செவ்வாய், 7 ஜனவரி, 2020

குடித்தனக்காரர் பலவிதம்


                                 குடித்தனக்காரர்  பலவிதம்               
                                  ------------------------------------------

1992 என்று  நினைக்கிறேன் முதல் மாடி வீடு கட்டி நாங்கள் கீழ் வீட்டிலிருந்து மேல் வீட்டுக்குக் குடிபோனோம்  கீழ்விட்டை வாடகைக்குஎன்று போர்ட் போட்டோம் விரைவிலேயே வாடகைக்கு என்று கேட்டு  ஒரு ஆணும்  பெண்ணும் வந்தனர்  அண்ணன்  தங்கை என்றார்கள் நம்பூதிரிகள் என்று சொன்னார்கள் அண்ணன்  ஐ எஸ் ஆர் ஓ வில் சயன்டிஸ்ட்  என்றும் தங்கை அருகில் இருந்த ஒரு பாலிடெக்னிக்கில் ஆசிரியை என்றும்  அறி முகம் செய்து கொண்டனர்  இருவரும் மணமகாதவர்கள் இந்தப்பதிவை நான் எழுதுவதே  சில நிகழ்வுகளைகுறிப்பிடவே

அண்ணனுக்கு எப்படியாவது  பணம் பண்ண  வேண்டும் என்னும் ஆசை நிறையவே இருந்தது நம்பூதிரி என்னும் பிரிவினர் என்றாலும் மணம் மூலம் பணம்கிடைக்காத என்று ஏங்கினார்
ஒரு நாள் ஒரு அல்ட்ரா மாடெர்ன்  பெண அவரைத்தேடி வந்தார் ஏதோ விளம்பரம்பார்த்து வந்ததாகக் கூறினார் அண்ணனும் தங்கையும் விட்டில் இருக்கவில்லை என்ன விளம்பரம்  என்று நாங்கள் கேட்கவில்லை  ஆனால் அந்தப் பெண்ணைப்பார்த்தபோது மனதில் நல்ல அபிப்பிராயம் வரவில்லைமாலையில்  அவர் வந்தபொது விவரம் சொன்னோம் அவருக்கு அந்தப்பெண் என்  அவர் இல்லா நேரம்    பார்த்து வந்தார் என்று நினைப்பது நன்கு  தெரிந்தது
ஒரு முறை அவர் நன்கு ஜோசியம் பார்க்கத் தெரியும் என்று சொன்னார் அவரது பெற்றோர்கள அதில் நிபுணர்கள்  என்றும் சொன்னார் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னேன்   விடாமல் என்கையைப்பிடித்து இழுத்துப்பார்த்தார்  என் முக்சத்தை தீர்க்கமாகப்  பார்த்தார் பிறகு எனக்கு ஒரு விபத்தில்தான் மரணம்  என்று சொன்னார் அது ஆயிற்று 27 வருடங்கள் இன்னும் நான் இருக்கிறேன் நன்றாக  கோயிங் ஸ்ட்ராங்

அவரதுதங்கை ஒரு ஆசிரியை என்றேன் அல்லவா  பாலிடெக்னிக்கு வருட துவக்கத்தில்  மாணவர்களை அறிமுகப்படுத்தினால் ஒரு குறிப்பிட்டதொகை ஊக்கப்பணமாகக் கிடைக்கும் என்றும் சொன்னார்  என் மூலம் மாணவர் சேர்க்கை  கிடைக்கவில்லை என்று சொல்லத்தேவையில்லை
அப்போது நான்  வலைஉலகை அறிந்திருக்கவில்லை  அறிந்திருந்தால் நம்பூதிரிகள்பற்றி இன்னும்  தெரிந்துகொண்டிருப்பேன்
 அவர் ஒரு நாய் வைத்திருந்தார் மோங்ரெல் ஒன்றை வைத்திருந்தார்  அதை வீட்டின்பின்  வாசல் கதவில் கட்டி விட்டுஅவர்கள்  வேலைக்குச் செல்வார்கள்பொகும்போது ஒரு தட்டில் சோறும் வைப்பார்கள்அந்த வாஃயில்லா ஜீவனுக்கு  அந்த இடமே சப்பாட்டிடம் கழிப்பறை எல்லாம் ஒரு முறை அது கட்டைஅவிழ்த்த் விட்டு  ஓடிவிட்டது அதன் பின் ஒடி மீட்டுவந்து அதைக்கட்டியபின் தான்  மூச்சு வந்தது  நாயை சரியாக வளர்க்க முடியாதவர்கள்நாயைக் கொடுமை படுத்துவதோடு விட்டு சொந்தக்காரர்களுக்கும் தண்டனைதான்  இப்போது வீட்டின்மாடியில் குடி இருப்பவர்கள்நாய் இருக்கிறது என்று சொல்லவே இல்லை சொல்லி இருந்தால் வீட்டை வாடகைக்கு கொடுத்திருக்கமாட்டேன்           

      



      



         
 எ


  

14 கருத்துகள்:

  1. நாங்க நிறைய நாய்கள் வளர்த்திருக்கோம். பலரும் நாய் வளர்க்கிறேன் பேர்வழினு அதைக் கட்டிப் போட்டுச் சித்திரவதை செய்கின்றனர். நாங்க யாரானும் வந்தால், வந்தவர்களுக்கு பயம் என்றால் நாயைக் கட்டிப் போடுவோம். இல்லை எனில் வேறொரு அறையில் போட்டுக் கதவைச் சார்த்திடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் ஒரு காகர் ஸ்பானியல் பெண்நாய் திருச்சியில்இருந்தபோது வளர்த்தோ செல்லி என்று பெயர் ஒரு பதிவும் எழுதி இருக்கிறேன் அது செல்லநாயென்பதைவிட என்மனைவிக்குமாமியார் மாதிரி இருந்தது அவ்வளவு அதிகாரம் அதூ இறந்தபோது எங்கள் வீடே இழவு வீடுபொல் இருந்தது நய் வளர்த்ட்க்ஹிருந்தாலுமெனக்கு நாய்களை அவ்வளவு பிடிக்காது நன்கு வள்ர்க்கமுடியாவிட்டல் வளர்க்காமல் இருப்பதே மேல்

      நீக்கு
  2. குடித்தனக்காரர் அமைவதெல்லாம் அவரவர் அதிர்ஷ்டம். எங்களுக்கு ஒரு குடித்தனக்காரர் பல வகையிலும் உதவியாக இருந்தார்கள். இன்னொருத்தர் வந்து எங்களை அதிகாரம் பண்ணுவார். அவங்களுக்குத் தனியாகத் துணி உலர்த்தக் கொடி, இடம் எல்லாம் கொடுத்திருந்தாலும் நாங்க உலர்த்தி இருக்கும் துணிகளைத் தள்ளிவிட்டுட்டு அவங்க துணிகளைப் போட்டுட்டுப் போயிடுவார். அவங்க கொட்டும் தண்ணீருக்கும் அளவே இல்லாமல் இருக்கும். நல்லவேளையாக அப்போ மோட்டார் போடவில்லை. அதனால் மின் கட்டணம் ஆகாது. அதே நாங்க குடித்தனம் இருந்தப்போ நேர்மாறாக இருந்தது. ஆனால் நாங்க அதிகம் ராணுவக் குடியிருப்பிலேயே இருந்துட்டோம். சிகந்திராபாதிலும் அம்பத்தூரிலும் மட்டும் வாடகை வீடு கொஞ்ச நாட்கள். பின்னர் சொந்த வீட்டுக்குப் போயாச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடித்டனக்காரர்கள் எங்களுக்கு இதுவரை நல்லவர்களாகவே இருந்திருக்கின்றனர்

      நீக்கு
  3. அனுபவங்கள் சுவாரஸ்யம்.  பின்னர் அவருக்கு மணமானதா இல்லையா?  பாவம் அந்த நாய்.சிறையில் இருப்பது போல இருந்திருக்கும்.  கொடுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் வீட்டைக்காலி செய்தபின் எந்த நியூசும் இல்லை

      நீக்கு


  4. நாயை வளர்க்க தெரியாதவர்கள் வளர்த்து இருக்கிறார்கள் போல இருக்கு,,,, என் வீட்டில் நாயும் நானும் ஒரே பெட்டில்தான் தூங்குவோம் நான் எங்கே இருக்கிறேனோ என் அருகிலேயே இருப்பான் நான் வேலைக்கு செல்லும் போது வீடு முழுவது அவனுக்கே சொந்தம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு நாயை வீட்டில் படுக்கையில் வைக்குமனுபவம் இல்
      லை என்ன இருந்தாலும் அதன் இடத்தை விட்டு அதுவும்வராது

      நீக்கு
  5. மிருகங்கள், பறவைகள் வளர்ப்பவர்கள் அதனுடைய சுதர்திரத்தை பறிக்கிறார்கள் என்பது எனது எண்ணம்.

    பணக்காரர்களின் பங்களாவுக்கு நாய்கள் அவசியமே இருப்பினும் அதை பராமரித்து வளர்க்க ஆள் வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேர்ங்களில் பணக்கார வீட்டு நயாய் இருப்பதே மெல் என்று தோன்றும்

      நீக்கு
  6. வீட்டை வாடகைக்கு விட்ட அனுபவங்களை படித்தால் நாங்கள் அவதிபட்டது நினைவுக்கு வரும். இதற்கு முன் இருந்தவர்கள அக்கம் பக்கத்து வீட்டினருக்கு கொடுத்த தொல்லை தாங்காமல் அவர்களை வீட்டை காலி செய்ய சொன்னோம் . அவர்கள் அவர்களுக்கு வசதி பட்ட நேரத்தில் காலி செய்தார்கள் எப்படியோ!
    இப்போது வீடு வாடகைக்கு விட வில்லை.

    பதிலளிநீக்கு
  7. என் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களில் சிலர் என் கதை மாந்தராகவும் மாறுவதுண்டு

    பதிலளிநீக்கு
  8. பல பேர் அப்படிதான். விலங்குகளை நேசிப்பவர்களால்தான் அக்கறையோடு வளர்க்க முடியும்.

    பதிலளிநீக்கு
  9. பலநேரங்களில் அப்படித்தான்

    பதிலளிநீக்கு