வாழ்வியல் பாடங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்வியல் பாடங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 பிப்ரவரி, 2015

கற்ற பாடமும் இன்னபிறவும்


                                கற்ற பாடமும் இன்னபிறவும்
                               ==============================



நான் கற்றுக்கொண்ட பாடம் ஒரு குட்டிக் கதை

என் பேரக் குழந்தைகளுக்கு நான் சொல்ல விரும்பும் கதை.
அறுபது ஆண்டுகளுக்கு முன் நான் படித்துக் கொண்டிருந்தபோது என் தந்தையின் அலுவலகம் சுமார் எட்டு மைல் தூரத்தில் இருந்தது. அவர் தினமும் தன் சைக்கிளில் போய் வருவார். ஒரு நாள் உடல் சோர்வாக இருக்கிறது .இனறு அலுவலகத்தில் முக்கிய வேலை இருக்கிறது. விடுப்பு எடுக்க முடியாது. அதனால் ப்ளீஸ் இன்றைக்கு மட்டும் ஒரு நாள் நீ என்னை சைக்கிளில் ஏற்றிக் கொண்டுபோய் விடு. மாலை ஐந்து மணிக்கு சரியாக வந்து என்னை கூட்டிக் கொண்டுவாஎன்று கேட்டுக் கொண்டார். வீட்டிலும் டௌனில் சில வேலைகள் கொடுத்தார்கள் நான் தந்தையை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அவரது அலுவலகத்தில் விட்டு விட்டு வந்தேன். எப்படியும் மாலை அவரைக் கூட்டிவர டௌனுக்குப் போகவேண்டும்.எனக்கு ஒரு ஐடியா தோன்றியது,அவரைக்கூட்டிவர ப் போவதாக வீட்டில் சொல்லி சீக்கிரமாகவே கிளம்பிப் போய் ஒரு தியேட்டரில் மாட்னி ஷோ பார்க்கப் போனேன் ஷோ முடிந்து நான் தந்தையின் அலுவலகத்துக்குப்போகும் போது நேரம் ஆகி யிருந்தது. என்னைப் பார்த்ததும் அவர் என்னிடம் “ஏன் லேட்என்று கேட்டார். எனக்கு உண்மையைச் சொல்ல முடியவில்லை. சைக்கிள் பங்க்சர், வழியில் நண்பனைப் பார்த்தேன், வீட்டுக்கு வேண்டிய சில சாமான்களை வாங்குவதில் நேரம் ஆகி விட்டது என்று ஏதேதோ உளறினேன், அந்தநேரம் பார்த்து தியேட்டரில் என்னுடன் படம் பார்த்த நண்பன் ஒருவன்படம் நன்றாக இருந்தது இல்லையா.என்று போகும் வழியில் சொல்லிப் போனான். என் தந்தை மிகவும் வருந்தினார். “என்னிடமே உண்மையைச்சொல்ல முடியாமல் பொய் கூறுகிறாய் என்றால் என் வளர்ப்பில்தான் எங்கோ தவறு. அதற்கு எனக்குத் தண்டனையாக உடல் நலமில்லாவிட்டாலும் இந்த எட்டு மைலையும் நான் நடந்தே வருகிறேன்என்று சொல்லி என்ன சொல்லியும் கேட்காமல் நடக்கத் தொடங்கி விட்டார். நானும் அவர் பின்னாலேயே சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போனேன். நான் செய்த தவறுக்கு எனக்குத் தண்டனை தராமல் அஹிம்சை முறையில் அவர் தன்னையே தண்டித்துக் கொண்டதை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை. நான் சொன்ன பொய்க்கு என்னை அவர் அடித்து தண்டனை தராமல் அன்பினால் தண்டித்தது இன்றும் என் மனதை கனக்கச் செய்கிறது. அன்று தெரிந்து கொண்டேன். பயத்தினால் திருத்துவதைவிட அன்பினால் கட்டுப்படுத்த முடியும் என்று.நான் பொய் சொல்வதையும் நிறுத்தி விட்டேன்.
                                                 ---------------------------------------------------
டாக்டர்  கந்தசாமி ஐயா அவர்கள் எது சுகம் என்று கேட்டு அவருக்கே உண்டான பாணியில் பதிலும் சொல்லி இருக்கிறார்.ஆனால் இவற்றை எல்லாம் அனுபவிக்க வாழ்க்கை 9 8 7 6 5 4 3 2 1 0 என்று இருக்க வேண்டும் என்பதே இந்தத் தலை முறையினரின் எண்ணம் 
அது என்ன  9 8 7 6 5 4 3 2 1 0...?
9---கிளாஸ்  தினம் குடிக்க நீர்
8---மணி நேர நல்ல தூக்கம்
7---குடும்பத்துடன் இந்த அதிசயங்களுக்கு பயணம்
6---இலக்க மாத சம்பளம்
5---நாள் வாரத்தில் வேலை
4---சக்கர வாகனம்
3---படுக்கை அறை ஃப்லாட்
2---சூட்டிகையுள்ள குழந்தைகள்
1---காதல் மனைவி
0---டென்ஷன்
                            ---------------------------------------------------------------
உலகிலேயே சிறந்த ஆறு மருத்துவர்கள்.-1.  சூரிய ஒளி   2 ஓய்வு
3. உடற்பயிற்சி  4.  உணவு   5 தன்னம்பிக்கை 6  நண்பர்கள்.
 ------------------------------------------------------------------------------------
இரு மாதங்களுக்கு முன்னொரு நாள் நண்பர் ஒருவர் என் வீட்டுக்கு வந்தார். அவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறவர். நல்ல மனிதர். எப்படியோ அவருக்கு எங்கள் மேல் ஒரு தனி மரியாதை. சிறந்த பக்திமான். எல்லோருக்கும் உதவும் குணம் படைத்தவர்.
அவருடைய பள்ளிக்கூடத்தில் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக ஒரு பூஜை செய்வதாகவும் அதற்காக எச்.எம் டி லேஅவுட்டிலிருக்கும்  கோவிலில் இருந்து ஸ்ரீ லலிதாம்பிகை அம்மனை ஒரு நாள் பள்ளிக்கு எடுத்துவர ஏற்பாடு செய்திருப்பதாகவும் அந்த பூஜைக்கு நாங்களும் வந்து பள்ளி மாணவ மாணவிகளை ஆசிர்வதிக்கவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். என் மனைவியாவது கோவில் பூஜை மற்றும் வழிபாடுகளில் ஆர்வம் கொண்டவர். ஆனால் நான்.....? எனக்கு அவரது கோரிக்கையைத் தட்ட முடியவில்லை. நல்ல மனிதர் நம்மையும் மதித்து குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வேண்டுகிறார். சரி என்று சொல்லிவிட்டேன். அது ஒரு ஞாயிற்றுக் கிழமை.அவரது பள்ளி என் வீட்டில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்துக்குள் இருக்கிறது
அருகில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்குச் சென்று பள்ளிக்குக் கூட்டிக்கொண்டு போகச் சொன்னோம். வயதான எங்களைப் பார்த்து ஆட்டோக்காரர் எங்களுக்கு வேறு வழி இல்லை என்று தெரிந்து கொண்டு ரூ.80 கேட்டார். பேரம் ஏதும் பேசிப் பயனில்லை என்று தெரிந்தது. வாசலிலேயே எங்களை வரவேற்றார் நண்பர். சுமார் இரண்டரை மணிநேரம் பூஜை நடந்தது. ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம வழிபாட்டுடன் பூஜை நடை பெற்றது. நான் சற்றும் எதிர்பார்க்காதபோது நாங்கள் மேடைக்கு அழைக்கப் பட்டோம்.  எனக்கு பொன்னாடை போர்த்தி என் மனைவிக்கு வெற்றிலை பாக்குப் பழங்களுடன் பிரசாதமும் தரப் பட்டது. அம்மாதிரி ஒரு ஏற்பாட்டுக்கு நான் தகுதி ஆனவனா தெரியவில்லை. மனம் நெகிழ்ந்து விட்டது.ஒரு நாள் பள்ளி மாணவர்களுடன் என்னை உரையாட அழைத்திருக்கிறார்.என்னைப் பற்றிய ஏதோ மதிப்பு.இதையெல்லாம் பார்க்கும் போது I FEEL VERY HUMBLE
  மதிய உணவும் அனைவருக்கும் வழங்கப் பட்டதுஅப்போது பூஜை செய்ய வந்திருந்த ஆச்சாரியார் குழந்தைகளையும் பூஜையில் பங்கு பெறச் செய்ததை முதலில் தெரியாததாலும் பின்னர் சுதாகரித்துக் கொண்டு ஒரு பகுதியைக் காணொளியாக்கினோம் அது இத்துடன்.