குடித்தனக்காரர் பலவிதம்
------------------------------------------
1992 என்று நினைக்கிறேன் முதல் மாடி
வீடு கட்டி நாங்கள் கீழ் வீட்டிலிருந்து மேல் வீட்டுக்குக் குடிபோனோம் கீழ்விட்டை வாடகைக்குஎன்று போர்ட் போட்டோம் விரைவிலேயே
வாடகைக்கு என்று கேட்டு ஒரு ஆணும் பெண்ணும் வந்தனர் அண்ணன்
தங்கை என்றார்கள் நம்பூதிரிகள் என்று சொன்னார்கள் அண்ணன் ஐ எஸ் ஆர் ஓ வில் சயன்டிஸ்ட் என்றும் தங்கை அருகில் இருந்த ஒரு பாலிடெக்னிக்கில்
ஆசிரியை என்றும் அறி முகம் செய்து கொண்டனர் இருவரும் மணமகாதவர்கள் இந்தப்பதிவை நான் எழுதுவதே சில நிகழ்வுகளைகுறிப்பிடவே
அண்ணனுக்கு எப்படியாவது பணம்
பண்ண வேண்டும் என்னும் ஆசை நிறையவே இருந்தது
நம்பூதிரி என்னும் பிரிவினர் என்றாலும் மணம் மூலம் பணம்கிடைக்காத என்று ஏங்கினார்
ஒரு நாள் ஒரு அல்ட்ரா மாடெர்ன்
பெண அவரைத்தேடி வந்தார் ஏதோ விளம்பரம்பார்த்து வந்ததாகக் கூறினார் அண்ணனும்
தங்கையும் விட்டில் இருக்கவில்லை என்ன விளம்பரம்
என்று நாங்கள் கேட்கவில்லை ஆனால் அந்தப்
பெண்ணைப்பார்த்தபோது மனதில் நல்ல அபிப்பிராயம் வரவில்லைமாலையில் அவர் வந்தபொது விவரம் சொன்னோம் அவருக்கு அந்தப்பெண்
என் அவர் இல்லா நேரம் பார்த்து வந்தார் என்று நினைப்பது நன்கு தெரிந்தது
ஒரு முறை அவர் நன்கு ஜோசியம் பார்க்கத் தெரியும் என்று சொன்னார் அவரது
பெற்றோர்கள அதில் நிபுணர்கள் என்றும் சொன்னார்
எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னேன் விடாமல்
என்கையைப்பிடித்து இழுத்துப்பார்த்தார் என்
முக்சத்தை தீர்க்கமாகப் பார்த்தார் பிறகு எனக்கு
ஒரு விபத்தில்தான் மரணம் என்று சொன்னார் அது
ஆயிற்று 27 வருடங்கள் இன்னும் நான் இருக்கிறேன் நன்றாக கோயிங் ஸ்ட்ராங்
அவரதுதங்கை ஒரு ஆசிரியை என்றேன் அல்லவா பாலிடெக்னிக்கு வருட துவக்கத்தில் மாணவர்களை அறிமுகப்படுத்தினால் ஒரு குறிப்பிட்டதொகை
ஊக்கப்பணமாகக் கிடைக்கும் என்றும் சொன்னார்
என் மூலம் மாணவர் சேர்க்கை கிடைக்கவில்லை
என்று சொல்லத்தேவையில்லை
அப்போது நான் வலைஉலகை அறிந்திருக்கவில்லை அறிந்திருந்தால் நம்பூதிரிகள்பற்றி இன்னும் தெரிந்துகொண்டிருப்பேன்
அவர் ஒரு நாய் வைத்திருந்தார்
மோங்ரெல் ஒன்றை வைத்திருந்தார் அதை வீட்டின்பின்
வாசல் கதவில் கட்டி விட்டுஅவர்கள் வேலைக்குச் செல்வார்கள்பொகும்போது ஒரு தட்டில் சோறும்
வைப்பார்கள்அந்த வாஃயில்லா ஜீவனுக்கு அந்த இடமே
சப்பாட்டிடம் கழிப்பறை எல்லாம் ஒரு முறை அது கட்டைஅவிழ்த்த் விட்டு ஓடிவிட்டது அதன் பின் ஒடி மீட்டுவந்து அதைக்கட்டியபின்
தான் மூச்சு வந்தது நாயை சரியாக வளர்க்க முடியாதவர்கள்நாயைக் கொடுமை
படுத்துவதோடு விட்டு சொந்தக்காரர்களுக்கும் தண்டனைதான் இப்போது வீட்டின்மாடியில் குடி இருப்பவர்கள்நாய்
இருக்கிறது என்று சொல்லவே இல்லை சொல்லி இருந்தால் வீட்டை வாடகைக்கு கொடுத்திருக்கமாட்டேன்
எ