தரம் பற்றிய ஒரு பரிசோதனை
------------------------------------------------
என்னுடைய ஆரம்பகாலப் பதிவில் நான் பதிவின் வாசகர்களிடம்
கேட்டிருந்த ஒரு சோதனை. நான் கேட்டிருந்த சோதனைக்கு யாரும் அவர்களை
உட்படுத்திகொண்டார்களா தெரியவில்லை. . இரண்டேபேர்தான் கருத்திட்டார்கள்.
நூற்றுக்கும் மேலான வாசகர்கள் படித்திருந்தார்கள். ஒரு வேளை சோதனையில்
உண்மையைச்சொல்ல விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஒரு விஷயத்தை வெளிக்கொணரவே
அந்த சோதனை.அப்படிப்பட்ட விஷயம்தான் என்ன.?
இப்போதைய வாசகர்கள் பலருக்கும் நான் திருச்சி பாரத மிகுமின்
கொதிகலத் தொழிற்சாலையில் தர உறுதி மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றி
வந்தேன் என்பது தெரிந்திருக்கும். பொதுவாகவே தரம் பற்றி நாம் எல்லாம் தெரிந்து
வைப்பதில்லை.அது குறித்த என் பழைய பதிவை நான் இன்று பார்க்கும்போது தரம் பற்றிய
இந்தப் பதிவினை ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் வாசித்திருந்தனர். ஆனால் ஒருவர் கூடக்
கருத்திடவில்லை.
தொழிற்சாலையில் செய்யப் படும் பொருட்களை தரக்
கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துவார்கள். ஒவ்வொரு பொருளையும் இப்படி தரக் கட்டுப்பாடு
செய்ய இயலாது . அப்படிச் செய்தாலும் அவை நூற்றுக்கு நூறு சதம் கட்டுப்பாட்டில்
இருக்கும் என்பது அறுதி யிட்டுக் கூற முடியாது. இதை நிரூபிக்கவே நான் கொடுக்கும்
சோதனை. வாசக நண்பர்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது ஒன்றுதான். இதன் முடிவில்
வரும் செய்தியை, நம்மைப் பற்றிய சோதனை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். கீழே
கொடுக்கப் பட்டிருக்கும் பத்தியை ஒரு முறை கவனமாக வாசியுங்கள். வாசிக்கும் போதே
அதில் வரும் எழுத்து ‘f’ எத்தனை முறை வருகிறது என்று கணக்கிட்டுக்
கொள்ளுங்கள், முதல் முறை படிக்கும்போதே கணக்கிட்டுக் கொள்ளும் எழுத்தின் மொத்த
எண்ணிக்கையைக் குறித்துக் கொள்ளுங்கள். இப்படியே இரண்டு முறையோ மூன்று முறையோ
செய்யுங்கள் ஒவ்வொரு முறையும் வரும் எண்ணிக்கையையும் குறித்துக் கொள்ளுங்கள்.அதாவது
‘f’ என்னும் எழுத்து தரத்தில் குறைந்த பொருள் என்றும் ஒருமுறை
கணக்கிடுவது உற்பத்தியானபொருட்களை 100% தரக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தி தரமற்ற
பொருளை இனம் காண்கிறோம் என்றும் அர்த்தம். இரண்டு முறையோ மூன்று முறையோகணக்கிடுவது
200% அல்லது 300% சதம் தரக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துகிறோம் என்றும் அர்த்தம்.
இப்போது நண்பர்களே நான் கொடுத்திருந்த பத்தியில் நீங்கள் கண்ட குறைபாடான பொருள்
எழுத்து ‘f’ எத்தனை என்பதை பின்னூட்டத்தில்
குறிப்பிடுங்கள்.இதில் சரி எது தவறு எது என்று குழப்பிக் கொள்ள வேண்டாம்.
The necessity of training farm hands for first class farms in the fatherly handling of farm livestock is
foremost in the minds of farm owners. Since the forefathers of the farm owners trained the farm hands for first class farms in the fatherly handling of farm livestock, the farm owners feel they should carry on with the family tradition of training farm hands of first class farms in the fatherly handling of farm livestock because they believe it is the basis of good fundamental farm management.
இந்தச் சோதனையே பொருட்களை நூறு சதவீதம் பரிசீலனை மூலம் தரம்
பிரிப்பதென்பது உத்தரவாதமானது அல்ல என்று புரியும்.
"தரம் என்பது”
"தரம் இலவசம்”