சந்தேகம்தீர என்ன வழி
-------------------------------------
நான்
முகநூலில் ஒரு செய்தி வாசித்தேன் மனதை
குழப்பி விட்டது அதில் ஒருஇறப்புச் செய்தி இருப்பதாகத் தோன்றியது செய்திக்குரியவர் என் அருமை நண்பர்
ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை அவருக்கே எழுதிக் கேட்கலாமா என்று மனைவியிடம்
கேட்டேன் வேண்டாமென்றவர் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் போல் ஆகி விடக்
கூடாது என்றார்அது என்ன எனக்கு நேர்ந்த அனுபவம்
/ நான் காலையில் நடைப் பயிற்சியில்
இருக்கும் போது ஒருவர் அறிமுகமில்லாதவர் என்னை நிறுத்தி என் வீட்டருகே அண்மையில் ஏதாவது இறப்பு
நிகழ்ந்ததா என்று கேட்டார். நான் முதலில் இல்லை என்று சொல்லி சற்று நேரம் கழிந்து
என் வீட்டு மாடியில் குடி யிருப்பவர் ஒருவர் அண்மையில் தவறி விட்டார்
என்றேன் “ ஓ அதுதானே பார்த்தேன் அது நீங்களில்லையா.? சந்தேகமாய் இருந்தது...”
என்றாரே பார்க்கலாம்..........!