ஒன்றிலிருந்து இன்னொன்று
----------------------------------------------
ஒன்றிலிருந்து
இன்னொன்று
சில தினங்களுக்கு
முன் இலக்கிய சிந்தனைகள் கலந்த பதிவு
ஒன்று எழுதி இருந்தேன் ஆனால் அதில்
கண்டிருந்த இலக்கிய வரிகளை கன்வீனியண்டாக ஒதுக்கிவிட்டு பெண்களின் அழகு பற்றிய சிந்தனைகளுக்குமட்டும்
பல்வேறு பின்னூட்டங்கள்
வந்திருந்தனஎனக்கும் ஏதோ சில விஷயங்களே
வாசகர்கள் கவனத்தை ஈர்க்கிறது என்பது புரிந்தது ஆகவே அதே சிந்தனையில் இதை சற்றே
விரிவாக எழுதுகிறேன் அதுவும் ஒரு காதலிக்கு எழுதுவதுபோல் இருந்தால்
கொஞ்சம்கூடுதலான கிக் கிடைக்கலாம்
அன்புள்ள காதலிக்கு, இந்தக் கடிதம் படிக்கத் துவங்கும் போது
உன் முகம் சிவப்பது உணருகிறேன். இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று வெட்கத்தால் ஏற்படுவது அடுத்தது கோபத்தால்
ஏற்படுவது. வெட்கம் புரிந்து கொள்ளக் கூடியது. கோபம்....? பொத்தாம் பொதுவாகக்
காதலிக்கு என்று எழுதினால் கோபம் வராதா என்ன...?இந்தக் கடிதம் , அன்பே, எல்லாக்
காதலிகளுக்கும் பொருந்தும். அதனால்தானே யாவரும் படிக்கும்படியாக எழுதுகிறேன்.
அநேகமாக காதலிப்பவர்கள் என்ன பேசுகிறார்கள்.? எல்லாம்
பேசுவார்கள். ஆனால் எதுவுமே பேசி இருக்க மாட்டார்கள். இதுதானே நடைமுறை. ?. ஒருவரின்
ரூப லாவண்யத்திலோ , கம்பீரத்திலோ மனதைப் பறி கொடுக்கிறார்கள், ஏதோ சொல்லத் தெரியாத
கவர்ச்சியே அடுத்தவரிடம் மனம் ஈர்க்கச் செய்கிறது. அழகு என்பது அதில் ஒன்றுதான்.
இல்லையென்றால் அழகில்லாதவர் காதல் வசப் படுவதில்லையா ? இந்தமாதிரியான எண்ணங்களே,
கண்ணே , என்னை “ இன்னார்க்கு இன்னார் “ என்று ஒரு பதிவு எழுத வைத்தது.
அறிந்துகொள்ள உந்தப் பட்டால் படித்துப் பார்.
ஒருவர் கண்ணுக்குத் தெரியும் ஒருவித அழகு, மற்றவர்
கண்ணுக்குப் புலப் படாமல் போகலாம். இதைத்தான் ஆங்கிலத்தில் “ BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER “ என்பார்கள். அது போகட்டும். எனக்கு
உன் மீது காதல் ஏற்பட்டது ஒரு அந்திமாலைப் பொழுது. . செக்கச் சிவந்த ஆதவனின்
கிரணங்கள் மேற்கே மறையும் தருவாயில் , உன்
கன்னச் சிவப்பு முன் நிற்க முடியாமல் , கோபத்தில் அவன் வானத்தையே இருளச் செய்ய
முயன்று கொண்டிருந்தானே, அப்போதுதான். கூடவே வானில் வெள்ளி நிலவு தலை காட்டி உன்
அழகை மேலும் பிரகாசிக்கச் செய்தது கண்டேன். பின்னொரு தினம் அந்த நாளை நினைத்து
உன்னிடம் ஒரு கவிஞன் எழுதியதை நினைவூட்டினேன். ஞாபகம் இருக்கிறதா. ?” நிலவைப் பிடித்து , அதன் கறைகள் துடைத்து, ,குறு முறுவல் பதித்த முகம் “
இப்பொழுது அதை எண்ணிப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. நிலவைப் பிடித்து அதன்
கறைகளைத் துடைத்து குறு முறுவல் பதித்தால் எப்படி இருக்கும். ? கணினியில்
உபயோகிக்கப் படும் SMILEY போல் இருக்கும். ..!ஒரு விஷயம்
பிடித்து விட்டால் என்ன குறை இருந்தாலும் அடிபட்டு விடும். அன்பே.... இது
முக்கியம்...! இந்தமாதிரியான விருப்பும் வெறுப்பும் புற அழகில்
கட்டுண்டிருக்கும்போதோ, அதிலிருந்து மீண்ட போதோ மட்டும்தான் தலை தூக்கும். உண்மையான
காதல் முதலில் புற அழகால் தோன்றினாலும்
நாள்பட நாள்பட ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்போது வலுவாகும்.
கண்டவுடன் காதல் என்பது பொதுவாக ஆண்களுக்குத் தான்
ஏற்படுகிறது. பெண்கள் காதல் வசப் பட்டு இருக்கிறார்களா என்பதை அறிவதே பெரும்பாடு.
அக அழகைக் காண அவர்கள் அதிக நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள் போலும். நான் முன்பே
சொன்னதுபோல் காதலர்கள் சந்தித்துப் பேசும்போது, அவர்கள் காதலை உறுதிப் படுத்திக்
கொள்வதாக நினைத்து அது குறித்து மட்டும் பேசுகிறார்கள். காதல் வாழ்க்கையின் ஒரு
பகுதி. அதை திருமணத்துக்குப்பின்னும் தொடரச் செய்வது மிகவும் அவசியம். காதலிக்கும்போது
குறைகள் தெரிவதில்லை. திருமணத்துக்குப் பின் அவைதான் பூதாகாரமாகத் தெரியும். A
PERFECT PERSONALITY என்று யாரும் கிடையாது. குறைகளும் நிறைகளும்
ஊடுருவி இருப்பதே மனித இயல்பு.
காதலிக்கும்போது எல்லாம் இன்ப மயமாக இருக்கும்.
காதலிப்பவரால் தேடப் பட்டும் விரும்பப் பட்டும் இருக்கும் நிலை மகிழ்ச்சிதருவது
நிச்சயம் கிடைத்த பிறகு சில எதிர்பார்ப்புகள் நிறை வேறாதபோது வருத்தம் தோன்றுவதும்
நிதர்சனம். இவ்வளவையும் நான் உன்னிடம் நேரில் சொல்ல முடியாதா என்ன. ? முடியும்.
ஆனால் மூடியாது. .! எங்கே என்னைப் பற்றிய உன் எண்ணங்கள் மாறிவிடுமோ என்னும் பயம்
என் வாயை அடைத்து விடும். உனக்குள் ஆயிரம் கனவுகள் இருக்கும். கனவுகளும்
நிதர்சனங்களும் ஒரு கோட்டில் சந்திக்கும்போது திருப்தியும் மன நிறைவும்
ஏற்படுமானால் காதல் வெற்றி அடைந்து விட்டதாகக் கொள்ளலாம்.
பொதுவாகக் காதலிக்கும்போது ஒன்றை மறந்து விடுகிறோம்.
காதலிக்கும் நபர் தனி மனிதர் என்று தோன்றினாலும் அவருக்கும் உறவு, சுற்றம் எல்லோரும் இருக்கிறார்கள்.என்பதை மறக்கக்
கூடாது. பதின்பிராயங்கள் வரையிலும், சில நேரங்களில் அதற்கு மேலும் வளர்ந்த
சூழலை எல்லாம் மறந்து விட்டு கணவன் ,
மனைவி என்று மட்டும் நினைப்பது சரியாகாது. நம் சமுதாயத்தில் பெண்களை நாற்றுக்கு
ஒப்பிடுகிறார்கள். அவள் வேறு ஒரு நிலத்தில் பயன் தர வேண்டியவள் என்று
எண்ணுகிறார்கள்.நாற்று நடும்போது, நாற்று மண்ணும் சேர்ந்திருந்தால்தன் பயிரின்
பலன் சிறப்பாய் இருக்கும் . ஆகவே பெண்ணின் பிறந்த வீட்டு நல்லெண்ணங்களுடன் அவள்
வாழ்க்கை துவங்க வேண்டும். ஆனால் மாறிவரும் சூழ்நிலையில் கணவனும் மனைவியும் ஒருவரை
ஒருவர் சார்ந்தே வாழ வேண்டும். அதே சமயம் உறவுகளுடனான பந்தங்கள் பலமாக இருக்கும்படியும் பார்த்துக் கொள்ள
வேண்டும்.
அன்பே, திருமண பந்தத்தில் சேரவிரும்பும் நாம் ஒன்றை மறந்து
விடக் கூடாது. இந்த பந்தத்தினால் தழைக்கப் போகும் வம்ச வுருட்ச வேரூன்றி
இருக்க கண்வன் மனைவி பங்களிப்பு
மகத்தானது. இது செய் ,அது செய் என்று கூறி வளர்க்கப் படும் பிள்ளைகளை விட, நாம்
வாழ்ந்து காட்டும் முறையைப் பின் பற்றும் பிள்ளைகளே அதிகம். ஆகவே அவர்களது
வாழ்வுக்கு எடுத்துக் காட்டாக நாம் இருப்பது அவசியம்.
என்னடா இது காதல்
கடிதம் எதிர் நோக்கி இருப்பவளுக்கு ,, வாழ்வு முறை பற்றிய பாடமாக இருக்கிறதே
என்னும் உன் எண்ணம் புரிகிறது. செல்லமே, சிந்தித்துப் பார். நாம் எத்தனை முறை
உரையாடி இருப்போம். SWEET NOTHINGS தவிர ஏதாவது பேசியிருப்போமா. என்னை நீ
நன்றாகப் புரிந்து கொள்ள என் சிந்தனைகளின் போக்கும் உனக்குத் தெரிய வேண்டும்
அல்லவா. நான் எண்ணுவதைக் கூறிவிட்டேன். உன் சிந்தனைகள் ஒத்து இருக்கும் என்ற
நம்பிக்கை உண்டு. மாறுபட்ட கருத்தோ, வித்துயாசமான எண்ணமோ இருந்தால் நீயும் எழுது.
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும்
வாழ்க்கையே சிறக்கும்.
கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் “ நான்
வேண்டுவதெல்லாம் நரை கூடும் பருவத்திலும்
நரைத்திடாத காதல்தான் “
அப்படி இருக்க இந்த மடலை இன்னுமொரு முறை படித்துப் பார். .
வேண்டியது கிடைக்க நினைத்து எழுதப் பட்டதே இக்கடிதம். இது நமக்கு மட்டும்
பொருந்துவதல்ல. காதலிப்பவர் அனைவரும் உணர வேண்டியது.
எங்கெங்கு நோக்கினும் சக்தியடா... என்றான் முண்டாசுக்
கவிஞன். ஆனால் எனக்கோ எங்கெங்கு நோக்கினும் உன் உருவே என் முன் நிற்கிறது. என்றும்
உன் நினைவுடன்........ உன் அன்பன்.
தொடக்கமே ‘’கிக்’’காக இருந்தது ஐயா
பதிலளிநீக்கு//வாழ்வு முறை பற்றிய பாடமாக இருக்கிறதே//
நானே கேட் நினைத்தேன் நீங்களே விடை கொடுத்து விட்டீர்கள்.
///நரை கூடும் பருவத்திலும் நரைத்திடாத காதல்தான்///
ஸூப்பர் அருமையான வார்த்தை ஜாலம்
வழ்வுமுறை பற்றிய படம் என்பதை விட காதலைப் புரிய வைக்கும் முயற்சி என்றே சொல்லலாம்
நீக்கு//நான் வேண்டுவதெல்லாம் நரை கூடும் பருவத்திலும் நரைத்திடாத காதல்தான்// - எனக்கு இந்த எண்ணமே இல்லையே சார்....
பதிலளிநீக்குமற்றபடி உங்கள் எழுத்து நடையை மிகவும் ரசித்தேன்.
எனக்கு யோசிக்கும்போது, 'ஆண், என்னவோ இருக்கு என்று மிகவும் வயப்படுகிறான். பெண், இல்லாத ஒன்றை இவன் கற்பனை செய்கிறான் என்று புரிந்து, அடுத்து திருமணம் ஆனால் கடைசிவரை வாழ்க்கைக்கு வழி இருக்கா என்று யோசிக்க நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறாள்' என்று தோன்றுகிறது. ஆனா நிறையபேர், 'காதல்', 'மனம் ஒன்றியது' அது இதுன்னு சொல்லி எங்கிட்ட சண்டைக்கு வராம இருக்கணும்.
காதல் என்பது ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை என்றும் ஆணுக்கு ஒரு அத்தியாயம்மென்றும் கூடச் சொல்வார்கள் காதலை அனுபவிக்க வேண்டும் அப்போது தெரியும் நரைத்திடாத காதல் என்ன வென்று
நீக்குவயதோடு வந்தாலும் காதல்... அது வயதாகி வந்தாலும் காதல்.. உலகத்தில் சில நூறு எழுத்து.. ஆனால் உறவுக்கு பல கோடி கருத்து
பதிலளிநீக்குஆணோ, பெண்ணோ அந்த வயதில் ஹார்மோன் தூண்டுதலால்தான் காதல் வயப்படுகிறார். உடல்கவர்ச்சியால் காதல் என்று சொல்லப்படும் வஸ்து வந்தாலும் விட்டுப் பிரியாமல், ஒருவருக்கொருவர் அவரவர் மைனஸ்களையும் புரிந்து கொண்டு இணங்கி வாழ்ந்தால் உடல் தேவைகள் மறைந்த பின்னும் மனதில் தோன்றும் நெருக்கம்தான் உண்மையான காதல்.
நான் எழுதுவதைப் படிப்பதை விட சிக்கலாக இருக்கிறதோ. வருகைக்கு நன்றி
நீக்கு//“ நான் வேண்டுவதெல்லாம் நரை கூடும் பருவத்திலும் நரைத்திடாத காதல்தான் “//
பதிலளிநீக்குஅருமை.
அன்பு என்றும் வாழ்க!
வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி
நீக்குஅந்த இன்னொன்றிலிருந்தும் இன்னொன்றிற்கு என்பது தான் இமாஜினேஷனின் ஆற்றல் மிகுந்த விரிந்த சக்தி!..
பதிலளிநீக்குஅனுபவசாலி சொன்னால் சரியாய்த்தான் இருக்கும் வருகைக்கு நன்றி சார்
நீக்குநல்ல கற்பனை வளம் செறிந்த பதிவு! உங்கள் வர்ணனைகள் எல்லாம் வியப்பூட்டுகின்றன. யதார்த்த வாழ்க்கையில் காதலனோ, காதலியோ இப்படி எல்லாம் வர்ணிச்சுக்கறாங்களா அல்லது வர்ணிச்சுப்பாங்களானு தெரியலை! ஆனால் காதலன், காதலி மணந்து கணவன், மனைவி ஆனப்புறமும் ஒருவர் மற்றொருவருடைய குறைகளையும் சேர்த்து அப்படியே ஏற்றுக் கொண்டார்களானால் காதல் என்றென்றும் நிலைத்து நிற்கும்னு நினைக்கிறேன். இது ஏற்பாடு செய்யப்பட்டு மணந்த கணவன், மனைவிக்கும் பொருந்தும். பரஸ்பரம் விட்டுக் கொடுத்தால் நரை கூடிக் கிழப்பருவம் எய்தினாலும் உண்மையான அன்புக்கு நரை, திரை தோன்றாது. :)
பதிலளிநீக்குஎதார்த்த வாழ்வில் நினைப்பது சொல்லப் படாததே பல சிக்கல்களுக்குக் காரணம் சொல்லப் படாத வார்த்தைகள் உதிரும் சருகுகளுக்கு ஒப்பாகும் வருகைக்கு நன்றி மேம்
நீக்குவாலிபத்தில் காதலிக்க...
பதிலளிநீக்குஅதற்கெல்லாம் இடமே இல்லாமல் போயிற்று..
ஆனாலும்,
>>> நான் வேண்டுவதெல்லாம் நரை கூடும் பருவத்திலும் நரைத்திடாத காதல்தான்.. <<<
இது மிகவும் முக்கியம்..
காதல் என்பது எப்ப வேண்டுமானாலும் வரலாம் அது பற்றிய சரியான புரிதலே அவசியம் வருகைக்கு நன்றி சார்
நீக்குநிறைய விசயங்கள் சொல்லியிருக்கிறீங்க.. இக்காதலியை உங்கள் மனைவியாக நினைச்சு அவவுக்கே எழுதியிருக்கலாம் கடிதம்..
பதிலளிநீக்குஇருமனம் இணைவதுதான் காதல்..
இளமையில் காதல் உடலுக்கு விருந்து..
முதுமையில் காதல் மனதுக்கு விருந்து...
மனைவியிடம்சொல்லாமலா அவர்களுக்கு என்னைப் பற்றி என்னை விட அதிகம் தெரியும் வருகைக்கு நன்றி
நீக்குஸார் சொல்ல வந்த கருத்துகள் அப்படியே ஸ்ரீராம் சொல்லிவிட்டார் எனவே அதை அப்படியெ வழி மொழிகிறோம்...ஒரு பாட்டு கூட உண்டு..."ஐம்பதிலும் ஆசை வரும்...ஆஅசையுடன் பாசம் வரும்...இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம்தானம்மா என்று கண்ணதாசன் அவர்களின் பாடல்வரிகள்...
பதிலளிநீக்குஉங்கள் பதிவை மிகவும் ரசித்தோம் சார்.
துளசிதரன், கீதா
என் பதிவைப் படித்து புரிவதிலும் கடினமான பின்னூட்டம் பாசம் அந்தரங்கம் கிடையாதா ஒப்புக் கொள்ள மனமில்லை மேலும் நான் எழுதியது யாரைப் பார்த்தும் அல்ல அக்மார்க் ஒரிஜினல்
நீக்குஹாஹாஹா அருமையான பதிவு. ஸ்மைலியையும் நரை கூடும் பருவத்திலும் நரைக்காதது காதல் என்பதையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஸ்மைலியை ரசித்தவர் நீங்கள் பாராட்டுக்குரியவர் பலரும் கண்டு கொள்ளாமல் போனது தமிழில் பின்னூட்டம்மகிழ்ச்சி தருகிறது
நீக்குகாதலைப்பற்றியும் கவிதையைப்பற்றியும் விளக்க முயல்வது அறியாமை வயப்பட்டோரின் செயல்..
பதிலளிநீக்குஎன்ன செய்வது எல்லோரும் அறிவு ஜீவிகள் இல்லையே
நீக்குநமஸ்காரம் ஸார். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். ( 11/11)
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீ
நீக்குஅப்படியா ஶ்ரீராம், எங்களுடைய வாழ்த்துகளும், நமஸ்காரங்களும்.
பதிலளிநீக்குஸ்ரீராம் மூலம் என் பிறந்தநாள் அறிந்து வாழ்த்தியமைக்கு நன்றி மேம் ஒரு கூடுதல் தகவல் இன்றே எங்கள் மண நாளும்
நீக்குவெற்றி பெற்றுவிட்டீர்கள் ஐயா. உண்மையிலேயே கூடுதலான கிக் இருந்தது.
பதிலளிநீக்குகிக் தான் புரியவில்லை வருகைக்கு நன்றி சார்
நீக்கு//இளமையிலே காதல் வரும்
பதிலளிநீக்குஎது வரையில் கூட வரும்?
முழுமை பெற்ற காதலெல்லாம்
முதுமை வரை ஓடி வரும்!//
என்பார் கவிஞர் கண்ணதாசன். முழுமையான காதலாக இருந்தால் நரை கூடும் பருவத்திலும் நரைத்திடாத காதல் இருக்கும் ஐயா.
தங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!
காதல் பற்றித் தெரிந்ததைத்தான் எழுதி இருக்கிறேன் திருமணம் காதல் திருமணம் நிகழ்ந்து இன்றோடு 53 வருடங்கள் பூர்த்தி ஆகிறது வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் சார்.
பதிலளிநீக்குநன்றி மேம்
நீக்குBelated birthday & anniversary wishes!
பதிலளிநீக்குஉங்கள் கடிதம் நன்றாக இருக்கிறது என்பதைத் தவிர காதல் பற்றி சொல்ல எந்த கருத்தம் என்னிடம் இல்லை.
பதிலளிநீக்குஒருவேளை காதல் பற்றிச் சொன்னால் அது தவறாகி விடுமோ என்னும் எண்ணமா பரவாயில்லை கடிதம் மூலம்பல கருத்துகள் சொல்ல விழைந்தேன் வருகைக்கு நன்றி
நீக்குமீள்வருகையின்போது பின்னூட்டங்களைக் கவனித்ததில்தான் தெரிந்தது.. Though belated -
பதிலளிநீக்குMany Many Happy Returns of the Day- Your Birthday and Wedding day. All the best wishes..
முகநுலிலிருந்து நிறைய வாழ்த்துகள் நன்றி சார்
நீக்கு