ஞாயிறு, 19 நவம்பர், 2017

கலாச்சாரமா சரித்திரமா


                                        கலாச்சாரமா  சரித்திரமா
                                                             ------------------------

இப்போது தொலைக்காட்சிகளில் இரண்டு தொடர்கள் வருகின்றன
சன் டிவியில் விநாயகரும் விஜயில் தமிழ்க் கடவுள் முருகனும்  வருகின்றன இரண்டுமே நானிதுவரை அறிந்திராத கதைகளில்  பயணிக்கின்றன. இது வரை யாரும்  எந்த எதிர்ப்பும்சொன்னதாகத்தெரியவில்லை   கதைதானே சரித்திர நிகழ்வு ஏதும் இல்லையே. எழுதுபவரின் கற்பனைக்கு  நல்ல தீனி  கதை என்று யார் சொன்னது?  அவதாரக் கடவுள்களின்  வரலாறு  அல்லவா என்று சிலர் பொய்ங்கக் கூடும் ( அதிரா மன்னிக்க )என்னைப் பொறுத்தவரை இவையெல்லாம்கதைகளே  இதில் நிஜமெது பொய் எது என்னும் ஆராய்ச்சிக்கு நான்  போவது இல்லை  கற்பனையை ரசிக்க முடிந்தால் ரசிப்பேன்  அப்போதும் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது முருகன் கடவுள் என்றால் அவன்யாருக்குச் சொந்தம்தமிழர்களுக்கா  ஏன்  இந்த மொழி அடையாளம் வடக்கில் கார்த்திகேயன் என்றும்  ஸ்கந்தன் என்றும்  பிரம்ம சாரியாக அறியப்படும் கடவுள் தமிழகத்தில் ஏகப்பட்ட கதைகளுடன் உலா வருகிறார் அதில் இதுவுமொன்று  சரி எதற்கு இந்த சர்ச்சை எல்லாம்  வடக்கே பன்சாலி என்பவர் பத்மாவதி என்னும் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்  அதை வெளியிடும் முன்னே பயங்கர எதிர்ப்பு.  எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார்? ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு  அமைப்பு . இதுவரை கேட்டறியாத பெயர்  கர்னி சேனாவாம் பன்சாலின்  தலையைக் கொய்து விடுவோமென்றும்  அதில் நடித்திருக்கும்  தீபிகா படுகோனேயின்  மூக்கை அறியப் போவதாகவும் மிரட்டல்  படமே இன்னும்  தணிக்கை  ஆகவில்லை இதை வெளியிடுவது லா அண்ட் ஆர்டருக்கு பங்கம்விளைக்கும் என்று வலியுறுத்தி உத்தரப் பிரதேச காவியரசு மத்திய அரசுக்கு  வலியுறுத்தி இருக்கிறது/

இன்று ஆங்கில தினசரி த ஹிந்து வில்  ஒரு கட்டுரை சரித்திரத்தில் பத்மாவதி என்னும் பாத்திரமே இருந்ததா என்னும் சந்தேகம் எழுப்பி இருக்கிறது  நான் பள்ளியில் படிக்கும் போது சரித்திர பாடத்தில் சித்தூர் ராணி பத்மினி மேல் ஆசைப்பட்டு  அலாவுதின் கில்ஜி அவரைப் பார்க்க வந்ததாகவும் அந்த சந்திப்பில் பத்மினி ராணிக்கும் கில்ஜிக்கும்நடுவே ஒரு திரைச் சீலை இருந்ததாகவும்  சீலையின்  நிழலில் கண்டராணியின் நிழலே அழகாயிருக்க அதில் கில்ஜி மனம் பறி கொடுத்ததாகவும் படித்த நினைவு  இது நடந்த காலகட்டம்  சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முந்தையது என்றும்  சரித்திர  சான்றுகள் ஏதுமில்லை என்றும் படித்தேன் செவி வழி கேட்டு வந்த நாடோடிக் கதைகள்

 விநாயகரும்  முருகனும்  இப்போது பல்வேறு கற்பனைகளுக்கு இடம்கொடுப்பது போல் இந்த சித்தூர் ராணியின் கதையும்  செவி வழிக்கேட்டு வந்தகதைதான் போல் இருக்கிறது எதற்கென்றெல்லாம்   போராடுவது பயமுறுத்துவது என்னும்கணக்கே இல்லை. எல்லாவற்றையும்  மதம் இனம்    கலாச்சார மென்னும் போர்வையின்  கீழ் தவறாகவே பார்க்கிறார்கள் என்றே தோன்று கிறது  ஊடகங்களே பற்பலகதைகளைத் திரித்து விடும்போது சிந்தனைக்கும் கற்பனைக்கும்  வழி கொடுக்கும்  சினிமா மட்டும்  விதி விலக்கா. பல இறைக் கதைகளை சினிமா வாயிலாக அறிந்தவர்களே அதிகம் ஆனால் எல்லாவற்றையும்  உண்மை என்று மயங்கலாமா  என்பதே என்  கேள்வி 








60 கருத்துகள்:

  1. நான் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில்லை. சில சமயம், சில நிகழ்ச்சிகளின்போது (ஸ்டார் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்) வரும் தொடர்களின் விளம்பரமே, தொடர்களைப் பார்ப்பதேயில்லை என்ற என் முடிவை நான் மெச்சிக்கொள்ளும்படி இருக்கின்றன.

    அரசியல், மதம், வழிபாட்டுமுறை - இதெல்லாம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட பார்வையில் வருவது. அதை யார் கேள்வி கேட்டாலும், கேட்பவர் யார், என்ன கட்சி/மதம்/ஜாதி என்றெல்லாம் கேள்விகள் எழுவதைத் தவிர்க்கமுடியாது.

    "உத்தரப் பிரதேச காவியரசு" என்று சொல்லும்போதே உங்கள் அரசியல் எண்ணம் தெரிகிறதல்லவா? நடு நிலையாகச் சிந்திக்கும்போது, தமிழக 'கடவுள் மறுப்புக் கட்சி' என்று நாம் எப்போதும் எழுதுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதம் வழிபாட்டு முறை போன்றதெல்லாம் தனிப்பட்டவர் பார்வை ஆனால் அரசியல் அப்படி அல்லநடப்புகளைக் கூர்ந்து பார்க்கும் போது தெரியவரும் செய்திகளை தனிப்படவரின் கருத்துஎன்று அடக்குவது சொல்பவரின் குறுகிய மனப்பார்வையயே காட்டுகிறது கருத்துகளுக்கு பதில் சொல்லாவிட்டாலும் கூஇ யகருத்தை அதற்குரிய முறையில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம்வேண்டும் நேற்று உபி காவியரசு இன்று ராஜஸ்தானின் பாஜக அரசு இவர்கள் எண்ணங்கள் எல்லாமொரு குறுகிய வட்டத்துக்குள் காண்பதை என்னவென்று சொலவது என் அரசியல் சார்பு முக்கியமல்ல அரசுகளின் நோக்கமே கலாச்சாரமா சரித்திரமா என்னும் கேள்வியை எழுப்புகிறது

      நீக்கு
  2. வணக்கம் ஐயா
    முதன்முதலில் "தமிழ்க்கடவுள்" என்ற வார்த்தையை கண்டவுடன் நானும் இதனைக்குறித்து எழுத வேண்டுமென்று நினைத்தேன். நீங்களும் அதையே கேட்டு விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. கடவுள்களையும் சின்ன வட்டத்துக்குள் அடைப்பதே என் கேள்வி பதிவு கதையா கற்பனையா எதிர்கொள்ளும் முறை சரியா என்றே கேட்கிறது வருகசிக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  4. சன் டிவி கரன் அதைஅவன்வியாபரம்செழிக்கஅதைஒலிபரப்புகின்றன அதைவேண்டும்என்றால்பார்க்கலம்வேண்டம்என்றள்பாரகவீண்டாம

    பதிலளிநீக்கு
  5. தமிழ் சானெல்ஸ் கனெக்க்ஷன் கொடுக்கலை அதனால் தொடர்கள் பற்றி தெரியலை .
    முந்தி பல வருஷமுன் கிருஷ்ணா ஒளிபரப்பினாங்க மகளுக்கு பிடிச்சது அது .
    இப்போ நிறைய இஷ்டத்துக்கு மாற்றறாங்க போல ..பார்க்காமலிருப்பதே மேல் .
    திருவிளையாடல் கந்தன் கருணை எல்லாம் பார்த்துதான் ஸார் நானும் வளர்ந்தேன் .


    பத்மாவதி பட இஸ்யூவும் முழுமையாக பார்த்தோ வாசித்தோ தான் கருத்து சொல்வேன் .


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன விஷயம் என்றால் திரையில் பிரதிபலிக்கப்படுவதெல்லாம் உண்மை என்று நம்பிவிடுகிறோம் ஃபாண்டசி எல்லா ருக்கும் பிடிக்கும் அதுவும் புராணக்கதை என்றால் கேல்வியே கேட்கக்கூடாது கருத்து சொல்லும் முன் அது பற்றிய செய்திகளை முதலில் உள் வாங்குங்கள் என்பதே என் கோரிக்கை

      நீக்கு
  6. நீங்கள் சொன்ன நாடகங்கள் பார்க்கவில்லை.
    பத்மாவ்தி செய்தி படிக்கவில்லை.
    நமக்கு பிடித்தவைகளை பார்த்து நமக்கு பிடித்தவைகளை படிக்க வேண்டியது தான். வேறு என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிடித்தது பிடிக்காதது என்பது பின்னால் தானே தெரிகிறது

      நீக்கு
  7. இந்தத் தொடர்களையெல்லாம் பார்க்கும் பொறுமை எனக்கில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளும் பொழுதும் அலறவைக்கும் செய்திகளையாவது பார்ப்பீர்களா

      நீக்கு
  8. Hi Sir, I would like to share my thought son this.

    I also feel lot of dialogues may be scripted to entertain the audience. However almost lot of incidents may be taken from "skanda purana" . Most puranas will have significance if its unaltered orginal version. We cannot find out which is true and which is not, and if subsequent additions were done later.

    Regarding karthikeya beign tamil god, my assumption is he travelled to southern part of India, leaving his clan in himalayas or Kailash. His later stories are better known here (as valli and devasana's spouse) ... Do take just the jist as good lessons to be learnt and leave the rest.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I for one do not assume things. I try to get the facts . and from there I try to form my opinions which invariably does not gel with popular notions பதிவே எப்படி கதைகள் காலாச்சாரமாக்கப்பட்டு காவிகளின் துணை கொண்டு வெட்டு குத்து என்று போகிறதே என்பதே ஆதங்கம்

      நீக்கு
  9. நானும் எத்தொடர்களும் பார்ப்பதே இல்லை.. ஒரு 100, 200 எபிசோட்டுக்கள் எனில் பார்க்கலாம்.. இது இழுத்தூஊஊ இழுத்துப் போகும்.. அதனால் அப்பக்கமே போவதில்லை.. எங்கள் அம்மா சிலது பார்ப்பா, அப்போ ஏதும் சுவாரஸ்யமான நிகழ்வு வந்தால் அதை மட்டும் பார்க்கச் சொல்லுவா .. அக்கட்டம் மட்டும் சிலசமயம் பார்ப்பேன்.

    மற்றும்படி எதிலும் பைத்தியமாக எந்த நிகழ்ச்சியும் தொடர்ந்து பார்ப்பதில்லை.. நேரமும் கிடைக்கும்போது, சிலது பார்ப்போம்.. படங்கள் கொஞ்சம் விரும்பிப் பார்க்கும் பழக்கமுண்டு...

    என் கொப்பி வலது :) சொல்லைக் களவாடிட்டீங்க...:).. அது ய் அல்ல யி:) என வரோணுமாக்கும்:).. பொயிங்கோணும்:).. ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதசியும்பார்ப்பதோ விடுவதோ அவரவர் விருப்பம் ஆனால் மூளை சலவைக்கு துணை போகாதீர்கள். tRY TO GET THE FACTS AND THE WHOLE FACTS FIRST
      களவாடவில்லை உங்கள் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறேனே

      நீக்கு
  10. நான் தொலைக்காட்சித் தொடர்கள் ஏதும் பார்ப்பது இல்லை.

    பத்மாவதி படத்துக்கு இலவச விளம்பரம் ஆச்சு. படம் பிச்சுக்கிட்டு ஓடப்போகுது ! நம்ம சனம் திரை வாழ்வை, நெச வாழ்வுன்னு நம்பும். இல்லாமலா நடிப்பவர்களை அரசியலுக்குக் கூட்டி வருவது? ப்ச்.....

    இன்னொரு சின்ன தட்டச்சுப்பிழை. முடிந்தால் மாத்துங்க.

    //தீபிகா படுகோனேயின் மூக்கை அறியப் ...//

    மூக்கை அரிய ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்மாவதி படத்துக்கு இலவச விளம்பரம் ...! இந்த வழியில் வருவதை அவர்கள் விரும்பி இருக்க மாட்டார்கள் எழுதிய பின் பிழைகளைப்பார்க்கும் பொறுமை இருப்பதில்லை குறிப்பிட்டதற்கு நன்றி மேம்

      நீக்கு
  11. //இதுவரை கேட்டறியாத பெயர் கர்னி சேனாவாம் // கர்னி மாதா கோயில் என ஓர் அம்மன் கோயில் ராஜஸ்தானில் இருக்கிறது. பிகானேரிலிருந்து சுமார் 30,40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கே எலிகள் ஏராளமாக இருக்கும். அவையும் வழிபடப்படுகின்றன எலிகள் சாப்பிட்ட மிச்ச உணவுப் பொருட்கள் பக்தர்களால் பிரசாதமாக ஏற்கப்படும். அங்குள்ள கர்னி மாதாவின் பக்தர்களே கர்னி சேனாவினர். பல்லாண்டுகளாக இருந்து வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் வெளியே தெரியவில்லை எனில் அதற்குக் காரணம் இப்போது நடக்கும் வருத்தமான செய்திகள் தான்! அமைப்புக் காரணம் அல்ல. இப்படி நடக்கவில்லை எனில் எப்போதும்போல் தங்கள் சேவையைத் தொடர்ந்து விளம்பரம் இன்றிச் செய்து வந்திருப்பார்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கீதா சாம்பசிவம் அக்கா ..
      அங்கே எலிகள் ஏராளமாக இருக்கும். அவையும் வழிபடப்படுகின்றன எலிகள் சாப்பிட்ட மிச்ச உணவுப் பொருட்கள் பக்தர்களால் பிரசாதமாக ஏற்கப்படும். //

      இந்த விஷயத்தை இந்தியாவில் இருக்கும்போது அறியவில்லை ஆனா சில வருஷமும் ஜெர்மனியில் ஒரு டாக்குமெண்டரி படமாக பார்த்தேன் ..

      நீக்கு
    2. இது எலிக்கோவிலுக்கான சுட்டி. இதுக்கு முன்னால் இருக்கும் பதிவையும் க்ளிக் பண்ணிப் பாருங்க ஏஞ்சலீன். துளசிதளத்தில் அப்போ மிஸ் பண்ணிட்டீங்க போல :-) http://thulasidhalam.blogspot.com/2011/07/35.html

      நீக்கு
    3. /இப்படி நடக்கவில்லை எனில் எப்போதும்போல் தங்கள் சேவையைத் தொடர்ந்து விளம்பரம் இன்றிச் செய்து வந்திருப்பார்கள் / எலிகள் சாப்பிட்ட மிச்சத்தை பிரசாதமாக உண்பதையா

      நீக்கு
    4. ஏஞ்செலின் அயல் நாட்டினர் இம்மாதிரி டாக்குமெண்டரி படங்கள் தயாரித்து வெளியிடுவதில் அக்கறை செலுத்துவார்கள்

      நீக்கு
    5. தகவலாக வேண்டுமானால் எலிக் கோவில் பற்றி அறியலாம்

      நீக்கு
    6. /இப்படி நடக்கவில்லை எனில் எப்போதும்போல் தங்கள் சேவையைத் தொடர்ந்து விளம்பரம் இன்றிச் செய்து வந்திருப்பார்கள் / எலிகள் சாப்பிட்ட மிச்சத்தை பிரசாதமாக உண்பதையா // முன் முடிவுடன் எடுத்துக் கொள்ளப்பட்ட கருத்தை மாற்றுவது கடினம்! நான் எத்தனையோ விஷயங்களைச் சொன்ன பிறகே கர்ணி சேனாவினரின் தற்போதைய போராட்டம் குறித்துச் சொல்லி இருக்கேன் என்பதைக் கவனமாகப் படித்திருந்தால் புரிந்திருக்கும்! :(

      நீக்கு
    7. கர்னி சேனா பற்றிய தகவல்களுக்க்கு நன்றி மேம்

      நீக்கு
  12. அஹமதாபாத்--அஜ்மேர் செல்லும் மார்க்கத்தில் வழியில் சிதோட்கட்(நமக்கெல்லாம் சித்தூர் என்றால் தான் புரியும்.) கோட்டை வரும். கோட்டைக்குச் சென்று பார்த்திருக்கிறோம். ராணி பதுமனி(இப்போது பத்மாவதி, பத்மினி) என்பவள் தீக்குளித்த இடம் இப்போதும் ஓர் கோயிலாக அங்கே அமைக்கப்பட்டு வழிபட்டு வரப்படுகின்றது. ராணி அந்தப்புரத்தில் தன் அறையில் இருக்கும்போது எந்த இடத்தில் கண்ணாடி முன் நின்று கில்ஜியைப் பார்க்க அனுமதித்தாளோ அந்த இடமும் கண்ணாடியும் நாங்கள் சென்றபோதும் இருந்தன. அங்கிருந்து மேலே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைத் தட்டச்சிக் கொண்டிருக்கையில் ஆட்டோ வந்து விட்டது! ஆகவே அப்படியே சேமிக்க எண்ணினால் அது பப்ளிஷ் ஆகி உள்ளது! இனி மீதி! :)

      ராணி பதுமனியின் அந்தப்புரத்திலிருந்து கொஞ்சம் தள்ளி மேலே ராஜாவின் தர்பாரில் (அந்த மண்டபம் உள்ளது) ராஜாவும், கில்ஜியும் அமர்ந்திருக்கக் கண்ணாடி மட்டும் எதிரே தெரியும். ராணியின் அந்தப்புரக்கண்ணாடியில்
      தெரியும் அவள் உருவம் இந்தக் கண்ணாடியில் பிரதிபலிப்பு செய்யும் வண்ணம் அமைத்திருந்திருப்பார்கள். அதை நம் எதிரேயே வழிகாட்டிகள் செய்து காட்டுவார்கள். இது நடந்தப்போ உள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் ஓலைச்சுவடிகளில் எழுதப் பட்டு உள்ளது. எல்லாம் தேவநாகரி லிபி தான். முதலில் என்னைக் கண்ணாடி எதிரே நிற்கச் சொல்லி என் கணவர், குழந்தைகளைப் பார்க்கச் சொன்னார்கள். பின்னர் அவர்களில் ஒருவர் நின்று கொண்டு நாங்கள் மற்றப் பேர் பார்த்தோம். சிதோட்கடின் விஜயஸ்தம்பம் ராஜஸ்தானின் ராஜபுத்ரர்களின் கௌரவச் சின்னம். பல ஆண்டுகள் இந்த விஜயஸ்தம்பமே ராஜஸ்தான் அரசின் அடையாளமாகவும் இருந்து வந்தது.

      நீக்கு
    2. இதே போல் உதயபூர் மாளிகையிலும் மீராபாயின் கையால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளைப் பார்க்கலாம். படிக்கலாம். அனைத்தும் நன்றாகப் பராமரிக்கப்பட்டு வந்தன. இப்போதும் அப்படியே இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் தமிழ்நாட்டை விட ராஜஸ்தான், குஜராத்தியர்கள் தங்கள் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருப்பவர்கள். கோட்டைகளை எல்லாம் சுத்தமாகப் பராமரித்து வருகின்றனர். ராணி பதுமனியின் கதையைப் பொய் என்று சொல்பவர்களே பொய்யர்கள்.

      நீக்கு
    3. உங்கள் விவரமான பின்னூட்டம் நிறைய தகவல்களைச் சொல்லியது. பார்க்கும் ஆவலையும் தூண்டுகிறது. (With health difficulty எழுதியதற்கு நன்றி. உபயோகமான தகவல்)

      நீக்கு
    4. ஒரு முறை போய்ப் பாருங்க. சிதோட்கட், பிகானீர், உதயபூர் எல்லாம் மேவார் என்னும் பகுதி! சிதோடிலிருந்து வடக்கே உள்ள பகுதி மார்வார் அல்லது மார்வாட். நாம சொல்லறது ராஜஸ்தானின் மக்கள் அனைவரையும் மார்வாரி என்போம். ஆனால் அங்கே அப்படிச் சொல்ல மாட்டார்கள். மேவாட்/மேவார் சாப்பாட்டுக்கும், மார்வார் சாப்பாட்டுக்கும் வித்தியாசம் இருக்கும்.

      நீக்கு
    5. கர்னி சேனாவினரைப் பற்றிச் சொன்னதை ஜிஎம்பி ஐயா தனக்குச் சாதகமானதாக மட்டும் எடுத்துக் கொண்டுள்ளார். இவர்களைக் குறித்தும் தேடிப் பாருங்கள். என் கணவருக்கு, எனக்கு, எங்க குழந்தைங்களுக்கு ராஜஸ்தானும், குஜராத்தும் தாத்தா, பாட்டி வீடு மாதிரி! சொந்த இடத்தில் இருக்கும் நிறைவு அங்கே தோன்றும்.

      நீக்கு
    6. கீதா சாம்பசிவம் நம்மவர்களுக்கு கோவில் என்றாலேயே புனிதத்தன்மை தெரிந்து விடுமே இதோ ஒரு தகவல் அலாதின் கில்ஜியின் காலம் அவன் சி
      த்து படையெடுத்தது 1303 ம் வருடம் ஆனால் பத்மினியின் கதை 1540ம் வருடங்களில்மாலிக் முஹம்மத் ஜயசி என்பவரால் கதையாக கவிதையாக எழுதப்பட்டது அலாதின் கில்ஜியின் படையெடுப்பு சரித்திரம் ஆனால் பத்மினி கதைகதையே சரித்திரமல்ல
      விக்கி பீடியா மற்றும் பல இடங்களில் படித்து தெரிந்தது

      நீக்கு
    7. மேலும் நாம் சந்தித்த மனிதர்கள் வாழ்ந்த இடம் என்பதாலேயே கதைகளுக்கு சரித்திர பின்புலம் வராது

      நீக்கு
    8. ஐயா, ராஜராஜசோழன் தஞ்சைக் கோயிலைக் கட்டியது பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில். ஆனால் அவனைக் குறித்த ஆய்வுகள் செய்யப்பட்டது எல்லாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரே! அதனால் அவன் ஆட்சி செய்யவில்லை என்று சொல்லி விட முடியுமா? சிதோட்கட் கோட்டையிலேயே சரித்திரச் சான்றுகள் கிடைக்கின்றன என்பதோடு மத்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரின் கட்டுப்பாட்டுக்குக் கீழே தான் அந்தக் கோட்டை வருகிறது. அங்கே போனால் ஏராளமான சரித்திரச் சான்றுகள் கிடைக்கலாம். 1303 ஆம் வருஷம் நடந்தவற்றை 1540 ஆம் வருஷத்தில் எழுதக் கூடாது என்று யார் சொன்னது? அதுவரை வாய்மொழியாக வந்திருக்கலாம். ராஜா தேசிங்கு கதையும் வாய்மொழி தான்! பின்னர் தான் செஞ்சிக் கோட்டையைக் கண்டெடுத்ததும் எழுதினார்கள். சரித்திரப் பின்புலம் இல்லை எனில் இன்றளவும் அந்தக் கோட்டைகள் முன்னர் இருந்தது போல் பாதுகாக்கப்படுவது ஏன்? ஒரு முறையாவது நீங்கள் போய்ப் பார்த்திருக்கிறீர்களா? நான் போய்ப் பார்த்ததால் மட்டும் சொல்லவில்லை! எங்களைப் போல் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். ஜெய்ப்பூரின் அம்பேர் கோட்டை, உதயபூரின் நகரத்தில் உள்ள கோட்டை, ஏரிக்கு நடுவே உள்ள கோட்டை(இப்போது நக்ஷத்திர ஓட்டலாக மாறி உள்ளது) பிகானீர், ஜோத்புர், ஜெசல்மேர் என ராஜஸ்தானின் அனைத்துப் பெரிய நகரங்களீலும் ராஜபுத்திர அரசர்களால் கட்டப்பட்ட கோட்டைகள் இன்றளவும் காணமுடியும். உதயப்பூரில் மீராவின் சொந்தக் கையெழுத்திலேயே அவர் எழுதியவற்றைப் படிக்கலாம். நீங்கள் நம்பவேண்டும் என்ற அவசியத்துகாகச் சொல்லவில்லை. மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்றே சொல்கிறேன்.

      நீக்கு
  13. தொலைக் காட்சிக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை ஐயா
    ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது
    தொலைக் காட்சிகளைப் பொறுத்தவரை
    கடவுளும் ஒரு வியாபாரப் பொருள்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியாபாரம் எது கடவுள் பற்றிய அறிவு எது என்பதை நாம்தெரிந்து கொள்ளல் அவசியம் கடவுள் என்று திரைப்படங்களில் வந்தாலேயே சூடமேற்றி குபிடுவோர் பலரைப் பார்த்திருக்கிறேன்

      நீக்கு
  14. இதைப் போன்ற நிகழ்ச்சிகளில் எனக்கு ஈடுபாடு கிடையாது..
    புராண வரலாற்று நிகழ்வுகளை 95% அப்படியே படமாக்கித் தந்த பொற்காலம் திரு A.P. நாகராஜன் அவர்களோடு முடிந்து போனது..

    அடுத்து -

    ராணி பத்மினியின் வரலாற்றுக்கு சரித்திர சான்றுகள் ஏதுமில்லை என்பதும் நாடோடிக் கதை என்பதும் அநியாயம்..

    இப்படிச் சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி இருக்கின்றது...

    தங்களைப் போன்றோரும் அந்தக் கருத்துகளை முன்வைப்பது வருத்தமாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராணி பத்மினியின் வரலாற்றுக்கு சரித்திர சான்றுகள் ஏதுமில்லை என்பதும் நாடோடிக் கதை என்பதும் அநியாயம்../ ஐயா இது என் கருத்தல்ல எதையும்படித்ததை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை என்னிடம் இல்லை விக்கிபீடியா மற்றும் பலைடங்களில் படித்தது அவற்றையெல்லாம் கூட்டம் என்று ஒதுக்கமுடியவில்லை சார்

      நீக்கு
  15. புராண கதைகள், சீரியல்கள் எதுவும் பார்ப்பதில்லை. ஏனென்றால் கதையை நிறைய மாற்றி இருப்பார்கள். தவிர அதில் வரும் நடிகர்,நடிகைகளை நம் வணக்கத்துக்குரிய, நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் பிம்பங்களோடு பொருத்தி பார்ப்பது கஷ்டம்.

    சித்தோர் ராணி பத்மினியின் கதை உண்மைதான். அதை ஏன் பத்மாவதி என்று பெயர் மாற்றினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் வருத்தப்பட வைக்கிறது. நாம் இப்போது மிகவும் தொட்டால் சுணுங்கியாக மாறி விட்டோம். இது எங்கள் மனதை புண் படுத்துகிறது, அது எங்கள் மனதை புண் படுத்துகிறது என்று கலைஞர்கள் கழுத்தை நெரிக்கிறோம், அப்புறம் அவர்கள் காதல் படம் தவிர வேறு எதுவும் எடுப்பதில்லை என்றும் குறை கூறுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொட்டாற்சுருங்கியாக நாம் ஆகவில்லை பானுமதி! உண்மையைப் புறம் தள்ளினால் வரும் அறச் சீற்றம் தான் இங்கே! கலைஞர்கள் கலையை மட்டுமின்றிப் பாரம்பரியத்தையும் கெடுக்காமல் எடுக்க வேண்டும் அல்லவா? இப்போது காந்தி படம் வந்ததே! யாரானும் ஆக்ஷேபணை செய்தார்களா? இதிலே என்ன பிரச்னை என்றால் யார் தன்னைக் கண்களால் கூடப் பார்க்கக் கூடாது என்று பதுமனி நினைத்தாளோ அந்தக் கில்ஜியை அவள் மானசிகமாகக் காதலித்ததாக எடுத்திருக்கிறார்கள். அது தான் பிரச்னையே!

      நீக்கு
    2. சித்தோர் ராணி பத்மினியின் கதை உண்மைதான். அதை ஏன் பத்மாவதி என்று பெயர் மாற்றினார்கள் என்று தெரியவில்லை.இப்படித்தெரியாதவிஷயங்கள் நிறையவே உள்ளன மேம் காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கணாய்வதேமுக்கியம் படமெ வெளிவரவில்லை அதற்குள் ஏகப்பட்டகதைகள்

      நீக்கு
    3. @பானுமதி, பதுமனி என்ற பெயரிலோ பத்மினி என்ற பெயரிலோ படம் எடுத்திருந்தால் நேரடியாக மஹாராணியைக் குறிப்பிடுகிறாப்போல் இருந்திருக்கும். இது பத்மாவதி என்றொரு பெண் என்று சொல்லித் தப்பிக்கலாமே என்னும் எண்ணமாக இருக்கும்.

      நீக்கு
    4. அறச்சீற்றம் ஏன் வருகிறது நாம் நம்புவதைப் பிறர் நம்பாததாலா எதற்கும் வெட்டு குத்து என்பதுதான் தீர்வா பத்மாவதியின் கதையில் தவறாக ஏதும் காட்டப்படவில்லை ராஜ புத்திரர்களின் உணர்வுகளுக்கு குந்தகமேதும் இல்லை என்றும் தேசிய சானல்களில் சொன்னார்கள் என்னை யாராவது முட்டாள் என்று சொன்னால் முதலில் கோபம்தான்
      வரும் அதற்காக சட்டம் ஒழுங்குகளைக்கையி எடுக்க முடியுமா அதற்கு ஏன் சாயம் பூச வேண்டும் பல கதைகளும்கற்பனையே சரித்திரதுக்கு சான்றுகள் வேண்டும் அம்மாதிரி சான்றுகள் ஏதும் இல்லை என்றே தகவல்கள் எனக்கு ராணி பத்மாவதியைப் பிடிக்கும் என் பதிவில் கூட நான்படித்தகதையை எழுதி இருக்கிறேன் மாஅற்றானுடன் சேர விருப்பமில்லாமல்தான் அந்த கவிதை நாயகியும் உயிரைவிட்டாள் என்றோ நடந்தவை போல் இருந்ததை எல்லாமுண்மை என்று நம்ப நான் தயாரில்லை கற்பனைகளின் வளம் என்றே கூறுவேன்

      நீக்கு
  16. சர்ச்சை உரியதாய் விஷயங்களை எடுப்பதே இப்போதைய பேஷன் அப்போதோதான் அந்த படம், சீரியல் இப்படி எல்லவற்றிக்கும் ரேட்டிங்கிங் இன்கிரிஸ் ஆகும் என்ன என்ற ஆவலையை தூண்டவே இப்படி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சர்ச்சை நாம் உண்டாக்க வேண்டாம் ஆனால் எதையும் நம்பும் நம் மனத்தைஎன்ன வென்று சொல்ல மனதில் தோன்றுவதைச்சொல்ல உரிமை வேண்டும் ஏற்று கொள்ளாதவர்கள் வெட்டுவேன் குத்துவேன் என்று சொல்வது என்ன நியாயம்சட்டமொழுஹ்ங்கை நிலை நாட்ட வேண்டிய அரசே இதை ஆதரிக்கும் போது பொய்ங்க வேண்டாமா

      நீக்கு
  17. டிவி தொடர்கள் எதுவும் நாங்கள் இருவருமே பார்ப்பதில்லை ஸார்.

    மற்றபடி படம் பற்றி பார்த்தால்தான் சொல்ல முடியும்.. சித்தோட் பதிமினி கதை எப்போதோ பள்ளிக்காலத்தில் படித்த நினைவு...

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  18. சித்தூர் பத்மினி என்று தான் என் பள்ளிப் பருவத்தில் சரித்திர புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I am not able to access my post through chrome . Through firefox tamil fonts dont work Thats why in English I am afraid you have miles to go

      நீக்கு
  19. தொலைக்காட்சியில் அனைததும் வணிகமயம். அதில் இவர்கள் விதிவிலக்கல்ல.

    பதிலளிநீக்கு
  20. // I am afraid you have miles to go.. //

    எதற்கு சார்?..

    பதிலளிநீக்கு
  21. ஓ.. அதற்கா?.. அங்கேயிருந்து தானே ஆரம்பிக்க வேண்டும்?
    From School Education..

    சித்தோர் ராணி பத்மினி என்று நீங்கள் எழுதியிருப்பதற்காக சொன்னேன். தமிழகப் பாடப்புத்தகங்களில் சித்தூர் ராணி பத்மினி தான்..

    பதிலளிநீக்கு
  22. தவறாகச் சொல்லி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  23. அடடா! நாம் கருத்துக்களைத் தானே பகிர்ந்து கொள்கிறோம்? அதனால் தவறாக ஏதும் இல்லை...

    இவ்வளவு நீளமாக பின்னூட்டங்களுக்கு நீங்கள் பதிலெழுதி நான் பார்த்ததில்லை. இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் அவ்வப்போது வாசித்து வந்தாலும் எனக்கே தெரிந்த காரணங்களினால் இவற்றிலிருந்து விலகி இருக்கவே விரும்பினேன். வாசித்து வருகிறேன் என்று தெரிவதற்காகத் தான் அப்படியான ஒரு பின்னூட்டத்தையும் எழுதும்படி நேர்ந்தது.

    அடுத்த பதிவு உங்களை அழைக்கிறது அல்லவா?..


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டங்கள் நான் எழுதியது எவ்வாறு போய்ச் சேருகிறது என்பதை நாம்தெரிந்து கொள்ள விரும்புவதால் அதற்கான மறு மொழிகள் சில விஷ்யங்களை விளக்க வேண்டி இருப்பதால் பல நேரங்களில் பலரும் say yes when they mean no மனதில் பட்டதை உண்மையாகச் சொல்வது எனக்குப் பிடிக்கும் மீள் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு