மீது அவர் கொண்டிருந்த பொறாமை அல்லது அசூயை அல்லது ஆத்திரம், 50ஆவது ஓவரில் தோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட் மாதிரி இப்போது வெளிவந்துவிட்டது. இதற்கும் திருநீறுக்கும் சம்பந்தம் இல்லை.
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா (இன்று திருச்சியில் இருந்து.)
நோயின் தொல்லை நீங்கியதாகத்தானே கதை அது அவ்வளவு சரியில்லை என்று தோன்று கிறது நோயில் இருந்து மீண்ட பாண்டிய மன்னன் சமணர்களைக் கழுவிலேற்றினானாமே
நீக்குஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் ஐயா:).. வியூதி பூசியதாலதான் அவர் அதிகம் அனுபவிக்காமல் நலமோடு போய் விட்டாரோ என்னமோ...:(.
பதிலளிநீக்குஅதிரா! அப்போது விபூதி அவரை இன்னும் சீக்கிரம் அனுப்பி வைத்துவிட்டது என்றும் சொல்லலாமோ...?!!!!
நீக்குஅதிரா அது தெரியாமல்தான் பதிவின் இறுதியில் எழுதியது
நீக்குஎப்படியாவது சொல்லி தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்
நீக்கு///அதிரா! அப்போது விபூதி அவரை இன்னும் சீக்கிரம் அனுப்பி வைத்துவிட்டது என்றும் சொல்லலாமோ...?!!!!//
நீக்குஹா ஹா ஹா கர்ர்ர்:)) அப்படி இல்லை, சில பலகாலம் மிகவும் கஸ்டப்பட்டு.. கடவு?ளே என்னை எடுத்து விடு எனக் கெஞ்சி மன்றாடுவார்கள்.. அப்படி வேதனைப் படவிடாமல் அவரைக் கடவுள் அவ் வேதனையிலிருந்து காப்பாற்றி விட்டார்ர்:).. அதுக்காக ஜி எம் பி ஐயாவைத்தூதுவராக அனுப்பி திருநீற்ரைப் பூச வைத்திருக்கிறார்ர்:))..
இல்லை எனில் கடவுளில் திருநீற்ரில்.. சமய சடங்குகளில் நம்பிக்கை இல்லாதை ஜி எம் பி ஐயா அந்நேரம் ஏன் அங்கு போகோணும்.. எதுக்கு திருநீற்றைப் பூசோணும்ம்ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம். ம்ம்ம் எனக்கு நீதி தேவை:))
நண்பரின் கேஸ் அது அல்ல அவர் போகாமல் இருக்க முயற்சி செய்திருக்கிறார் அவருக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருந்தன நான் அங்கு சென்றது அவரது பயத்தை போக்க முடியுமா என்று தான் சமய சடங்குகளில் நம்பிக்கை இல்லாத ஜீஎம்பி அங்கு போய் திரு நீறு பூசுவதால் ஒரு வேளை ஆசுவாசம் கிடைக்கலாமோ என்னும் நப்பாசைதான் சில நம்பிக்கைகளை கோத்துப் பிடிக்க அல்ல கத்சைகள் நிஜமாகாது என்பதுதான்பதிவு
நீக்கு
பதிலளிநீக்குதிருநீற்றுப் பயன்
நல்ல அலசல்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
பலன் இருந்ததாக நினைக்கிறீர்களா சார்
நீக்குநேற்றே படித்து விட்டேன் ஐயா
பதிலளிநீக்குசில விடயங்களை நம்பாமல் இருக்கவும் முடிவதில்லையே....
த,ம,3
எனக்குத் ட்க்ஹோன்றுவதைப் பதிவிடுகிறேன் நம்புவதும் நம்பாததும் என்கையில் இல்லை
நீக்கு///எனக்குத் ட்க்ஹோன்றுவதைப் பதிவிடுகிறேன் நம்புவதும் நம்பாததும் என்கையில் இல்லை///
நீக்குஆங்ங்ங் ஜி எம் பி ஐயா சூப்பர் மாட்டீஈஈஈஈ:))... இதைப்போலத்தான் அட்வைஸ் பதிவைப் போடுங்கோ.. ஏற்றுக் கொள்ளுவதும் ஏற்றுக் கொள்ளாததும் உங்கட கையில இல்லை ஓகே?:))
பதிவு போடுவதா வேண்டாமா என்பது என் விருப்பம் யாரும் எதையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றால் நான் ஏன் உங்கள் விருப்பதை பூர்த்தி வேண்டும் நான் ஒன்றும் சோதனை எலி அல்ல
நீக்குஹா ஹா ஹா சரி விடுங்கோ.. உங்கள் விருப்பமே எங்கள் மகிழ்ச்சி... நீங்கள் வயதிலும் அனுபவத்திலும் உயர்ந்தவர் என்பதனாலேயே அழைத்தோம்ம்.. மற்றும்படி கட்டாயம் ஏதுமில்லை.. கஸ்டப்பட்டு ஆரும் எதையும் செய்யக்கூடாது.. விரும்பித்தான் செய்ய வேண்டும்...
நீக்குகுறையோ வற்புத்தலோ இதில் ஏஒன்றும் இல்லை ஐயா... விரும்பாட்டில் விடுங்கோ:)..
நோயின் பிடியில் அகப்பட்டு இறுதிமூச்சுக்காய் இன்னல்படும் சூழலில் பெற்றவரையும் உற்றவரையும்.. ஏன்.. படைத்தவனைக் கூட நிந்திக்கும் மனநிலையில் நட்பெல்லாம் எம்மாத்திரம்..
பதிலளிநீக்குநட்பை அவர் குறை கூறவில்லை நானொரு பாடம் கற்றேன் எதையும் எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை என்று
நீக்குஅவர் ஏற்றுக்கொண்டாரோ இல்லையோ, உங்கள் எண்ணம் பாராட்டத்தக்கது.
பதிலளிநீக்குநடந்து முடிந்து ஆண்டுகள் ஓடிவிட்டன எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன நாம் பாடம் படிக்கிறோமா என்ன
நீக்குவித்தியாசமான அனுபவம் ஐயா
பதிலளிநீக்குஒரு நிகழ்வை கதையுடன் ஒப்பிட்டு இருக்கிறேன் சார்
பதிலளிநீக்குஇரு நிகழ்வுகளையும் படித்தேன்.
பதிலளிநீக்குஉங்களுக்குத் தெரிந்திருக்கும். குதிரையை குளத்துக்கருகேதான் கொண்டுசெல்ல முடியும். நீரைக் குடிக்கவைக்க முடியாது.
உங்கள் நண்பருக்கு, விபூதியினால் குணமாகும் அல்லது நோவு குறையும் என்ற நம்பிக்கை இல்லைபோலும். நம்பிக்கையும் விசுவாசமுமே முக்கியம்.
நீங்கள் எழுதிய நிகழ்ச்சி, காஞ்சிப் பெரியவர்கள் வாழ்வில், 'மந்திரம் பலிதமாவதைக் கண்டுபிடிப்பது' என்பதைப் பற்றிப் படித்ததை நினைவில் வரவைத்துவிட்டது. (தாமதத்துக்குக் காரணம், பசங்க இங்க வந்திருந்துவிட்டு கிளம்பினார்கள். அவர்களுக்கான obligationsல் நான் மிகவும் பிஸி)
மக்களுடன் பொழுது இனிதே கழிந்ததா வருகைக்கு நன்றி சார்
நீக்கு