பதிவர் சந்திப்பு -4
---------------------------
நான் சென்று சந்தித்த பதிவர்கள் - மதுரை
2013ம் ஆண்டு என்ற நினைவு
நான் கோவைக்கு என் தம்பியைக் காணச்
சென்றிருந்தேன் அவன் மதுரைக்கு சென்றிராததாலும்
எனக்கு இந்த சந்தர்ப்பத்தை பதிவர்களை சந்திக்க உபயோகிக்கவும் ஒரு நாள்
அவனது காரில் கோவை சென்றோம் எனக்கு usst venkat
என்பவரின் முகவரி இருந்தது இப்போது
அவர் வலைப்பக்கத்தில் எழுதுவது நின்று விட்டது
அவர் யாதோ ரமணியின் உற்ற
நண்பர் மதுரையில் சரவணன் பழக்கம் அவர்
மூலம் சீனா ஐயா பரிச்சயம் இவர்க;ளுடன் சிவ
குமாரனும் தெரியும் இவர்களை எல்லாம்
சந்திக்க வேண்டும் என்னும் ஆவல்
இருந்தது கோவையில் டைம்ஸ் என்னும்
ஹோட்டலில் தங்கினோம் ஒரு நாள் எல்லோரும்வரும்படி ஏற்பாடு இதில் மகிழ்ச்சியான ஆச்சரியம் என்ன என்றால் தமிழ்வாசி பிரகாஷும்
வந்திருந்தார் சிவகுமாரன் சற்று
தாமதமாக வந்தார் பலபெயர் பெற்ற பதிவர்களை
சந்திக்கப் போகிறோம் என்னும் மகிழ்ச்சி. என்னுடன்
தம்பியும் அவன் மனைவியும் என் மனைவியும் இருந்தார்கள் ஒரு வேளை அவர்களுக்கு
இது அத்தனை மகிழ்ச்சி தருவதாய் இருக்காது என்பதால் அவர்களை
மதுரை நாயக்கர் மகாலில் நடைபெற்றுக் கொண்டிருந்த லைட் அண்ட் சௌண்ட் நிகழ்ச்சிக்கு அனுப்பி
பதிவுலக ஜாம்பவான்களை எதிர் நோக்கி இருந்தேன்
வலைப் பதிவு ஒன்றேஇணைப்புப்பாலமாக இருந்தது என்ன பேசுவது எதைப் பேசினால்
யாரும் வருத்தப்பட மாட்டார்கள் என்னும்
சிந்தனையே எனக்கிருந்தது பொதுவாக
சிறிது நேரம் பேச்சு நடந்தது நானோ அப்போது எழுத்தில் என்னை வெளிப்படுத்திக் கொள்ள தீவிரமாய்
இருந்தேன் எனக்கு பதிவர்களின் சொந்த பந்தங்களை
அறிந்து கொள்ள கேட்டுத் தெரிய சங்கோஜம் பொதுவாகச் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து
விட்டு அவரவர் வேலையை கவனிக்கப் போய் விட்டார்கள்
ரமணி சார் இன்னும் கூட நேரம் செலவு செய்தார் அவரிடம் நீண்ட நேரமுரையாடினேன் அவரையும்
அழைத்துக் கொண்டு இரவு உணவு உண்ண ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம்
என்னுடன் வந்திருந்தவர்களும் திரும்பி இருந்தனர் முன்பொரு முறை மதுரை வந்திருந்தபோது
மதுரை சுங்கிடி புடவை என் மனைவி வாங்கி இருந்தாள்
ஆனால் எங்கு என்ன என்னும் விஷயங்கள்மறந்து
போக வலை நண்பரிடம் கூறினாள் அவரும் சுங்கிடி புடவை கிடைக்கும் இடதுக்குக் கூட்டி போவதாகச்
சொல்லி அழைத்துச் சென்றார் ஏற்கனவே பல இடங்களுக்குப் போய் வந்த களைப்பு அவர்களுக்கு நடந்தோம்
நடந்தோம் நடந்து கொண்டே இருந்தோம் கடைசியில்
அங்கிருந்த போத்தீஸ் கடையைக் காண்பித்தார் இந்த மாதிரி போத்தீஸ் கடைகள்தான் கோவையிலும் சென்னையிலுமிருக்கிறதே மதுரைச்சுங்கிடி கேட்டால்
போத்தீசுக்கு அழைத்து வந்தாரே என்னும் ஏமாற்றம்
அவர்களுக்கு இருந்தது அந்த மதுரைப் பயணம்பற்றிய நினவுகள் வரும்போதெல்லாம் இந்த நிகழ்வும் அநியாயத்துக்கு நினவுக்கு வருகிறது இதைக் குறிப்பிடாமல் இருக்கலாமோ இதையெல்லாம் எழுதாமல் இருந்திருக்கலாமோ
சிறிது நேரதுக்குப் பின் சிவகுமாரன் வந்தார் அவரது கவிதைகள் எனக்குப் பிடிக்கும் யாருக்குத்தான்
பிடிக்காது ? ஒரு முறை மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வது பற்றி எழுதியதற்கு நான் பின்னூட்டமாக எழுதியது அவருக்குப்பிடிக்கவில்லை என்னிடமிருப்பது பேனாதான் ஏகே 47 துப்பாக்கி இல்லையே என்று மறு மொழி கூறி இருந்தார்
இந்த நிகழ்வுக்குப் பிறகு இவர்கள் எல்லோரையும் மதுரை பதிவர் விழாவில் சந்தித்தேன் இவர்களைத் தவிர தேவக்கோட்டை கில்லர் ஜி மற்றும் ஜோக்காளி பகவான் ஜி திண்டுக்கல் தனபாலன் போன்றோரையும் மதுரை பதிவர் விழாவில் சந்தித்தேன்
ரமணி சாரின் பின்னூட்டம்
எல்லாம் ஒரே நேர்மறையாக இருக்கும் ஒரு முறையேனும் மாறாக இருக்காது எனக்கு நேர் எதிர் நான் மனசில் பட்டதைச் சொல்லி விடுவேன் நோ என்று
நினைத்து யெஸ் என்று என்னால் சொல்ல முடியாது இருந்தாலும் எழுதுபவரைக் குறை சொல்லாமல் எழுத்தைப்பற்றியே என் கருத்து இருக்கும் ஆனால் பரவலாக நான் புகழ்ந்து எழுதுவதில்லை என்னும் கருத்து பதிவர்களிடையே நிலவுவது எனக்குத் தெரியும்
 |
வெங்கட் தமிழ்வாசி சரவணன் சீனா ரமணி |
 |
தமிழ்வாசி பிரகாஷ், சரவணன் நான் சீனா ரமணி
|
 |
சிவகுமாரன் |
I can't help but smile! :) light or no light-- aren't we all doing the same?