செவ்வாய், 26 ஏப்ரல், 2016

ஆவக்காய் ஊறுகாய்


                         ஆவக்காய் ஊறுகாய்
                         ---------------------------------
கடந்த பதிவில் ஆவக்காய் ஊறுகாய் பற்றி கூறி இருந்தேன்  ஆவக்காய் ஊறுகாய் செய்முறையைப் பற்றிப் பார்ப்போம் . என்னடா இது பூவையின்  எண்ணங்கள் தளத்தில் வர வேண்டியது அல்லவா . இங்கே எப்படி  பூவையின்  எண்ணங்கள் தளம் சமையற் குறிப்புகளுக்காகத் துவங்கப் பட்டது  அதற்கு வாசகர்கள் வேண்டி தமிழ் மணத்தில் இணைத்தேன் ஆனால் நான்பதிவு எழுதி தமிழ் மணத்தில் சேர்க்க முற்பட்டால் வேறு யாருடைய பதிவோ இணைகிறது இது குறித்து தமிழ்மணமா புதிர் மணமாஎன்று ஒரு பதிவும்  எழுதி வாசக நண்பர்களிடம் உதவி கேட்டு எழுதி இருந்தேன் யாரும்  எந்தத் தீர்வும்  கொடுக்க முன் வரவில்லை. Let bygones be bygones… ! சமையற்குறிப்பு என்  மெயின் தளத்தில் இதோ. பூவையின் எண்ணங்களிலும் பதிவிட்டு இருக்கிறேன்   பார்ப்போம்  சரி இப்போது ஆவக்காய் ஊறுகாய் செய்முறைக்கு வருவோம்  முதலில் ஆவக்காய் என்னும் பெயர் எப்படி வந்தது தெரியவில்லை.  மாங்காயில் செய்யும் ஊறுகாய்க்குப் பெயர் ஆவக்காய் ஊறுகாய். இந்த செய்முறை ஆந்திர செய்முறையை ஒட்டியது

 நல்ல முற்றிய மாங்காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும் பழுத்திருக்கக் கூடாது அவரவர் தேவையைப் பொறுத்தும் கிடைக்கும் மாங்காய்களைப் பொறுத்தும் வேண்டிய அளவு செய்யலாம் தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையாண்டால்  ஊறுகாய் கெடாமல் பல மாதங்கள் வரும்
முதலில் மாங்காய்களை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும் அவற்றை நல்லதுணியால் ஈரம் போகத் துடைக்க வேண்டும் மாங்காய்கள் ஈரமாக இருக்கக் கூடாது. அவற்றை எட்டு ஆகவோ மாங்காய் பெரிதாயிருந்தால் எந்த சைஸ் வேண்டுமோ அதன்  படியும் நறுக்கிக் கொள்ள வேண்டும் கொட்டைகளை எடுத்து விட வேண்டும்  நறுக்கிய காய்களை ஏதாவது பாத்திரத்தில் போட்டு நிரப்பி அளந்து கொள்ள வேண்டும் இதை  ஏன்  செய்ய வேண்டும்  என்றால் உப்பின்  அளவை நிர்ணயிக்கத்தான் . ஐந்து பாத்திர காய்களுக்கு ஒரு பாத்திர உப்பு என்பது அளவு. கல் உப்பே உபயோகிக்கவேண்டும்உப்பு சேர்த்த மாங்காயுடன்  மிளகாய்த்தூளையும் கலக்க வேண்டும் உப்பின் அளவில் முக்கால் அளவு மிளகாய்த்தூள் என்றும்  அரை அளவு கடுகுப் பொடியும் கால் அளவு வெந்தையப் பொடியும் சேர்க்கலாம் இதில் நல்ல எள் எண்ணையையும்  சேர்த்துக் கிளறவேண்டும் மாங்காய் உப்பு மிளகாய்த்தூள் கலவையில் எண்ணையை ஊற்றினால் எண்ணையில் கலவை மூழ்கி இருக்க வேண்டும் இந்தக் கலவையை ஒரு பெரிய பரணியில் போட்டு பரணியின் வாயை நல்ல துணியால் கட்டி மூட வேண்டும்  சிலர் இந்தக் கலவையில் பூண்டும் பச்சைக் கொத்துக்கடலையும் போடுவார்கள்அது அவர்களின் சுவையைப் பொறுத்தது இரண்டு நாட்களுக்கு  ஒரு முறை பரணியைத் திறந்து மீண்டும் நன்கு கிளறி  ஊற விட வேண்டும் ஊறு காய் போடட பத்து நாட்களுக்குப் பின் உபயோகிக்கலாம் ஊறுகாய்களை எடுத்துப் போட உபயோகிக்கும் கரண்டி ஸ்பூன்  போன்றவற்றில் ஈரம் இருக்கக் கூடாது. அப்படி உபயோகப் படுத்தினால் பூசணம் பிடிக்க வாய்ப்புண்டு. 
மாமரக் கதையில் ஆரம்பித்து ஊறுகாயில் முடிக்க நினைத்தேன் ஆனால் மாமரப் பதிவே என்னை இன்னும்  கொஞ்சம் தொடர் என்கிறது
மாமரத்தில் இருந்து காய்களைப் பறிப்பதில் இருக்கும் சில சங்கடங்களைக் கூறி இருந்தேன் நான் அதிகம் சங்கடப்படலாமா ? வயதான நல்லவன் இல்லையா?24-ம் தேதி எனக்கு உதவ ஆட்கள் வந்தனர் அதில் ஒருவர் மரத்தில் கல் அடிக்கும் சிறுவன் ஒருவனும் அடக்கம். மரத்திலிருந்து தொரடு கொண்டு காய்கள்  பறிக்கும் போது அவை கீழே விழுந்து அடிபடுகிறது என்றேன் உதவ வந்தவர் ஒருவர் மரத்தில் ஏறிக் காய்களைப் பறித்துப் போட்டார் அத்தனை சிவப்பு எறும்புக் கடிகளையும் எப்படிப் பொறுத்துக் கொண்டாரோ எறும்புகள் பற்றி மரம் ஏறும் முன்பே எச்சரித்து இருந்தேன்   அவர் பறிப்பதை கீழே இருவர் ஒரு பெட்ஷீட்டில்  கீழே விழாமல் பிடித்துக் கொண்டனர்  அப்படிப் பிடிக்க உதவியவருள் கல் எறியும்  சிறுவனும்ஒருவன்  பறித்த காய்கள் சிலவற்றைப் பெற்றுக் கொண்டான் சிறுவன்   ஓரளவு பெரிதாகி இருந்த காய்கள் பறிக்கப்பட்டன.  நாங்கள் இருப்பதோ இருவர் பறித்த காய்களை அக்கம் பக்கம் இருக்கும் வீடுகளுக்குத் தாராளமாகவேக் கொடுத்தோம் இதில் தமாஷ் என்னவென்றால் பலரும் பழமாகக் கிடைக்க எண்ணுகின்றனர். முற்றிய காய்கள் சிலவற்றை பழுக்க விட்டுப் பழமாய்  உண்ணுங்கள் என்றுதான் சொல்ல முடிகிறது சுமார் இருபது காய்களை ஊறுகாய்க்கு எடுத்துக் கொண்டோம் சிலவற்றைப் பழுக்க விடுகிறோம் பழுக்கத் தொடங்கினால் நல்ல இனிப்பான மாம்பழங்கள் சில நாட்களுக்குத் தொடர்ந்து கிடைக்கும் ஒன்று சொல்ல வேண்டும் எங்களுக்கு உதவ என்றே சிலர் கிடைக்கின்றனர் அவர்களுக்கு எல்லா நலமும் நடக்க வேண்டுகிறோம்                         
                   

 

                       



                   

33 கருத்துகள்:

  1. ஆபத்துக்காலங்களில் எங்கிருந்தோ கிடைக்கும் உதவி பெரியது தான். மாங்காய் பறிக்கக் கிடைத்த உதவியும் அப்படித்தான். கடவுள் கருணை உள்ளவர்.:)

    பதிலளிநீக்கு
  2. நாங்க ஆவக்காய்க்கு மாங்காய் நறுக்கும்போது ஓட்டோடு நறுக்குவோம்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல அனுபவம். மரத்திலேயே பழுத்த பழமாக இருந்தால் சுவைதான்.

    பதிலளிநீக்கு
  4. சார் நான் எப்போதும் ஆவக்காய்க்கு வீட்டு மாங்காய் உபயோகிப்பது இல்லை வீட்டு மாங்காய் ருமானி வெரைட்டி இல்லை. ஆவக்காய்க்கு நாட்டு ருமானிதான் நன்றாக இருக்கும் என்பதால் இம்முறையும் வெளியில் வாங்கி அவர்களைக் கொண்டே, ஓட்டுடன் கட் செய்து வாங்கி வந்து சுத்தம் பண்ணி போட்டு ஊறியும் விட்டது.

    நிச்சயமாக நாம் நல்லது நினைத்தால் உதவுவதற்கு யாரேனும் வருவார்கள் சார்..எப்படியோ அவர்களின் உத்வியால் மாங்காய்கள் கிடைத்துவிட்டனவே...எஞ்சாய் சார்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஆவக்காய் ஊறுகாய் நன்றாக இருக்கிறது.
    பறித்து கொடுத்தவர்களுக்கும்,, மாங்காய்களை கொடுத்து அவர்களை மகிழ்வித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  6. @ கீதாசாம்பசிவம்
    எங்கும் எதிலும் கடவுளைக் காணும் உங்கள் உள்ளம் புதிர் / புதியது வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு

  7. @ கீதா சாம்பசிவம்
    ஆவக்காய் ஊறுகாய்க்கு ஓட்டோடுதான் நறுக்க வேண்டும் ஆனால் ஊறுகாயில் ஒடை/ முற்றிய விதையை சேர்ப்பது இல்லை. அகற்றி விடுவோம் முற்றிய காயை ஓடோடு நறுக்குவது சற்று சிரமம்தான் வருகைக்கு நன்றி /

    பதிலளிநீக்கு

  8. @ டாக்டர் கந்தசாமி
    வாழ்த்துக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  9. @ ஸ்ரீராம்
    மரத்தில் பழுத்த ப்ழங்கள் நிற்பதில்லை வருகைக்கு நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு

  10. @ துளசிதரன் தில்லையகத்து/கீதா

    நிச்சயமாக நாம் நல்லது நினைத்தால் உதவுவதற்கு யாரேனும் வருவார்கள் சார்..எப்படியோ அவர்களின் உத்வியால் மாங்காய்கள் கிடைத்துவிட்டனவே...எஞ்சாய் சார்!!/ எல்லாவற்றுக்கும் ஒரு விலை கொடுக்க வேண்டும் மேம் நன்றி

    பதிலளிநீக்கு

  11. @ கோமதி அரசு
    வாழ்த்துக்களுக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு
  12. ஆவக்காய் ஊறுகாய் சூப்பர் ஐயா,,நான் ஊறுகாய் செய்ய ஆசை தான் ,,நல்லா பகிர்வு

    பதிலளிநீக்கு
  13. GMB ஆவக்காய் தெலுங்கில் ஆவ + காய .ஆவ (ஆவாலு)என்பது கடுகு முக்கிய சுவையாய் இருப்பதால் ஆவக்காய் என அழைக்கபடுகிறது. பல சுவைகளில் தயாரிக்கப் படும் அமிர்தம் இது.

    பதிலளிநீக்கு
  14. gmb சார்! ஒரு வெள்ளைக்காரனுக்கு ஆவக்காய் சாப்பிடக் கொடுத்தார்களாம். பிடித்துப் போய் நிறைய போட்டுக் கொண்டானாம்.
    அடுத்த நாள் ஊறுகாய் கொடுத்தனுப்பியவர் அவனைக் கேட்டாராம்:'HOW WAS THAT?'.
    அதற்கு அவன் சொன்னான்:'OH! FINE. Very tasty at one end... very horrible at the other'.

    பதிலளிநீக்கு
  15. ஐயா செய்முறையை அழகாக விவரிக்கின்றீர்கள் இந்தப்பதிவு நேற்று வெளியிட்டு இருக்கின்றீர்கள் இன்றுதான் எனது டேஷ்போர்டிற்கு வருகின்றது.

    பதிலளிநீக்கு
  16. //எங்கும் எதிலும் கடவுளைக் காணும் உங்கள் உள்ளம் புதிர் / புதியது //

    அதெல்லாம் எதுவும் இல்லை ஐயா! கடவுள் இல்லாத ஓர் சின்ன ஊசிமுனையளவு இடம் இருந்தால் சொல்லுங்களேன்! :)))))

    என்ன தான் பணம் நிறையக் கொடுத்தாலும் மாங்காய் பறிக்க ஆட்கள் அவ்வளவு எளிதில் வருவதில்லை என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆகவே தான் கடவுளின் கருணை என்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  17. மரம் ஏறத்தெரிந்தவர்கள் இப்பொழுது குறைந்துவிட்டார்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  18. செய்முறை விளக்கம் அருமை ஐயா....

    பதிலளிநீக்கு

  19. @ மகேஸ்வரி பாலசந்திரன்
    ஆசைமட்டும் போதாது .செய்து பாருங்கள் வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு

  20. @ மோகன் ஜி
    விளக்கத்துக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு

  21. @ மோகன் ஜி
    ருசியால் ஈர்க்கப்பட்டு அதிகம் சாப்பிட்டவர் வேறு எப்படி கூறி இருக்க முடியும் ரசித்தேன் ஜி. வருகைக்கும் சின்ன ஜோக்குக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

  22. @கில்லர்ஜி வளைகுடாவில் ஆவக்காய் ஊறுகாய் கிடைக்கிறதாஜி கடைகளில் மாங்காய் கிடைக்கும் வருகைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு

  23. @ கீதா சாம்பசிவம்
    கடவுளே ஒரு கான்செப்ட் என்று நினைக்கிறவனிடம் கடவுள் இல்லாத இடத்தைக் காட்டச் சொன்னால் எப்படி. நான் உங்களிடம் கடவுளைக் காட்டுங்கள் என்று கேட்டு வாதிட விரும்பவில்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் சரி நன்றி மேம்

    பதிலளிநீக்கு

  24. @ கரந்தை ஜெயக் குமார்
    மரம் ஏறத்தெரிந்தவர்களுக்குக் குறைவில்லை ஐயா எதற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டும் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  25. @ அஜய் சுனில்கர் ஜோசப்
    செய்து பார்த்துச் சொல்லுங்கள் சார் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  26. ஒரு டப்பா ரிசர்வ் செஞ்சிருங்க சார் அப்பாதுரைக்கு.

    பதிலளிநீக்கு

  27. @அப்பாதுரை
    செஞ்சிட்டேன் சார். இந்தியாவில்தான் இருக்கிறீர்களா எப்போது வருகிறீர்கள்

    பதிலளிநீக்கு
  28. எனக்கு மிகவும் பிடித்த ஊறுகாய்
    செயல் முறை விளக்கம் செய்து
    பார்க்கத் தூண்டுகிறது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  29. ஆவக்காய்தான் ஊறுகாய்களின்ராணி! பானுமதி ராமகிருஷ்ணா முதல் GMB அதைப் எழுதி இருக்கிறார்கள் சும்மாவா? புகைப் படமும் சேர்த்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  30. மாங்காய் தொடர்ச்சி ஆவக்காயா? தாமதமாகத்தான் வந்தேன். இருந்தாலும் ருசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு

  31. @ பானுமதி வெங்கடேஸ்வரன்
    திட்டமிட்டு எழுதப்படாத பதிவு. படங்களையும் சேர்த்திருக்கலாம் தான் வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு

  32. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    லேட்டாக வந்தாலும் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு