நான் சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள்
--------------------------------------------------------------------------------------
2010ம் ஆண்டு இறுதியில் வலைப் பக்கம் ஆரம்பித்தேன் அப்போதெல்லாம் வலையில் எழுதுபவர்களை எப்படியாவது சந்தித்து நட்பை வளர்க்க எண்ணினேன் பலருடைய பதிவுகளையும் படிக்க ஆரம்பித்தேன் மதுரையில் தலைமை ஆசிரியராய் இருக்கும் மதுரை சரவணன் அவர்கள்பெங்களூர் யுனிவர்சிடிக்கு ஆங்கில மேம்பாட்டுக்க்கான பயிற்சிக்கு வருகிறார் என்று அவர் வலைப் பதிவின் மூலம் அறிந்தேன் அவரை சந்தித்து என்வீட்டுக்கு வரவழைக்க முடிவு செய்தேன் முன்பின்பார்த்திராதவர் ஆனால் என் எழுத்துகளை அப்போதே ஊக்குவித்தவர் என்னும் முறையில் சரவணன் எனக்குப் பிரத்தியேக மாகத் தெரிந்தார் என் வீட்டிலிருந்து சுமார் 15 கிமீதூரமிருந்த யுனிவர்சிடி வளாகம்சென்று அவரை சந்தித்து அவருடன் அங்கேயே மதிய உணவு உண்டு அவரையும் என்வீட்டுக்கு அழைத்து வந்தேன் என் இளைய மகனை விட வயதில் சிறியவர் தன் பணியில் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்டவர் அவரை என் வீட்டில் தங்கிச் செல்ல வேண்டினேன் ஆனால் அதில் சிரமங்கள் இருக்கிறதென்று சொன்னார் இரவு உணவாக என்மனைவி அவருக்கு தோசை வார்த்துக் கொடுத்த நினைவு அப்போதெல்லாம் நான் ஒரு தனித்தாளில் எழுதி வைத்துப் பின் தட்டச்சிடுவது வழக்கம் அவர் நேராகவே தட்டச்சுக்குச் செல்வார் என்று அறிந்தது ஆச்சரியமாக இருந்தது ( இப்போது நானும் நேராகவே தட்டச்சு செய்கிறேன் முதலில் வேர்ட் ஃபார்மாட்டில் எழுதி பின் காப்பி பேஸ்ட் செய்கிறேன் ) அன்று மாலை அவர் மதுரையிலிருந்த சீனா ஐயாவுக்குத் தொலை பேசி என்னையும் அறிமுகம் செய்து வைத்தார் அவரை பேரூந்தில் ஏற்றி அனுப்பி வைத்தேன் என்னை முதன் முதலில் சந்தித்த வலைப்பதிவர் மதுரைசென்றதும் என்னைப் பற்றி அவரது வலையில் எழுதி இருந்தது நெகிழ வைத்தது பார்க்க
மதுரை சரவணன் |
மதுரை சரவணன் என் வீட்டில் என்னுடன் |
அடுத்ததாக நான் சந்தித்தபதிவர் சமுத்ரா (என்னும் மது ஸ்ரீதர் )
முன்பெல்லாம் அதாவது ஓராண்டுகாலம் முன் வரை
வலைத்தளத்தில் எழுதிக்கொண்டிருந்தார்ஏனோ
தெரியவில்லை இப்போதுமுகநூலில் எழுதி
வருகிறார் எதில் எழுதினால் என்ன அவர் ஒரு அறிவு ஜீவி என்னை அவர் சந்திக்க வேண்டினேன் அப்போது பெங்களூரில் இருந்தார் இப்போது சென்னை வாசி அவர் கலிடாஸ்கோப் என்றும்
அணு அண்டம் அறிவியல் என்றும் தலைப்பில் எழுதிக் கொண்டிருந்தார் அவரது மேதமை எனக்குப் பிடித்திருந்தது சந்திக்க விரும்பி தெரிவித்தேன் என்னைக் காண
வந்தே விட்டார் அவரது எழுத்துக்களைக் கொண்டு அவரை ஒரு பௌதிக பேராசிரியர்,
குறுந்தாடியுடன் இருப்பார் என்றெல்லாம்
கற்பனை செய்து வைத்திருந்தேன்
ஆனால் நேரில் கண்டபோது என்ன ஆச்சரியம் திருமணமே ஆகாத இளைஞர் அவரது பன்முக
ஆளுமை என்னை ஆச்சரியப்பட வைத்தது அவரென்னவெல்லாமோ எழுதி இருந்தாலும் என்னைக் கவர்ந்தது அவர் எழுதி இருந்த ஒரு சிறுகதை கோவிலில் கூட்டிப் பெருக்கும் ஒரு மூதாட்டிபற்றிய கதை அதன் கருத்து எனக்குப் பிடித்திருந்தது என் வீட்டுக்கு வந்தபோது என்மனைவி அவரைப்பற்றி கேட்டார் கோவையில் தந்தை இருப்பதாகச் சொன்ன நினைவு அடிக்கடி ஓஷா சொன்னதாகச் சில கருத்துகள் வெளியிடுவார். அவரது கலேடாஸ்கோப் விரும்பிப் படிப்பேன் அணு அண்டம் அறிவியல் மிகவும் கனமான தலைப்புகள் கொண்டது எனக்குப் புரியாதது அதையும் அவரிடம் சொல்லி இருக்கிறேன் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றவர் போல் தெரிந்தது ஒரு பாடலையும் பாடினார் டேப் செய்திருந்தேன் ஆனால் ரெகார்டர் பழுதானபின் போட்டுக் கேட்க முடியவில்லை நினைப்பது அதிகம் நினைவில் வருவது சொற்பம் என்னைப் பற்றி சிலாகித்துச் சொன்னதாக திருமதி ஷைலஜா கூறி இருந்தார்
( இன்னும் தொடரும் )
மது ஸ்ரீதருடன் நான் |
மது ஸ்ரீதரனென்னும் சமுத்ரா தலைப்பே ஒரு மாதிரியாக இருக்கிறதே நான்சந்தித்த பதிவர்கள் அதிகம் பயணித்து சந்தித்தவர்களைப் பற்றி இப்போது எழுதவில்லை என்வீட்டில் வந்துசந்தித்தவர்கள் பற்றிய தொடர் முதலில் |
இரண்டுபேர்களின் வலைப்பக்கத்துக்கும் நானும் சென்று படித்திருக்கிறேன். மதுரை சரவணனை ஒருமுறை மதுரையில் சந்தித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஅவர்களுக்கு உங்கச்ளையும் தெரிந்திருந்தால் இன்னும் நலமாக இருக்கும் வருகைக்கு நன்றி ஸ்ரீ
நீக்குஇருவருமே நான் அறியாதவர்கள்! அறிமுகத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குஇதை நான் எதிர்பார்த்தேன் இருவரும் சுவார்ச்சியமான பதிவர்கள் வருகைக்கு நன்றி மேம்
நீக்குசரவணன் அவர்கள் தளத்தை எப்போதோ வாசித்த நினைவு. இன்னொருவரைப் பற்றி இன்றுதான் அறிகிறேன். தொடருங்கள், புதியன தெரிந்துகொள்கிறேன்.
பதிலளிநீக்குஎனக்கு நான் தளங்களில் இருக்கும்தொடர்பு கூட நேரிலும் தெரிந்திருக்க விரும்புவேன்வருகைக்கு நன்றி சர் இன்னிம் பலரையும் பதிவில் அறிமுகபொபடுத்துவேன் தொடருங்கள் சார்
நீக்குநல்ல சந்திப்பு ஐயா...
பதிலளிநீக்குதொடருங்கள்.
புதிதாக சந்திக்க இப்போதெல்லாம் முடிவதில்லை சந்தித்தவர் பற்றிய தொடரே இது வருகைக்கு நன்றி சார்
நீக்குமதுரை சரவணனை தெரியும். இன்னொருவர் புதியவர். ஷைலஜாக்காவும் தெரியும் பார்த்ததில்லை. ஆனா, போன்ல பேசி இருக்கேன். என் பொண்ணு பார்த்திருக்கா
பதிலளிநீக்குதிருமதி ஷைலஜா பற்றிய சந்திப்பும் வரும் வருகைக்கு நன்றிம்மா
நீக்குஅருமையான சந்திப்புக்கள் தொடரட்டும் பதிவர் சந்திப்புக்கள்..
பதிலளிநீக்குநாங்களும் பிரித்தானியாவிலயும் தேம்ஸ் கரையில் ஒரு பதிவர் சந்திப்பு அரேஞ் பண்ணோணும்:)..
நீக்குஅப்படி அரேஞ் பண்ணும் போது எனக்கு ஒரு அழைப்பு விடுங்கள் நான் அங்கு வந்து எப்படியாவது உங்களை...தேம்ஸ் நதியில் தள்ளி விடுகிறேன்
@அதிரா வலைப் பதிவர் சந்திப்புகள் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன பிரித்தானியாவிலாவது நடக்கட்டும் வருகைக்கு நன்றி மேம்
நீக்கு@அவர்கள் உண்மைகள் எப்ப்படி அழைப்பு வரும் அவர்கள்தான்யாருக்கும் முகவரி கூட தருவதில்லையே
நீக்குநண்பர். மதுரை சரவணன் அவர்களைத் தெரியும் ஐயா உங்களை மதுரையில் சந்தித்த அன்றே அவரையும் சந்தித்தேன் தொடர்கிறேன்
பதிலளிநீக்குதமன்னா 1
மதுரை சந்திப்பு மறக்க முடியாதது உங்களையும் வரவேற்க காத்திருக்கிறேன்
நீக்குஐயா உஙஃகள் விருப்பத்திற்கு ஏற்ப நான ஒருகவிதையே எழுதியுள்ளேன் !
பதிலளிநீக்குசுட்டி தர வில்லையே ஐயா தாருங்கள் படிக்கிறேன்
நீக்குசமுத்திராவை வாசித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஅவர் ஒரு அறிவு ஜீவி / ரசிக்கத்தக்க எழுத்து
நீக்குசந்திப்புக்கள் தொடரட்டும்....வாய்ப்பு கிடைத்தால் நாமும் சந்திப்போம்........
பதிலளிநீக்குஎனக்கு வயதாகிப் போகிறது இனி பதிவர்கள் சந்திப்பிலும் கலந்து கொள்ள முடியுமா என்பதே சந்தேகம் நீங்கள் இந்தியா வந்தால் முயற்சி செய்யுங்கள் வருகைக்கு நன்றி சார்
நீக்குஅருமையான சந்திப்பு. சரவணன் அவர்களை இரண்டு மூன்று முறை சந்தித்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குசமுத்திரா அவர்கள் வலைத்தளம் படித்து இருக்கிறேன்.
நல்ல சந்திப்பாக இருந்திருக்குமே வருகைக்கு நன்றி மேம்
நீக்குசரவணன் அவர்கள் பதிவையும் படித்தேன்.
பதிலளிநீக்குஅருமையாக உங்களைப்பற்றி எழுதி இருக்கிறார்.
நட்பைப் போற்றும் உங்கள் குணம், உங்கள், மனைவி, மகன் எல்லோர் குணத்தையும் மிக அழகாய் உணர்ந்து சொல்லி இருக்கிறார்.
நீங்கள் ஒருவர்தான் சுட்டிக்கு சென்றது பற்றி எழுதி இருக்கிறீர்கள் நன்றி மேம்
நீக்குதெரிந்து கொண்டேன் படித்தும் பார்த்தேன் சார் தொடருங்கள் மேலும் அறிய ஆவல்
பதிலளிநீக்குபல பதிவஎ சந்திப்பு பற்றி எழுத உத்தேசம் தொடர்ந்து வாருங்கள்
நீக்குசரவணனை மதுரை பதிவர் மாநாட்டில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நீங்களும் வந்துருந்தீர்களே!
பதிலளிநீக்குசமுத்ரா இவ்ளோ சின்ன வயசா? !!!
பதிவர் மாநாட்டில் பலரும் வந்திருந்தாலும் அறிமுகம்கிடைத்தது சிலருடனே வருகைக்கு நன்றி மேம்
நீக்குஉங்கள் இல்லம் வந்தது மறக்கமுடியாதது சமுத்ரா ஓர் அறிவு ஜீவி ...அவர் செல்போன் நம்பர் உங்களிடம் பெற்றுக்கொள்கிறேன்
பதிலளிநீக்குசமுத்ராவின் செல் நம்பர் இருக்கிறதா தேட வேண்டும் தற்போது சென்னையில் இருக்கிறார் தொடர்ந்து வாருங்கள் நன்றி மேம்
நீக்குதிரு சரவணனை அறிவேன். சந்தித்துள்ளோம். திரு சமுத்ரா பற்றி தற்போதுதான் அறிகிறேன்.
பதிலளிநீக்குசந்தித்திராத பலரைப் பற்றியும் அறிவீர்கள் தொடர்ந்து வாருங்கள்
நீக்குஇருவருமே புதிது எங்களுக்கு. நல்ல சந்திப்பு எங்களுக்கும் புதிய அறிமுகம் மிக்க நன்றி சார்!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி விரைவில் நம் சந்திப்பு பற்றியும் எழுதுவேன் புகைப்படங்களை வெளியிட ஆட்சேபணை இருக்காதென்று நம்புகிறேன் முக்கியமாக கீதாவின் புகைப்படம்
பதிலளிநீக்குமகிழ்ச்சியான மலரும் நினைவுகள். மதுரை சரவணன், பெங்களூரு (ஶ்ரீரங்கம்) ஷைலஜா ஆகியோரது பதிவுகளை படித்து இருக்கிறேன். வலைப்பதிவர்களை சந்திக்க வேண்டும், பேச வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது அய்யா?
பதிலளிநீக்குமுகம்தெர்யா நட்புகளிடத்தை விட தெரிந்து பழகுவது சிறந்தது என்று நினைத்தேன் மேலும் நம்மை உற்சாகப் படுத்தும் பதிவர்களைக் காண்பதிலும் அளவளாவுதலிலும் கிடைக்கும்மகிழ்ச்சியே வேறு பதிவுகளில் பின்னூட்டம் இடுவோர் தம்மை வெளிக்காட்டிக் கொள்வதில்லை, நேரில் சந்தித்தால் குறைந்த படசம் நம்மிடமாவது வெளிப்படையாக இருப்பார்கள் அல்லவா கேள்வி கேட்டதற்கு நன்றி சார்
நீக்குசுவாரஸ்யமான அனுபவங்கள், மேலும் ஸ்வாரஸ்யங்களுக்கு காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குதொடர்ந்து வாருங்கள் நன்றி
நீக்குசந்திப்புகள் என்றுமே இனிமையானவை ஐயா
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்கள்
எழுதுவேன் ஐயா தொடர்ந்து வாருங்கள்
பதிலளிநீக்கு