Sunday, February 8, 2015

பொன்விழா மண நாளும் பிறந்த நாளும்


                              பொன் விழா  மண நாளும் பிறந்த நாளும்
                               --------------------------------------------------------


நவம்பர் 11-ம் நாள் என் பிறந்த நாளும் நான் மணந்த நாளுமாகும் 2014 லின்நவம்பர் பதினொன்றாம் தேதி கொஞ்சம் விசேஷம் ஆனது. அந்த நாளில் நானும் என் மனைவியும் ஐம்பது ஆண்டுகள் தாம்பத்திய வாழ்க்கையை முடித்திருந்தோம். சில நாட்களுக்கும்முன் தொடர் பதிவொன்றில் நான் என் நூறாவது பிறந்த நாளை எவ்விதம் கொண்டாட விரும்புவேன் என்று ஒரு கேள்விக்கு அது ஒரு hypothetical கேள்வி என்று கூறி குடும்பத்துடன் பிறந்தநாளைக் கொண்டாட விரும்புவேன் என்று எழுதி இருந்தேன் பொன்விழா மண நாளையே என் குடும்பத்துடன் கொண்டாட முடியவில்லைஅது ஒரு வாரத்தின் நடுவே வந்ததாலும் பலருக்கும் நான் அழைப்பு விடுத்தால் வரமுடியாது என்பதாலும் பிறந்தநாளும் பொன்விழா மணநாளும் உப்புசப்பில்லாமல் வெகு சாதாரணமாகப் போய் விடுமோ என்று நினைத்திருந்தேன். என் மூத்தமகன் குடும்பத்துடன் சென்னையில் இருந்தான். இளையவன் பணி நிமித்தம் டில்லி சென்றிருந்தான். என் பொன்விழா மண நாளுக்கு வருவதாகக் கூறி நினைவு படுத்தக் கேட்டுக் கொண்டிருந்த வலை நண்பர் சுப்புத்தாத்தா அவர் தளத்தில் என்னைப் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தார். Obviously வர இயலவில்லை போலும். பெங்களூரில் உறவினர்கள் ஏராளம் இருந்தாலும் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. அழைத்திருந்தால் அவர்கள் விடுப்பு எடுத்து வரவேண்டி இருக்கும். அவர்களைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் என் மூத்தமகன் அவனது அலுவலகப் பணியை பெங்களூருவில் இருந்து செய்வதாகத் திட்டமிட்டு வந்திருந்தான். ஆக இதுவும் ஒரு சாதாரண நாளாகவே இருந்தது. ஆனால் அன்று மாலை என் இரண்டாம் மருமகளும் பேத்தியும் பேரனும் அவர்கள் தினப்பணி முடிந்து மாலை சற்றும் எதிர்பாராதபோது வந்து ஆச்சரியப் படுத்தினார்கள். என் மருமகள் ஒரு கேக் வாங்கி வந்திருந்தாள். என் மூத்த மகனும் ஒரு கேக் வாங்கி அவனது நண்பர் ஒருவருடன் வந்தான். ஆக பிறந்த நாளுக்கும் மண நாளுக்கும் கேக் வெட்டிக் கொண்டாட வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. நெருங்கிய உறவுகளுடன் எதிர்பாரா வகையில் அந்தநாள் களை கட்டியது. என் பேரக் குழந்தைகளுடனும் மகன் மருமகளுடனும் நாள் கழிந்ததுஅன்று இரவு என்னுடன் கழித்து அதிகாலை அவர்கள் அவர்களது தினப்பணி பார்க்கச் சென்றுவிட பொன்விழா மண்நாள் இனிதே நிறைவேறியதுஇத்துடன் நான் கேக் வெட்டும் காணொளி இணைக்கிறேன் இந்த மாதிரி பிறந்த நாள் விழாவில் மெழுகு வர்த்தி ஏற்றி அதை ஊதி அணைப்பது எனக்கு உடன் பாடில்லை. அதை என் மக்கள் புரிந்து கொண்டிருந்தது மனதுக்கு இதமாய் இருந்தது. 


பிறந்த நாள் மணநாள் கேக்
மணநாள் கேக் கட்டிங்
துணைவிக்கு கேக்
பேரனின் மகிழ்ச்சி
(இன்று நான் என் இளைய மகன் வீட்டிற்கு போகிறேன். மீண்டும் கணினிக்கு வர ஒரு வாரகாலமாகலாம் இது ஒரு செய்திக்காகவே)

18 comments:

 1. வணக்கங்கள்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. கேக் ஊட்டும், ஊட்டிக்கொள்ளும் மணமக்களுக்கு இனிய மணநாள் வாழ்த்துகள்.. நூறாவது மணநாள் கண்டு பெருவாழ்வு வாழவேண்டி வணங்குகிறேன் அய்யா.

  ReplyDelete
 3. எதிர்பாராதபோது கிடைக்கும் சந்தோஷங்கள் என்றுமே மறக்கமுடியாதவை. அந்த மகிழ்ச்சி பதிவிலும் படங்களிலும் தெரிகிறது. இனிய வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete
 4. சந்தோஷ நிகழ்வுகள், தருணங்கள்.

  Happy birthday sir, and Happy WAD Sir & madam!

  ReplyDelete
 5. சந்தோஷ நிகழ்வுகள், தருணங்கள்.

  Happy birthday sir, and Happy WAD Sir & madam!

  ReplyDelete
 6. அன்பின் ஐயா..

  மூத்தோராகிய தங்களுக்குப் பணிவான வணக்கங்கள்..

  பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.

  அபிராமவல்லி அருள்புரிவாளாக!..

  ReplyDelete
 7. எங்கள் வாழ்த்துகள், வணக்கம் ஐயா. இன்று போல் பல மணநாள் கண்டு சுற்றத்தாரோடு இன்புற்றிருக்க வாழ்த்துகள், பிரார்த்தனைகள். மகன் வீட்டில் பொழுது இனிமையாகக் கழியவும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் ஐயா/அம்மா. கூடவேயிருந்து கேக் வெட்டி உங்கள் மகிழ்ச்சியில் பங்கெடுத்த உணர்வைக் கொடுத்தது காணொளி.

  ReplyDelete

 9. தங்களை வாழ்த்த வயதில்லை ஐயா கண்டேன் களித்தேன் நன்றி. நலமுடன் திரும்புக...

  ReplyDelete
 10. சார் எதிர்பாராமல் வரும் உறவுகள், நட்புகள் மிக மிக சந்தோஷத்தைத் தரும். நீங்கள் அழைத்து அவர்கள் வந்திருந்தால் மகிழ்வு இருந்திருந்தாலும் இந்த அளவு இருந்திருக்குமா?!! எவ்வளவு மகிழ்வான தருணம் இல்லையா சார்! இன்றா? நவம்பர் 11 தானே எழுதியுள்ளீர்கள்...!! எங்களைப் போலவே தங்களுக்கும் ஏற்றி அணைத்தல் உடன் பாடு இல்லை என்பது மகிழ்வைத் தருகின்றது.

  வணங்குகின்றோம் சார் தங்களை!

  ReplyDelete
 11. காணொளி அருமை சார்!தங்கள் குடும்பத்தைப் பார்க்கும் போது, நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்ற பாடல்தான் நினைவுக்கு வரும்!!

  ReplyDelete
 12. பிறந்த நாள் மற்றும் பொன்விழா மண நாள் ஆகியவற்றிற்கு வாழ்த்துக்கள்! காணொளியில் விழாக்களை கண்டு இரசித்தேன்!

  ReplyDelete
 13. //தங்களை வாழ்த்த வயதில்லை ஐயா//

  யாரோ ஒரு அரசியல்வாதியால் ஆரம்பிக்கப்பட்டது இன்று அனைவரும் பின்பற்றும்படி ஆகி இருக்கிறது. :))) வாழ்த்த வயதெல்லாம் தேவை இல்லை. இறைவனுக்கே பல்லாண்டு பாடி வாழ்த்தும்போது மனிதருக்கு வாழ்த்துச் சொல்லுவதில் எந்தத் தவறும் இல்லை. :)))) வாழ்த்தியே வணங்கலாம்.

  ReplyDelete
 14. சந்தோஷ தருணங்கள்.....

  வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete

 15. @ திண்டுக்கல் தனபாலன்
  @ முத்து நிலவன்
  @ கீதமஞ்சரி
  @ ஸ்ரீராம்
  @ துரை செல்வராஜு
  @ கரந்தை ஜெயக்குமார்
  @ கீதா சாம்பசிவம்
  @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
  @ கில்லர்ஜி
  @ துளசிதரன்
  @ வே. நடனசபாபதி
  @ வெங்கட் நாகராஜ்
  வருகை புரிந்த வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் நன்றி.

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் ஐயா!
  நூறாவது பிறந்தநாள் நிச்சயம் கொண்டாடுவீர்கள்

  ReplyDelete