பொங்கல் வாழ்த்து
---------------------------------
மார்கழிப் பனி விலக
பாவையர் நோன்பு முற்ற,
தையலே தைப் பெண்ணே-வருக
உன் வரவால் வழி பிறக்க
முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
பொங்கலாக்கிப் படைத்திடவே
பகலவனும் பாதை மாறிப்
பயணம் செய்யத் துவங்கும்
இந்நாளில் பொங்கும் மங்களம்
எங்கும் தங்க வணங்குகிறோம்
பாவையர் நோன்பு முற்ற,
தையலே தைப் பெண்ணே-வருக
உன் வரவால் வழி பிறக்க
முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
பொங்கலாக்கிப் படைத்திடவே
பகலவனும் பாதை மாறிப்
பயணம் செய்யத் துவங்கும்
இந்நாளில் பொங்கும் மங்களம்
எங்கும் தங்க வணங்குகிறோம்
இது ஒரு மீள் பதிவு
இருந்தால் என்ன ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் மீண்டும் மீண்டும் வருவதில்லையா எனக்கு ஒருசந்தேகம் தமிழர்களுக்கு
தை மாதம்தான் ஆண்டு பிறப்பா அனாதிகாலமாய்
சித்திரையில்தான் தமிழ் ஆண்டு பிறப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன் இனி ஒருவிதி செய்வோம் இனி
தைமாதத்தில்தான் ஆண்டு பிறக்கும் வேண்டுமானால் அரசாணைபிறப்பிக்கலாம்
தை
மாதப்பிறப்பு மகர சங்கராந்தி என்று வேறு சில மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது
மாட்டுப்பொங்கல் போல் கர்நாடகத்தில்
எருதுகள் அன்று தீயில் ஓட்டப்படும் அதனால் அவை நலமாக இருக்குமென்பதும் நம்பிக்கை