பிறந்த நாளும் மண நாளும் (11-11 02017 )
--------------------------------------------------------------
வணக்கத்துடன் பதிவு தொடங்குகிறது மயிலைப் பாருங்கள் வரவேற்கிறது
பிறந்த நாளும் மணநாளும்
ஆண்டொன்று போக அகவை
ஒன்று கூட
இன்றுறங்கி நாளை எழுவேனா என்றறியாமலேயே
சேர்த்துவிட்டேன் ஏழு பத்துகளுடன் ஒன்பதாண்டுகள்
ஆசை எனும் அரவமே அனைத்து வினைகளுக்கும்
ஆதி காரணம் என்றறிந்தும் பாசவலையில் கட்டுண்டு
காலம் கழிந்து விட்டது.. அன்பால் கட்டுவதும்
அன்பினால் கட்டப் படுவதும் இன்பம்தான்
மறுப்பதற்கில்லை, மறப்பதற்கில்லை. .புவியில்
வந்துதித்த நாளே இல்லத் துணையுடன் சேர
தேர்ந்தெடுத்த நாளும் எனும்போது கூடுகிறது
மகிழ்ச்சி குறையில்லாப்
பொலிவுடன்
அல்லல்கள் பலவற்றோடு அனுபவங்கள்
கற்றுத் தந்த பாடங்கள் அசைபோட்டு உணரும்போது
இன்னுமொரு வாழ்வு அமையுமானால் , கேள்வி எழுகிறது,
இதையே தேர்ந்தெடுப்பேனா என்று. .நிச்சயமாய் இதையே
தேர்ந்தெடுப்பேன், என்னில் இருந்த சில குறைகள் நீக்க
எனக்கொரு வாய்ப்பு அது நல்குமல்லவா.?
குறைவற்ற வாழ்வுதனை நிறைவாக வாழ்ந்து விட்டேன்.
இனி எனக்கொரு குறையிலை நான் தயார் யாரும்
அறியாத அண்டப் பேரண்ட வெளிக்குள் ஒளியிலோ இருளிலோ
நான் நுழைய, இருப்பினும் அனுபவங்கள் பகிர எனக்கங்கொரு
வலைத்தளம் இருக்குமா, தெரியவில்லையே..!
எங்கள் மண நாளில் அவளுக்கும் வாழ்த்து சொல்வது கடமையல்லவா
ஏதுமறியாப் பாவையாய் இளங்கன்னியாய்
இப்போதெல்லாம் கேக் வெட்டாமல் பிறந்த நாள் இல்லையே
தந்தை |
தாய் |
நான் |
மனைவி |
எங்கள் திருமணத்தின் போது (1964) |
சஷ்டியப்த பூர்த்தியில் (1998) |
ஏதுமறியாப் பாவையாய் இளங்கன்னியாய்
என் கைப்பிடித்தவளைக் காணும்போதெல்லாம்
என் மனம் ஏனோ அல்லல் படுகிறது
வெறும் களிமண்ணாய் வந்தவளை நன்கு பினைந்து
குயவன் கைப் பானையாய் வளைத்துச் செதுக்கினேன்
எனப் பெருமைப் படுவாள் பாவம்
அவள் அறிய மாட்டாள் ஐம்பத்திமூன்று ஆண்டுகள்
என்னுடன் இருந்தது எத்தனை அரிய செயல் என்று
இன்று ஓர்க்கிறேன் தாயில்லா என்னைத் சேய் போல் கவனித்தாள்
தாரமும் ஒரு தாய்தானே
அன்னையவளைத் தேடி நான் அலைந்தபோது,
சுந்தரி இவளைக் கண்டேன் என் சிந்தையுள்ளே -,
நிறுத்தினேன் இவளை என் அகத்தினுள்ளே.,
தொலைந்ததே என் துயரங்கள் என்னை விட்டே.
யாதுமாகி நின்றாள்.. தாய்தன்னைக் காணாதவன்
தாரமாக வந்தவளை நெஞ்சமெலாம்
நிரப்பி , சஞ்சலங்கள் நீக்கிய சேயானேன்.
.
பிள்ளையாய்ப் பிறந்து ,பாலனாய் வளர்ந்து,
காளையாய்க் காமுற்று, எனதவளைக் கைப்பிடித்து,
இளமை ஒழிந்து மூப்புறும் நிலையில்
எல்லாம் செத்து, நாளை எண்ணுகையில்
எனக்கு நானே அழாதிருக்க,
காக்கின்ற கண்களால் கருணை வெள்ளம்
கரைபுரள, பூக்கின்ற புன்னகையால் ,
ஆறாத மனப் புண்ணின் அசைவலைகள்
அடங்கவே அளித்தருளி அன்னையாய்
,என்னை ஆட்கொள்ள வந்தவளே எனக்கு நீ
யாதுமாகி நிற்கின்றாய் வாழி வாழியவே
பிறந்த நாள் வாழ்த்து
யாதுமாகி நிற்கின்றாய் வாழி வாழியவே
பிறந்த நாள் வாழ்த்து
வாரிசுகளுடன் |
மகன்களுடன் |
இப்போதெல்லாம் கேக் வெட்டாமல் பிறந்த நாள் இல்லையே
பிறந்த நாள் கேக் பதிவின் முலமும் முகநூல் மூலமும் அஞ்சல் மூலமும் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள் |
மீண்டும் சொல்லிவிடுகிறேன்!
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள், அதி இனிப்பான மண நாள் நல் வாழ்த்துக்கள்.
May the finest blessings be on you and your lovable family always.
நானும் மீண்டும் நன்றி சொல்கிறேன்
நீக்குஇதற்கு முன்னாலும் சொன்ன நினைவு! உங்கள் பிறந்த நாளும், மண நாளும் ஒரே தேதி என்பதாக! எனக்குத் தான் மறந்து விட்டது.நீங்களும் உங்கள் மனைவியும் இதே மன ஒற்றுமையுடன் நோய் நொடியில்லாமல் பல்லாண்டு வாழ வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இருவருக்கும் நமஸ்காரங்கள்.
பதிலளிநீக்குமயிலின் வரவேற்பு பிடித்ததா எங்கள் நன்றிகள்
நீக்கு1. மயில் காணொளி ரொம்ப நல்லா இருந்தது.
பதிலளிநீக்கு2. உங்கள் கவிதையும் நல்லா ரசித்தேன்.
2.அ. இன்னுமொரு வாழ்வு அமையும்போது, நமக்கு 'என்ன என்ன தவறுகள் சென்ற வாழ்வில் செய்தோம்' என்பது தெரிந்தால்தானே சரி செய்துகொள்ள முயல்வோம். சிறிது இடம் மாறிப் பிறந்தால், புதிய தவறுகளைத்தானே செய்ய முயல்வோம்?
2.ஆ
காக்கின்ற கண்களால் கருணை வெள்ளம்
கரைபுரள, பூக்கின்ற புன்னகையால் ,
ஆறாத மனப் புண்ணின் அசைவலைகள்
அடங்கவே அளித்தருளி அன்னையாய்
,என்னை ஆட்கொள்ள வந்தவளே எனக்கு நீ
யாதுமாகி நிற்கின்றாய் வாழி வாழியவே
மிகவும் ரசித்தேன். நாம மனம்விட்டுச் சொல்கிறோமோ சொல்லலையோ, அவரவர் மனைவி தங்கள் கணவரை நல் பாதையில் செலுத்துகின்றனர். அவர்கள் இல்லையேல் நம் வாழ்வு ஏது? தாய்க்குப் பின் நம்மை நல்வழிப்படுத்துபவர்கள், நம் தலைமுறையை முழுமையாக்குபவர்கள் அவர்கள்தானே.
உங்களிருவருக்கும் என் வாழ்த்துக்கள். படங்கள் பல, ஏற்கனவே நீங்கள் பகிர்ந்ததுதானே.
உங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி சார்
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇனிய திருமணநாள் வாழ்த்துக்கள் இருவருக்கும்.
கவிதையில் கதை சொல்லிக் கலக்கிட்டீங்க...
கவிதைகளை ரசித்தீர்களா/ அனுபவங்கள் பகிர எனக்கங்கொரு
நீக்குவலைத்தளம் இருக்குமா, தெரியவில்லையே..! இது எப்படி இருக்கு நன்றி அப்பாவி அவர்களே
கவிதை அருமை ஐயா
பதிலளிநீக்குஇருவரையும் வாழ்த்த வயதின்றி வணங்குகிறேன்.
வாழ்க நலம்.
வந்து ரசித்ததற்கு நன்றி ஜி
நீக்குபெரியோர்களை வாழ்த்துதற்கு வயதில்லை..
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம்..
வாழ்க நலம்!..
இந்த வயதால் பலரும் என்னுடன் மனம் விட்டுப் பேச மாட்டார்கள் என்று முன்பு ஒரு பின்னூட்டமிருந்த நினைவு வருகைக்கு நன்றி சார்
நீக்குமனம் நிறைந்த பிறந்த நாள்/திருமண நாள் நல்வாழ்த்துகள் ஐயா.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்
நீக்குஇனிப்புடன் இனிப்பு சேர்ந்தால் என்னவாகும்?..
பதிலளிநீக்குஇன்னும் இனிப்பாகும்.
பிறந்த நாளும் மண நாளும் சேர்ந்து வருவதும் அதுபோலவே.
இந்த சேர்க்கை இன்னும் இன்பமயமாகும்.
நண்பனின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
நல்ல காலம் எங்கள் இருவருக்கும் சர்க்கரை நோய் கிடையாது வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குமிக மிக மகிழ்ச்சியாக உள்ளது சார். இன்னும் பல வருடங்களும், பலப்பல மகிழ்ச்சியும் பொங்க பிரார்த்தைகளும் வாழ்த்துக்களூம்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி நீடிக்க வாழ்த்தியமைக்கு நன்றி மேம்
நீக்குவாழ்த்துக்கள் சார் , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகவிதை அருமை. நாங்கள் உங்களை வணங்கி வாழ்த்து பெற்றுக் கொள்கிறோம்.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி மேம்
நீக்குவாழ்த்துகள் அய்யா
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்கு' யாதுமாகி நின்றாய்' என்று இத்தனை வருட இல்வாழ்க்கைக்குப்பின் மனைவிக்கு அழகாய் மகுடம் சூட்டுபவர்கள் மிகவும் குறைவு. அப்படிப்பட்ட பேரெடுத்ததற்காக உங்கள் இல்லத்தரசிக்கும் அவர்களுக்கு மிக உயர்ந்த விருது கொடுத்த உங்களுக்கும் இனிய மணநாள் வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குநான் எழுதி விடுகிறேன் அவளுக்கு அது முடியாது வாழ்த்துகளுக்கு நன்றி மேம்
நீக்குவாவ் ! அருமையான கவிதை .
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் மற்றும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சார்
கவிதையைப் பாராட்டியதற்கு நன்றி ஏஞ்செல்
நீக்குநமஸ்காரங்கள். பிறந்த நாளும், மண நாளும் ஒரே தினத்தில் என்பது ஒரு விசேஷம்தான்..உங்கள் வயதுக்குரிய சிந்தனைகளாய் விரிந்திருக்கின்றன உங்கள் நினைவுகள்.
பதிலளிநீக்குஉங்கள் இல்லத்தரசியைப் பாராட்டி எழுதி இருக்கும் வரிகள் சிறப்பு.
நூறாண்டு சேர்ந்து வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
எதையும் கூட்டி எழுதவில்லை உண்மை உரைத்தேன் இருக்கும் காலம் யாரையும் தொந்தரவு செய்யாமல் இருக்கவே வேண்டுகிறேன் நன்றி ஸ்ரீ
நீக்குமனம் நிறைந்து வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி சார்
நீக்குஎங்கள் வணக்கங்கள் சார்! உங்கள் பிறந்த நாளும், மண நாளும் ஒரே தினம்!! ஆஹா...கவிதை அருமை ஸார். அதுவும் நீங்கள் அம்மாவை பாராட்டி எழுதியிருப்பது வெகு சிறப்பு ஸார்.
பதிலளிநீக்கு//காக்கின்ற கண்களால் கருணை வெள்ளம்
கரைபுரள, பூக்கின்ற புன்னகையால் ,
ஆறாத மனப் புண்ணின் அசைவலைகள்
அடங்கவே அளித்தருளி அன்னையாய்
,என்னை ஆட்கொள்ள வந்தவளே எனக்கு நீ
யாதுமாகி நிற்கின்றாய் வாழி வாழியவே// மிகவும் ரசித்தோம் ஸார்.
துளசிதரன், கீதா
உண்மை எப்போதும் பாராட்டு பெறும் வருகைக்கு நன்றி சார்/மேம்
நீக்குபிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா. அருமையான கவிதையை எங்களுக்குப் பிறந்த நாள் பரிசாகத் தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஇம்மாதிரி வாழ்த்துகளே எங்களுக்கு பரிசு. வருகைக்கு நன்றி சார்
நீக்குபிறந்தநாள் மற்றும் மணநாள் வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குஇந்த இனிய நாளில் தங்கள் ஆசி வேண்டி....
என் வாழ்த்துகள் என்றும் உண்டு வருகைக்கு நன்றி குமார்
நீக்குவணக்கம் சார் நான் பூவிழி ... உங்கள் கவிதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தே அருமை சார் என்றும் இறைவன் என்றும் உங்களின் பக்கம் நின்று காக்கட்டும் என்று பிராத்தித்து கொள்கிறேன் சார்
பதிலளிநீக்குமுதல் வருகைக்கு நன்றி மேம் என்பதிவுகள் பல விஷயங்களில் சந்திக்கும் எல்லாவற்றையும் படிக்க வாய்ப்பு நிச்சயம் உண்டு. என் தளத்துக்கு வாருங்கள் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது என்று சொன்னால் அது பற்றிய என் எழுத்தின் சுட்டி தருகிறேன் முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
பதிலளிநீக்குபிறந்த நாளுக்கும் திருமண நாளுக்கும்
பதிலளிநீக்குமனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஐயா! பிறந்த நாளும் மண நாளும் ஒரே தேதியில் அமைந்துள்ளதாக இதுவரை கேள்விப் பட்டதில்லை . மிக்க மகிழ்ச்சி ஐயா!.பன்னெடுங்காலம் வாழா பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி ச்டார்
பதிலளிநீக்கு