நான் சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள்-3
----------------------------------------------------
சந்தித்தபதிவர்களில்
முதலாவதாக என்னை என் வீட்டில் சந்தித்தவரகளைப்பற்றியே எழுதுகிறேன்
பல்வேறு இடங்களிலும் நான் பதிவர்களை
சந்தித்திருக்கிறேன் அது பற்றி பின் எழுதுவேன்
திரு செல்லப்பா யக்ஞசாமியை
பலமுறை சந்தித்து இருக்கிறேன்சென்னையில் ஒரு முறை மனைவியுடன் வந்திருந்தார்இந்தியா ஆறு மாதம் அமெரிக்கா ஆறு மாதம் என் பொழுதைக் கழிப்பவர் சில நாட்களாகப் பதிவுப் பக்கம் வராதவர் நலம்கேட்டு
எழுதி இருந்தேன் அவர் பெங்களூர் வர இருப்பதாகக் கூறினார் அவரை என் வீட்டிலேயே தங்கும் படி வேண்டிக் கொண்டேன் அவரும் ஒப்புதல் தந்து ஒரு நாள் இருந்தார் அது இந்த
உகாதிப் பண்டிகைக் காலம் என்னையும் அழைத்துக்
கொண்டு அவரது நண்பரின் அலுவலகத்துக்குச் சென்றார்
அப்போதெல்லாம் என்னை தனியாக எங்கும்
என் மனைவி விடுவதில்லை. செல்லப்பவுடன்
செல்ல அனுமதி கிடைத்தது நேரம் ஆகி
விட்ட படியால் மனைவி பலதொலைபேசி அழைப்புகளை
அனுப்பி விட்டார் கடைசியில் அவரது நண்பருடன்
வந்தோம்சென்னையில் எப்போதும் சந்திக்க வருவார் கடந்த முறை அமெரிக்காவில் இருந்தார் வரமுடியவில்லை என்னிடம் மிகவும் சகஜமாக இருப்பார் பின்னூட்டங்களிலும் தெரியும்
|
திரு செல்லப்பா என்வீட்டில் பெங்களூரில்
|
|
திரு செல்லப்பா சென்னையில் மனைவியுடன் |
அயல் நாட்டிலிருந்து என்னைச் சந்திக்க வந்தவர்களுள் திரு அப்பாதுரை முக்கியமானவர் மிகவும் சுவாரசியமானவர்
ஏறத்தாழ எங்கள் எண்ணங்கள் ஒருபுள்ளியில் சந்திக்கும் ஆனால் எழுத்தில் மிகவும் வல்லவர் என் மனைவிக்கு அப்பாதுரையின் கதைகள் மிகவும் பிடிக்கும் அவரதுகற்பனைகளே அலாதி. பெங்களூரில் வைட் ஃபீல்டில்
தங்கி இருந்தவர் போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டு மிகவும் நொந்து போனார் எங்களுடன் சொற்ப நேரமே தங்கி இருந்தார் என்றாலும் மதிய உணவை எங்களுடன் உண்டார் . பொழுது மிக நன்றாகப் போனது இன்னுமொருமுறை பெங்களூர்
வந்தபோது என்னை சந்திக்க முடியாமல் போக இந்த போக்கு வரத்தே காரணம் என்றார் அவருக்கு அவரது தாயையும் பாட்டியையும்
ஹிமாலய யாத்திரைக்குக் கூட்டிப்போக வேண்டுமென்னும் ஆசை இருந்தது நிறவேறிற்றா தெரியவில்லை அவரது கலர் சட்டை என்னும் தளத்தில் இருந்த சில வாக்கியங்களை
நான் அவர் அனுமதி இல்லாமலேயே பயன் படுத்தி இருக்கிறேன்
|
திரு அப்பாதுரை என் வீட்டில்
|
|
அப்பாதுரை அவரது கைக் கணினியில் |
நியூசிலாந்து பதிவர்
துளசி கோபால் என் வீட்டுக்கு வரும்போது அருகில்
வந்தும் வீடு கண்டு பிடிக்க முடியாமல் தடுமாறி இருக்கிறார். கணவர் மைத்துனர் துணைவியர்
சகிதம் வந்திருந்தார் அது என்னவோ தெரிய வில்லை
வருகிறவர்கள் எல்லோருக்கும் என் மனைவியைப்
பிடிக்கிறது திருமதி கோபால் அவர்கள் போகாத கோவில் இல்லை எனலாம் திவ்யதேசக் கோவில்களுக்கு
முக்கியத்துவம் அவரை நான் மதுரை பதிவர் சந்திப்பிலும் மீண்டும் சந்தித்தேன் இவரது பிரக்யாதி பிரச்சித்தம்
|
திரு கோபால், துளசி
|
|
துளசி கோபால் சகோதரர் மனைவியுடன் நானும் |
என்னை என் வீட்டில்
சந்தித்தவர்களுள் இவரைப் பலருக்கும் அடையாளம்
தெரியவில்லை ஒரு பதிவு எழுதி இவரது புகைப்படமும்
வெளியிட்டிருந்தேன் வலையுலகில் இன்காக்னிடோ
வாக வளைய வருவதால் இந்த சங்கடம் திரு ஏகாந்தன் அவர்கள் புதுக் கோட்டை பதிவர் விழாவில்
என்னை சந்தித்தார் இல்லையென்றால் எனக்கும் அடையாளம் தெரிந்திருக்காது டெல்லி வாசியாக இருந்தவர் தற்போது பெங்களூர் வாசி இவர் என் வீட்டுக்கு வந்ததில் பெரிதும்மகிழ்ந்தேன் மறுபடியும் வருகிறேனென்றார் அவர் இன்னும் வந்து கொண்டிருக்கிறார் என் பதிவுகள் சிலவற்றைப் படித்தவர் முன்பு போல்
இப்போதுஎன் எழுத்தில் ஃப்லோ இல்லை என்கிறார்
சரி என்றே தோன்றுகிறது நிறைய பிரயாணம் செய்தவர்
நிறைய படிக்கிறார் இன்னும்நிறைய விஷயங்கள் இவரை பற்றி உண்டு இப்போது வலையில் பிரசித்தி பெற்றுவருகிறார்
|
திரு ஏகாந்தன் என்வீட்டில்
இது தவிர தில்லையகத்து துளசிதரனும் கீதாவும் என்னை என்வீட்டில் சந்தித்து இருக்கின்றனர் ஒரு குறும் படத்தில் என்னையும் நடிக்க வைக்க வந்தார்கள் நான்புகைப்படமப்போது எடுக்க வில்லை. வேண்டாமென்று திருமதி கீதா தடுத்து விட்டார்கள்
பாலக்காட்டில் துளசியை சந்தித்தபோது
|
ஒவ்வொருவரையும் விவரிக்கும் விதம் இரசனைனாக செல்கிறது
பதிலளிநீக்குதிரு. ஏகாந்தன் அவர்களை இப்பொழுதுதான் புகைப்படத்தில் காண்கிறேன்.
என்னைப்போல் பையன் என்று நினைத்திருந்தேன்.
///என்னைப்போல் பையன் என்று நினைத்திருந்தேன்.///
நீக்குஹா ஹா ஹா கர்ர்:)).. “தலைமை” போட்டால்ல்:) அவரும் பையன்போலத்தான் இருப்பார்ர்:) ஹையோ மீ எஸ்கேப்ப்ப் இப்போ ஜி எம் பி ஐயா இதுக்கு ஏதும் ஏடாகூட வியக்கம் குடுக்கப்போறாரே எனக்கு:)) ஹா ஹா ஹா:)..
@கில்லர்ஜி
நீக்குஎனக்கும் புதுகையில் சந்தித்தபோது தெரியவில்லை பிறகு அறிமுகமாகி வீட்டுக்கு அழைத்தேன் இவரும் பல நாடுகளுக்குப் பயணப்பட்டவர்
@அதிரா ஆண்பதிவர் என்னும் பொருளில் கூறி இருக்கிறார் இது ஏடகூட விளக்கமில்லையே
நீக்குதாங்கள் சந்தித்த அறிஞர்களைப் பகிர்ந்ததில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅடுத்த தடவை இந்தியா வரும் வேளை
நானும் தங்களைச் சந்திப்பது உறுதி!
சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சி அடைவேன்
நீக்குஆஹா மிக அருமையான சந்திப்பூ.... சிலரைத்தெரியும் சிலரைத் தெரியாது. அப்பாத்துரை அவர்களை இப்போம் 3ம் தடவையாகப் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ்வ்வ்வ் மீ பொயிண்ட்டுக்கு வந்திட்டேன்ன்ன்ன்.. அது ஏகாந்தன் அண்ணனோஓஓ?.. நான் அவரை வேறு விதமாக எல்லோ மனதில் கற்பனை பண்ணி வச்சிருந்தேன்ன்ன்ன்ன்:)).. ஹையோ என் கற்பனைக்கு ஒப்பசிட்டாக இருக்கிறாரெ நேரில்... ஆவ்வ்வ்வ்வ்:).
அதிரா அப்பா துரை இதில் வித்தியாசமாக இருக்கார் இல்லையா...அது போல நானும் ஏகாந்தன் சகோ பற்றி வேறு விதமாகக் கற்பனை செய்திருந்தேன்...புதுக்கோட்டைக்குப் போயிருந்தோமே அப்போ கூடப் பார்க்கலையே எஎங்களுக்கு அப்போ அறிமுகம் இல்லை இப்போ எபி வழியாக ஏகாந்தன் சகோவை ஃபாலோ செய்யறோம்...இப்பத்தான் நானும் படம் பார்க்கிறோம்...எஸ் எனக்கும் கற்பனைக்கு ஆப்போசிட்டாகத்தான் இருக்கார்...ஹா ஹா ஹா
நீக்குகீதா
ஹா ஹா ஹா கீதா:).
நீக்கு@அதிரா தெரியும் என்றால் புரியவில்லை பதிவில் படித்தது என்று கொள்ளவா கற்பனைகள்நிஜமாகாது
நீக்கு@துளசிதரன் அப்பாதுரை வித்தியாசமாக இருக்கிறார் என்றால் எங்கள் ப்ளாகில் வந்த படம்போல் இல்லையா இதற்குத்தான் நேரில் பார்ப்பதை நான் விரும்புகிறேன் உங்களை எப்படி கற்பனை பண்ணிப் பார்ப்பது கற்பனைகள் மாறான எண்ணத்தைக் கொடுக்கலாம்
நீக்கு@அதிரா கற்பனையில் உங்களைப்போலத்தான் கீதாவும் இருந்தார் என்பதால் சிரிப்பா
நீக்குபதிவர்களைச் சந்திக்கும் பொழுது பொதுவாக அவர்கள் பதிவுகள் பற்றி ஏதாவது பேசுவீர்களா?.. இல்லை, அவர்களைப் பேச விட்டு நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பீர்களா?.. இல்லை, ஆரம்ப அறிமுகங்களுக்குப் பின் பொதுவான விஷயங்கள் பற்றி பேசுவீர்களா?.. உங்கள் நினைவிலிருக்கும் இதெல்லாம் பற்றி எழுதினாலும் இந்தப் பகுதி இன்னும் சுவாரஸ்யப்படும்.
பதிலளிநீக்குபொதுவாக பதிவுகள் பற்றிப் பேசுவதில்லை எனக்கு அவர்களைப் பற்றி அறியும் ஆவல் இருப்பதாலவர்கள் பேசுவதைக் கேட்பதேமுக்கியம் நாம் சென்னையில் சந்தித்தபோது எப்படி தெரிந்தது சில விஷயங்களை எழுதினால்சிலர் விரும்பமாட்டார்கள் எழுதப்படுபவர் மனதும் நோகக் கூடாது அல்லவா
நீக்குஅற்புதம்
பதிலளிநீக்குதுளசி டீச்சரின் பதிவு ஒன்றில் உங்களைப்பற்றிப்படித்தேன் முடிந்தால் சந்திக்க ஆசை
நீக்குபதிவர்களை நீங்கள் சந்தித்தது பற்றி எழுதுவது சுவாரசியமாகத்தான் செல்கிறது.
பதிலளிநீக்குஎழுதுனதுல கொஞ்சம் குழப்புவது, "திருமதி கீதா" என்று வரும் பகுதி. அவர் கீதா ரங்கன். அவருடைய பள்ளிக்கூட நண்பர் ஆசிரியர் துளசிதரன் தில்லையகத்து என்று நினைக்கிறேன்.
எப்போதும் எழுத்தைப் பார்த்துவிட்டு, குரலைக் கேட்கும்போது, நேரில் பார்க்கும்போது, மூன்றுவித பிம்பங்களைச் சந்தித்திருப்போம். ஶ்ரீராம், "ஏகாந்தன் சார்" என்று எழுதியதைப் பார்த்து அவர் மூத்தவராக இருக்கணும்னு நினைத்தேன். அவர் தளத்தைத் தொடர்ந்ததில்லை.
அனைவரும் நலமுடன் இருக்கட்டும்.
நெல்லை துளசி எனது கல்லூரி நண்பர்....
நீக்குஅப்போதெல்லாம் புகைப்படம் எடுக்க யாரையும் அனுமதித்ததில்லை. நான் என் பெயர் கூடப் போடாமல்தான் எழுதிக் கொண்டிருந்தேன். பின்னர் தான் மெதுவாக துளசியின் ஒரு குறும்படத்தில் வந்தே ஆக வேண்டியதானதால் அப்பத்தான் ஜி எம் பி ஸாரை சந்தித்த அப்போதுதான் நான் அப்போதும் ஸாரை எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவருக்கு ரொம்பவே வருத்தம் தான். அப்புறம் படத்திலேயே வந்தப்புறம் ஸ்ரீராம் கதைக்கு என் படம் கேட்டப்ப இந்தப் படத்தில் ஜி எம்பி ஸாருடன் உரையாடும் அந்தப் படத்தைத்தான் கொடுத்தேன்...அப்படியாக என் படம் வந்துவிட்டது.
நான் எங்கள் குடும்பத்தாருடனோ இல்லை மகனுடனோ எங்கு சென்றாலும் நாங்கள் இருவருமே எங்களைப் படம் எடுப்பதில் ஆர்வம் இல்லை இயற்கை விலங்குகள் என்ருதான் எடுத்துத் தள்ளுவோம்...ஏனோ எனக்கு என்னைப் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இல்லை....
ஜி எம் பி ஸாருக்குத் தெரியும் நாங்கள் நண்பர்கள் என்று. துளசியுடன் அவர் மனைவியும் தான் வந்திருந்தார் ஸாரின் வீட்டிற்கு. ஆனால் அவர் என்னை எப்போதுமே கீதா என்றுதான் குறிப்பிடுவார்....அதனால் அப்படித் தோன்றியிருக்கும்..
கீதா
@நெல்லைத் தமிழன் கீதாவை எனக்கு கிதா என்றுதான் அறிமுகம் எங்கள் ப்ளாகில் தான் அவரைகீதா ரங்கனாக தெரியும் ஸ்ரீரங்கம் கீதா சாம்பசிவம் எனக்கு கீதா மேடம் தான் பலவிதக் குழப்பங்களுக்கு ஆளாவதைத் தவிர்க்கவே நேரில் சந்திப்பு பொதுவாக நான் பதிவில் ஆண்களை எல்லாம் சார் போட்டுத்தான் அழைப்பேன் சிஅர் உரிமயுடன் வேண்டாம் என்பார்கள்
நீக்குதுளசிதரன்: குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. பதிவர்களைச் சந்திப்பது என்பது ஸ்வாரஸ்யம்தான். உங்கள் வீட்டில் அன்று சாப்பாடு ஷூட்டிங்க் என்று நன்றாகவே இருந்தது. பாலக்காட்டிலும் உங்களைச் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ஸார்.
பதிலளிநீக்குஏகாந்தன் ஸாரைத்தான் புதுக்கோட்டையில் மிஸ் செய்துவிட்டோம். அப்போது அறிமுகம் இல்லை. இப்போது பதிவின்மூலம் தான் தெரிகிறது அவரும் வந்திருந்தார் என்று.
கீதா: ஸார் எனக்கு அம்மாவை ரொம்பப் பிடிக்கும். (உங்கள் மனைவி) அத்தனை அன்பு! எப்போதும் சிரித்த பாஸிட்டிவ் முகம். ஃபோனில் பேசினால் கூட அப்படி ஒரு உற்சாகமான குரல், அன்பு வெளிப்படும். எனக்கு மிகவும் பிடிக்கும் ரொம்பவே ஈஸியாக மிங்கிள் ஆவார். எளிதாக மிங்கிள் ஆவார். நன்றாகப் பேசுவார். நமக்கும் தயக்கமெ இருக்காது. மனதிற்கு நெருக்கமானவர் போன்று தோன்றிடும் ஸார். என் ஓட்டு அம்மாவுக்கே!!! ஹா ஹா ஹா கோச்சுக்காதீங்க ஓகேயா...சென்னையில் சென்ற வருடம் சந்தித்தப்பவும்...அப்பத்தான் முதல் முறையா ஜீவி அண்ணாவைச் சந்தித்தேன் அதற்காகவே வெயிட் செஞ்சு சந்தித்துவிட்டுச் சென்றேன்.
ஏகாந்தன் சகோவை புதுக்கோட்டையில் பார்க்காமல் போன வருத்தம் இருக்கு...
துளசிதரனை நன்கு தெரியும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே நான் எழுதுவது @கீதா அது என்னவோ என்மனைவியின் ராசி அப்படிஎனக்கும் மகிழ்ச்சியே நேரில் சந்திப்புகள் நெருக்கத்டை உணாக்கும் என்பது என் எண்ணம்
நீக்குஆமாம் சார். நேரில் சந்திப்புகள் நெருக்கத்தை உண்டாக்கும் உண்மையே! எனக்கும் பிடிக்கும் ஸார்.
நீக்குகீதா
நாம் நேரில் சந்தித்து இருக்கிறோமே
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குசெல்லப்பா யக்ஞசாமி, அப்பாதுரை, கோபால் – துளசி,, ஏகாந்தன், தில்லையகத்து துளசிதரன் மற்றும் கீதா என்று எனக்கு வலையுலகில் அறிமுகமான நண்பர்களுடன் சந்திப்பு என்பதில் மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅப்பாதுரை, ஏகாந்தன் இருவரது புகைப் படங்களையும், இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
எழுத்தின் மூலம் அறிமுகம் என்பதைவிட நேரில் நட்பு என்பது சிறந்தது என்றே நினைக்கிறேன் ஒரு விதக் கூடுதலிணைப்பு என்று தோன்றுகிறது
நீக்குபதிவர் சந்திப்புகளை புகைப்படங்களுடன் பகிர்ந்து இருப்பது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஎல்லோருக்கும் என் மனைவியைப் பிடிக்கிறது//
எல்லோருக்கும் உங்கள் மனைவியை பிடிக்கிறது என்றால் அவர் வெகு நாட்கள் பழகியது போல் எல்லோரிடமும் அன்பாய் உரையாடுவது தான்.
முடிந்தவரை புகைப்படங்களை இணைக்கிறேன் ஆனல் சிலருக்கு ஏனோ தங்கள்புகைப் படம் வெளிவருவதில் விருப்பமில்லை என்மனைவியின் குணம் அது
நீக்குஇந்த தொடரில் என் பெயர் வர வாய்ப்புக்கள் இன்னும் சில ஆண்டுகளுக்கு இல்லை ஹும்ம்ம் அழுகை அழுகையாக வருகிறது ஆனால் நான் அழுதால் தேம்ஸ் நதியில் நீர்மட்டம் உயர்ந்து அந்த பகுதி வெள்ளக்காடாகிவிடும் என்பதால் அழுகையை அட்க்கி கொண்டிருக்கிறேன்
பதிலளிநீக்குசெல்லப்பா மிக ஜெண்டில்மேன் நாவ்லேட்ஜ் அதிகம் உள்ளவர் ஒரு முறை சந்தித்து இருக்கிறேன். அவர் இங்கு வரும் போது எல்லாம் பார்க்க முடியாமல் போகிறது அவர் இருக்கும் இடம் சிறித்து தூரம் அதிகம்
அப்பாதுரையை நான் சிறு இளையஞராக கற்பனை பண்ணி வைத்து இருந்தேன்....
நீங்களும் உங்கள் புகைப்படத்தைக் கூடக் காட்டவில்லை சிலர் அப்படீன்காக்னிடோவாகவே வளைய வருவதை விரும்புகிறார்கள் அப்பாதுரை வெகு சுவாரசியமானவர் சந்தித்த சில நொடிகளிலேயே நெருக்க மாகி விடுகிறார் ஓரளவுக்கு எங்கள் எண்ணங்கள் ஒரே கோட்டில் ஆனால் என்னைவிட நன்கு எழுதுகிறார்
நீக்குதுளசி மற்றும் கிதா ரங்கணை மறைந்து இருந்து பார்த்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் என் டுப்லிகேட்டை பார்த்துவிட்டு அதுதான் நான் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள் ஹீஹீ
பதிலளிநீக்குஅதில் ஒரு ஆநந்தம் உங்களுக்கு ஹாஹா ஹா
நீக்குஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் எல்லோரும் ஓடிவாங்கோஓஓஓ ஜி எம் பி ஐயா வாழ்க்கையில் முதல் தடவையாக சிரிச்சிருக்கிறார்ர்ர்ர்ர்ர் அதுவும் அதிராவைப்போல ஹா ஹா ஹா :)...
நீக்குஎனக்குச் சிரிக்கவும் தெரியும் எம்பது தெரிந்ததா அதிரா
நீக்குமதுரை வாங்க!!! இருங்க உங்களுக்கு இருக்கு!!! செல்லப்பா ஸாரி எப்ப சந்திச்சீங்களோ அப்போத்தான் எங்களையும் !!!! ஹா ஹா ஹா அது டூப்ளிகேட் நா எங்களைப் பார்த்தவரும் டூப்ளிக்கேட்....அது உண்மையென்றால் எங்களை பார்த்தவரும் அவரே..நான் அவனில்லை என்றெல்ல்லாம் சொல்லி தப்பிக்கக் கூடாதாக்கும்!! ஹா ஹா ஹா சரி நான் நேரில் உங்க வீட்டுக்கே வந்துட்டேன்னு வைங்க அப்ப? பூரிக்கட்டை அடி டூப்ளிக்கேட்டுக்கா இல்லை நிஜமானவருக்கானு தெரிஞ்சுரும்...
நீக்குஅதிரா ஜி எம் பி ஸார் நேரில் பாருங்கோ சிரிப்பார்...நன்றாகவே ...சூட்டிங்க் போது இது சரியா இன்னொரு முறை எடுக்கலாமா நு எல்லாம் ரொம்பப் பொறுமையா செய்தார்.
கீதா
பரவாயில்லையே நானும் சிரிப்பேன் என்று சொன்னதற்கு நன்றியும் வாழ்த்தும்
நீக்குஇவர்களில் நான் பார்க்காதவர் ஏகாந்தன் சார் மட்டுமே ..நான் கற்பனை செஞ்சு வச்சிருந்தவர் ப்ரொபஸர் HOD மாதிரின்னு சொல்லலாம் .அதனாலேயே பயந்து தான் கமெண்ட்ஸ் போடுவேன் :) ..
பதிலளிநீக்குஎன்புகைப்படத்தைப் பார்த்தும் ஏதோ கோபக்காரனாய் கற்பனை செய்திருந்தீர்கள் அல்லவா
நீக்குஹையோ ஏஞ்சல் நானும் முதல்ல அப்படித்தான் ஏகாந்தன் சகோவுக்குக் கமென்ட் போடும் போது. இப்ப அப்படியில்ல அவர் நல்லாவே கலாய்க்கறார் ஸோ ரொம்ப ஈசிக்யா போச்சு...
நீக்குகீதா
இதற்குத்தான் வலை உலகில் அறிமுகங்கள் நட்பாய் பரிணமிக்க நேரில் சந்தித்து வேண்டும் என்பது
நீக்குஏகாந்தன் அவர்களை இந்தப் படத்தின் மூலம் அறிந்து கொண்டேன். மற்றவர்களைத் தெரியும். செல்லப்பா யக்ஞசாமி அவர்களை நேரில் பார்த்ததில்லை என்றாலும் படங்கள் வாயிலாக அறிவேன். அப்படியே துளசிதரன், கீதா ஆகியோரும்.
பதிலளிநீக்குஅது ஆச்சரியமில்லை உங்களை நேரில் காண்பதற்கு முயற்சி செய்ய வேண்டுமே
நீக்குஇனிமையான நினைவுகள் தொடரட்டும் ஐயா
பதிலளிநீக்குபடிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது
நன்றி
எனக்கும் இந்த சந்திப்புகள் இனிமையான நினைவுகளைத் தருகிறது
நீக்குஏகாந்தன் அவர்களை முன்னர் உங்கள் பதிவொன்றில் பார்த்த நினைவு. செல்லப்பா ஸார், கீதா ரெங்கன், அப்பாதுரை ஆகிய நண்பர்களை நானும் சந்தித்துள்ளேன். இனிய நினைவுகள் தொடரட்டும்.
பதிலளிநீக்குஆம் முன்பொரு முறை இவரைப் பற்றி எழுதி இருந்தேன் புகைப்படத்துடன் ஆனால் பெரும்பாலோருக்கு நினைவுக்க வரவில்லையே
நீக்குஜீவி ஸார் கருத்தை நானும் வழிமொழிகிறேன். அதனுடன் கூட, அவரவர்கள் தள லிங்க்கையும் அவர்கள் பெயரில் சேர்த்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
பதிலளிநீக்குவாசிப்பில் குறியாயிருப்பவர்கள்லிங்க் தேடி வருவார்கள் மேலும் எனக்கு அதில் நம்பிக்கை குறைவு
நீக்குஉங்களது இந்த சந்திப்புப் பகிர்வின் மூலமாக பலரைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் நடையில் படிக்கும்போது அவர்களும் உடன் இருப்பதுபோலத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குபதிவுகளின் மூலம் அற்முகம்வேறு நேரில் சந்தித்துதெர்ண்டு கொள்வது வேறு சென்னை வலைப் பதிவர் மகா நாட்டுக்கு வந்திருந்த பலரது புகைப்படங்களைவெளியிட்டு இவர்கள் யார் என்று கேட்டபதிவும் வாசித்த நினைவு
நீக்கு