தரம் பற்றிய ஒரு பரிசோதனை
------------------------------------------------
என்னுடைய ஆரம்பகாலப் பதிவில் நான் பதிவின் வாசகர்களிடம்
கேட்டிருந்த ஒரு சோதனை. நான் கேட்டிருந்த சோதனைக்கு யாரும் அவர்களை
உட்படுத்திகொண்டார்களா தெரியவில்லை. . இரண்டேபேர்தான் கருத்திட்டார்கள்.
நூற்றுக்கும் மேலான வாசகர்கள் படித்திருந்தார்கள். ஒரு வேளை சோதனையில்
உண்மையைச்சொல்ல விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஒரு விஷயத்தை வெளிக்கொணரவே
அந்த சோதனை.அப்படிப்பட்ட விஷயம்தான் என்ன.?
இப்போதைய வாசகர்கள் பலருக்கும் நான் திருச்சி பாரத மிகுமின்
கொதிகலத் தொழிற்சாலையில் தர உறுதி மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றி
வந்தேன் என்பது தெரிந்திருக்கும். பொதுவாகவே தரம் பற்றி நாம் எல்லாம் தெரிந்து
வைப்பதில்லை.அது குறித்த என் பழைய பதிவை நான் இன்று பார்க்கும்போது தரம் பற்றிய
இந்தப் பதிவினை ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் வாசித்திருந்தனர். ஆனால் ஒருவர் கூடக்
கருத்திடவில்லை.
தொழிற்சாலையில் செய்யப் படும் பொருட்களை தரக்
கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துவார்கள். ஒவ்வொரு பொருளையும் இப்படி தரக் கட்டுப்பாடு
செய்ய இயலாது . அப்படிச் செய்தாலும் அவை நூற்றுக்கு நூறு சதம் கட்டுப்பாட்டில்
இருக்கும் என்பது அறுதி யிட்டுக் கூற முடியாது. இதை நிரூபிக்கவே நான் கொடுக்கும்
சோதனை. வாசக நண்பர்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது ஒன்றுதான். இதன் முடிவில்
வரும் செய்தியை, நம்மைப் பற்றிய சோதனை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். கீழே
கொடுக்கப் பட்டிருக்கும் பத்தியை ஒரு முறை கவனமாக வாசியுங்கள். வாசிக்கும் போதே
அதில் வரும் எழுத்து ‘f’ எத்தனை முறை வருகிறது என்று கணக்கிட்டுக்
கொள்ளுங்கள், முதல் முறை படிக்கும்போதே கணக்கிட்டுக் கொள்ளும் எழுத்தின் மொத்த
எண்ணிக்கையைக் குறித்துக் கொள்ளுங்கள். இப்படியே இரண்டு முறையோ மூன்று முறையோ
செய்யுங்கள் ஒவ்வொரு முறையும் வரும் எண்ணிக்கையையும் குறித்துக் கொள்ளுங்கள்.அதாவது
‘f’ என்னும் எழுத்து தரத்தில் குறைந்த பொருள் என்றும் ஒருமுறை
கணக்கிடுவது உற்பத்தியானபொருட்களை 100% தரக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தி தரமற்ற
பொருளை இனம் காண்கிறோம் என்றும் அர்த்தம். இரண்டு முறையோ மூன்று முறையோகணக்கிடுவது
200% அல்லது 300% சதம் தரக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துகிறோம் என்றும் அர்த்தம்.
இப்போது நண்பர்களே நான் கொடுத்திருந்த பத்தியில் நீங்கள் கண்ட குறைபாடான பொருள்
எழுத்து ‘f’ எத்தனை என்பதை பின்னூட்டத்தில்
குறிப்பிடுங்கள்.இதில் சரி எது தவறு எது என்று குழப்பிக் கொள்ள வேண்டாம்.
The necessity of training farm hands for first class farms in the fatherly handling of farm livestock is
foremost in the minds of farm owners. Since the forefathers of the farm owners trained the farm hands for first class farms in the fatherly handling of farm livestock, the farm owners feel they should carry on with the family tradition of training farm hands of first class farms in the fatherly handling of farm livestock because they believe it is the basis of good fundamental farm management.
இந்தச் சோதனையே பொருட்களை நூறு சதவீதம் பரிசீலனை மூலம் தரம்
பிரிப்பதென்பது உத்தரவாதமானது அல்ல என்று புரியும்.
"தரம் என்பது”
"தரம் இலவசம்”
26 times.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
இன்னும் இரு முறை சோதனை செய்யுங்கள்
35 this time :)
பதிலளிநீக்கு36 முறை வருகிறது.
பதிலளிநீக்குசத்தியத்திற்கு கட்டுப்பட்டு ஒருமுறைதான் எண்ணினேன் ,முப்பது என்பது சரிதானே :)
பதிலளிநீக்கு34
பதிலளிநீக்கு36 முறை வருகிறது ஐயா.. சரிதானே..
பதிலளிநீக்குமுதல் முறை 26 அடுத்த முறை 34 வந்தது!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
@ டாக்டர் கந்தசாமி
@ பகவான் ஜி
@ A.Durai
@ ஸ்ரீராம்
@ பரிவை சே.குமார்
@ தளிர் சுரேஷ்
அனைவரது வருகைக்கும் நன்றி. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கொடுக்கப் பட்ட பத்தி ஒன்றே. அதில் குறிப்பிட்ட தரமில்லாத எழுத்து f எவ்வளவு என்று தரம்பிரிக்க வேண்டும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணிக்கை வருவது எதிர்பார்க்கப் பட்டதே. அதிலும் பலமுறை சோதனை செய்தாலும் ஒருவருக்கே ஒரே எண்ணிக்கை வருவதில்லை. இது பலரும் சொல்லும் 100 சதவீத பரிசோதனையில் தரமற்ற பொருட்கள் எல்லாம் வடிகட்டப் படும் என்பது சரியல்ல என்னும் கூற்றை நிரூபிக்கவே இந்த பரிசோதனை. பரிசோதனையில் ஈடு பட்டவர்கள் தரம் பற்றி அறிய கொடுத்துள்ள லிங்குகளை சொடூக்கிப் பதிவுகளைப் பார்க்கவும். மீண்டும் நன்றி.
பதிலளிநீக்குபுதுமையான பதிவுதான் மூளைக்கு வேலை.
பார்ப்பட்ஜ்ஹற்கு எளிமையானது போல் தோன்றினாலும் உண்மையில் முஹ்டல் முறையில் தவறில்லாமல் சொல்வது கடினமே.
பதிலளிநீக்குநல்ல உதாரணம்
முதல் முறை 34, அடுத்து 36 மறுபடியும் 36.
பதிலளிநீக்குதரம் - ISO பொருத்தமட்டில் வேறு...
பதிலளிநீக்குஇதுவும் நல்லாயிருக்கு ஐயா...
எங்களது மூளைக்கும், பொறுமைக்கும் தங்களின் சோதனை முயற்சிக்கு நன்றி.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
இந்தப் பதிவு யாருடைய மூளைக்கும் வேலை கொடுக்க எழுதியதல்ல. எப்படி 100 சதவீதமான பரிசோதனை தரத்துக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை என்பதை விளக்கவே எழுதப் பட்டதுகொடுக்கப் பட்டிருந்த சுட்டிகளுக்குச் சென்று அவற்றையும் வாசித்திருந்தால் ஒரு முழு வெளிக் கொணர்வு புரிபட்டிருக்கும். வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ டி.என்.முரளிதரன்
வருகைகு நன்றி. பதிவை ஊன்றிப் படித்திருந்தால் பதிவின் நோக்கம் புரிந்திருக்கும். கொடுக்கப் பட்ட சுட்டிகளின் பதிவுகள் தரம் பற்றிய ஒரு விழிப்புணர்வைக் கொடுத்திருக்கும். இம்மாதிரி தவறுகள் எதிர்பார்க்கப்பட்டதே. முதலிலேயே சரியாகக் கண்டுபிடிக்கிறார்களா என்ற சோதனை அல்ல.
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
இம்மாதிரி விடைகள் எதிர்பார்க்கப் பட்டதுதான் ஐயா. கட்டுரையின் நோக்கம்விரிவாக எழுதி இருக்கிறேன். பின்னூட்ட மறு மொழிகளிலும் தெளிவு செய்ய முயன்றிருக்கிறேன். சுட்டிகளுக்குச் சென்று காரண கட்டுரைகளையும் வாசித்தால் விளங்கும்.வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
தரம் எங்கும் ஒன்றுதான். iso விதிகளைக் கடைப்பிடித்தால் தரம் உறுதி செய்யப்படும் என்பதும் ஒரு கோட்பாடு. நான் தரம் என்ன என்பதையும் எப்படி அது இலவசம் என்பதையும் சுட்டிகளில் காணும் கட்டுரைகளில் விளக்கி இருக்கிறேன்.வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
தரம் பற்றிய ஒரு விழிப்புண்ர்வை ஏற்படுத்தவே இக்கட்டுரை. தர உறுதி என்பது பொறுமையை சோதிக்கும் விஷயம்தான்.கொடுக்கப்பட்ட சுட்டிகளையும் சேர்த்து வாசித்தால் விளங்கும் என்று நம்புகிறேன். வருகைக்கு நன்றி.
ஆகா
பதிலளிநீக்குதரம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த அருமையான முயற்சி செய்துள்ளீர்கள் ஐயா
நன்றி
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
ஐயா தரம் பற்றிய மினிமம் புரிதல்களை ஏற்படுத்தவே இந்தப் பதிவில் இரண்டு சுட்டிகள் கொடுத்திருந்தேன். இந்தப் பதிவை வாசித்தவர்கள் தரம் பற்றிய கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளைப் படித்திருந்தால் ஓரளவு விழிப்புணர்ச்சி உண்டாகி இருக்கலாம். வருகைக்கு நன்றி
24
பதிலளிநீக்குகோபால்முதல் முதலில் க்வாலிட்டி கண்ட்ரோல் எஞ்சீனியராகத்தான் கேபிள் இண்டஸ்ட்ரியில் வேலை செய்தார்.
பதிலளிநீக்கு@ துளசி கோபால்.
24 என்று சொல்வதைப் பார்க்கும் போது நீங்கள் தரமற்ற அதிகமான பொருட்களை அனுமதித்தீர்கள் என்று தெரிகிறது. இந்தப் பதிவில் கண்டுள்ள லிங்கில் கொடுக்கப் பட்டுள்ள பதிவுகளையும் வாசித்தால்தான் தரம் பற்றிய ஓரளவு புரிதல் ஏற்படும். கோபாலிடம் இந்தப் பதிவைப்படிக்கச் சொல்லி இருக்கலாமே அவரது கருத்தும் அறிந்திருக்கலாம்.வருகைக்கு நன்றி.
அட ராமா!
பதிலளிநீக்குசார் மூன்று முறை எண்ணினோம்....மூன்ரு முறையும் 36 வந்தது...சரியா?
பதிலளிநீக்குநல்ல ஒரு விஷயம் சார். தரம் பிரிப்பது என்பது கடினமான வேலை என்பது மட்டுமல்ல....அது 100 சவிகிகிதம் சரியாக வர வேண்டுமே. அப்படியென்றால் நம்மூர் ஐ எஸ் ஓ எப்படி சார் நம்பலாமா?
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து
சார் மூன்று முறை எண்ணினாலும் ஒரே முறை எண்ணினாலும் தரம் குறைந்த எழுத்து f ன் எண்ணிக்கை மாறப் போவதில்லை. பின்னூட்டங்களை பார்த்தால் பலருக்கு பல எண்கள் வந்திருப்பதைக் காண முடியும். அது எதிர் பார்க்கப் பட்டதே. 100 சதவீதம் பரிசீலனை செய்தாலும் எல்லா தரம் குறைந்த பொருட்களைப்பிரிக்க முடியாது. தவறு நேரலாம் என்பதைக் காட்டவே இந்த சோதனை. பதிவில் இருந்த சுட்டிகளில் இருக்கும் பதிவுகளையும் சேர்த்துப்டித்தால் தரம் பற்றிய புரிதல் ஏற்படும் இந்த ஐஎஸ் ஐ--ஐஎஸ் ஓ பற்றி பிறிதொரு சமயம் விரிவாக எழுதுகிறேன் வருகைக்கு நன்றி.