Thursday, February 5, 2015

பழைய பதிவும் தொடரும் சிந்தனைகளும்


               பழைய பதிவும் தொடரும் சிந்தனைகளும்
               ----------------------------------------------------------


சில நாட்களுக்கு முன் ஒரு பதிவு எழுதி இருந்தேன். தலைப்பு “கடவுள் என்பது அறிவா உணர்வா”( பதிவைப் படிக்க கடவுள் என்பது அறிவா இடத்தைச் சுட்டவும்) அப்பதிவுக்கு பல விதமான கருத்துக்கள் தாங்கிய பின்னூட்டங்கள் வந்தன நான் கடந்த ஆண்டு சென்னை சென்றிருந்தபோது சுப்புத்தாத்தா அவர்களை அவர் வீட்டில் சந்தித்தேன். எங்கள் பேச்சின் ஊடே இந்தப் பதிவு பற்றியும் விவாதங்கள் நடந்தது. எனக்கென்னவோ இந்தப் பதிவு என்னைப் பற்றிய ஒரு தவறான கருத்தை அவர் மனதில் விதைத்து விட்டதோ என்று தோன்றியது. அவருக்கு நான் நாத்திக வாதம் பேசுகிறேன் என்று தோன்றியதோ என்னவோ. நான் திரும்பி பெங்களூரு போகும்போதும் போய்ச் சேர்ந்ததும் இது பற்றி நன்கு சிந்திக்கச் சொல்லி இருந்தார். அதாவது அந்தப் பதிவை மீண்டும் அசைபோட்டுப்பார்க்கச் சொல்லி இருந்தார். நான் ஆத்திகனா நாத்திகனா என்பதல்ல வாதம். என் எழுத்துக்கள் சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லையோ என்பதே என் சந்தேகம்.என் பதிவு எளிய தமிழில் எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் அனைவரும் புரிந்து கொள்ளும்படி இருந்தது என்றே எண்ணினேன்.

Any belief sustained over a fairly long period of one's life when integrated into one's intellect, is known as faith.சுப்புத்தாத்தா சொல்லி இருந்தார்இந்த நம்பிக்கைகள் எந்த அளவுக்கு அறிவோடு ஒத்துப்போகிறது என்பதே கேள்விக்குறி அறிவுக்கும் உணர்வுக்கும் மோதல் ஏற்பட்டால் அறிவு தோற்று உணர்வே வெற்றி பெரும் என்பதும் வாழ்வில் கண்கூடு. .  

 அறிவு நிறையக் கேள்விகள் கேட்கிறதுஉணர்வு நம்பினால் நலம் பயக்கும் என்கிறது.அறிந்ததும் உணர்ந்ததும் எழுதப் பட்டது. எல்லோருக்கும் உடன் பாடு இருக்கும் என்று தோன்றவில்லை. உண்ர்வும் அறிவும் ஒன்றா வேறு வேறா என்னும் அடிப்படைக் கேள்விக்கே வித்திட்டது.இனி எழுதுவதைக் கேள்விபதிலாய் எழுதினால் ஒரு சமயம் பலன் விளையலாம்.

 கே;-பதிவின் நொக்கம் எது ?
பதில் :- கடவுள் பற்றிப் பேசப்படுவதை சரியாய்ப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே
கே:- சரி கடவுள் பற்றி புரிய வைக்க முடிந்ததா?
பதில்:- நானே புரிந்து கொண்டால்தானே புரிய வைக்க முடியும். கடவுள் என்பதே ஒரு concept. என்பவருக்கு இந்த கேள்வி தேவையில்லை! கடவுள் என்பது கருத்தியல்! கருத்து உங்கள் நினப்பு ! இவை மூளையின் நடவடிக்கை ! function of brain ! a few micro miilli of protein,nuron,electric charge etc ! pure matter ! matter is primary ! பொருள் முதல் வாதம் ! பொருள் இல்லையேல் எதுவும் இல்லை ! கடவுள் உண்டு,இல்லை என்று நினைப்பதற்கு மனிதன் வேண்டுமே ! அறிவு உணர்வு என்பதெல்லாம் அதற்குப் பின்தானே என்றது ஒரு பின்னூட்டம் ஆக முதலில் கடவுள் பற்றி நான் நினைப்பதையும் கூறிவிட வேண்டும்.
கே:- சரி கடவுள் என்பது யார் அல்லது என்ன.?
பதில்:- தெரியாது
கே:- கடவுள் என்பவர் இருக்கிறாரா?
பதில்:- தெரியாது
கே:- இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாதபோது அது பற்றி எழுதியோ விவாதித்தோ என்ன கிடைக்கப் போகிறது.?
பதில் பெரும்பாலானோர்கள் புரிந்து கொள்வதில் புரிதல் சரி இல்லை என்று தோன்றியதால் வந்த விளைவே இப்பதிவு.
மனதும் அறிவும் உணர்வும் புத்தியும்
வினவிடும் எவர்க்கும் வந்திடும் தொல்லையே
அனைத்தும் விடுத்து அகத்துள் நிறைந்து
வினைப்பயன் அறுக்கும் வழியினைத் தெரிந்து
சொல்லும் செயலும் எல்லாம் அறுத்து
சும்மா இருப்பதே சுகமிங் கெனக்கு
என்றொரு பின்னூட்டமும் இருந்தது! எனக்கு இந்த வினைப்பயன் போன்றசொற்றொடர்கள் தெரியாதஒன்றை தெரிந்தமாதிரிக் காட்டும் உபாயமே என்று தோன்றியது.
கே.:- இன்னும் சற்று விளக்கமாகவே கூற முயற்சி செய்யேன்
பதில்:-நான் சில நாட்களுக்கு முன் கீதையின் 18 அத்தியாயங்களையும் தமிழ்ப் பதவுரையாக வெளியிட்டேன்.ஒரு தலைப்பு பற்றிக் கருத்து கூறும் முன் அது பற்றிய ஓரளவாவது working knowledge ஆவது இருக்க வேண்டும் என்று எண்ணுபவன் நான். பதவுரைகளில் என் கருத்து என்று ஏதும் எழுதவில்லை. ஆனால் பதிவுகளை முடித்தபின் என் கருத்துக்கள் சிலவற்றை வெளியிட்டேன். கீதை பெரும்பாலும் ஆத்மா என்றும் அது பற்றிய புரிதலை ஞானம் என்றும் கூறுகிறது. அது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் பகரப் பட்டதாக நம்ப்பப்படுவதால் அதற்கு கூடுதல் sanctity கொடுக்கப் பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டவை எல்லாம் ஒரு CONCEPTஐ தழுவியே இருந்தது. உயிர் பற்றியும் ஆத்மா பற்றியும் நிறையவே சொல்கிறது. அத்தனையும் ஊர்ஜிதப்படுத்தப்படாத கூற்றுகளே. “இருண்ட அறையில் . ஒரு அமாவாசை இரவில் இல்லாத ஒரு கறுப்புப் பூனையைத் தேடுவதுபோல் எனக்குப் பட்டது. நீ யார் என்னும் கேள்விக்கு நான் இன்னாருக்குப்பிறந்தவன் பெயர் இன்னது என்றுதான் கூறுகிறோம் கூறமுடியும். அதை விட்டு நீ நீயல்ல உன் ஆத்மா அது அழியாதது என்றெல்லாம் சொல்லிச் சொல்லியே பயமுறுத்தி வேண்டாத நம்பிக்கைகளை விளைத்து விட்டிருக்கின்றனர்.ஆத்மா பிறப்பது மில்லை இறப்பதுமில்லை என்றெல்லாம் கூறுகிறவர்கள் அதை எப்பொழுதாவது உணர்ந்து இருக்கிறார்களா?உடலுக்கு உபாதை என்று வந்து விட்டால் அதனால் ஆத்மாவுக்கு பாதிப்பிலை என்று சமாதானப்படுத்தி ஒதுக்க முடிகிறதாஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது.ஒரு சிறுவன் ஒரு வண்ணத்துப் பூச்சியைப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தானாம் அங்கே வந்த ஒரு பெரியவர் ‘வண்ணத்துப் பூச்சியைத் தொந்தரவு செய்யாதே .உன் அடுத்தபிறவியில் நீ வண்ணத்துப் பூச்சியாகவும் இந்தப் பூச்சி நீயாகவும் மாறி அதன் கையால் நீ அவதிப் படுவாய் என்றாராம். அதற்கு அச்சிறுவன் ‘உங்களுக்குத் தெரியவில்லை; போனபிறவியில் நான் வண்ணத்துப் பூச்சியாகவும் இது நானாகவும் இருந்திருக வேண்டும். அதனால்தான் இப்போது இது என் கையில் என்றானாம் joke apart நீ நீயல்ல என்று சொல்வது அபத்தமாகப்படுகிறது.
கே: - அப்போது இந்தக் கதைகள் எல்லாம் பொய்யா?
பதில் :- பொய் என்று சொல்வதைவிட புனைவு என்று சொல்லலாம். இம்மாதிரிப் புனைவுகளால் வாழும் வரை ஒருவனை நல்லவனாக இருக்கக் கூறப்பயன்படும் அச்சுறுத்தல்களே இவை என்று தோன்றுகிறது.
கே: -இவற்றுக்கும் உன் பதிவுக்கும் என்ன சம்பந்தம். ?
பதில்:-இந்த மாதிரியான ஆதார எண்ணங்களைக் கொண்டே நான்சொல்ல வந்ததைச் சொல்லும் யுக்தி அது.
கே:- சொல்ல முடிந்ததா?
பதில் :- சொல்ல முடிந்ததா என்று கேட்பதைவிட இலக்கு நோக்கிச் சென்றதா என்று கேட்டிருக்கவேண்டும் நான் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் தேடல் என்னும் பதத்தை உபயோகிக்கக் காண்கிறேன் தேடும் பொருளுக்கோ விஷயத்துக்கோ ஏதாவது உருவகம் இருக்கிறதா?வெறுமே abstract ஆகத் தேடுவது பல நேரங்களில் விளங்குவதில்லை. எனக்கு நாம் தேடுவது நம்முள் இருப்பதைக் கண்டறியவும் வெளிக் கொணரவும் இருக்க வேண்டுமே தவிர இருட்டறையில் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவது போல் இருக்கக் கூடாது.என் பதிவில் தேடலாக என் கேள்விகளும் என்னிலிருந்தே வந்த பதில்களும் எழுதி இருந்தேன். அனைவரையும் நேசிக்கவேண்டுவதே தேடலின் ஆதாரம் என்று என் பாணியில் முடித்திருந்தேன்
மற்றபடி நான் ஆத்திகனா நாத்திகனா இல்லை ஒரு bundle of contradictions ஆ என்பதை அவரவர் யூகத்துக்கும் கணிப்புக்கும் விட்டு விடுகிறேன்                 

44 comments:

 1. //வாழும் வரை ஒருவனை நல்லவனாக இருக்கக் கூறப்பயன்படும் அச்சுறுத்தல்களே இவை//

  நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன். அந்த விழிப்பு வந்து விட்டால் மதமும்,கடவுளுமெதற்கு?

  ReplyDelete

 2. வணக்கம் ஐயா,
  எனது அனுபவத்தில் கடவுள் இருக்கிறான் என்று நம்பும் மானிடனைவிட, கடவுள் இல்லை என்ற மானிடர்கள் நிறைய பேர் நியாயமானவர்களாக வாழ்வதை கண்டு இருக்கிறேன் அதாவது மெஜாரிட்டி என்று சொல்கிறேன் மேலும் சொல்கிறேன் இது எனது அனுபவத்தில்தான், உங்களுக்கோ, அல்லது இதைப்படிக்கும் மற்றவருக்கோ, வேறுபடலாம் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.

  கடவுளை நம்பாதவன் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து தொலையட்டும்,
  But
  கடவுளை நம்புபவன் நியாயமாக அப்பழுக்கற்றவனாக வாழ வேண்டும்
  80தே எமது கருத்து, கொள்கை.

  நான் இல்லை என்ற சொல்வில்லை, இருந்தே தீரவேண்டும் என்று நம்பி நியாயமாக வாழ முயற்சிக்கும் சராசரி மனிதன்.

  //கடவுள் 80 அறிவா//
  பதிவுக்கு போகிறேன் மீண்டும் வருவேன்,

  மனசாட்சிக்கு பயந்த...
  கில்லர்ஜி.

  ReplyDelete

 3. பதிவுக்கு சென்று கருத்துரை இட்டு வந்தேன் 100/100 உண்மையான வரிகள்.

  ReplyDelete
 4. தருமி ஸார் கோட் செய்திருக்கும் வரிகள்.... எனக்கும் இதே மாதிரி தோன்றும்.

  ReplyDelete
 5. தருமி ஸார் கோட் செய்திருக்கும் வரிகள்.... எனக்கும் இதே மாதிரி தோன்றும்.

  ReplyDelete
 6. நண்பர் கில்லர்ஜி அவர்களின் கருத்துடன் உடன் படுகின்றேன் ஐயா. கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் நிறைய பேர், நல்லவர்களாக, நியாய வாதிகளாக வாழ்வதை கண்டு வருகின்றேன். ஆனால் எக் காலத்திலும் கடவுளைப் பற்றியே பேசிக் கொண்டு, ஒவ்வொரு கோயிலாக சென்று தரிசணம் செய்து வரும், பலர், நியாய வாதிகளாக இல்லாம்ல், அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுப்பவர்களாக, ஏமாற்றும் குணம் உடையவர்களாக இருப்பதை நேரில் கண்டும், அவர்களால் பாதிக்கப் பட்டும் வருகின்றேன். இந்நிலை எனக்கு மட்டுமா, அனைவருக்குமா என்று தெரியவில்லை..,,,
  எனவே மனிதத்தைப் போற்றுவோம்

  ReplyDelete
 7. ஆத்திகனோ நாத்திகனோ மனிதனாக இருந்தால் போதும் என்பது என் கருத்து!

  ReplyDelete
 8. கடவுள் என்பது உணரப்படுவது என்பது என் கருத்து. தேடலின் முடிவு ஒரு தெளிவைத்தரும். நீங்கள் ஆத்திகர் என்றே என் முடிவு ஐயா.

  ReplyDelete
 9. உண்டென்றால் அவன் உண்டு
  இல்லை என்றால் இல்லை


  கடவுள் மதங்கள் உண்டென்பதும் இல்லை என்பதும் அவரவர் நம்பிக்கை சார்ந்த நிறுவவும் மறுக்கவும் முடியாத விடயங்களாகவே இருக்கின்றன எனக் கருதுகிறேன் அய்யா!
  தங்களது எழுத்துகள் கனமாக இருக்கின்றன.
  நன்றி

  ReplyDelete
 10. ரொம்ப கனமான விஷயம். இது குறித்துச் சொல்லும் அளவுக்கு எனக்குப் புரிதல் ஏதும் இல்லை. ஆனால் ஒவ்வொருவர் கருத்தும் மற்றவர் கருத்திலிருந்து மாறுபட்டே இருக்கும். கடவுளை நம்புபவர்கள் அயோக்கியர்கள் என்றே இங்கே பலரும் சொல்லி இருக்கின்றனர். இதைப் படித்ததும் சிரிப்பு வந்தது. :)))))

  ReplyDelete
 11. திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களின் கருத்தே என் கருத்தும்.

  ReplyDelete
 12. என்னைப் பொறுத்தவரை எல்லா சமயங்களிலும் முழுமையான நாத்திகனாகவோ முழுமையான ஆத்திகனகவோ இருக்க முடியாது என்றே கருதுகிறேன்.ஆத்திகர்கள் சில சமயங்களில் நாத்திகர் போலவும் நாத்திகர் ஆத்திகர் போலவும் தங்களையும் அறியாமல் நடந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது

  ReplyDelete
 13. பஞ்ச பூதங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை...

  ReplyDelete

 14. @ தருமி
  முதல் வருகைக்கு நன்றி சார். மதம் என்றும் கடவுள் என்றும் புரியாத விஷயங்களியும் புரியாமலேயே வாழ்வின் முக்கிய நோக்கத்தை அறியாமல் பலரும் இருக்கக் கண்ட என் உரத்தசிந்தனைகளின் வெளிப்பாடே இப்பதிவு.

  ReplyDelete

 15. @ கில்லர்ஜி
  நான் சொல்லி இருக்கும்படி கடவுள் என்பதே ஒரு concept. மனிதனை மனிதனாக வாழ வகை செய்யும் கோட்பாடுகளே மதமும் கடவுளும். கடவுளை நம்புபவன் அப்பழுக்கற்றவனாக வாழ்வதில்லை என்றால் கடவுள் பற்றிய புரிதலில் எங்கோ தவறு இருக்கிறது என்றுதானே அர்த்தம். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஜி.

  ReplyDelete

 16. @ ஸ்ரீராம்
  நீங்கள் சரியான புரிதலுக்கு வருகிறீர்கள் என்று அர்த்தம் கொள்ளட்டுமா. நன்றி ஸ்ரீ.

  ReplyDelete

 17. @ கரந்தை ஜெயக்குமார்
  கோவிலுக்குச் செல்வதும் தரிசனம் செய்வதும் மிகவும் அனிச்சையான செயல்களாகவே மாறி வருகிறதோ என்னும் சந்தேகம் எனக்கு உண்டு. அவர்களின் செயலுக்கும் கடவுள் பக்திக்கும் சம்பந்தமில்லை. அடுத்தவனை நேசிக்கத் தெரியாதவன் கடவுளை எப்படி நேசிக்க முடியும்.கடவுள் பற்றியும் அவற்றின் தாத்பர்யம் பற்றியும் நான் அடிக்கடி எழுதுவது இம்மாதிரியான மக்களைப் பார்க்கும் வருத்தத்தில்தான். வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 18. @ தளிர் சுரேஷ்
  /ஆத்திகனோ நாத்திகனோ மனிதனாக இருந்தால் போதும் என்பது என் கருத்து/ நான் ஒரு rider இணைக்கிறேன். மனிதனாக இருப்பது என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 19. @ தனிமரம் நேசன்
  கடவுள் என்பது உணரப்படுவது என்றால் உணர்ந்தவர்கள் எத்தனை பேர் கடவுளென்பது ஒரு கான்செப்ட் . ஏதோ ஒரு நம்பிக்கைக்கு அடிகோலி. நம்பிக்கையின் அடிப்படையாக மனிதநேயம் இருக்க வேண்டும்.உணர முடியாத கடவுள் என்பது ஏதோ தேடலின் ஆரம்பம். அந்தத்தேடல் நம் உள்ளிடமிருந்து துவங்க வேண்டும் என்பதே நான் கூற வருவது. எத்தனைதான் சொன்னாலும் சொல்ல வருவது முடியாமலேயே இருக்கிறது. கடவுளின் இருப்பு பற்றிப் பேசுபவன் நாத்திகனாகவும் இருக்கலாம் ஆத்திகனாகவும் இருக்கலாம். நாத்திகம் ஆத்திகம் எது என்று புரியவில்லை. வெகு நாட்களுக்குப் பின் வருகை தந்ததற்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 20. @ ஊமைக் கனவுகள்
  /கடவுள் மதங்கள் உண்டென்பதும் இல்லை என்பதும் அவரவர் நம்பிக்கை சார்ந்த நிறுவவும் மறுக்கவும் முடியாத விஷயங்கள் என்று நீங்கள் கருதினாலும் நம்பிக்கைகளை சற்று உரசிப் பார்த்து சரி செய்து கொள்வது தவறு இல்லையே ஐயா. உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் இல்லை என்று சொலவது escapism என்று தோன்றுகிறது. கடவுள் மற்றும் மதங்களின் நோக்கம் என்ன என்பதே பதிவின் மையக் கருத்து. புரிய வைக்கும் முயற்சியில் இன்னும் நான் தேறவில்லை என்றே எண்ணுகிறேன் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete

 21. @ கீதா சாம்பசிவம்
  கடவுளை நம்புபவர்கள் அயோக்கியர்கள் என்று யாரும் சொன்னதாகத் தெரியவில்லை.கடவுளை நம்புபவர்களில் அயோக்கியர்களும் இருக்கிறார்கள் என்று கூறுவதாகப் புரிதல் என்னுடையது. நீங்கள் உங்களையே ஒரு பென்ச் மார்க் ஆக எடுத்துக் கொண்டு பொருள் கொள்ளக் கூடாது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். .

  ReplyDelete

 22. @ வே.நடன சபாபதி
  திரு தளிர் சுரேஷுக்கு எழுதிய பின்னூட்டமே உங்கள் கருத்துக்கும். வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 23. @ டி.என். முரளிதரன்
  ஆத்திகன் நாத்திகன் என்பதே இன்னும் சரியாகப்புரிந்து கொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது. எல்லா நேரங்களிலும் நல்லவனாக . பிறரை நேசிப்பவனாக யாரும் இருக்கலாம். என்னதான் எழுதினாலும் எழுத்தில் சொல்ல வருவது இலக்கை அடைய வில்லை என்றால் என் எழுத்து இன்னும் சரியாக எழுதப் படவில்லை என்றே கருதுகிறேன். வருகைக்கு நன்றி முரளி.

  ReplyDelete

 24. @ திண்டுக்கல் தனபாலன்
  /பஞ்ச பூதங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை/ என்ன சொல்ல வருகிறீர்கள் புரியவில்லை.டிடி. எதையும் யூகிக்க விரும்பவில்லை என்பதே என் நிலைப்பாடு. வருகைக்கு நன்றி டிடி.

  ReplyDelete
 25. //நீங்கள் உங்களையே ஒரு பென்ச் மார்க் ஆக எடுத்துக் கொண்டு பொருள் கொள்ளக் கூடாது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். //

  இது என்னைக் குறித்த உங்கள் தனிப்பட்ட கருத்து. இதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் நான் நினைத்துக் கொண்டு எழுதியது வேறு சில கடவுள் பக்தியுள்ளவர்கள். நான் காட்டுவதெல்லாம் பக்தி என்றே சொல்ல மாட்டேன். எல்லாவற்றிலும் அரைகுறையாக இருக்கும் என்னை எப்படி பக்திமான் எனச் சொல்ல முடியும்? உண்மையான பக்திமான்கள், இன்னமும் இருந்து வருகின்றனர்.

  ReplyDelete
 26. டிடி சொல்லி இருப்பது பஞ்சபூதங்களையும் எப்படி உணர்கிறோமோ அப்படியே கடவுளையும் உணரலாம் என்பதே.

  ReplyDelete
 27. இப்போது நான் சென்று வருன் ஆஞ்சநேயர் சந்நிதியில் வழிபாடுகளை நடத்தும் பட்டாசாரியார் பேசுவதைப் பார்த்தால் யாருக்குமே அங்கே போகத் தோன்றாது. கடவுளை மட்டுமே நம்புவதால் தொடர்ந்து போகிறேன். ஏனெனில் பட்டாசாரியார் செய்யும் தவறுகளுக்கான பலாபலன் பட்டாசாரியாருக்கே உரியது! எல்லாவற்றையும் அந்த இறைவன் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான். என்று தள்ளிக் கொண்டு தான் போக வேண்டும். எந்தக்கோயிலுக்குப் போனாலும் பண வசூல்! உயர்ந்த பட்சக் கட்டணம் ஆயிரம் ரூபாய் இறைவனை தரிசிக்க! இதெல்லாம் இறைவனா கேட்டான்? மனிதர்கள் செய்யும் தவறு இது! இதற்குக் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்? கடவுளை நம்புபவர்களை, அப்பாவி மக்களை ஏமாற்றி இவர்கள் பிழைக்கிறார்கள். இது இப்போது ஒரு வியாபாரம் ஆகிவிட்டது. நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும். திரும்பத் திரும்ப நீங்கள் நான் என்னையே அளவுகோலாகக் கொள்வதாகத் தவறான கருத்தைச் சொல்லி வருவதால் எழுத நேர்ந்தது. :))))

  ReplyDelete
 28. கடவுள் என்பது அறிவா,உணர்வா எனக்கு அர்த்தம் தெரியாது.பலரிடம் கேட்டபொழுது பலவாறாக சொன்னார்கள். ஆனால் என் அப்பாவிடம் கேட்டப் பொழுது அவர் சொன்ன விளக்கம் எனக்கு புரிந்தது
  அவர் சொன்ன விளக்கம் இதோ

  கடவுள் என்பது அறிவும் இல்லை,உணர்வும் இல்லை. அறிவு என்பது ஒவ்வொருக்கும் மாறுபடும். உணர்வென்பதும் ஒவ்வொரு க்கும் மாறுபடும், ஆனால் இருக்கா இல்லையா என்று ஆராய்ந்தால் தனித்தனியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு முடிவை தருவார்கள். இதிலிருந்து தனிச்சையாக எந்தவொரு முடிவையும் தீர்மானமாக எடுத்துக் கொள்ள முடியாது.எனவே பார்வையற்றவனுக்கு கிடைத்த கைத்தடியை கடவுளாகவும் பார்வையுள்ளவனுக்கு ஒளி கடவுளாகவும் ஏற்றுக்கொள்.இனி உன்னால் கடவுளை பார்க்கலாம் என்றார்.

  ReplyDelete

 29. @ கீதா சாம்பசிவம்
  I feel you are ruffled.கடவுளை நம்புபவர்கள் அயோக்கியர்கள் என்றே இங்கே பலரும் சொல்லி இருக்கின்றனர். இதைப் படித்ததும் சிரிப்பு வந்தது. :)))))என்பதைப் படித்ததும் “கடவுளை நம்பும் நான் அயோக்கியனா.?” என்னும் எண்ணம் உங்களுக்கு வந்ததால் எழுதப்பட்ட பின்னூட்டமோ என்று எனக்குத் தோன்றியது. அதையே அப்படிக் கூறினேன் என் புரிதல் தவறென்றால் மன்னிக்கவும்.

  ReplyDelete

 30. @ கீதா சாம்பசிவம்
  கடவுள் நம்பிக்கைக்கும் பக்திக்கும் there is subtle difference. நான் சொலவது புரிகிறது என்று நினைக்கிறேன் நம்பிக்கை அதிகமானால் பக்தியாகப் பரிணமிக்கலாம் என்பது என் எண்ணம். அரைகுறை பக்தி என்றால் அரை குறை நம்பிக்கை என்று அர்த்தமா.?I think there is a lot of confusion. /பஞ்ச பூதங்களை உணர்வது போல் கடவுளையும் உணரலாம் / என்னால் உணரமுடிவதில்லையே. என்னை ஒரு சராசரி மனிதனின் பென்ச் மார்க் ஆக எடுத்துக் கொள்கிறேன் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete

 31. @ Arrow Sankar
  /எனவே பார்வையற்றவனுக்கு கிடைத்த கைத்தடியை கடவுளாகவும் பார்வையுள்ளவனுக்கு ஒளி கடவுளாகவும் ஏற்றுக்கொள்.இனி உன்னால் கடவுளை பார்க்கலாம் என்றார்./ இது அறிவினால் வந்த விளக்கமா. உணர்வால் வந்த விளக்கமா.? தெரியாத ஒன்றை தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் நம் குணங்களில் இதுவும் ஒன்று. என் பதிவை ஊன்றிப் படிப்பவருக்கு நான் என்னைக் கேட்டுக் கொண்ட கேள்விகளும் பதிலும் புரியாமல் போனது என் துரதிர்ஷ்டமே.

  ReplyDelete
 32. //@ தருமி
  முதல் வருகைக்கு நன்றி//

  முதல் வருகையா ....?

  ReplyDelete

 33. @ தருமி
  இந்தப் பதிவுக்கு முதல் வருகை என்று சொல்ல நினைத்தது வேறு ஒரு பொருளில் புரிந்து கொள்ளப் பட்டதைப் பார்க்கும் போது எழுதுவது இலக்கு நோக்கிச்சென்றிட எவ்வளவு கவனம் தேவை என்பதை உணர்த்துகிறது. நன்றி ஐயா... சாரி, சார்.

  ReplyDelete
 34. அன்புள்ள அண்ணனுக்கு,

  ரொம்ப அநியாயம் செய்கிறீர்களே! நீங்களே என்னை ‘ஐயா’ ‘சார்’ என்று அழைப்பதா ... ? நானென் பாவம் செய்தேன்!

  ReplyDelete
 35. படித்தேன். உங்கள் எண்ணங்களும் கருத்துகளும் சரியாக இருந்தாலும் அதைப் புரிந்து கொள்ளக்கூடியவர்களிடம் கூறினால்தான் அதனால் பயன் ஏற்படும். அப்படிக் கூறுவது எளிமையாக இருப்பதுவும் அவசியம்.

  பதிவுகள் சுருக்கமாக அமைவது கருத்துகளைப் புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்.

  ReplyDelete
 36. மிகவும் சிந்திக்க வைக்கும் பதிவு சார்! நாங்களும் கடவுளை நம்புபவர்கள். ஆனால் அதற்கு ஒரு உருவம் கொடுத்து என்று இல்லை..அதையும் தாண்டி ஒரு சக்தியாக...பாசிட்டிவ் எனர்ஜியாக...நல்லதை நினைக்கும் போது மனம் பாசிட்டிவ்வான எண்ண அலைகளை உருவாக்கும் இல்லையா...

  நீங்கள் வாசித்திருப்பீர்கள் பல வருடங்களுக்கு முன்பு, ரா.சு நல்லபெருமாள் அருமையான எழுத்தாளர்-திருனெல்வேலி- எழுதிய "நம்பிக்கைகள்' நாவலுக்கு 1983 ல் கஸ்தூரி
  சீனிவாசன் அறக்கட்டளை விருது கிடைத்தது. கலைமகள்/அமுதசுரபியா தெரியவில்லை வெளிவந்தது. அது முக்கியமாக புட்டபர்த்தி சாயி பாபாமீதான நம்பிக்கையை கொண்ட மக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று. அதில் அந்த சாமியைத் தரிசிக்கச் செல்லும் பலதரப்பட்ட கதாபாத்திரங்களின் வாயிலாகவும் அரசியல் வாதிகளையும் அதில் உட்படுத்தி பேசியிருப்பார். வசனங்கள் நச் என்றிருக்கும். ---துளசி, கீதா

  கீதா: சார், எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் ரிச்சுவல்ஸில் நம்பிக்கை இல்லை. அதே போன்று ஆத்மா....என்று பேசப்படுவதெல்லாம்..ஸாரி சார் புரிவதில்லை. புரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. ஏனென்றால் அதில் நம்பிக்கை இல்லை. அதனால் பகவத் கீதையை எல்லோரும் மிகவும் உயர்வாகப் பேசுகல், கோர்டில் அதன் மீது சத்யப்பிரமாணம் எடுத்துக் கொளல் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியய்வில்லை. பல தத்துவங்களை புரிந்து கொள்ள் அமுடியய்வில்லை. ஏன்மறுபிறவி போன்றவற்றில் நம்பிக்கை இல்லாத சுஜாதா கூட இறுதியில் தத்துவ சாராம்சம் ஃபிசிக்ஸ் கம்பைன் செய்து எழுதிவந்தார். நம்மூரில் பலரும் பேசுவார்கள். இந்து மதத்தில் இல்லாதவையே இல்லை. என்னமா நம் வேதங்கள் அப்போதே சொல்லியிருக்கின்றன. அதைத்தான் ஃபிஸிக்ஸ், வான சாஸ்திரம் எல்லாம் பேசுகின்றன என்று சொல்லுவார்கள். அவர்களிடம் ஒன்றை விளக்கச் சொல்லிக் கேட்டுப் பாருங்கள் அவர்களால் எதையுமே விளக்க முடியாது. தெரியமாலயே நம் கீதையில் அப்போதே சொல்லிவிட்டார். வேதம் அப்போதே சொல்லிவிட்டது என்பர்....

  பல விஷயங்கள் மனிதனை நல்வழிப்படுத்த ஒரு ஒழுங்கு முறை வாழ்க்கை வாழ பயப்படுத்திச் சொல்லப்பட்டவையே. சாமி கண்ணைக் குத்தும் என்பதெல்லாம்.....

  எனவே அன்புடனும், மனித நேயத்துடனும் நல்ல மனசுடனும், சாதி பாராது வாழ்ந்தால் அதுவே போதும்.

  எனது ஒரு கேள்வி...நீங்கள் ஐம்பூதங்களை,இயற்கையை நம்பிகின்றீர்களா? சூரியனை நம்புகின்றீர்களா? சூரியன் இல்லை என்றால் ஒன்றுமே இல்லைதானே? அப்போ அந்த சூரியன் கடவுள்தானே! இயற்கையை/5 பூதங்களை நம்மால் விஞ்சி நிற்க முடியுமா? அப்போ அந்த இயற்கை கடவுள்தானே? நம்மால் படைக்க முடியுமா? இயற்கையைஅ...அவ்வளவே ! நீங்கள் இதை நம்புபவர் என்றால் ஆன்மீக வாதிதான். உலகில் நாத்திகம் என்ற ஒன்று இருக்கவே முடியாது. நாத்திகம் என்பது சுத்த ஹம்பக். சூரியனை கடவுள் என்றால் நாத்திகம் அங்கு அற்று விடுகின்றது. அவ்வளவே.

  நன்றி சார்.

  ReplyDelete
 37. புரிதல்கள் என்பது அவரவர் மனதைப் பொறுத்தே அமையும். இதில் ஆத்திகத்திற்கோ நாத்திகத்திற்கோ தொடர்பில்லை. அடுத்ததாக மனதிற்குப் பட்டது என்ற நிலையில் செயல்படும்போது மனம் நிறைவடையும். அப்போது தேவையற்ற வினாக்கள் எம்முள் எழ வாய்ப்பில்லை.

  ReplyDelete

 38. @ தருமி
  Mt dear Sam, மறந்துவிட்டது. தமிழில் ஐயாவும் ஆங்கிலத்தில் சார்-உம் ஒரே பொருள்தான் என்று. இருந்தாலும் மதிப்புக்குரியவர்களை ஐயா என்றோ சார் என்றோதான் அழைக்கப் பழகிவிட்டது. அடிக்கடி வாருங்கள் நானும் மறக்கமாட்டேன். நன்றி.

  ReplyDelete

 39. @ டாக்டர் கந்தசாமி
  குறிப்பிட்டவர்களுக்காக பதிவு எழுதுவதில்லை. எழுதுவது அநேகமாக எல்லோருக்கும் புரியும். ஆனால் கருத்துடன் உடன்பட பலரது ஈகோ இடம் கொடுப்பதில்லை. நான் என்ன இல்லாததையா கூறுகிறேன். இதைவிட குறுக்கி எழுதத் தெரியவில்லை என்பதே உண்மை. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete

 40. @ துளசிதரன் , கீதா
  எனக்குத் தோன்றுவது என்னவென்றால் there are lot of converging points. ஒட்டு மொத்தமாக உடன் பட விருப்பம் இருப்பதில்லை. சாய் பாபா பற்றிய என் கருத்தே வேறு, நான் ஷிர்டிக்குப் போய் இருக்கிறேன். ஒரு மனிதனைக் கடவுளாக நினைப்பது எனக்கு உடன் பாடில்லைhowever good that man is. ஷிர்டியில் பாபாவின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே அமோக பிசினஸ் நடைபெறுகிறது. In the name of God , gullible people ( as most of us are) are exploited. கீதாவுக்கு நான் ஒரு சுட்டி அனுப்புகிறேன் எனக்குப் புரிந்த விதத்தில் நாம் எவ்வாறு கடவுள்களைப் படைத்தோம் என்று எழுத முயன்றிருக்கிறேன்நிரூபிக்க முடியாத பல கூற்றுகளுக்குப் பலர் கூறும் சப்புக்கட்டல்தான் இந்த பஞ்சபூதங்களும் கண்ணுக்குத் தெரியாத மின்சாரமும். எது எப்படிப் போனாலும் நமக்குள் இருக்கு நற்குணங்களை வெளிக் கொணர இவை பயன் பட்டால் அதுவே திருப்தி தரும். இந்த மறு மொழி உங்களுக்கு திருப்தி தரும் என்று தோன்றவில்லை. காலங் காலமாக கேட்கப் பட்டு வரும் கேள்விகளும், அதை அறியாமையிலிருந்து வெளிவர விரும்பாத மக்களும் எதிர்த்துக் கொண்டும்தானே இருக்கிறார்கள். வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 41. @ சோழநாட்டில் பௌத்தம்
  நான் சில கருத்துக்களைச் சொன்னால் அதற்கு ஆத்திக நாத்திக சாயம் பூசப் படுகிறது என்பதே என் ஆதங்கம். வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 42. சார் நிச்சயமாக உங்கள் பதிவை நீங்கள் அனுப்பியிருக்கும் லிங்கை வாசிக்கின்றேன். கீதா

  ReplyDelete
 43. // கீதாவுக்கு நான் ஒரு சுட்டி அனுப்புகிறேன்//

  please எனக்கும் ‘பார்சல்’ ஒண்ணு....!

  ReplyDelete
 44. @துளசிதரன், ஜிஎம்பி சார் அனுப்பற சுட்டியோட இதையும் படிச்சு வைங்க. :))))

  http://packirisamy.blogspot.com/2013/07/11-2.html

  ReplyDelete