Friday, January 24, 2020

ஒளி வட்டம் மட்டுமே மிச்சம்                     ஒளி வட்டம் மட்டும் மிச்சம்
                    -----------------------------------------------
சந்தோஷங்கள் பகிரப்படல் நலம்  பயக்கலாம்   துக்கங்கள்பகிரப்பட்டால்  நம்சுமை வேறொருவருக்கு ஏற்றும் முயற்சி ஆகலாம்    என்னைப்பொறுத்தவரை நான் இவற்றை சமமாகவே  பகிர்ந்து கொண்டு வந்திருக்கிறேன்   அதுவும் தவிர பகிரப்படாத  விஷ்யம் என்பதால் மிகுந்த சிந்தனைக்குப் பின்தான்  எழுதுகிறேன்மேலும் என்னைப்பற்றிய சிலவிஷயங்கள்பகிராமல் இருந்ததுசரி அல்ல என்றும் தோன்றியது இதைத்தொடர்வேனா இல்லையா என்பது வாசகர்கள்கையில்தான்         


பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ
எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நானோர் ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?நான் பலபதிவுகள்  எழுதி இருக்கிறேன் என்னைப்பற்றி நிறையவே கூறி இருக்கிறேன் அவற்றில் இங்கொன்றும்  அங்கொன்றுமாக அலுவலகம் சார்ந்தும் இருக்கும் சில விஷயங்கள் சொல்லப்படாமலேயெ போய் இருக்கலாம்   அல்லது சொன்னது முழுவதுமாக இல்லாமலும் இருக்கலாம் நான் இருந்திருக்க வேண்டிய இடம் கிடைக்காமல் போனதில் வருத்தம் என்பதை விடஏமாற்றமென்பதெ அதிகம்  எப்படியானாலும்  என்னைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் அமைத்து கொண்டிருந்தேன்  என்பதே நிஜம்  சில நிகழ்வுகள் அதைப்பற்றி தெரிவிக்கலாம்
எச் ஏ எல் ஏரோ  எஞ்சின்   தொழிற்சாலையில் இருந்து  சென்னை லூகாஸ் டி வி எஸ் கம்பனியில் ஷிஃப்ட் இன் சார்ஜ் ஆக சேர்ந்தேன்  இரண்டு ஷிஃப்ட் வேலை வாரத்துக்கு ஒரு முறை மாறும்  இரவில் ஷிஃப்ட் இன் சார்ஜ்  பகலில் எனக்குள்ள பகுதியில் மேலதிகாரியாகப் பணி அங்குஅவர்கள் ஆங்கிலேயக்கம்பனியுடன் கூட்டு அநேக ஆங்கிலேயர்கள் பணியில் இருந்தார்கள் பேர் மட்டும்  ஷிஃப்ட் இன் சார்ஜ் ஆனால் ஒரு மேஸ்திரியாகத்தான் பணி இருந்ததுடெக்னிகலாக நாம் ஏதும்செய்யமுடியாது கூடாது ஒரு பணியை இப்படித்தான் செய்ய வேண்டும் என்றுஆங்கிலேயர்கள்  வரையறுத்திருந்தனர் அதை  மீறக்கூடாதுஎன்பதுஅங்கிருந்த சட்டம் மெஷினில் வேலை செய்து பழகிய என்க்கு  அங்கு ஆங்கிலேயர் வகுத்த மெஷினிங் ப்ராசெஸ் உடன்பாடிருக்கவில்லை  மூன்று நான்கு பார்ட்கள்மெஷின்செய்தவுடன் டூல் உடைந்து மீண்டும் வேறு ஒரு டூல் பொறுத்தி வேலை செய்வதில் நேரமும்செலவும் அதிகமாயிருந்தது நான்  இரவு ஷிஃப்ட் வரும்போது அந்த செட்டிங்கைமாறி எனக்கு சரி என்றுபட்ட மாதிரி செய்தேன் ஓரிரு நாட்களில் இரவுஅதிக ப்ரொடக்‌ஷனும்  பகலில் குறைந்த ப்ரொடக்‌ஷனும் அவர்கள் புருவதைஉயர்த்த செய்தது  என்னிடம் காரணம் கேட்டபோது நான் உண்மையைபோட்டுடைத்து விட்டேன் அது அங்கு நிலவிய விதி முறையை மீறி இருந்ததால் நான் பகல் ஷிஃப்ட் வ்ரும்போது என்னை என் செய்முறையைசெய்து காட்டக் கோரினார்கள் எல்லோரும் பார்த்துக்  கொண்டிருக்க நான்  செய்து காட்டினேன்  ஆங்கிலேய உயர் அதிகாரி மிகவும் சந்தோஷப்பட்டார் அந்தமகிழ்ச்சியைஎனக்கும் தெரிவிக்கச்சொல்லி  நம் இந்திய அதிகாரிகளிடம் வேண்டுகோள்விடுத்தார் அவர் எழுத்தில் தெரிவித்ததை நம் இந்திய அதிகாரிகள் என்னிடம்காட்டியதோடுசரி
எனக்கும் ஒரு காப்பி கொடுத்திருந்தால் மகிழ்ந்து இருப்பேன் என் மூத்தமகனின் பிரசவசெய்தி கேட்டு நான்பெங்களூர் வந்தேன் எதிர் பாராக் காரணங்களால் நான் ஷிஃப்ட் மாறும்   முன்  வரவில்லை என்றால்  ஒரு நாள்விடுப்பும் கேட்டிருந்தேன் ஆனால் நான் வந்தபோது என் ஒரு நாள்விடுப்பு கொடுக்கப்படவில்லை  மாறாக என்னால் ஒழுங்கு முறைகளை சரியாக்சகடைப்பிடிக்க் முடியாவிட்டால் என் இடத்தில்வேறொருவரை நியமிக்க நேரலாம் என்றும்  எச்சரிக்கை செய்தனர் அது என்னுள் அச்சத்தை ஏற்படுத்தியது ஏற்கனவே என்னால் என் குடும்பநிலையை  பராமரிப்பதே கடினமான  நிலையில் வேலையும்போனால் எனசெய்வது என்ற பயம் வந்தது  நான் வேறு வேலை தேடத்துவங்கினேன்
 அந்தநேர்த்தில் பிஎச் இ எல் லில்  இருந்து ஒரு விளம்பரம் இருந்தது உதவி எஞ்சினீருக்கான  விளம்பரம் நானும்  மனு அனுப்பினேன்   சில நாட்களில் 
நேர் முகத்தேர்வுக்கு வருமாறு பதில் வந்தது இண்டெர்வியூ முடிந்ததும்  தேர்வாகிவிட்டேன் என்று தெரியப்படுத்தினார்கள் வேலையில் சேர உத்தரவு  வருமென்றார்கள் அப்போது அங்கிருந்த என்நண்பர்கள் சிலரிடம் அதுபற்றி கேட்டேன்வேலையில் சேர உத்தரவு வரும் அதுதான் நடை முறை என்றார்கள் ஐ வஸ் இன்  க்லவுட் நைன்
லூகாசில் நான் சேர்ந்து ஓராண்டுஆகிஇருக்க வில்லை ப்ரொபேஷனில் இருந்தேன்  ப்ரொபேஷனிலிருக்கும் போதுவேலையை விடுவதாய் இருந்தால் 15 நாட்கள்  நோட்டிஸ்
போதும்  ப்ரொபேஷன்   முடிந்து வேலையை விட்டால் ஒரு காலண்டர் மாதழ் நோட்டிஸ் தரவேண்டும் அங்குதான்  நான் தவறு செய்தேன் பிஎச் இஎல்லில்  இருந்து ஆர்டர் வரும்முன்  லூகாஸ் வேலையை  ராஜினாமா செய்தேன் ஒரு வாரத்தில் ஆர்டர்வந்ததும்   மிகுந்த ஏமாற்றமாக இருந்தது உதவி எஞ்சினீருக்குப்பதில் ஃபோர்மன்ஆக உத்தரவு இருந்தது நான்கடிதம் எழுதிக்கேட்டேன் விருப்பமிருந்தால் வேலையில்சேரலாம் என்றார்கள்  தொடக்கசம்பளத்தில் வேறுபாடு இருக்காததாலும் நான் ஏற்கனவே ராஜினாமா கொடுத்து விட்டதாலும்  ஒருவேலை முக்கியமய் இருந்ததாலும்    miகுந்த ஏமாற்றத்துடன்  பிஎச் இஎல்லில் சேர்ந்தேன்  அப்போது தெரியவில்லை என்  ,

முடிவு எத்தனை தூரம்   என்னை பாதிக்குமென்று

 (தொடரவா    வேண்டாமா வாசகர்கள் கூறலாமே நான் பெயர்களை தவிர்த்திருக்கிறேன்) 
27 comments:

 1. எதை எழுதுவது அல்லது எழுத வேண்டாம் என்று யாரிடமும் நீங்கள் கேட்க தேவையில்லையே உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை எழுதி செல்லுங்கள் சாரே

  ReplyDelete
  Replies
  1. எழுத ஏன் தயக்கம் என்று கூறி இருக்கிறேனே ம்னதில் தயக்கமிருப்பதாலேயே கேள்வி

   Delete
 2. உங்கள் விருப்பம்போல் எழுதுங்கள். யாரையும் கேட்க வேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. என்சொந்த விஷயங்களை படிக்க ஆர்வம் இருக்குமா

   Delete
 3. உங்களது அனுபவம் பிறருக்கு பயன் தரும் பாடமாக இருக்கலாம்.
  தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. பத்தாண்டு கால அனுபவத்தில் எழுதியது பயன் பட்டதா தெரிய வில்லையெ

   Delete
 4. தொடர்ந்து எழுதுங்கள். ஒவ்வொருவரின் அனுபவம் ஒவ்வொருவருக்கும் படிப்பினை.

  என் பழைய பாஸ் (கம்ப்யூட்டர் துறைக்கு என்னை ஆளாக்கியவர்) சொன்னார்னு பெரிய கம்பெனி வேலையை சட்னு ராஜினாமா செய்து இரண்டு வருடங்களுக்கு மேல் கஷ்டப்பட்டது நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. அனுபவங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் வருகைக்கு நன்றி

   Delete
 5. 2018 ல் நான் 16 வருடம் வேலை செய்த கம்பெனியில் இருந்து நானாக விலைவிட்டேன் அத்ன் பின் மீண்டும் வேலை கிடைக்க 8 மாதங்களுக்கு மேல் ஆகியது....அது எனக்கு ஒரு படிப்பினை எந்த வேளையாக இருந்தாலும் அதைவிடுவதற்கு முன்பு ஒரு வேலையை தேடிய பிந்தான் விடனும் என்று.......


  இதில் மற்றோரு விஷ்யம் என்னவென்றால் நான் அப்போது வேலையில் இல்லாமல் தேடிக் கொண்டிருந்த சமயம் அதை தெரிந்தவர்களில் ஒரு சிலர் பதிவர்களும் உண்டு அதில் ஒரு பதிவர் அவர் தளத்திற்கு நான் கருத்துக்கள் சொல்லவில்லை என்பதால் என்னவோ அவர் என்னை பேஸ்புக்கில் இருந்து அன்பிரண்ட் செய்து இருக்கிறார் அது பலமாதங்களுக்கு பின் தான் தெரியவந்தது... அதை பற்றி அவரிடம் இதை வரை கேட்கவில்லை இவர்கள் இப்படித்தான் என்று கடந்து சென்று கொண்டிருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. நான் செய்த து சரியாழ் தவறா தெரியவில்லை இன்னும்

   Delete
 6. அலுவலக அனுபவங்களை அசைபோடுவது எப்போதுமே சுவாரசியமாக இருக்கும். தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. அசை போடுவது எந்த பிரயொசனமும் இல்லை இப்போது

   Delete
 7. அவசியம் தொடருங்கள்.உங்கள் அனுபவங்கள் பலருக்குப் பாடமாகலாம் .

  ReplyDelete
  Replies
  1. எதைப் அனுபவம் என்று நினைக்கிறார்கள்தெரிய வில்லை சார்

   Delete
 8. Replies
  1. தொடர்வதில்கஷ்டமில்லை ஆனால் வரவேற்பு இருக்குமா தெரியவில்லை

   Delete
 9. இப்போது ஒரு கம்பெனியிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு வேலைக்கு போக துடிப்பவர்களுக்கு உங்கள் அனுபவங்கள் கை கொடுக்கும்.

  தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நிறைய சாதக பாதகங்களை அலசியே வேறு வேலையில் சேர்ந்தேன் ஆனால் ஏமாற்றப்பட்டு விட்டதாகவே நினைக்கிறேன்

   Delete
 10. உங்கள் அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.  சுவாரஸ்யமாக இருக்கும் என்பதோடு பாடங்களாகவும் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. சிலருக்கு சுவாரசியமாக இருக்கலாம் ஆனால் படமாகுமா தெரியவில்லை

   Delete
 11. பெல்லிலும் படிப்படியாக உயர்ந்து ஜி எம் வரை பதவி உயர்வு பெற்றதாக எனது அறிவு. லூகாசில் அது கஷ்டம்.

  இதைத்தான் விதி என்று சொல்வதோ?

  திரு நடனசபாபதி போன்று அனுபவங்களை தயங்காமல் எழுதுங்கள். _

  ReplyDelete
  Replies
  1. பெய்ரின் இனிஷியலில் மட்டுமே ஜீஎம் நானெங்கும் என்னை பதசவியில் ஜீஎம்மாக சொல்லிய நினைவு இல்லைசமூக விஷயங்கள் சார்ந்து இருக்காவிட்டால் தனி மனித ப்ரதாபங்களாகும் ஆபத்து என்று தெரிந்தே எழுதுகிறேன் வலை நட்பில் ஒருவரைப் பற்றிய உண்மைகள் தெரிந்தாலேயே நட்பு பலப்படலாம் முகம் காட்டக்கூட விரும்பாதவர் மத்தியில்நானொர் ஒளிவட்டம்

   Delete
 12. உங்களைப் போன்ற பெரியவர்களின் சுய சரிதை போலவான எந்த விவரிப்பும் சமூக விஷயங்கள் சார்ந்து இருந்தால் தான் வாசிப்போருக்கு சுவாரஸ்யத்தையும், சரித்திர நிகழ்வுகளைத் தெரியப்படுத்துவதாகவும் இருக்கும். இல்லையென்றால் தனி மனித பிரதாபங்களாகப் போகக்கூடிய ஆபத்து ஏற்பட்டுவிடும்.

  ReplyDelete
 13. வலை நட்பு பற்றியசெய்தியும் ஒரு ஈர்ப்பு ஏற்படுத்தலாம் அது ஆபத்து என்று நினைக்கவில்லை

  ReplyDelete
 14. தனி மனித பிரதாபங்கள் வெகுவாக சலிப்பு ஏற்படுத்தக் கூடியவை. அந்த அர்த்தத்தில் சொன்னேன். அதுவே சமூக, அரசியல் நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்திருந்தால் வாசிப்பவர்களுக்கு knowledgable ஆக இருக்கும்.

  உங்கள் நாடக அனுபவங்களை எழுதுவதும் புகைப்படங்கள் இருந்தால் அவற்றைப் பிரசுரிப்பதும் சுவையாக இருக்கும். இது இன்னொரு சாய்ஸ்.

  ReplyDelete
  Replies
  1. சமூக அரசியல் பின்னணி ஏதுமில்லையே நாடக அனுபவங்களெல்லோருக்கும் சுவையாக இருக்காது மேலும் அவை பற்றி எழுதி இருக்கிறேனே

   Delete