காலைக் காட்சிகள்
---------------------------
---------------------------
பொழுது
புலரும் வேளை. சேவல் கூவும் நேரம்
பறவைகள் இரைதேடக் கிளம்பும் நேரம்
அதிகாலைத் தூக்கம் சுகமானது இருந்தாலும்
சுகத்தை அனுபவிக்க உடல் நலமாயிருக்க வேண்டாமா.
. உடம்பு ஒரு
கடிகாரம் மாதிரி. பழக்கப் பட்ட காரியங்களுக்குக் கட்டுப் படும்
பொதுவாக விழிப்பு வந்தாலேயே பொழுது விடிந்து விட்டது என்று
அர்த்தம். சாலையில் நடமாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கும். ஐடி கம்பனிகளில் வேலை
பார்ப்போரைக் கூட்டிப் போக வரும் கார்களின் சத்தம் கேட்கத் துவங்கும். அடுத்து
இருக்கும் பால் வினியோகக் கடைக்குப் பால் வண்டி வந்த சப்தம் கேட்கும்.
பக்கத்துவீட்டு நாய் தன் எஜமானைக் கூப்பிடக் குரைக்கும்வித்தியாசமான சப்தம்
கேட்கும்
நிச்சயம் விடிந்து விட்டது என்பது மனைவி
குளிக்கப் போகும் முன் ஆன் செய்யும் ஸ்தோத்திரப் பெட்டியின் பாட்டுகளைக் கேட்டால்
தெரிந்து விடும்
குளிப்பதுடன்
கூடவே தலைக்குத் தண்ணீர் ஊற்றும்போது
“
அதிக்ரூர மஹாகாய கல்பாந்த தஹனோபம்
பைரவாய
நமஸ்துப்யம் அனுஜ்ஞாம் தாதுமர்ஹஸி
கங்கே
ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே
ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம்குரு”
என்று அவள் கூறும் ஸ்தோத்திரமும் நான் எழவேண்டியதை
உறுதிப் படுத்தும்
நான் எழுந்து காலைக்கடன்களை முடித்து நடக்கப்
போகும் முன் மனைவி எனக்கு முதலில் மூன்று நான்கு மாரி
பிஸ்கட்களை தருவாள் வெறும் வயிற்றில் காப்பி குடிக்கக் கூடாதாம் காஃபி
குடித்து நான் நடக்கத் தயாராவேன்
மருத்துவர்களின் ஆலோசனையா உத்தரவா ஏதோ ஒன்று நான்
தினமும்
சிறிது தூரம் நடக்க வேண்டும் நல்ல
வேளை வீட்டின் அருகிலேயே ஒரு பூங்கா
போன்றதொன்று இருக்கிறது நடை பயில ஏற்ற
இடம் நீளவாக்கில் இருக்கும் அகல வாக்கில் இரு பாதைகள் சுமார் எட்டு அடி அகலத்தில். ஒரு முறை சென்று வந்தால் ஒரு
கிலோமீட்டர்தூரம் வரும் தினமும் நான் இரண்டு முறை சென்று வருவேன்
அதாவதுஇரண்டு கிலோ மீட்டர்தூரம்
நடப்பேன் இதே தூரத்தை முன்பெல்லாம்
அரை மணிக்கும் குறைவான நேரத்தில் கடப்பேன்
இப்போது வேகம் குறைந்து விட்டது
சுமார் 35 நிமிடங்கள் ஆகின்றன
நடக்க
வருபவர்களைக் கவனிப்பதில் என்னை நான் ஈடுபடுத்திக் கொள்வேன் நடக்கும் போது பதிவு
எழுத சில ஐடியாக்கள் வரும் முன்பொரு முறை
இப்படி சிந்தித்தபோதுபிறந்ததே செய்யாத குற்றம் எனும் பதிவு (பார்க்க) போய்ச்சேர் வீடு நோக்கி
என்னும் இடுகையும் இப்படிப் பிறந்ததே என்ன
நான் நடப்பது காலை வேளையில் அதையே மாலையில் நடப்பதாகப் பாவித்து எழுதியதுதான்
அந்த இடுகை
நடக்கும் பாதையில் நாய்களின் ராச்சியம் நடக்கும் ஒருவர் நடக்க வந்தால் அவர் பின்னே இரண்டு
மூன்று நாய்களும் நடக்கும் அவர்
அவ்வப்போது போடும் பிஸ்கட்களுக்கு நன்றி
மறக்காதவை காலையில் நடக்கப் போகும்போது பார்க்கில் இருக்கும் பென்சுகளில் வயதான பெண்களின் குழுக்களும்
இருக்கும் அவர்கள் நடக்க வந்தவர்களா மருமகள்களிடம் இருந்து தப்பிக்க
வந்தவர்களா என்னும் சந்தேகமும் எழும் நடக்க வருபவர்களில் சிலர் ஓடுவதும் உண்டு. இப்படி ஓடும் சில பெண்கள் என்னைக்
கவர்ந்தவர்கள் அதில் ஒருத்தி சானியா மிர்சாவை நினைவு படுத்துவாள். இன்னொருத்தி பந்தையக் குதிரை போல் இருப்பாள் செருகிய கொண்டையில் முடியின் நுனிீ ஆடி அசைந்து கவரும் ஒருமுறை
என்னைக்கடக்கும் போது ஒரு புன்னகை உதிர்த்தாள் பின் அவள் என்னைக்கடக்கும்போதெல்லாம்
புன்னகைக்கிறாளா என்று கவனிப்பேன் அவளது
அந்தப் புன்னகை என்னை ஈர்த்தது
நடக்கும்
பாதையில் முன்பு ஒரு எலி வளை இருந்தது
பின் அது எறும்புப் புற்றாக மாறியது
அதற்கு பாம்புப் புற்றின் அந்தஸ்து
அளிக்கப்பட்டு சிலர் பாலூற்றி
வழிபடவும் தொடங்கினர் . அந்த இடத்கில் சில
நாகர்களின் சிலைகள்பிரதிஷ்டை செய்யப்பட்டன முன்பு ஒரு பதிவில் யார்
கனவிலாவது கடவுள் தோன்றிஅங்கு கோவில் எழுப்பச் சொல்லலாம் என்றும் எழுதி இருந்தேன் அண்மையில் அந்த இடத்தைச்
சுற்றி சிமெண்ட் பூசப்பட்டிருக்கிறது பல
நேரங்களில் பூசைகள் நடக்கின்றன. ஒரு முறை
நான் நடந்து வரும்போது ஒரு நாய் அந்த நாகர் சிலைகள் மீது பின்னங்கால்களை தூக்கி
உச்சா போய் அபிஷேகம் செய்வதைக் கண்டேன் நம்
நம்பிக்கைகளின் மேலும் நம் கடவுளர்களின் மேலும்
அனுதாபம் பிறக்கிறது
நடக்க
வருபவர்களில்தான் எத்தனை வகை சிலர் நேரம்
தவறாமல் வருவார்கள் சிலர் குழுக்களாக மூன்று நான்கு பேராக வருவார்கள். சில வயதானவர்களுக்கு நடைபாதைப் பென்சுகள் கூடிப்பேசும் இடமாகிறது எனக்குத்தான்
யாரும் நண்பர்கள் இங்கு இல்லை.
1994-ம் வருட வாக்கில் என் வீட்டில் குடி இருந்தவரோடு அதிகாலையில்
வாக்கிங்கும் ஜாகிங்கும் செல்வேன் அவர் என்னைவிட மிகவும் இளையவர் அவர் சொந்த வீடு கட்டிப் போனபின் முன்புபோல்
ஜாகிங் செய்வதில்லை ஆண்டுகள் கழியக் கழிய உடலில் தெம்பும் குறைகிறது இந்த நடை ஒன்றுதான்
எனக்கிருக்கும் ஒரே தேகப்பயிற்சி
ஒரு முறை நடந்து செல்லும் போது
பாதையில் ஒருவர் விழுந்து கிடந்தார்
அவரைப் பார்த்தால் குடித்து விழுந்தவர் போல் தெரியவில்லை. அவருக்கு ஏதாவது உதவி செய்ய மனம் விழைந்தது.
என்னால் என்ன உதவி செய்ய முடியும்
நான் அங்கு நின்று கவனிப்பதைப்
பார்த்து ஓரிருவரும் அங்கு நின்றனர் என்னால் அவருக்கு எந்த உதவியும் செய்ய முடியாதென்று தெரிந்து நான் என் நடையைத்
தொடர்ந்தேன் திரும்பி அதே பாதையில்
வரும்போது சிலர் அவரை அருகில் இருந்த பென்ச் ஒன்றில் அமரவைத்து என்னவோ கேட்டுக்
கொண்டிருந்தனர் எல்லோரும் என்னைப் போல் அகன்று விடாமல் உதவி செய்ததைப் பார்க்கும்
போது என்னைவிட நல்லவர்களிருக்கிறார்கள் என்னும் நம்பிக்கை வந்தது மேலும் அங்கு விழுந்து
கிடந்தவர் கதி எனக்கும் வராது என்பது என்ன
நிச்சயம் என்னதான் தைரிய சாலியாக இருந்தாலும் நம்மால் பிறருக்கு கஷ்டம் கூடாது என்று நினைப்பவன் நான்
அந்த நிகழ்வு என்னில் என்ன என்னவோ சிந்தனைகளை எழுப்பிச் சென்றது அதுவும்
ஒரு பதிவாகிறது அடுத்து
.
உங்கள் காலை பொழுதை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குஉடற்பயிற்சி என்பது
பதிலளிநீக்குவயதைப் பொறுத்து ஒவ்வொரு
வடிவம் கொள்ளும்
அறுபதுக்கு மேல் எனில்
நடை ஒன்றே முடியுமானதாகவும்
போதுமானதாகவும் இருக்கிறது
நானும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்
நடையே பதிவானது அருமை
வாழ்த்துக்களுடன்...
காட்சிகளை கண்டேன் ஐயா
பதிலளிநீக்கு>>> நம்மால் பிறருக்கு கஷ்டம் கூடாது என்று நினைப்பவன் நான்..<<<
பதிலளிநீக்குஇப்படியான எண்ணங்கள் எல்லாம் இரத்தத்துடன் ஊறிப் போனவை..
தலைமுறைகளுக்குத் தொடர்கின்றனவா.. தெரியாது.. ஆனால்,
பிறவிகள் தோறும் தொடர்ந்து வருபவை..
விடியற்காலையின் எண்ணங்கள் விடியற்காலையைப் போலவே அழகு..
உங்களின் நற்சிந்தனைகள் அருமை ஐயா... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குயதார்த்தமான எண்ணங்கள். சிலசமயம் நாம் உதவ முடியாத நிலை ஏற்படுகிறது என்ன செய்ய.
பதிலளிநீக்குபுதுக்காற்றை சுவாசித்தது போல் இருந்தது இடுகை. நாகர்களின் நிலை நினைத்துச் சிரிப்பும் ஏற்பட்டது :)
# பந்தையக் குதிரை போல் இருப்பாள் செருகிய கொண்டையில் முடியின் நுனிீ ஆடி அசைந்து கவரும#
பதிலளிநீக்குபதிவில் இந்த வரிகள் புரியாதபடி என்னவோ போல் இருந்தது ,கமென்ட் பாஸ்சில் சரியாக தெரிகிறது !
மற்றவர்களுக்கும் இந்த பிரச்சினை இருந்தால் இதையே ஃபாலோ செய்யலாம் :)
அருமையான வழிகாட்டல்
பதிலளிநீக்குஉள்ளதை உள்ளபடி சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் இங்கே யு.எஸ்ஸில் காலைவேளையில் இப்படி உயிர்ப்புடன் விடிவதைக் காண முடிவதில்லை. காலை எழுந்து கொண்டு கணினி முன்னர் அமர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. வீட்டுக்குள்ளேயே சில நிமிடங்கள் நடக்கிறேன். வெளியே செல்ல முடியாது! குளிர்! :)
பதிலளிநீக்குநானும் உடன் வாக்கிங்க் வந்தது போல் உணர்ந்தேன்.
பதிலளிநீக்குநம் ஊரில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது இப்படித்தான் வித்தியாசமான காட்சிகள், வித்தியாசமான அனுபவங்கள் தினமும் நிறைய கிடைக்கும். அதை அழகாக, சுவைபட எழுதியிருக்கிறீர்கள்!
பதிலளிநீக்குதப்பாமல் -.சென்னை பாஷையில் சொல்வதானால் பால் மாறாமல்- நடைப்பயிற்சி மேற்கொள்வது பாராட்டப்பட வேண்டிய விஷயம். எங்கள் ப்ளாக்கில் சில வருடங்களுக்கு முன்னர் நடக்கும் நினைவுகள் என்ற தலைப்பில் நானும் இந்த அனுபவங்களை எழுதியிருக்கிறேன்.
பதிலளிநீக்குநடையை ஒருபோதும் விடவேண்டாம். குறைந்த பட்சம் வீட்டுக்குள்ளாவது நடமாடவேணும். இதற்கு உடல் ஒத்துழைத்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவேணும்!
பதிலளிநீக்குநடை நல்லது...
பதிலளிநீக்குதொடருங்கள்.
உங்கள் நடையின் போது நாங்களும் நடந்த உணர்வு.
பதிலளிநீக்கு@கோமதி அரசு
வருகை தந்துபதிவை ரசித்ததற்கு நன்றிகள் மேடம்
பதிலளிநீக்கு@ ரமணி
வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்
பதிலளிநீக்கு@ கில்லர் ஜி
காட்சிகளில் கண்டதை ரசித்தீர்களா ஜீ
பதிலளிநீக்கு@துரை செல்வராஜு
வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் ரசிப்புக்கும் நன்றி சார்
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும்பாராட்டுக்கும் நன்றி டிடி
பதிலளிநீக்கு@ தேனம்மை
நாகர்களின் சிலை குறித்து எழுதினது உங்களுக்குச் சிரிப்பை வரவழைக்கிறது என் ஆதாங்கத்தின் வெளிப்பாடு அது வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ பகவான் ஜி
நடை பயிற்சி போது இவர்கள் ஒரு புத்து தெம்பைக் கொடுக்கிறார்கள் வருகைக்கு நன்றி ஜீ
பதிலளிநீக்கு@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிரஜலிங்கம்
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
உள்ளதை உள்ளபடி எழுதுவதுதானே என் வழக்கம் வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
எனக்கும் அது தெம்பைத்தருகிறதுவருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ மனோ சாமிநாதன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமேம்
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
பால் மாறாமல் என்றால் கட்சி மாறாமல் என்றுதானே அர்த்தம் வருகைக்கு நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ துளசி கோபால்
ஊக்கமூட்டும் உங்களுக்கு நன்றி சொல்கிறேன் மேம்
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
நடையைத்தொடர்வது எனக்கு நானே நம்பிக்கை ஊட்டிக்கொள்வதுபோல் உணர்கிறேன் வருகைக்கு நன்றி சார்
தொடர்ந்து நடந்து கொண்டே இருங்கள் ஐயா
பதிலளிநீக்குநடைப் பயிற்சியை விட்டுவிட வேண்டாம்
இதன் பலன் பெரிது
தாங்கள் அறியாதது அல்ல
பதிலளிநீக்கு@கரந்தை ஜெயக்குமார்
அறிவுறுத்தலுக்கு நன்றி ஐயா
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசில நாட்களில் எழுந்திருக்க நேரமானால் நடை போகத்தயக்கமாகிறது
உங்களுடன் ஒரு நடை போய் வந்தது போல் உணர்ந்தேன். அருமையாய் விவரித்துள்ளீர்கள். பாராட்டுகள்!
பதிலளிநீக்குநானும் உங்களோடு தொடர்ந்து வந்தது போன்ற உணர்வு. நடைப் பயிற்சியின் போது, நான் பார்த்த வகையில், ஒவ்வொருவரும் செய்யும் உடற் பயிற்சிகளைப் பார்க்கும் போதும், பெரும்பாலும் பலரும் கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் போடுபவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்றே நினைக்க வேண்டி உள்ளது.
பதிலளிநீக்குகாலை காட்சிகளை மிக அழகாக வர்ணித்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குபெங்களூர் குளிரிலும் நடக்கிறீர்களா? என்னை என் எதிர் வீட்டு பெண்மணி நடக்க கூப்பிட்டு அலுத்து விட்டார்.
பதிலளிநீக்கு@வே.நடனசபாபதி
நடக்கும் போதும் எண்ணங்கள் என்ன எழுதுவது என்று இருக்கும் அதன் விளைவே இப்பதிவு வருகைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ தி தமிழ் இளங்கோ
புரியவில்லை. வயதானவர்கள் செய்வதைக் காணும்போது அப்படித் தோன்றுகிறதா வருகைக்கு நன்றி சார்
@ பானுமதி வெங்கடேஸ்வரன்
பதிலளிநீக்குஎந்த ஒரு பயிற்சியும் அவரவருக்குத்தோன்றவேண்டும் சென்னையில் என் மச்சினனை ஜவஹர் நகரில் காலை ஐந்து மணிக்கு நடக்கக் கூட்டிபோவேன் அங்கே நான் இருந்தது சில நாட்கள்மட்டுமே நான் திரும்பி வந்ததுமஅவன் நடை போவதும் நின்று விட்டது பெங்களூரில் இந்த ஆண்டு குளிர் அவ்வளவாக இல்லை. வருகைக்கு நன்றி மேம்