ஞாயிறு, 19 ஜனவரி, 2020

சந்தேகம் தீர என்ன வழி



                      சந்தேகம்தீர என்ன வழி
                      -------------------------------------


நான் முகநூலில்  ஒரு செய்தி வாசித்தேன் மனதை குழப்பி விட்டது அதில் ஒருஇறப்புச் செய்தி இருப்பதாகத் தோன்றியது  செய்திக்குரியவர் என் அருமை நண்பர் ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை அவருக்கே எழுதிக் கேட்கலாமா என்று மனைவியிடம் கேட்டேன்  வேண்டாமென்றவர்  எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் போல் ஆகி விடக் கூடாது என்றார்அது என்ன எனக்கு நேர்ந்த அனுபவம்  / நான் காலையில் நடைப் பயிற்சியில் இருக்கும் போது ஒருவர் அறிமுகமில்லாதவர்  என்னை நிறுத்தி என் வீட்டருகே அண்மையில் ஏதாவது இறப்பு நிகழ்ந்ததா என்று கேட்டார். நான் முதலில் இல்லை என்று சொல்லி சற்று நேரம் கழிந்து என் வீட்டு மாடியில் குடி யிருப்பவர் ஒருவர் அண்மையில்  தவறி விட்டார் என்றேன் “ ஓ அதுதானே பார்த்தேன் அது நீங்களில்லையா.? சந்தேகமாய் இருந்தது...” என்றாரே பார்க்கலாம்..........!  

23 கருத்துகள்:

  1. ஹா...ஹா...ஹா... நல்ல கேள்வி!

    நீங்கள் சொல்லும் கோவை நண்பர் நன்றாய் இருப்பதாகத்தான் நான் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலில் படித்ததும் எனக்கும் அப்படித்தான் இருந்தது இன்னும் அது ஊர்ஜிதம் செய்யாத செய்தியோ என்று தோன்றியதால் பதிவில் சந்தேகமாகக் கேட்டேன் கோவை நண்பர் என்றா கூறி இருந்தேன்

      நீக்கு
  2. இப்போது பேஸ்புக்கில் சென்று பார்த்தேன்.  நீங்கள் சொல்வது சரி.   கந்தசாமி சார் மறைந்துவிட்டார் என்று தெரிகிறது. மிகவும் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருக்கிறது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. செய்தி எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது.....அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

      நீக்கு
    2. முகநூலில் இன்னும் விவரமாக எழுதி இருக்கலாம்

      நீக்கு
    3. @அவர்கள் உண்மைகள்அவ்சரது ந்னைவுகள்நிறையவே வருகிறது அது பற்றி எழுதுவேன்

      நீக்கு
    4. திண்டுக்கல் தனபாலன் ஆம்டாக்டர் கந்தசாமி தான் என்று நினைக்கிறேன்

      நீக்கு
  3. டிசம்பர் ஆறாம் தேதி தனது உடல் நிலை தேற வாழ்த்தியவர்களுக்கு அவரே நன்றி தெரிவித்திருக்கிறார்.  ஜனவரியில்தான் அவர் மறைந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்தி கொஉப்பவர்கள் இன்னும்விவரங்கள்தரலாமே

      நீக்கு
  4. உங்களிடம் கேள்வி கேட்டவர் !

    கந்தசாமி சார் மறைவு அதிர்ச்சிதான்.
    தைரியமாய் நோயை எதிர்கொண்டவர்.

    பதிலளிநீக்கு
  5. கந்தசாமி ஐயா மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. இன்றுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. எனக்கு யாரெனத் தெரியாது. ஆனாலும் வருத்தமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சரியம் தமிழ்ப்பதிவுலகில் அவரைத்தெரியாதா

      நீக்கு
  7. பதிவர் சந்திப்பில் திரு . வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் இரண்டு முறை பதிவு போட்டு இருக்கிறார்.
    கோவையில் வசிக்கிறார்.
    மன அலைகள் என்ற வலைத்தளம் வைத்து நிறைய நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்வார்.

    பதிலளிநீக்கு
  8. எனக்கு அவரைத் தெரியாது ; இருப்பினும் அனுதாபப்படுகிறேன்.உங்களிடம் ஐயம் கேட்டவர் பண்பாடற்றவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நேரடியாக அவருடைய மனைவிக்கு கேட்க முடியவில்லை அவர்பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன்

      நீக்கு
  9. //“ ஓ அதுதானே பார்த்தேன் அது நீங்களில்லையா.? சந்தேகமாய் இருந்தது...” என்றாரே பார்க்கலாம்..........! // கடவுளே! சமீபத்தில் எங்கள் நண்பர் ஒருவர் சொன்னார். அவர் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் 100 வயதை கடந்த முதியவர் ஒருவர்  வசிக்கிறாராம். அந்த முதியவரின் நூறாவது பிறந்த நாளை அவர் குடும்பத்தினர் சிறப்பாக கொண்டாடுவதற்காக ஷாமியானா போட்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து விட்டு பலர் இவரை போனில் அழைத்து அந்த முதியவர் இறந்து விட்டாரா? என்று கேட்டார்களாம்.     

    பதிலளிநீக்கு
  10. முதியவரிடமே கேட்கவில்லையே

    பதிலளிநீக்கு
  11. கந்தசாமி அவர்கள் மரணம் அதிர்ச்சி தருகிறது.

    பதிலளிநீக்கு