Saturday, April 3, 2021

படித்ததில்ரசித்தவை

 புது மண ஜோடி ஒன்று குடி இருப்பு ஒன்றுக்கு குடி பெயர்கிறார்கள். ஒரு நாள் அந்த வீட்டு மனையாள் அடுத்து இருக்கும் வீடு ஒன்றில் அந்த வீட்டுப் பெண்மணி துணி துவைத்துக் காயப் போடுவதைப் பார்க்கிறாள். இந்த இளம் மனைவி “ என்னதான் துணி துவைத்திருக்கிறாளோ, ச்சே அழுக்கே போகாமல்..... அவளுக்கு ஒரு நல்ல சோப் அறிமுகம் செய்ய வேண்டும் “ என்று கூறிக் கொண்டே தன் கணவனின் முகத்தைப் பார்த்தாள். கணவன் ஏதும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். ஒவ்வொரு முறையும் அடுத்த வீட்டுப் பெண் துணி துவைத்துக் காயப் போடும்போதும் , இவள் ஏதாவது கமெண்ட் சொல்வதும், கணவன் ஏதும் பேசாமல் தலை திருப்பிக் கொள்வதும் தொடர்ந்தது. ஒரு மாதம் கழிந்தது. ஒரு நாள் அந்தப்பெண் துவைத்துப்போட்டிருந்த துணிகளைப் பார்த்ததும் இவள் “ அதோ பாருங்கள். இந்தமுறை துணிகள் எல்லாம் பளீரென்று இருக்கிறது. அவளுக்கு துணி துவைக்க யாரோ சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும் “ என்று சொல்லி வழக்கம் போல் தன் கணவனைப் பார்த்தாள்,இந்த முறை கணவன் வாய் திறந்தான்.
” இன்று காலையில் சீக்கிரமாகவே எழுந்து நம் வீட்டுச் சன்னல் கண்ணாடியை நன்றாகத் துடைத்தேன்” என்றான்.

வாழ்க்கையும் இதுபோல்தான். பிறரை நாம் நோக்கும்போது எந்தப் பலகணி ஊடே பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது நம் கண்ணோட்டம்.

 

முதன் முதலில் வேலைக்குப் போய் முதல் மாத சம்பளத்தில் ஒரு மணி பர்ஸ் வாங்கினான் அவன். வேலை கிடைத்ததற்கு நன்றி சொல்லும் விதமாக, அவனது இஷ்ட தெய்வத்தின் படம் ஒன்றை பர்ஸில் வைத்தான். சில நாட்கள் கழிந்ததும் தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் புகைப்படத்தையும் சேர்த்து வைத்துக் கொண்டான். சில வருடங்களில் அவனுக்கு திருமணமானது. அவனது ஆசைமனைவியின் புகைப்படத்தை பர்சில் வைக்கப் போனான்.படத்தை வைக்கக் கொஞ்ச்ம் சிரமமாக இருந்தது. அப்போது கடவுளின் படத்தை நீக்கி விட்டு மனைவியின் படத்தை வைத்துக் கொண்டான். சில வருடங்கள் கழிந்தது. அவனுக்கு அழகான ஒரு குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப் படத்தை வைக்கப் போகும் முன் தாய் தந்தை படங்களை நீக்கினான் இவனுக்கு வயதாகி பிள்ளைகள் வளர்ந்ததும் மனைவியின் புகைப் படத்தை அகற்றி தன் பேரக் குழந்தையின் புகைப்படத்தை வைத்துக் கொண்டான். இன்னும் சில வருடங்கள் கழிந்ததும் தன் மக்கள் தன்னை உதாசீனப்படுத்துவதுபோல் தோன்றவே எல்லோருடைய படங்களையும் அகற்றிவிட்டு மீண்டும் தன் இஷ்ட தெய்வத்தின் படத்தைத் தேடி எடுத்து வைத்துக் கொண்டான்....!

 

ஒவ்வொரு முறையும் ஹெலிகாப்டரைப் பார்க்கும் போதும் கணவன் “எனக்கு அதில் பயணம் செய்ய ஆசையாய் இருக்கிறது “ என்பான் .மனைவி “ எனக்குப் பு

ரியுதுங்க. இருந்தாலும் அதில் ஏறிச் சுற்றிப் பார்க்க ரூபாய் ஐநூறு கேட்கிறார்கள். ஐநூறு ரூபாய் என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா “ என்று கூறி அவன் வாயை அடைப்பாள். ஒருமுறை ஒரு திருவிழாத்திடலில் ஹெலிகாப்டர் பயணத்துக்கு ஏற்றிக் கொண்டு போவதும் மீண்டும் வந்து வேறு சிலரை ஏற்றிக் கொண்டு போவதுமாய் இருந்தது. கணவன் மனைவியிடம் “ எனக்கு எண்பது வயதாகிறது. இப்போது என்னால் பயணம் செய்ய முடியாமல் போனால் ஒருவேளை எப்போதும் முடியாமல் போகலாம்” என்று குறைபட்டுக்கொண்டான். அப்போதும் மனைவி “ஹெலிகாப்டரில் ஏறிச் சுற்றிப்பார்க்க ரூபாய் ஐநூறு கேட்கிறார்கள். ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.?என்றாள். இவர்களுடைய சம்பாஷணையை ஹெலிகாப்டர் பைலட் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் இவர்களிடம் “ நான் உங்கள் இருவரையும் ஹெலிகாப்டரில் ஏற்றி சுற்றிக் காட்டுகிறேன்.ஒரு பைசா தரவேண்டாம்.  ஆனால் ஒரு கண்டிஷன். பறக்கும்போது இருவரும் ஏதும் பேசக் கூடாது. மீறி ஏதாவது பேசினால் ஆளுக்கு  ஐநூறு ரூபாய். ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.” என்றார். கணவனும் மனைவியும் ஒப்புக்கொண்டு ஹெலிகாப்டரில் ஏறினார்கள். பைலட் ஹெலிகாப்டரை செலுத்தும்போது மிக வேகமாகவும்

திடீரென்று மேலே ஏறியும் அதேபோல் திடீரென்று கீழே இறக்கியும் பல சாகசங்களை நிகழ்த்தினார். கணவன் மனைவி இருவரும் ” மூச் “ ஒரு வார்த்தை பேசவில்லை. பைலட் கீழே ஹெலிகாப்டரை இறக்கியதும் கணவனிடம் நான் என்னென்னவோ சாகசங்கள் செய்தும் நீங்கள் அலறி சப்தம் செய்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்களோ.... I AM IMPRESSED ஒரு சப்தமும் எழுப்பவில்லை” என்றார். கணவன் “ உண்மையைச் சொல்வதென்றால் என் மனைவி கீழே விழுந்ததும் நான் உரக்கக் கூச்சல் போட நினைத்தேன்.ஆனால்.... ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.என்றார்.

 

 

 

     

 

 

 

 

 

     

 

 

 

 


    

  .

 

  

 

 

 

  

 

 

    

  .

 

  

 

 

 

  

 

    

  .

 

  

 

 

 

  

 

    

  .

 

  

 

 

 

 


8 comments:

 1. எல்லாமே ரசிக்க வைத்தது ஐயா.

  பதிவு பலமுறைகள் வெளி வந்து இருக்கிறது மற்றவைகளை நீக்கி விடவும்.

  ReplyDelete
 2. என்ரசனை ஒரு வேளைமாறுபட்டதோ

  ReplyDelete
 3. மீண்டும் படித்து ரசித்தேன். இரண்டாவது ரொம்பவே ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ரசிக்வே பல்ரப்பட்டது நன்றீ

   Delete