Monday, April 18, 2016

அரசியல் ஒரு சிறு அலசல்


                           அரசியல் ஒரு சிறு அலசல்
                          --------------------------------------------
அரசியல் பற்றி எழுதக் கூடாது என்றிருந்தேன் ஆனால் நடக்கும் நிகழ்வுகளைக்காணும் போது எழுதாமல் இருக்க முடியவில்லை
நம்மை நாம் ஒரு ஜனநாயக அரசு என்று கூறிக் கொள்கிறோம் அதாவது பெரும்பான்மையான மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகளால் நம் ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்லிக் கொள்கிறோம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்றாலும்  எல்லோரும் அரசாள முடியாது குறிப்பிட்ட கொள்கை உடையவர்கள் ஒன்று சேர்ந்து கட்சி எனும்  பெயரில் போட்டியிட, பாவம், நாமும் நம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறோம் இதிலென்ன தவறு.?நல்லது தானே …!ஆனால் கட்சி என்று சொல்லும் போது ஒரு கட்டுக் கோப்பான கொள்கையும் இருக்க வேண்டும்  நாடு சுதந்திரம்  அடையும் முன்பு அயலானை அகற்றுவதே குறிக்கோளாக இருந்தது நாட்டை அடிமைத் தளையிலிருந்து மீட்டால்  விடுதலை அடைந்த நாடு இன்னவாறு இருக்க வேண்டும் என்னும் ஏகோபித்த கருத்து உருவாகி இருந்தது நம்மை ஆண்ட பிரதிநிதிகள் சுயநலமற்று இருந்தனர்  இருந்தாலும் பிரதி நிதிகளைத் தேர்ந்தெடுக்கும்  முறையைச் செவ்வனே செய்யவில்லையோ என்று தோன்றுகிறது
  நம்மால் தேர்ந்தெடுக்கப் படுபவர் மக்களில் பெரும்பானமையினரின் ஆதரவு பெற்றவராக இருக்க வேண்டும்  . ஆனால் இப்போது இருக்கும் நடைமுறையில் இது சாத்தியமாகத் தோன்றவில்லை. ஓட்டுப்போடும் உரிமை உள்ளவர்களில் 60 சதவிகிதம் பேர் ஓட்டுப் போடுவதாக வைத்துக் கொள்வோம் போட்டிக்கு நான்கு கட்சிகளோ  கூட்டணிகளோ இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம் அறுபது சத வீத ஓட்டுக்கள் 
நான்கு அணிகளுக்கும்  அளிக்கப் படுகிறது அளித்த ஓட்டுகளில் அதிகம் ஒட்டு பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுகிறார்  அதாவது அளிக்கப் பட்டுள்ள ஓட்டுகளில்அதிகம் ஓட்டுகளைப் பெற்றவர் வெற்றி பெறுகிறார். ஆனால் இவர் ஓட்டுப்போடாத 40 சதவிகித்ததோரால் ஏற்றுக் கொள்ளப் பட்டவரா ? எங்கேயோ தவறு தெரியவில்லையா?விழுந்த ஓட்டுகளில் 40 சதம் வாங்கி இருந்தாலும் இவரது ஓட்டு எண்ணிக்கை மற்றவர்களதை விட அதிகமாக இருந்தால் வெற்றி பெறுகிறார் இதையே கணக்குப் போட்டுப்பார்த்தால் இவரை இருக்கும் மொத்த ஓட்டாளர்களில் 24 சதவிகிதம்  பேரே தேர்ந்தெடுக்கின்றனர் மற்ற 76 சதவீதம் ஓட்டாளர்கள் இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை இதைத்தான் நான் தேர்ந்தெடுக்கும் முறையே சரியில்லையோ என்றேன்
 சரி இதற்குத் தீர்வுதான் என்ன ?ஒன்று தேர்ந்தெடுக்கப்படுபவர் இருக்கும்  மொத்த ஓட்டாளர்களின் 50 சதவிகிதம் பேருடைய ஆதரவாவது பெற்றிருக்க வேண்டும்  என்னும் சட்டம் வர வேண்டும்இல்லை என்றால் அதற்கு ஏற்றபடி சட்டங்கள்திருத்தப்பட வேண்டும்  இப்போது இருக்கும் நிலையில் தேர்வு செய்து வெற்றி பெறுபவரை விடவெற்றி பெற்றவரை அங்கீகரிக்காதவர்களே அதிகம்
 தமிழ் நாட்டில் இன்றிருக்கும் நிலையில்  போட்டி போடுபவர் யாரையுமே தேர்வு செய்ய மக்கள் விரும்புவதில்லை. மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களும் சரியான மாற்றம் செய்ய முடியாததால் இருப்பவரில் யாருக்கோ ஓட்டுப் போடுகிறார்கள்
 எந்தக் கட்சிக்குமே ஒரு கொள்கை கிடையாது திமுக அதிமுக இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் மற்றபடி கூட்டு சேர்ந்திருப்பவர்கள் மக்களின்  அதிருப்தியில் குளிர் காய விரும்புகிறார்கள் ஒரு பாரம் பரியம் மிகுந்த அகில இந்தியக் கட்சியாக இருந்த காங்கிர்சும்  முகவரி தெரியாமல் போய் இருக்கிறது

மதுவிலக்கு அமலில் இருந்தபோது ஒன்றிரண்டு தலைமுறையினருக்கு மதுவின் பழக்கமே இருக்கவில்லை.1970களின்  கடைசியில் மது விலக்கை நீக்கினார்கள் அதன் மூலம் தங்கள் பைகளை நிரப்பத் தொடங்கினார்கள் இன்னும் சிறிது காலத்தில் அரசே மது விற்பனையைக் கைகொண்டு கஜானாவையும் தங்கள் பைகளையும் நிரப்பினார்கள் அண்மையில் மது விலக்குக்கு ஆதரவாக பெண்மணிகள் இறங்கிய போது கட்சிகள் மது விலக்குக் கொள்கையை மீண்டும் அமல் படுத்தலாமா என்று பரிசீலிக்கத்  தொடங்கி விட்டார்கள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வைக்கப் படும் மதுவிலக்கை நீக்கியதால் ஆதாயம் பெற்றவர்கள் மாற்றுக் கருத்துக்கு செவி சாய்ப்பார்களா என்பதே சந்தேகம் 
 மக்களின் நிலைதான் பரிதாபமானது இருக்கும்  கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்லது என்று தேர்வு செய்ய வேண்டும் இப்போது இருக்கும் நிலையில் அரசியல் வாதிகள் எல்லோருமே அரசியல் வியாதிகளாக இருப்பதே அவலம்
 ேர்ல் நத்ுவு என்பு அருக்கு அிகம் செலு வைக்கிறு இந்நிலையில் அவ்வப்பாவு மிலத்ில் ாவேர்ல் நந்து கொண்டே இருக்கிறுஇை நீக்கத்ிய அருக்கும்  மாநில அருக்கம்  ஒரே நேரத்ில் ேர்ல் வைப்பு சிந்திக்கேண்டியந்தாண்டு காலம் அரு நப்பு என்பிரிநிிகள்  ெரும்பான் ாக்குகள் அாவஐம்பு சத்ுக்கும் மேல் வங்கியர்காக இரந்தால், சத்ியக் கூறுகள் அிகம் அற்கேற்ப ந்தட்ட ிரத்ங்கள் கொண்டுவுவும் பிசீலிக்கேண்டிய
ாசர்கள் பித்ு அவர்கள் மேலானத்க்கை எழுவு மிகுக்கியம்   .              
                   


 

39 comments:

 1. தேர்ந்தெடுக்கும் முறை மாற்றப் பட வேண்டும் என்றே என் கருத்தும். ஒரு கட்சி இரண்டு முறைக்கு மேல் போட்டி இடக் கூடாது என்று இருக்க வேண்டும். ஏன், ஒருமுறைதான் ஒருவர் ஆள வேண்டும் என்று கூட இருக்கலாம்.

  ReplyDelete
 2. ஐந்தாண்டுகள் ஆட்சி என்று இருந்தால் முதல் இடத்தைப் பெற்ற கட்சி முதல் மூன்று ஆண்டுகளும், அடுத்தடுத்து இரண்டு மூன்று நிலைகளைப் பெற்றவர்கள் நான்காம் ஆண்டு, ஐந்தாம் ஆண்டும் ஆட்சி செய்யலாம். இது அபத்தம், சரி வராது என்று தோன்றினால் வருடத்துக்கு ஒரு முதல்வர் என்று ஜெயித்த கட்சியிலிருந்து ஆளலாம்! அமைச்சர்களும் வருடத்துக்கு ஒருமுறை இலாகா மாற வேண்டும். அவர்களுக்கு எந்த தனிச் சலுகையும் கொடுக்கக் கூடாது.

  ReplyDelete
 3. மணியைக் கட்டிக் கொண்டால் பூனைக்கும் நல்லது..

  ஆனால், அது மாட்டேன்.. - என்று அடம் பிடிக்கின்றதே!..

  ReplyDelete
 4. தேர்தல் முறையில் மாற்றம் என்பது எளிதில் நடக்கக்கூடிய விஷயம் அல்ல. இருப்பதில் நல்லதைத் தேர்வு செய்வதே நடைமுறை சாத்தியம். ஓட்டளிப்பதில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஓரிரு அணியினரே ஆட்சிக்கு வராமல் மாற்றுக் கருத்துக்கொண்டவர்களில் ஓரளவிற்கு நல்லவராகவும் தெளிவான பார்வை கொண்டவராகவும் இருப்பவரை தேர்வு செய்து அவருக்கு ஒரு வாய்ப்பளிக்கலாம். களத்தில் இருக்கும முதல்வர் வேட்பாளர்களில் படித்த மற்றும் விபரம் அறிந்த நடுநிலை வாக்காளர்களைத் திறமையான தன் பரப்புரைகளால் கவரக்கூடியவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு அன்புமணி மட்டுமே. சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவு பெற்றுவரும் இவரின் பெருகிவரும் செல்வாக்கினை யாரும் புறக்கணிக்க முடியாது. பா.ஜ.க. வின் ஆர்.எஸ்.எஸ். பின்னணியை மறைத்து எப்படி மோடி முன்னிறுத்தப்பட்டாரோ அதைப்போன்றே இவரும் பா.ம.க. வின் சாதிக்கட்சி பிம்பத்தை மாற்ற முன்னிலைப் படுத்தப்படுகிறார். எது எப்படியாயினும் தமிழ் நாட்டின் தற்போதைய அவசியத்தேவை ஒரு படித்த விவரமான இளைஞர் ஒருவரின் தலைமையே. அ.தி.மு.க மற்றும் தி.மு.க. இவைகளுக்கு மாற்று வேண்டும் என்கின்ற கருத்து பரவலாக பேசப்படும் இத்தருணத்தில் இதற்குத் தகுதியான நபர் இவர் ஒருவர் மட்டுமே என்பது எனது கருத்து. இவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை.

  ReplyDelete
 5. தேர்தல் முறை குறித்து வெகு நாட்களாக முன்வைக்கப்படும் பல கருத்துக்களையும் திரட்டியெடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் நீங்கள் செய்திருக்கும் இந்த நினைவூட்டலுக்கு முதலில் நன்றி ஐயா!

  ஆனால், எல்லா அரசியலாளர்களும் கெட்டவர்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நல்லகண்ணு, வைகோ, தமிழருவி மணியன், பழ.நெடுமாறன், தோழர் தியாகு என நல்ல தலைவர்களும் நிறையவே இருக்கிறார்கள். தேர்தல் அரசியலில் இறங்காத, ஆனால் அரசியலில் இருக்கிற தலைவர்களான பெ.மணியரசன், குளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், திருமுருகன் காந்தி என இளந்தலைமுறை அரசியல் தலைவர்களும் இருக்கிறார்கள். எனவே, எல்லாருமே கெட்டவர்கள் என்பது சரியான பார்வை இல்லை என்பது என் கருத்து. என்னைப் பொறுத்த வரை, தமிழ்நாட்டு அரசியலில் இன்றிருக்கும் மாபெரும் பின்னடைவு என்னவெனில் நல்ல அரசியலாளர்களுக்குத் தங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதுதான். இதுதான் கருணாநிதி, செயலலிதா ஆகிய இருவர் மட்டுமே மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர்க காரணமாக உள்ளது. "தமிழர்களுக்கிடையில் ஒற்றுமையில்லை... ஒற்றுமையில்லை" எனக் காலங்காலமாகப் பல்லவி பாடும் தலைவர்கள் முதலில் தங்கள் முதுகைக் கொஞ்சம் தேய்த்துக் கழுவிக் கொண்டால் தமிழ் சமூகமும் தூய்மையடையும், உருப்படும்.

  ReplyDelete
 6. வணக்கம் ஐயா அவசியமான நேரத்தில் நல்லதொரு பதிவு வாழ்த்துகள்

  தேர்தலில் ஆளுங்கட்சியோ, அல்லது வேறு கட்சியோ நாளை ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை பூரணமாக நடைமுறைப் படுத்துவார்கள் என்பதற்கு உறுதி ஏதாவது இருக்கின்றதா ? இது மாண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போலதான் ஐயா

  இப்படியே போனால் அடுத்த தலைமுறைகள் நிச்சயமாக வெள்ளையர்களிடம் போராடியது போல் இனி உள்நாட்டு களவாணிகளிடம் போராட வேண்டிய நிலை வரும் என்பது மட்டும் உறுதி.
  மாற்றம் அரசியலில் வராது மக்கள் மனதில் வரவேண்டும் காந்திஜி கொள்கை இனி சரியாக வராது நேதாஜி கொள்கையே சரியாகும்
  அன்பால் திருத்துவதற்க்கு இப்பொழுது மனிதர்கள் வாழவில்லை. வேறு.....

  ReplyDelete
 7. தமிழ் நாட்டில் இன்றிருக்கும் நிலையில் போட்டி போடுபவர் யாரையுமே தேர்வு செய்ய மக்கள் விரும்புவதில்லை. மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களும் சரியான மாற்றம் செய்ய முடியாததால் இருப்பவரில் யாருக்கோ ஓட்டுப் போடுகிறார்கள்// இப்போது இந்தக் குழப்பம் நிலவத்தான் செய்கிறது. மட்டுமல்ல கூட்டணியோ மக்கள் விரும்பும் மாற்றம் முன்னேற்றம் சொல்லி நீங்கள் சொல்லியிருப்பது போல் குளிர்காய முற்படுகிறார்கள். நல்லவர்கள் இருக்கிறார்கள் அரசியலில் ஆனால் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் இருக்கிறார்களா என்பது சந்தேகமே..

  ReplyDelete
 8. காலத்திற்குப் பொருத்தமான நல்ல பதிவு.

  ReplyDelete
 9. கடைசி பாரா படிக்க இயலவில்லை ஐயா

  ReplyDelete

 10. @ ஸ்ரீ ராம்
  பெரும்பானமையினரால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்பதே இப்போது அபத்தமாக இருக்கிறது
  /ஒரு கட்சி இரண்டு முறைக்கு மேல் போட்டி இடக் கூடாது என்று இருக்க வேண்டும்/ ஒரு நபர் என்பதை ஒரு கட்சி என்று எழுதி விட்டீர்களோ என்று தோன்றுகிறது வருகைக்கு நன்றி ஸ்ரீ .

  ReplyDelete

 11. @ ஸ்ரீராம்
  நடப்பில் இருக்கும் தேர்தல் முறை சிறிதேனும் திருப்தி இல்லை என்பதையே உங்கள் ஆதங்கங்கள் காட்டுகிறது கருத்துப்பகிர்வுக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 12. @ துரை செல்வராஜு
  எந்த பூனை மணியைக் கட்டிக்கொள்ளத் தயாராய் இருந்திருக்கிறது யாராவது இழுத்துப் பிடித்துக்கட்டத்தான் வேண்டும் வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 13. @ செல்வதுரை
  நடப்பில் இருக்கும் தேர்தல் முறைகளே இவ்வளவு அதிருப்திக்கும் காரணம் நான் குறிப்பிட்ட நபர்களைப் பற்றி பேச வில்லை. இருப்பவரில் நல்லவர் என்பதே சரியாகாது தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வாக்காளர்களின் பெரும் பான்மை வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் இப்போது யார் நிற்பதாயிருந்தாலும் பெரும்பான்மையினரால் ஒதுக்கப் பட்டவர்களே இந்நிலையில் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவருவதுதான் சிறந்தது ஆனால் கட்சிகளோ ஆளுபவர்களொ இதை தன் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்வது போல் நினைப்பார்கள் முதலில் இருக்கும் முறையிலேயாவது நீங்கள் குறிப்பிடும் நபர் வெற்றி பெறுகிறாரா என்று பார்க்கவேண்டும் முதல் (?) வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 14. @ இ.பு ஞானப்பிரகாசன்
  எல்லா அரசியல் வாதிகளும் கெட்டவர்கள் என்று நான் கூறவில்லை. கொள்கைக் குறையுடையவர்கள் என்றுதான் கூறு கிறேன் ஏன் நானும் நல்லவன் தான் நீங்களும் நல்லவர்தான் தேர்தலில் நின்று ஜெயிக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கிறதா நல்லவனோ இல்லையோ கோடிக்கணக்கில் செலவு செய்யும் சக்தி வேண்டும் செலவு செய்த பணத்தை மீட்டெடுக்க நல்லவனாக இருக்க முடியாது. ஆகவேதான் நடை முறைத் தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என்கிறேன் குறைந்த பட்சம் பெரும்பான்மையினரின் வாக்குகளாவது இருக்கும் வருகைக்கு நன்றி

  ReplyDelete

 15. @ கில்லர்ஜி
  மதுவிலக்கு என்பதை அமல் படுத்துவார்களா என்பதே கேள்விக்குறி ஆதரித்தும் எதிர்த்தும் நிறைய வாக்கு வாதங்கள் இருக்கின்றன. இதுவும் ஒரு நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதியாகும் என்றே தோன்றுகிறது வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete

 16. @ துளசிதரன் தில்லையகத்து
  எனக்கு ஒரு சந்தேகம் இப்போது நிலுவையில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றால் none of the above NOTA என்று வாக்களிக்கலாம் சப்போஸ் இந்த எண்ணிக்கை அதிக வாக்கு பெற்ற வர்களை விட அதிகமாக இருந்தால் யாருமே தேர்வு செய்யப்ப்ட ம்மாட்டார்களா/ தெரிந்தால் கூறுங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete

 17. @ டாக்டர் கந்தசாமி
  மூத்த பதிவரின் கருத்தும் இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 18. @ கரந்தை ஜெயக் குமார்
  பிரச்சினை உங்களுக்கு மட்டும்தான் போலிருக்கிறதே வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 19. நாட்டுக்கு நல்லது செய்ய
  நினைப்பவர்களா அரசியல் வாதிகள்...
  நல்லது செய்ய வந்தவங்க
  ஓட்டுக்காக காலில் கூடவா
  விழுவாங்க....

  ReplyDelete
 20. உங்கள் பாணியில், புள்ளி விவரங்களோடு ஒரு நல்ல அலசல். 'எங்கள் blog’ ஸ்ரீராம் சொன்னதை அப்படியே நானும் வழி மொழிகின்றேன்.

  ReplyDelete

 21. @ அஜய் சுனில்கர் ஜோசப்
  இப்போது காணும் அரசியல் வாதிகளைப் பார்த்த பின் அரசியல் என்றாலே ஒரு வெறுப்பு தோன்றுகிறது என்ன செய்ய. இது அவர்கள் காலமாகி விட்டது/

  ReplyDelete

 22. @ தி தமிழ் இளங்கோ
  அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைப்பது அவரவர் விருப்பம் ஆனால் நான் செயல்படுத்தக் கூடியவற்றையே எழுதி இருக்கிறேன் என்று நம்புகிறேன் வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 23. அருமையான, ஆழமான அலசல். அரசியல்வாதிகளின் தாக்கத்திலிருந்து யாரும் தப்பமுடியா நிலையில் உள்ளோம். நாளடைவில் எதையும் நாம் ஏற்கும் அளவு நம்மை அவர்கள் ஆக்கிவிடுகிறார்கள் என்பதே உண்மை.

  ReplyDelete
 24. அருமையான, ஆழமான அலசல். அரசியல்வாதிகளின் தாக்கத்திலிருந்து யாரும் தப்பமுடியா நிலையில் உள்ளோம். நாளடைவில் எதையும் நாம் ஏற்கும் அளவு நம்மை அவர்கள் ஆக்கிவிடுகிறார்கள் என்பதே உண்மை.

  ReplyDelete
 25. அஃதென்னவோ உண்மைதான் ஜியெம்பி ஐயா!

  ReplyDelete
 26. கடைசிப் பத்தி எழுத்துக்கள் சரியாக வரவில்லை. என்றாலும் என்னுடைய பொதுவான கருத்து அவ்வளவு எளிதில் நம் நாட்டு நடைமுறையை மாற்ற இயலாது. ஒரு முறை முதல்வராக ஆனவர்களும், மந்திரியாக இருந்தவர்களும் அடுத்த முறை வரக்கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வரலாம். அதெல்லாம் நடக்காது என்பதும் புரிகிறது.

  ReplyDelete
 27. ஒருமுறை மட்டும் பதவியில் இருக்கணும் என்று இருந்தால் நல்லது. இதுலே இன்னொரு கஷ்டம் என்னன்னா, பதவிகாலம் ஒரே ஒருமுறைதானே.... அம்பது வருசத்துலே நிதானமா அடிக்கும் கொள்ளையை ஒரே வருசத்துல்லே அடிச்சுருவாங்க !

  ReplyDelete
 28. கடைசி பாரா எனக்கும் படிக்க இயலாத SCRAMBLED எழுத்துக்களாக தெரிகிறது. காரணம் இப்படி இருக்கலாம்- கடைசி பாராவை மட்டும் வேறொரு SOFTWARE WRITER மூலம் எழுதியிருக்கலாம். உதாரணமாக, முதலில் GOOGLE INPUT மூலமாகவும், கடைசி பாராவை மட்டும் nhm WRITER போன்ற ஏதோ ஒன்றின் மூலமாகவும் எழுதியிருக்கவேண்டும்.
  (௨) மற்றபடி, நீங்கள் எழுதியுள்ள அரசியல் கருத்துக்கள் ஏற்கெனவே தெரிந்தவைதான். பிற நாடுகள் பலவற்றைப் பார்க்கிலும் (குறிப்பாக அமெரிக்காவைப் பார்க்கிலும்) நமது ஜனநாயக முறை தேர்தல்கள் மிகவும் பலமானவை, மக்களுக்கு மிகக் குறைந்த ஆபத்தை விளைவிப்பவை என்று உலகமே போற்றுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, இரண்டு திராவிடக் கட்சிகளும் மக்களை சுரண்டிவிட்டு தங்களை வளப்படுத்திக்கொள்ள ஒரே காரணம், வலுவான மூன்றாவது அணி இங்கே இல்லாததுதான். இப்போது அப்படியொரு அணி ஏற்பட்டிருக்கிறது. நடைபெறவுள்ள தேர்தலில் நிச்சயம் மாற்றம் வரும். அதன்பிறகு தாங்கள் எதிர்வினை செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. -இராய செல்லப்பா  ReplyDelete
 29. மிகவும் சரி! குறிப்பாக தமிழ் நாட்டை பொறுத்தவரை யாருக்கு ஓட்டளிப்பது என்று புரியாத நிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள். தேர்தல் முறையில் மற்றம் கண்டிப்பாக தேவை.

  ReplyDelete
 30. அரசியல் கருத்துக்களாக நீங்கள் எழுதியிருப்பவை சரிதான். இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த ஜனநாயகம், இந்தியா ஒன்றுதான் உலகில். நமது அரசியல் அமைப்பும் சிக்கலானது. ஓவர்நைட்டாக எதையும் இங்கே மாற்றிவிட முடியாது. ஆரம்பத்திலேயே அரசியல் சட்டம் மூலமாக, தேசிய அளவில்,மாநில அளவில் இத்தனை கட்சிகளுக்குமேல் இருக்கக்கூடாது என ஆக்கியிருக்கவேண்டும். தேர்தலில் நிற்பவருக்கும் வயது வரம்போடு, அடிப்படைக் கல்வித்தகுதி, பொது வாழ்வு அனுபவம், குற்றப்பின்னணி இல்லாதிருத்தல் என்றெல்லாம் தகுதிகளைக் கட்டாயமாக்கியிருக்கவேண்டும். 60 அல்லது 65 என்கிற உச்சவயது என்கிற வரம்பும் அரசியல்வாதிக்கு அமைத்திருக்கவேண்டும். இல்லையெனில்,91 வயதுக்கார கருணாநிதிகள், மேக்-அப் போட்டுக்கொண்டு முதல் அமைச்சர் வேட்பாளர்களாக மக்களைப்பார்த்து சிரிப்பதை ஒன்றும் செய்யமுடியாது.

  ஆனால் இப்போதிருக்கும் எந்த பெரிய, சிறிய அரசியல் கட்சிக்கும் இதிலெல்லாம் நாட்டம் இல்லை. பணம், பதவி, அதிகாரம் இதிலேதான் நோட்டம். மக்களுக்கோ சினிமாவைப் போல அரசியலும் ஒரு பொழுதுபோக்கு!

  ReplyDelete
 31. G.M ஐயா அவர்களே ! தேர்தல் பற்றி,நடப்பு ஜனநாயகம் பற்றி,மதுவிலக்கு பற்றி, ஏன் அரசியல் பற்றி கூட உங்கள் கட்டுரை மிகவும்மேலோட்டமான கருதுக்களையே சொல்கிறது என்று நினைக்கிறேன் ஐயா ! இன்றைய தெர்தல் முறையை மாற்ற வேண்டும் என்பது சரீ. விகிதாசார முறையை பரிசீலிக்கலாம்.சிறுபான்மையின் எண்ணத்தையும்கணக்கில்கொள்ளும் பெரும்பான்மை கொண்ட ஜனனாயகம் தான் நல்லது. மது உடல் நலத்துக்கு கேடு .அதே சமயம் அதனை முழுமையாக விலக்க வேண்டுமா ? முடியுமா ? அதனால் ஏற்படும் பாதிப்புகளை பரிசீலிக்க வேண்டும் உதாரண மாக கரும்பு விவசாயம் ! நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் தனக்கு வரும் 80000 /- ரூ சம்பளத்தை கட்சிக்கு கொடுத்து விட்டு கட்சி கொடுக்கும் 5500 /- அலவன்சில் வாழும் அரசியல் வாதிகளை நீங்கள் தெரிந்திருப்பீர்கள். இவை பற்றி எல்லாம் தீர்க்கமாக சிந்தித்து,விவாதித்து, முடிவு எடுக்க வேண்டியவை . . ( to be discussed,deliberated,and decided) . இருந்தாலும் ஒரு முக்கியமான விவாதத்தை ஆரம்பித்து வைத்த உங்களுக்கு நன்றிகள்.வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.

  ReplyDelete

 32. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  ஆழமான அலசல் எல்லாம் இல்லை ஐயா. மாற்றம் நிகழவேண்டிய இடங்களைக் கோடிட்டுக் காண்பித்திருக்கிறேன் அவ்வளவுதான்இருக்கும் நிலை நாம் அரசியல்வாதிகளின் தாக்கத்திலிருந்து தப்பமுடியாது என்று நினைக்க வைப்பவைவருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 33. @ இபு ஞானப்பிரகாசன்
  மீள் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 34. @ கீதாசாம்பசிவம்
  ஏன் இந்த டிஃபீடிஸ்ட் மனப்பான்மை தெரியவில்லை. மக்கள் சக்தியால் மாற்ற முடியாதது இல்லை என்பதே என் கருத்து. வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 35. @ துளசி கோபால்
  தேர்தல் முறையில் மாற்றங்கள் வரும்போது பரிசீலிக்கப்பட வேண்டிய கருத்து வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 36. @ செல்லப்பா யக்ஞசாமி
  கடைசி பாரா எனக்கும் படிக்க இயலாத SCRAMBLED எழுத்துக்களாக தெரிகிறது. காரணம் இப்படி இருக்கலாம்- கடைசி பாராவை மட்டும் வேறொரு SOFTWARE WRITER மூலம் எழுதியிருக்கலாம். உதாரணமாக, முதலில் GOOGLE INPUT மூலமாகவும், கடைசி பாராவை மட்டும் nhm WRITER போன்ற ஏதோ ஒன்றின் மூலமாகவும் எழுதியிருக்கவேண்டும்/ என்தளத்தில் எழுத்துக்கள் எல்லாம் சரியாகவே இருக்கின்றன. ஒரு சிலருக்கேஇந்தப்பிரச்சினை. காரணம் தெரியவில்லை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இருப்பவர்களின் பெரும்பான்மை வாக்குகளை பெறாதவர்கள் என்பதே இப்பதிவின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இருக்கும் கட்சிகளுக்குக் கொள்கை என்று ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் ஒரு ஹங் அசெம்பிளியே இருக்கும் என்று தோன்றுகிறது நீண்ட இடைவெளிக்குப் பின் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 37. @ பானுமதி வெங்கடேஸ்வரன்
  கருத்துப் பகிர்வுக்கு நன்றி மேம்

  ReplyDelete

 38. @ ஏகாந்தன்
  தேர்தல் முறையில் மாற்றங்கள் வேண்டும் என்றுதான் கூறி இருக்கிறேன் மாற்றங்களின் பட்டியல் நீளலாம் எதையுமே ஓவர்னைட்மாற்றமாக்க முடியாது நிறையவே பேசப்பட வேண்டும் வருகைக்கு நன்றி

  ReplyDelete

 39. @ காஸ்யபன்
  ஐயா வணக்கம் உங்கள் கணிப்பு சரியே மாற்றங்கள் பற்றிய மேலோட்டமான கருத்துக்களையே பகிர்ந்திருக்கிறேன் ஒவ்வொரு தலைப்பிலும் எனக்கென்று கருத்தும் இருக்கிறதுவிகிதாச்சார முறையில் இருக்கும் உயர்வு தாழ்வுகள் பெர்பெசுவேட் ஆகும் என்பதே என் கருத்து. மது விலக்கை அமல் படுத்த நிறையவே தடைகள் இருக்கும் ஆனால் அது தேவை என்பது என் கருத்து.அரசே மது விற்பனையை ஏற்று நடத்தும் அவலமாவது மாற வேண்டும் நீங்கள் கூறி இருக்கும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக் கூடியதாக இருக்கும் மாதம் ரூ. ஒன்று சம்பளமாகப் பெற்று சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி இருக்கும் முதல்வரையும் கணக்கில் எடுக்க வேண்டும் எனக்கென்னவோ பதிவுலகில் சீரியசான விஷயங்கள விவாதங்களைக் கொண்டு வருவது இல்லை என்றே தோன்றுகிறது உங்கள் வரவு மகிழ்ச்சி தருகிறது நன்றி

  ReplyDelete