காட்சிகளும் கருத்துகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காட்சிகளும் கருத்துகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 டிசம்பர், 2016

காலைக் காட்சிகள்

                         காலைக் காட்சிகள்
                         ---------------------------


பொழுது புலரும்  வேளை. சேவல் கூவும்  நேரம்   பறவைகள் இரைதேடக் கிளம்பும்  நேரம் அதிகாலைத் தூக்கம்  சுகமானது  இருந்தாலும்  சுகத்தை அனுபவிக்க உடல் நலமாயிருக்க வேண்டாமா.
. உடம்பு ஒரு கடிகாரம் மாதிரி. பழக்கப் பட்ட காரியங்களுக்குக் கட்டுப் படும்
பொதுவாக விழிப்பு வந்தாலேயே பொழுது விடிந்து விட்டது என்று அர்த்தம். சாலையில் நடமாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கும். ஐடி கம்பனிகளில் வேலை பார்ப்போரைக் கூட்டிப் போக வரும் கார்களின் சத்தம் கேட்கத் துவங்கும். அடுத்து இருக்கும் பால் வினியோகக் கடைக்குப் பால் வண்டி வந்த சப்தம் கேட்கும். பக்கத்துவீட்டு நாய் தன் எஜமானைக் கூப்பிடக் குரைக்கும்வித்தியாசமான சப்தம் கேட்கும்
 நிச்சயம் விடிந்து விட்டது என்பது மனைவி குளிக்கப் போகும் முன் ஆன் செய்யும் ஸ்தோத்திரப் பெட்டியின் பாட்டுகளைக் கேட்டால் தெரிந்து விடும்  
குளிப்பதுடன் கூடவே தலைக்குத் தண்ணீர் ஊற்றும்போது

“ அதிக்ரூர மஹாகாய கல்பாந்த தஹனோபம்
பைரவாய நமஸ்துப்யம் அனுஜ்ஞாம் தாதுமர்ஹஸி
கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம்குரு
என்று அவள் கூறும் ஸ்தோத்திரமும் நான்  எழவேண்டியதை உறுதிப் படுத்தும்
நான்  எழுந்து காலைக்கடன்களை முடித்து நடக்கப் போகும்  முன்  மனைவி எனக்கு முதலில் மூன்று நான்கு மாரி பிஸ்கட்களை தருவாள் வெறும்  வயிற்றில் காப்பி குடிக்கக் கூடாதாம்   காஃபி குடித்து நான் நடக்கத் தயாராவேன்    
 மருத்துவர்களின் ஆலோசனையா உத்தரவா ஏதோ ஒன்று நான்  தினமும்  சிறிது தூரம்  நடக்க வேண்டும் நல்ல வேளை வீட்டின்  அருகிலேயே ஒரு பூங்கா போன்றதொன்று இருக்கிறது  நடை பயில ஏற்ற இடம்  நீளவாக்கில் இருக்கும் அகாக்கில் இரு பைகள் சுமார் எட்டு அடி அகத்ில்.  ஒரு முறை சென்று வந்தால் ஒரு கிலோமீட்டர்தூரம்  வரும்  தினமும் நான் இரண்டு முறை சென்று வருவேன் அதாவதுஇரண்டு கிலோ மீட்டர்தூரம்  நடப்பேன்  இதே தூரத்தை முன்பெல்லாம் அரை மணிக்கும் குறைவான நேரத்தில் கடப்பேன்  இப்போது வேகம் குறைந்து விட்டது  சுமார் 35 நிமிடங்கள் ஆகின்றன
நடக்க வருபவர்களைக் கவனிப்பதில் என்னை நான் ஈடுபடுத்திக் கொள்வேன் நடக்கும் போது பதிவு எழுத சில ஐடியாக்கள் வரும்  முன்பொரு முறை இப்படி சிந்தித்தபோதுபிறந்ததே செய்யாத குற்றம் எனும் பதிவு (பார்க்க) போய்ச்சேர் வீடு நோக்கி என்னும் இடுகையும் இப்படிப் பிறந்ததே  என்ன நான் நடப்பது காலை வேளையில் அதையே மாலையில் நடப்பதாகப் பாவித்து எழுதியதுதான் அந்த  இடுகை
நடக்கும்  பாதையில் நாய்களின் ராச்சியம் நடக்கும்  ஒருவர் நடக்க வந்தால் அவர் பின்னே இரண்டு மூன்று நாய்களும் நடக்கும்  அவர் அவ்வப்போது போடும் பிஸ்கட்களுக்கு  நன்றி மறக்காதவை காலையில் நடக்கப் போகும்போது பார்க்கில் இருக்கும் பென்சுகளில்  வயதான பெண்களின்  குழுக்களும்  இருக்கும் அவர்கள் நடக்க வந்தவர்களா மருமகள்களிடம் இருந்து தப்பிக்க வந்தவர்களா என்னும்  சந்தேகமும்  எழும் நடக்க வருபவர்களில் சிலர் ஓடுவதும்  உண்டு. இப்படி ஓடும் சில பெண்கள் என்னைக் கவர்ந்தவர்கள் அதில் ஒருத்தி சானியா மிர்சாவை நினைவு படுத்துவாள். இன்னருத்தி பந்தையக் கிரை போல் இருப்பாள் செருகியொண்டையில் முடியின் நுனிஆடி அசந்து கும்  ஒருமுறை என்னைக்கடக்கும் போது ஒரு புன்னகை  உதிர்த்தாள் பின்  அவள் என்னைக்கடக்கும்போதெல்லாம் புன்னகைக்கிறாளா என்று கவனிப்பேன்  அவளது அந்தப் புன்னகை என்னை ஈர்த்தது



நடக்கும் பாதையில் முன்பு ஒரு எலி வளை இருந்தது  பின் அது எறும்புப் புற்றாக மாறியது  அதற்கு பாம்புப் புற்றின்  அந்தஸ்து அளிக்கப்பட்டு  சிலர் பாலூற்றி வழிபடவும்  தொடங்கினர் . அந்த இடத்கில் சில நாகர்களின் சிலைகள்பிரதிஷ்டை செய்யப்பட்ட  முன்பு ஒரு பதிவில் யார் கனவிலாவது கடவுள் தோன்றிஅங்கு கோவில் எழுப்பச் சொல்லலாம் என்றும்  எழுதி இருந்தேன் அண்மையில் அந்த இடத்தைச் சுற்றி சிமெண்ட் பூசப்பட்டிருக்கிறது  பல நேரங்களில்  பூசைகள் நடக்கின்றன. ஒரு முறை நான் நடந்து வரும்போது ஒரு நாய் அந்த நாகர் சிலைகள் மீது பின்னங்கால்களை தூக்கி உச்சா போய் அபிேகம் ெய்வைக் கண்டேன் நம் நம்பிக்கைகளின்  மேலும்  நம் கடவுளர்களின்  மேலும்  அனுதாபம் பிறக்கிறது  
நடக்க வருபவர்களில்தான் எத்தனை வகை  சிலர் நேரம் தவறாமல் வருவார்கள் சிலர் குழுக்களாக மூன்று நான்கு பேராக வருவார்கள்.  சில வயதானவர்களுக்கு நடைபாதைப் பென்சுகள் கூடிப்பேசும் இடமாகிறது  எனக்குத்தான்  யாரும் நண்பர்கள் இங்கு இல்லை.  1994-ம் வருட வாக்கில்  என்  வீட்டில் குடி இருந்தவரோடு அதிகாலையில் வாக்கிங்கும் ஜாகிங்கும்  செல்வேன்  அவர் என்னைவிட மிகவும்  இளையவர் அவர் சொந்த வீடு கட்டிப் போனபின் முன்புபோல் ஜாகிங் செய்வதில்லை ஆண்டுகள் கழியக் கழிய உடலில் தெம்பும்  குறைகிறது இந்த நடை ஒன்றுதான் எனக்கிருக்கும்  ஒரே தேகப்பயிற்சி
 ஒரு முறை நடந்து செல்லும்  போது  பாதையில் ஒருவர் விழுந்து கிடந்தார்  அவரைப் பார்த்தால் குடித்து விழுந்தவர் போல் தெரியவில்லை.  அவருக்கு ஏதாவது உதவி செய்ய மனம் விழைந்தது. என்னால் என்ன உதவி ெய்ய  முடியும்  நான்  அங்கு நின்று கவனிப்பதைப் பார்த்து ஓரிருவரும் அங்கு நின்றனர் என்னால் அவருக்கு எந்த உதவியும்  செய்ய முடியாதென்று தெரிந்து நான் என் நடையைத் தொடர்ந்தேன்  திரும்பி அதே பாதையில் வரும்போது சிலர் அவரை அருகில் இருந்த பென்ச் ஒன்றில் அமரவைத்து என்னவோ கேட்டுக் கொண்டிருந்தனர் எல்லோரும் என்னைப் போல் அகன்று விடாமல் உதவி செய்ததைப் பார்க்கும் போ என்னைவிட நல்லவர்களிருக்கிறார்கள் என்னும்  நம்பிக்கை வந்தது மேலும் அங்கு விழுந்து கிடந்தவர் கதி எனக்கும்  வரா என்பது என்ன நிச்சயம்  என்னதான்  தைரிய சாலியாக இருந்தாலும்  நம்மால் பிறருக்கு கஷ்டம் கூடாது என்று நினைப்பவன்  நான்  அந்த நிகழ்வு என்னில் என்ன என்னவோ சிந்தனைகளை எழுப்பிச் சென்றது  அதுவும்  ஒரு பதிவாகிறது அடுத்து       
.