செவ்வாய், 6 ஏப்ரல், 2021

இன்று தேர்தல்


 


                                            யாருக்கு ஓட்டுப்  போடுவது
                                            --------------------------------------------

         ஓட்டுப் போடுவது நமது ஜனநாயக உரிமை, கடமை. தேர்தல் 

நாளில் மட்டும் இந்நாட்டு மன்னராகி ,நம்மை ஆள்பவரை தேர்வு 

செய்யும் ஒரு மகத்தான பொறுப்பு நமக்குக் கிடைக்கிறது. நமது 

வாக்கின்  மதிப்பை நாம் உணர்ந்து வாக்களிக்க வேண்டியது நம் 

கடமை. .அது சரி, யாருக்கு வாக்களிப்பது.?வாக்களிக்கும் முன் 

நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்தான்  என்ன.? நம் 

தொகுதியில் வேட்பாளராக நிற்பவரைப் பற்றி நமக்கென்ன 

தெரியும்.?வாக்களிப்பது வேட்பாளருக்கா இல்லை அவர் சார்ந்த 

கட்சிக்கா.?நம் வாக்கைப் பெறுவதற்கு வேட்பாளர்களோ 

கட்சிகளோ எந்த விதத்தில் தகுதி உள்ளவர்கள்.?நம் ஒருவரது 

வாக்கு என்ன பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.?இருக்கும் 

நிலவரம் திருப்திகரமாக உள்ளதா.?இல்லாவிட்டால் எதில் எதில் 

மாற்றங்கள் வரவேண்டும்.?மாற்றங்களைக் கொண்டுவர நம் 

பலம் என்ன.?மாற்றம் வந்தாலும் நிலவரம் மாறுமா.?ஆயிரம் 

கேள்விகள் கேட்டுக்கொண்டே போகலாம். அரசியல் அறிவு 

நமக்கு எவ்வளவு தூரம் இருக்கிறது.?இதையெல்லாம தெரிந்து 

நாம் ஓட்டுச்சாவடியில  பத்து நொடிகளுக்குள் ஓட்டுப் போடும் 

நேரத்தில் கடைசி நொடியில் தன்னிச்சையாக நம்மை அறியாமல்

வேண்டாதவருக்கே ஓட்டு போடும் பரிதாபம் நிகழக் கூடாது. நம் 

ஓட்டு நம் தலை எழுத்தையே மாற்றும் சக்தி கொண்டது.


           
தேர்தலுக்கு நிற்கும்/ நிறுத்தப்படும் வேட்பாளர்களில் நாம்
ஒருவருக்குத்தான் ஓட்டுப் போடமுடியும். வேட்பாளரை நாம்
தேர்ந்தெடுக்கும் முன் நாம் சிந்திக்க வேண்டியதில்
முக்கியமானது மாற்றம் வேண்டுமா என்பதுதான். மாற்றம்
வந்தால் இதைவிட நல்ல ஆட்சி அமையுமா என்பதும்தான்.

            
தற்போதைய ஆட்சி என்னவெல்லாம் செய்திருக்கிறது
என்னவெல்லாம் செய்திருக்கக் கூடாது ;தற்போதைய ஆட்சியின்
செயல்பாடுகளில் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன. தமிழ்
மாநில சட்டசபைக்குத் தேர்தல் நடக்க இருப்பதால் அது பற்றிக்
கொஞ்சம் அலசலாம்.

அரசு நலத் திட்டங்கள் என்று அறிவித்து ஏதேதோ gimmicks  செய்து வருகிறது அறிவிக்கப் பட்ட அல்லது செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மாநில மக்கள் அனைவருக்குமா இல்லை சென்னையில் வசிப்போருக்கு மட்டுமா 

 

           அரசாங்க நல திட்டங்களுக்கு வேண்டிய செலவுகளை 

எப்படி சமாளிக்கிறார்கள் மத்திய அரசின் பங்களிப்போடு 

டாஸ்மாக் மூலம் வருமானம், பெட்ரோல் விலையில் வரும் 

கணிசமான பங்கு,தவிர வரிவிதிப்பின் மூலம் கிடைக்கும் 

வருமானம்

 

         பாட்டாளியை  நல்ல  " குடி மகனாக்கி"அதன் மூலம் வரும் 

வருவாயில் இந்த நலத் திட்டங்கள் நிறைவேற்றப் படுகிறதா. ?

நலத்திட்டங்களுக்கான செலவுகள் எல்லாம் ஊழல் இல்லாமல் 

செலவாக்கப்படுகிறதா.?

           கோடிக்கணக்கில் செலவு செய்து, பதவியில் அமருபவர்கள் 

செலவு செய்த பணத்தை எப்படி மீட்கிறார்கள்.?இதில் கட்சி 

வேறுபாடுகள் உண்டா.?

 

          இந்த நிறை குறைகளை அலசி ஆராய்ந்து மாற்றம் 

வேண்டுமா, வந்தால் நலமா என்றெல்லாம் யோசித்து மக்கள் 

வாக்களிக்க வேண்டும்.இன்னும் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களில் எத்தனை சதவீதம் மக்களுக்குப் போகிறது எத்தனை சதவீதம் புறங்கையில் வழியும் தேனாகிறது

?

மாற்றம் கொண்டுவருவதே சரி என்னும்  கட்சியில் நானும் ஒருவன் ஆனால் சரியான மாற்றம் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறி இப்போது மாற்றுக்கட்சியும்  வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது  இவற்றுக்கும் மாறாக  மக்கள் நலக் கூட்டணி என்று கூறிக்கொண்டு சில கட்சிகள் அணிவகுக்கின்றன இந்தக் கூட்டணி வாக்குகளைச் சிதறவைக்குமோ என்னும்  அச்சம் எழுகிறது முன்பொரு திரைப்படத்தில் வரும் வசனம் போல் ஆளுக்கொரு தலைவன்  அவனவனுக்கு ஒரு பட்டினிப்பட்டாளம்  என்பதை மாற்றி  அவனவனுக்கொரு ஜாதிப்பட்டாளம்  என்று கூறத் தோன்றுகிறது

 இருக்கும்  நிலையை மாற்ற கட்சி என்றால் அதன்  தலைவரே  நினைவுக்கு வருவது நீக்கப்படவேண்டும்  தலைவர்கள் தோற்கடிக்கப் பட வேண்டும் என்னும் கருத்தில் ஒரு பதிவு எழுதி இருந்தது நினைவுக்கு  வருகிறது  தமிழகத்தின்  தலைவிதி மாற வேண்டும் என்றால்  இந்தத் தலைவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்  ஆக இதை நிறைவேற்றும் கடமை இத் தலைவர்கள் நிற்கும் தொகுதிகளின் வாக்காளர்களையே சாரும்  இத்தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டால் நிச்சயம் மாற்றம் வரும் 

          எது எப்படியாயினும் அனைவரும் ஓட்டுப் போடவேண்டும்

அதன் மூலம் ஆட்சிக்கு வருபவர்கள் மக்களின் ஆதரவு உள்ளவர் 

என்று கருதலாம். வாக்களிக்காமல் வீட்டில் இருந்து அரசியல் 

பேசுவது நல்ல அறிகுறி அல்ல. இருந்தாலும் இந்திய சாமானியன் 

விவரமானவன்

            அரசியல் ஆதாயத்துக்கு கட்சி மாறும் அல்லது ஆதரவை 

மாற்றும் பச்சோந்திகளை வாக்காளன் அடையாளம் கண்டு 

கொள்வான்

            ஜனநாயகம் என்பது ஓட்டுப் போடுபவர்களில்

மிகையானவர் கழுதையைக்  குதிரை என்றால் கழுதை

குதிரையாகத்தான் இருக்க வேண்டும். இது சாபமா வரமா புரிய  

வில்லை. நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

 

நமக்கு இருக்கும்ஆரசியல்அறிவு பெரும்பாலும் பெர்செப்ஷனே தனிமனிதர் பற்றி  நமக்கு தெரிவதெல்லாம் நெக்ஸ்ட் டு நதிங  ஆதாயம்இல்லாமலா பணம் செலவுசெய்கிறார்கள்  மக்கள் நலனுக்காக என்று  சொல்வதெல்லாம் வாயால் வடை சுடுவது  போலாகும்நல்லதோ கெட்டதோ ஒரு கட்சிக்கோ ஒரு அணிக்கொ  வாக்கு பதிவு செய்வதேநல்லது புறங் கையில் வழிவதாவது  மக்களுக்கு கிடைக்கலாம்

 

 

தலைவர்களே கட்சி மாற்றத்துக்கு  தூண்டில் போடுவதும் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது ம்  எந்த நிலையை  விளக்குகிறது  

 

 

 

    

  .

 

  

 

 

 

 

3 கருத்துகள்:

  1. //இத்தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டால் நிச்சயம் மாற்றம் வரும்//

    ஸூப்பர் ஐயா ஆனால் தலைவர்/தலைவி இரண்டு தொகுதிகளில் நின்றாலும் அமோகமாக வாக்களிக்கும் மூடர்களை என்ன சொல்வது ?

    வெற்றி பெற்றதும் ஒரு தொகுதியை ராஜினாமா செய்தே தீரவேண்டும். அப்படியென்றால் ஓட்டுப் போட்ட (பர்கூர்) மக்கள் மாக்களா ?

    பதிலளிநீக்கு
  2. அடுத்த ஐந்து வருடங்களுக்கு யாரிடம் ஏமாறப்போகிறோம் என்பது இதோ அடுத்த மாதம் தெரிந்து விடும்!

    பதிலளிநீக்கு