கதையும் நிகழ்வும்
---------------------------------
பலநேரங்கள் என்ன
எழுதி பகிர்வது என்று தோன்றும் நிஜ வாழ்க்கை சம்பவத்தோடு இணைக்கும் ஒரு பதிவு இது
அந்தக்காலத்தில் திரு மதுரையை கூன் பாண்டியன்
என்னும் அரசன் ஆண்டு வந்தானாம் அவன் சமண சமயத்தைச் சேர்ந்தவன் திரு ஞான சம்பந்தரும் சில சைவக் குரவர்களும் தங்கி இருந்த மடாலயத்தை
சமணர்கள் தீ வைத்துக் கொளுத்தி விட்டனராம்
அதன்பின் ,( அதன் விளைவால் என்கிறார்கள் ) மன்னனுக்கு வெப்பநோய் தாக்கி வேதனைக்
குள்ளானான் சமண்ர்கள் செய்த
மருத்துவம்பலிக்க வில்லை மன்னன் தொடர்ந்து வேதனை அனுபவித்தான் மன்னனின் சகோதரி சைவ சமயம் சார்ந்தவள் மங்கையர்க்கரசி ஞான சம்பந்தரிடம் கூறி பரிதவித்தாளாம் மன்னன்
நலமடைய ஆலவாய் அண்ணலின் ஆலயத்திலிருந்து திருநீறு கொண்டு வரச் செய்து மன்னனின் உடலில் பூசி
திருநீற்றுப் பதிகத்தைப் பாடினாராம்
பாண்டிய மன்னனின் வெப்ப நோய் நீங்கிற்றாம் அதற்கு மேலும் அவனது கூன் நீங்கி நெடுமாற பாண்டியன் ஆனானாம் மன்னன் சைவ சமயத்தில் சேர்ந்தான் பல
சமணர்களும் வாதில் வெல்லப்பட்டு கழு வேற்றப்பட்டனராம்
மேலே கூறியது
படித்து கேட்ட கதை திரு ஞானசம்பந்தர்
திருநீற்றுப் பதிகம் பாடிய கதை
இனி கூறப்போகும் சம்பவம் நிஜத்தில் நடந்தது
திருச்சியில்
கொதிகலன் தொழிற்சாலையில் இருந்தபோது ஒரு ஆத்ம நண்பனுக்கு இதய நோய் வந்து
மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார்
அவருக்கு நோய் முற்றி டெலிரியம் வந்து சப்தம் போட்டுக் கொண்டிருந்தார் அவரது
முடிவு நெருங்கியது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும் போகும்போது பயம் கூடாது
என்பதால் நான் அங்கிருந்த கோவிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டு சிறிது விபூதி கொண்டு வந்து அவரை ஆசுவாசப் படுத்தி திருநீறைப் பூசினேன் அவரது உபாதை குறைய வில்லை
சிறிது நேரம் கழிந்து நான் அவரைப்
பார்க்கப் போனபோது கோபத்துடன் “நீயும்
உன் விபூதியும் நீயே பூசிக் கொள் “ என்று
இரைச்சலிட்டார் வெகு விரைவில் அவரது உயிர்
பிரிந்தது
கங்காளன் பூசுங்
கவசத் திரு நீற்றை
மங்காமல் பூசி
மகிழ்வீரே யாமாகில்
தங்கா வினைகளும்
சாரும் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வீரே
(திருமந்திரம்)
நண்பர் சிங்காரமான
திருவடி சேர்ந்தாரா தெரியவில்லை